KANDAPURAANAM - DAKSHA KAANDAM
18a. இறைவியின் வருகை
தக்கனின் வேள்வியைப் பற்றி நாரதர்
தக்க சமயத்தில் உரைத்தார் சிவனிடம்.
தக்கன் வேள்வியைக் காணும் அவா
தக்கன் மகள் மனத்தில் வளர்ந்தது!
முக்கண்ணனிடம் அனுமதி கேட்டாள்
தக்கன் யாகத்தைக் கண்டு வருவதற்கு.
“சிறுமை அடைவாய் வேள்வியில்!
ஒரு போதும் செல்ல வேண்டாம் நீ!”
கணவன் தடுத்தும் கேட்கவில்லை;
“கணப்பொழுதில் வருவேன்” என்றாள்.
மகளைக் கண்ட தக்கன் மகிழவில்லை;
மகளைக் கேலி செய்து பேசலுற்றான்!
“சிவனார் மனைவியார் எங்கு வந்தீர்?
அவனுக்கே அழைப்பு இல்லை இங்கே!”
“தங்கையருக்குச் செய்தீர் சிறப்புக்கள்;
உங்கள் மருகர்களுக்கு மேன்மைகள்!
திங்கள் அணி பிரான் செய்த தவறென்ன?
எங்களை நீர் வெறுத்து ஒதுக்குவது ஏன்?”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.