KANDA PURAANAM - DAKSHA KAANDAM
13k. கபாலம் ஏந்தியது
திருமாலும், நான்முகனும் இருந்தனர்
மேருவின் கொடுமுடியில் முன்னாள்.
முனிவர்கள் வினவினர் இருவரிடமும்
“முழு முதற் கடவுள் யார் என்று கூறும்”
மாயையின் வசப்பட்ட மாலும், பிரமனும்
“யாமே முழு முதற்கடவுள்” என்றனர்.
“படைக்கும் கடவுள் நானே பெரியவன்”
படைத்தவன் உன்னை நானே அறிவாய்!”
போரிடலாயினர் கருத்து மாறுபாட்டால்;
“யார் பெரியவர்?” என்ற பிரச்சனையால்!
போரை மூட்டியவர் கலைந்து சென்றனர்.
நேரே வந்தனர் உருமாறிவிட்ட இருவர்.
பிரணவமும், மறையும் அங்கு வந்தன.
“பிரானே முழு முதற்கடவுள்!” என்றன.
இருவரின் மோதலை விலக்கி விடத்
திருவுளம் கொண்டார் சிவபெருமான்.
பேரொளி ஒன்று தோன்றியது அங்கு!
பேரொளியில் மயங்கி நின்றது உலகு.
உணர்ந்தார் மால் ஒளியினில் ஈசனை ,
வணங்கினார் மன மயக்கம் ஒழித்து.
மயக்கம் நீங்காத நான்முகனோ எனில்
தயக்கம் இன்றியே இகழ்ந்தான் ஈசனை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
13k. கபாலம் ஏந்தியது
திருமாலும், நான்முகனும் இருந்தனர்
மேருவின் கொடுமுடியில் முன்னாள்.
முனிவர்கள் வினவினர் இருவரிடமும்
“முழு முதற் கடவுள் யார் என்று கூறும்”
மாயையின் வசப்பட்ட மாலும், பிரமனும்
“யாமே முழு முதற்கடவுள்” என்றனர்.
“படைக்கும் கடவுள் நானே பெரியவன்”
படைத்தவன் உன்னை நானே அறிவாய்!”
போரிடலாயினர் கருத்து மாறுபாட்டால்;
“யார் பெரியவர்?” என்ற பிரச்சனையால்!
போரை மூட்டியவர் கலைந்து சென்றனர்.
நேரே வந்தனர் உருமாறிவிட்ட இருவர்.
பிரணவமும், மறையும் அங்கு வந்தன.
“பிரானே முழு முதற்கடவுள்!” என்றன.
இருவரின் மோதலை விலக்கி விடத்
திருவுளம் கொண்டார் சிவபெருமான்.
பேரொளி ஒன்று தோன்றியது அங்கு!
பேரொளியில் மயங்கி நின்றது உலகு.
உணர்ந்தார் மால் ஒளியினில் ஈசனை ,
வணங்கினார் மன மயக்கம் ஒழித்து.
மயக்கம் நீங்காத நான்முகனோ எனில்
தயக்கம் இன்றியே இகழ்ந்தான் ஈசனை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.