KANDA PURAANAM - DAKSHA KAANDAM
3d. தக்கனின் பெண்கள்.
நீண்ட காலம் கடந்து சென்ற பின்னும்
மீண்டு வரவில்லை ஆயிரம் மகன்கள்.
அறிவுக் கண்ணால் ஆராய்ந்தான் தக்கன்,
பிறந்தது கடும் சினம் மீண்டும் மனத்தில்.
உள்ளம் வருந்தியது; உயிர் பதைத்தது;
உடல் வியர்த்தது; துன்பம் மிகுந்தது;
ஒன்பது கோள்களும் அஞ்சி ஓடின;
மண்ணுலகம் எல்லாம் மனம் இரங்கியது.
“பிரித்தான் என் மக்களை என்னிடமிருந்து!
திரியவேண்டும் நாரதன் நாடோடியாக!
ஆண் மக்களைப் பெற்று ஏமாற மாட்டேன்
பெண் மக்களையே பெறுவேன் நான் இனி.”
உறுதி பூண்ட தக்கன் பெற்றான்
இருபது மூன்று பெண்களை மீண்டும்
பதின்மரை முனிவருக்கு அளித்தான்
பதின்மூவரை தருமனுக்கு அளித்தான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
3d. தக்கனின் பெண்கள்.
நீண்ட காலம் கடந்து சென்ற பின்னும்
மீண்டு வரவில்லை ஆயிரம் மகன்கள்.
அறிவுக் கண்ணால் ஆராய்ந்தான் தக்கன்,
பிறந்தது கடும் சினம் மீண்டும் மனத்தில்.
உள்ளம் வருந்தியது; உயிர் பதைத்தது;
உடல் வியர்த்தது; துன்பம் மிகுந்தது;
ஒன்பது கோள்களும் அஞ்சி ஓடின;
மண்ணுலகம் எல்லாம் மனம் இரங்கியது.
“பிரித்தான் என் மக்களை என்னிடமிருந்து!
திரியவேண்டும் நாரதன் நாடோடியாக!
ஆண் மக்களைப் பெற்று ஏமாற மாட்டேன்
பெண் மக்களையே பெறுவேன் நான் இனி.”
உறுதி பூண்ட தக்கன் பெற்றான்
இருபது மூன்று பெண்களை மீண்டும்
பதின்மரை முனிவருக்கு அளித்தான்
பதின்மூவரை தருமனுக்கு அளித்தான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.