KANDA PURAANAM - DAKSHA KAANDAM
21a. நான்முகன் அறிவுரை
“அறிந்து கொண்டாயா அறிவின் பயனை?
அறிவினால் நீ பெற்ற பயன்கள் யாவை?
கூற்றுவன் ஆனாய் உன் சுற்றத்தினருக்கு.
மற்றும் இழந்தாய் உன் முக அழகையும்!
உன் ஏவலர்களை முற்றிலும் இழந்தாய்.
உன் உணர்வுகளை மட்டுமே மதித்தாய்.
ஆன்றோர் வாக்குப்படி நடந்தாலன்றி
அனைத்துக் கேடுகளும் வந்து குவியும்.
செல்வங்கள் தந்த சிவனையும் மறந்தாய்!
பல்லுயிருக்கும் தோன்றும் இம்மயக்கம்.
எனக்கும் வந்தது முன்னர் மயக்கம்.
என் மயக்கத்தைப் போக்கினார் பிரான்.
அன்புடன் சிவனை தொழுபவர்களுகுத்
துன்பம் தொலையும்; இன்பம் சேரும்.
பக்தி செய்பவர்களுக்கு அருள் கூர்ந்து
முக்தி அளிப்பவன் சிவனே அன்றோ?”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
21a. நான்முகன் அறிவுரை
“அறிந்து கொண்டாயா அறிவின் பயனை?
அறிவினால் நீ பெற்ற பயன்கள் யாவை?
கூற்றுவன் ஆனாய் உன் சுற்றத்தினருக்கு.
மற்றும் இழந்தாய் உன் முக அழகையும்!
உன் ஏவலர்களை முற்றிலும் இழந்தாய்.
உன் உணர்வுகளை மட்டுமே மதித்தாய்.
ஆன்றோர் வாக்குப்படி நடந்தாலன்றி
அனைத்துக் கேடுகளும் வந்து குவியும்.
செல்வங்கள் தந்த சிவனையும் மறந்தாய்!
பல்லுயிருக்கும் தோன்றும் இம்மயக்கம்.
எனக்கும் வந்தது முன்னர் மயக்கம்.
என் மயக்கத்தைப் போக்கினார் பிரான்.
அன்புடன் சிவனை தொழுபவர்களுகுத்
துன்பம் தொலையும்; இன்பம் சேரும்.
பக்தி செய்பவர்களுக்கு அருள் கூர்ந்து
முக்தி அளிப்பவன் சிவனே அன்றோ?”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி