VINAAYAKA PURAANAM 2
9a. பாலலீலைகள் (1)
விபரீத சகுனங்கள் விளைவித்தன அச்சத்தை!
வீரரை அனுப்பினான் விந்தையை அறிந்துவர.
சகல உலகங்களையும் சுற்றி வந்தனர் வீரர்கள்;
சகல செய்திகளையும் கூறினார் சிந்துராஜனுக்கு.
“திரிசந்தி க்ஷேத்திரத்தில் விந்தை நிகழ்ந்தது!
திரிநேத்திரன் பார்வதியோடு தங்கியுள்ளான்.
விரதம் அனுஷ்டித்தாளாம் பார்வதி தேவி;
வித்தியாசமான ஆண் மகவு கிடைத்ததாம்.
மூன்று கண்கள், மூவிரண்டு கரங்களுடன்!
முனிவர்கள் பணிகின்றனராம் கணேசனை!”
கலங்கியது மனம் கணேசன் என்றதுமே;
துலங்கியது உண்மை கணேசன் யாரெனெ.
‘வரங்கள் அளிக்கையில் பிரான் கூறினார்
வரும் அழிவு கணேசரால் மட்டுமே என!”
அசரீரி ஒன்று கேட்டது ஆகாயத்திலிருந்து.
“அழிக்கப் பிறந்துவிட்டான் உன்னை ஒருவன்!
திரிசந்தியில் வளரும் கணேச குமாரன்
திரிலோக அதிபதி உன்னை அழிப்பான்!”
துடித்தது மீசை; வெடித்தது வெஞ்சினம்;
“பொடிப் பயலைக் கொல்வேன் இப்போதே!”
“பச்சிளம் பாலகனிடம் அச்சமா அரசே?
இச்சகத்தில் உம்மை அழிக்க ஒருவனா?”
சிறு பிள்ளை செய்ய முடியுமா இதை?
ஒரு வார்த்தை கூறுங்கள் எங்களிடம்!
காலால் தாங்கள் இட்ட வேலைகளைத்
தலையால் செய்யக் காத்திருக்கின்றோம்!”
அமைச்சர், பிரதானிகளின் சொற்கேட்டு
அமைதி அடைந்தான் சிந்துராஜன் அன்று.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
9a. பாலலீலைகள் (1)
விபரீத சகுனங்கள் விளைவித்தன அச்சத்தை!
வீரரை அனுப்பினான் விந்தையை அறிந்துவர.
சகல உலகங்களையும் சுற்றி வந்தனர் வீரர்கள்;
சகல செய்திகளையும் கூறினார் சிந்துராஜனுக்கு.
“திரிசந்தி க்ஷேத்திரத்தில் விந்தை நிகழ்ந்தது!
திரிநேத்திரன் பார்வதியோடு தங்கியுள்ளான்.
விரதம் அனுஷ்டித்தாளாம் பார்வதி தேவி;
வித்தியாசமான ஆண் மகவு கிடைத்ததாம்.
மூன்று கண்கள், மூவிரண்டு கரங்களுடன்!
முனிவர்கள் பணிகின்றனராம் கணேசனை!”
கலங்கியது மனம் கணேசன் என்றதுமே;
துலங்கியது உண்மை கணேசன் யாரெனெ.
‘வரங்கள் அளிக்கையில் பிரான் கூறினார்
வரும் அழிவு கணேசரால் மட்டுமே என!”
அசரீரி ஒன்று கேட்டது ஆகாயத்திலிருந்து.
“அழிக்கப் பிறந்துவிட்டான் உன்னை ஒருவன்!
திரிசந்தியில் வளரும் கணேச குமாரன்
திரிலோக அதிபதி உன்னை அழிப்பான்!”
துடித்தது மீசை; வெடித்தது வெஞ்சினம்;
“பொடிப் பயலைக் கொல்வேன் இப்போதே!”
“பச்சிளம் பாலகனிடம் அச்சமா அரசே?
இச்சகத்தில் உம்மை அழிக்க ஒருவனா?”
சிறு பிள்ளை செய்ய முடியுமா இதை?
ஒரு வார்த்தை கூறுங்கள் எங்களிடம்!
காலால் தாங்கள் இட்ட வேலைகளைத்
தலையால் செய்யக் காத்திருக்கின்றோம்!”
அமைச்சர், பிரதானிகளின் சொற்கேட்டு
அமைதி அடைந்தான் சிந்துராஜன் அன்று.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி