5#17b. மந்தோதரி (2)
“திருமண பந்தத்தில் விருப்பமில்லை எனக்கு;
இருக்க வேண்டும் காலமெல்லாம் கன்னியாக.
சுதந்திரம் வேண்டும் மோனத் தவம் செய்திட,
சுதந்திரம் பறி போகும் திருமணம் புரிந்தால்.
அடிமையாக வேண்டும் ஓர் ஆண்பிள்ளைக்கு;
அடைய முடியாது என்னால் மோட்ச சுகத்தை!
சேவை செய்ய வேண்டும் அவன் உறவினருக்கு;
சேவை செய்து என் சுதந்திரத்தை நான் இழப்பேன்!
அறிய முடியாது கணவனின் உண்மை அன்பை;
அறிந்தால் துயர் விளையும் வேறு தொடர்பை.
துக்கமே வரும் பெண்களுக்கு மணவாழ்வில்;
சுகம் என்பது சொப்பனத்தில் வரும் சுகம் தான்.
உத்தானனின் மகன் அரசன் உத்தமன் — தன்
உத்தம மனைவியை விரட்டினான் கானகம்.
பெண்ணுக்குத் துயர் தருபவன் கணவன் – வரும்
பெண்ணுக்கு விரகதாபம் கணவனைப் பிரிந்தால்.
பெண்ணை ஒதுக்குவார் கணவனை இழந்தால்;
பெண்ணுப் பெண்ணே எதிரி ஆகிவிடுவாள்.
விளைவது இத்தனை துயரமும் எப்போது?
விழைந்து ஒரு கணவனை வரிக்கும் போது!”
குணவதி உரைத்தாள் கணவனுக்கு இதை;
மணப் பேச்சு ஆகிப் போனது பழைய கதை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
“திருமண பந்தத்தில் விருப்பமில்லை எனக்கு;
இருக்க வேண்டும் காலமெல்லாம் கன்னியாக.
சுதந்திரம் வேண்டும் மோனத் தவம் செய்திட,
சுதந்திரம் பறி போகும் திருமணம் புரிந்தால்.
அடிமையாக வேண்டும் ஓர் ஆண்பிள்ளைக்கு;
அடைய முடியாது என்னால் மோட்ச சுகத்தை!
சேவை செய்ய வேண்டும் அவன் உறவினருக்கு;
சேவை செய்து என் சுதந்திரத்தை நான் இழப்பேன்!
அறிய முடியாது கணவனின் உண்மை அன்பை;
அறிந்தால் துயர் விளையும் வேறு தொடர்பை.
துக்கமே வரும் பெண்களுக்கு மணவாழ்வில்;
சுகம் என்பது சொப்பனத்தில் வரும் சுகம் தான்.
உத்தானனின் மகன் அரசன் உத்தமன் — தன்
உத்தம மனைவியை விரட்டினான் கானகம்.
பெண்ணுக்குத் துயர் தருபவன் கணவன் – வரும்
பெண்ணுக்கு விரகதாபம் கணவனைப் பிரிந்தால்.
பெண்ணை ஒதுக்குவார் கணவனை இழந்தால்;
பெண்ணுப் பெண்ணே எதிரி ஆகிவிடுவாள்.
விளைவது இத்தனை துயரமும் எப்போது?
விழைந்து ஒரு கணவனை வரிக்கும் போது!”
குணவதி உரைத்தாள் கணவனுக்கு இதை;
மணப் பேச்சு ஆகிப் போனது பழைய கதை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி