VINAAYAKA PURAANAM - 2
10b. கஜமுக அசுரன்
பெண் யானையாக மாறினாள் விபுதை,
ஆண் யானையாக மாறினார் மாகதர்.
காதலுடன் கூடிய இருவருக்கும் பிறந்தான்
கஜமுகன் என்னும் வலிமை வாய்ந்த அசுரன்.
பெண்யானையின் மயிர்க்கால்களில் இருந்து
எண்ணிறந்த அசுர வீரர்கள் உற்பத்தி ஆயினர்.
தவம் செய்யும் முனிவர் மக்கள் அசுரர்களா ?
குலம் நலம் அறியாமல் கூடியதன் விளைவு!
“பெண்ணே! நீ யார் உண்மையைக் கூறு!”
“முனிபுங்கவா! நான் அசுர கன்னி விபுதை.
தேவை தேவர்களை வெல்லும் மகன் எனத்
தேடி வந்தேன் நான் தவசீலர் ஆகிய உம்மை.
ஆசி கூறி வாழ்த்துங்கள் நம் மகனை,
அசுரர்களிடம் கூட்டிச் செல்லும் முன்”
“தேவர்களுக்குத் தகுந்த எதிரி பிறந்தான்!”
தேனாக அசுரர்களுக்கு இனித்தது செய்தி
குலகுரு கூறினார் கஜமுக அசுரனிடம்,
“பலம் மிக்கவனாக ஆகவேண்டும் நீ!
தவம் செய்வாய் சிவனைக் குறித்து
தவம் பெற்றுத் தரும் அரிய வரங்கள்.
வரம் அளிப்பதில் வள்ளல் சிவபிரான்;
வரம் தரும் உலகை ஆளும் வலிமை.”
கானகம் சென்றான்; தவம் புரிந்தான்;
காணக் கிடைத்தது சிவன் தரிசனம்
தேவர்களால் அழிவின்மை பெற்றான்.
மூவுலகை ஆளும் வலிமை பெற்றான்
தலைநகர் ஆனது மாதங்கபுரம் – அவனைத்
தலை வணங்கினர் மூவுலகத்தினரும் கூடி.
அடிமைப் படுத்தினான் தேவ சமூஹத்தை
அடி பணிந்த தேவர் புரிந்தனர் குற்றேவல்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
10b. கஜமுக அசுரன்
பெண் யானையாக மாறினாள் விபுதை,
ஆண் யானையாக மாறினார் மாகதர்.
காதலுடன் கூடிய இருவருக்கும் பிறந்தான்
கஜமுகன் என்னும் வலிமை வாய்ந்த அசுரன்.
பெண்யானையின் மயிர்க்கால்களில் இருந்து
எண்ணிறந்த அசுர வீரர்கள் உற்பத்தி ஆயினர்.
தவம் செய்யும் முனிவர் மக்கள் அசுரர்களா ?
குலம் நலம் அறியாமல் கூடியதன் விளைவு!
“பெண்ணே! நீ யார் உண்மையைக் கூறு!”
“முனிபுங்கவா! நான் அசுர கன்னி விபுதை.
தேவை தேவர்களை வெல்லும் மகன் எனத்
தேடி வந்தேன் நான் தவசீலர் ஆகிய உம்மை.
ஆசி கூறி வாழ்த்துங்கள் நம் மகனை,
அசுரர்களிடம் கூட்டிச் செல்லும் முன்”
“தேவர்களுக்குத் தகுந்த எதிரி பிறந்தான்!”
தேனாக அசுரர்களுக்கு இனித்தது செய்தி
குலகுரு கூறினார் கஜமுக அசுரனிடம்,
“பலம் மிக்கவனாக ஆகவேண்டும் நீ!
தவம் செய்வாய் சிவனைக் குறித்து
தவம் பெற்றுத் தரும் அரிய வரங்கள்.
வரம் அளிப்பதில் வள்ளல் சிவபிரான்;
வரம் தரும் உலகை ஆளும் வலிமை.”
கானகம் சென்றான்; தவம் புரிந்தான்;
காணக் கிடைத்தது சிவன் தரிசனம்
தேவர்களால் அழிவின்மை பெற்றான்.
மூவுலகை ஆளும் வலிமை பெற்றான்
தலைநகர் ஆனது மாதங்கபுரம் – அவனைத்
தலை வணங்கினர் மூவுலகத்தினரும் கூடி.
அடிமைப் படுத்தினான் தேவ சமூஹத்தை
அடி பணிந்த தேவர் புரிந்தனர் குற்றேவல்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி