KANDA PURAANM - DAKSHA KAANDAM
22. தக்கன் வழிபாடு
மெய்யுணர்வு வரப் பெற்றான் தக்கன்;
கை கூப்பி வணங்கினான் தந்தையை!
“சிவ வழிபாடு செய்கின்றேன் இப்போதே!”
பவம் ஒழிக்கும் காசி நகரை அடைந்தான்.
மணிகர்ணிகைக்கு அருகில் அமைத்தான்,
பணி அணி நாதனுக்கு அழகிய கோவில்.
பண்புடன் அமைத்தான் சிவலிங்கத்தை,
அன்புடன் தொழுதான் ஆயிரம் ஆண்டுகள்.
அன்புக்கு அடிமை அல்லவா நம் ஈசன்?
அன்புடன் வெளிப்பட்டான் தக்கன் முன்பு.
“ஆணவம் கொண்டு உம்மை இகழ்ந்தேன்.
பேண வேண்டிய பண்புகளைத் துறந்தேன்.
மருட்சி மீண்டும் வந்துவிடாதபடி எனக்கு
மாறாத அன்பைத் தந்தருள்வீர் ஐயனே!”
தக்கன் தூய்மை அடைந்து விட்டான்.
தலைவன் ஆனான் பூதக் கூட்டத்துக்கு!
திருமால், பிரமன், இந்திரன், வீரபத்திரர்
திரும்பிச் சென்றனர் தங்கள் இடங்களுக்கு.
இறைவழிபாடுகள் செய்து தம் உடலின்
ஊறுபாடுகளை அழித்து ஒழித்தனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
22. தக்கன் வழிபாடு
மெய்யுணர்வு வரப் பெற்றான் தக்கன்;
கை கூப்பி வணங்கினான் தந்தையை!
“சிவ வழிபாடு செய்கின்றேன் இப்போதே!”
பவம் ஒழிக்கும் காசி நகரை அடைந்தான்.
மணிகர்ணிகைக்கு அருகில் அமைத்தான்,
பணி அணி நாதனுக்கு அழகிய கோவில்.
பண்புடன் அமைத்தான் சிவலிங்கத்தை,
அன்புடன் தொழுதான் ஆயிரம் ஆண்டுகள்.
அன்புக்கு அடிமை அல்லவா நம் ஈசன்?
அன்புடன் வெளிப்பட்டான் தக்கன் முன்பு.
“ஆணவம் கொண்டு உம்மை இகழ்ந்தேன்.
பேண வேண்டிய பண்புகளைத் துறந்தேன்.
மருட்சி மீண்டும் வந்துவிடாதபடி எனக்கு
மாறாத அன்பைத் தந்தருள்வீர் ஐயனே!”
தக்கன் தூய்மை அடைந்து விட்டான்.
தலைவன் ஆனான் பூதக் கூட்டத்துக்கு!
திருமால், பிரமன், இந்திரன், வீரபத்திரர்
திரும்பிச் சென்றனர் தங்கள் இடங்களுக்கு.
இறைவழிபாடுகள் செய்து தம் உடலின்
ஊறுபாடுகளை அழித்து ஒழித்தனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.