KANDA PURANAM - DAKSHA KANDAM
18c. தேவியின் சீற்றம்!
உமையின் சினம் எல்லை மீறிவிட்டது!
இமைப் பொழுதில் நடுங்கின அனைத்தும்.
நீரும், நெருப்பும், முகிலும் நடுங்கின;
மாலும், பிரமனும் யாவரும் நடுங்கினர்;
தேற்றினாள் தேவியைத் தோழி விமலை;
சாற்றினாள் தேவி தந்தை தக்கனிடம்,
“என்னை இகழ்வது ஒரு பொருட்டல்ல!
என் தலைவனையும் இகழ்ந்தாய் நீ!
குறைகளுக்கு அப்பாற்பட்டவர் அவர்
மறைகள் புகழ்கின்ற நாயகர் அவர்.
'சிவா' எனும் ஒரு சொல்லே தரும் முக்தி
வாசியுடன் வெறுக்கும் உன் கதி என்ன?
பொறுக்கும் வரை பொறுப்பார் அவர்!
ஒறுக்கும் வேளை வந்தாள் ஒறுப்பார்”
கயிலை மீண்டாள் தாட்சாயணி தேவி
கயிலை நாதன் கூறியது மெய்யானது!
வேதனையுடன் அன்னை கூறினாள்
நாதனிடம்,”வேள்வியை அழியுங்கள்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
18c. தேவியின் சீற்றம்!
உமையின் சினம் எல்லை மீறிவிட்டது!
இமைப் பொழுதில் நடுங்கின அனைத்தும்.
நீரும், நெருப்பும், முகிலும் நடுங்கின;
மாலும், பிரமனும் யாவரும் நடுங்கினர்;
தேற்றினாள் தேவியைத் தோழி விமலை;
சாற்றினாள் தேவி தந்தை தக்கனிடம்,
“என்னை இகழ்வது ஒரு பொருட்டல்ல!
என் தலைவனையும் இகழ்ந்தாய் நீ!
குறைகளுக்கு அப்பாற்பட்டவர் அவர்
மறைகள் புகழ்கின்ற நாயகர் அவர்.
'சிவா' எனும் ஒரு சொல்லே தரும் முக்தி
வாசியுடன் வெறுக்கும் உன் கதி என்ன?
பொறுக்கும் வரை பொறுப்பார் அவர்!
ஒறுக்கும் வேளை வந்தாள் ஒறுப்பார்”
கயிலை மீண்டாள் தாட்சாயணி தேவி
கயிலை நாதன் கூறியது மெய்யானது!
வேதனையுடன் அன்னை கூறினாள்
நாதனிடம்,”வேள்வியை அழியுங்கள்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி