KANDA PURAANAM - MAHENDRA KAANDAM
12h. ஆயிரவர் அழிவு
வீரவாகுவின் வீர மொழிகளால்
சூரபத்மனின் கோபம் பெருகியது.
“பல்லு முளைக்காத பாலகன் தூதன் எனக்
கொல்லாமல் விட்டு விட்டேன் உன்னை.
செல்லாமல் இங்கே நின்று என்னைக்
கொல்லாமல் கொல்லுகிறாய் மேலும்!
தேவாதி தேவன் ஆனால் என்ன?
மூவர்க்கும் முதல்வன் ஆனால் என்ன?
தேவர்களைக் கனவிலும் சிறை விடேன்.”
ஏவினான் தன் மறவர்கள் ஆயிரவரை.
“தூதுவனைக் கொல்வது பாவச் செயல்.
தூதுவனைச் சிறையில் தள்ளுங்கள்!”
ஆயிரவர் வீரவாகுவைச் சிறைப்பிடிக்க
ஆர்வத்தோடு தாவி முன்னே ஓடினர்.
விரைந்து எழுந்த வீரபாகு பற்றினார்
வீரர்களின் குடுமிகளை ஒன்றாக.
ஓங்கி அடித்துக் கொன்று விட்டு
ஓரிடத்தில் போட்டார் உடல்களை.
“முருகனின் வேற்படையால் அழிவாய்!”
விரைந்து நீங்கினார் அரசவையை.
அரியணையும் விண் வழியாகவே
விரைந்துசென்று மறைந்து விட்டது.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
12h. ஆயிரவர் அழிவு
வீரவாகுவின் வீர மொழிகளால்
சூரபத்மனின் கோபம் பெருகியது.
“பல்லு முளைக்காத பாலகன் தூதன் எனக்
கொல்லாமல் விட்டு விட்டேன் உன்னை.
செல்லாமல் இங்கே நின்று என்னைக்
கொல்லாமல் கொல்லுகிறாய் மேலும்!
தேவாதி தேவன் ஆனால் என்ன?
மூவர்க்கும் முதல்வன் ஆனால் என்ன?
தேவர்களைக் கனவிலும் சிறை விடேன்.”
ஏவினான் தன் மறவர்கள் ஆயிரவரை.
“தூதுவனைக் கொல்வது பாவச் செயல்.
தூதுவனைச் சிறையில் தள்ளுங்கள்!”
ஆயிரவர் வீரவாகுவைச் சிறைப்பிடிக்க
ஆர்வத்தோடு தாவி முன்னே ஓடினர்.
விரைந்து எழுந்த வீரபாகு பற்றினார்
வீரர்களின் குடுமிகளை ஒன்றாக.
ஓங்கி அடித்துக் கொன்று விட்டு
ஓரிடத்தில் போட்டார் உடல்களை.
“முருகனின் வேற்படையால் அழிவாய்!”
விரைந்து நீங்கினார் அரசவையை.
அரியணையும் விண் வழியாகவே
விரைந்துசென்று மறைந்து விட்டது.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி