DEVI BHAAGAVATAM - SKANDA 6
6#28b. நாரதர் பெண் ஆனார் (2)
நாராயணன் தொடர்ந்து கூறினார் நாரதரிடம்,
நன்கு விவரித்தார் மாயையின் மகிமையை.
“உருவம் அற்றது காலத் தத்துவம் – எனினும்
உருவம் ஆகிவிடுகிறது அதுவே மாயைக்கு.
மாயை ஆக்கும் அறிஞனை தர்ம மூடனாக;
மாயை ஆக்கும் மூடனைத் தர்மம் அறிந்தவனாக.
முக்குண வடிவானவள் மாயை; அவள் சர்வக்ஞை;
எக்காலத்திலும், எவ்விடத்திலும் நிரம்பி இருப்பவள்.
வெல்ல முடியாதவள் அவள்; ஆதாரம் ஆனவள்;
செல்வோம் கருடன் மீது மாயையைக் காண்பதற்கு!”
அமர்ந்தோம் கருடன் மீது நாங்கள் இருவரும்;
அடைந்தோம் கன்யா குப்ஜம் என்னும் நகரை.
ஒலித்தன பறவைகளின் இன்னிசைப் பாடல்கள்;
ஒளிர்ந்தன தாமரை மலர்கள் நீர் தடாகத்தில்.
“நீராடி விட்டுச் செல்வோம் நகர் காண்பதற்கு!”
நிர்மலமான நீரில் இறங்கினேன் நான் முதலில்.
வைத்தேன் வீணை, துளசி மாலையைக் கரையில்;
திகைத்தேன் நீரில் முங்கி விட்டு எழுந்தவுடன்!
அழகிய இளம் பெண்ணாக மாறி இருந்தேன்!
பழகிய ஆண் உடல் மறந்து போனது எனக்கு.
மறந்தேன் நாரணனையும், வீணையையும் கூட!
மரம் போல நின்றுவிட்டேன் வியப்பின் உச்சியில்.
வந்தான் மன்மத ரூபனாக ஒரு மன்னன்;
சொன்னான் காதல் மொழிகளை என்னிடம்.
“மணந்து கொண்டு துய்ப்போம் இன்பம்;
கணவனாக ஏற்றுக் கொள் என்னை!” என்றான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.