VENKATESA PURAANAM
3c. நாரணன்
கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர்
வைகுந்தநாதனைச் சோதிக்க விரைந்தார்.
ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன்
ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.
தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த
நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.
‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன்
வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’
இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர்
இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று
நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”
உதைத்த காலைப் பற்றினார் நாரயணன்,
உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.
“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக்
கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.
“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்!
துயர் அடைந்தீரோ என்னை உதைத்ததால்?”
முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ?
உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று
“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை
கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!”
பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.
யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று
லோகத்திலும் சத்துவகுணனை கண்டறிந்ததால்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
3c. நாரணன்
கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர்
வைகுந்தநாதனைச் சோதிக்க விரைந்தார்.
ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன்
ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.
தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த
நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.
‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன்
வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’
இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர்
இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று
நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”
உதைத்த காலைப் பற்றினார் நாரயணன்,
உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.
“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக்
கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.
“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்!
துயர் அடைந்தீரோ என்னை உதைத்ததால்?”
முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ?
உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று
“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை
கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!”
பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.
யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று
லோகத்திலும் சத்துவகுணனை கண்டறிந்ததால்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி