A poem a day to keep all agonies away!

VINAAYAKA PURAANAM 1

27e. Vanni and Mandaaram

Nandi Gothrar was a rushi. Ouravar was his son. Sumedai, Ouravar’s wife bore him a beautiful daughter named Sami. When the girl reached marriageable age they were on the look out for a suitable boy. Mandaaran was a disciple of Sounaka rushi and they got Sami married to Madaaran.

The couple went to meet his parents. On the way they met Brusundi. His elephant-like trunk made them burst out with laughter.The rushi became very angry at this immature behavior and cursed them to transform to two useless trees.

The couple were filled with remorse, fell at his feet and begged for his pardon. The sage took pity on them and said,

” You will become two tress. But Vinayaka will be worshiped under your shade and thus bring greatness to you. You will stand for long and reach the Vinayaka lokam when your time comes in the form of the trees”

Sami became the Vanni tree and Mandaaran the Mandaara tree.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6a. அகால வசந்தம்

மன்மதன் வரவுக்கு முன்னமே அங்கே
மனதை மயக்கும் வசந்தம் நுழைந்தது.

பூத்துக் குலுங்கின மரம் செடி கொடிகள்;
பூக்களில் ரீங்கரித்தன கரிய வண்டினம்.

பாடின பறவைகள், கூவின குயில்கள்,
கூடின விலங்குகள் தம் பேடைகளுடன்.

தென்றல் வந்து தழுவியது சுகமாக – ஓர்
இன்ப லாகிரியைத் தூண்டியது உலகினில்!

முனிவர்கள் கலங்கினர் இந்திரிய வசப்பட்டு;
இனிய, சுகமான இயற்கையின் வசப்பட்டு.

பதரிகாசிரமத்தில் நுழைந்தான் மன்மதன்
பரிவாரங்களோடு பணியைத் தொடங்கிட.

பாடினர், ஆடினார் தேவருலக மங்கையர்!
பாடின, ஆடின, கூடின விலங்கினங்கள்!

கண் விழித்துப் பார்த்தான் நாராயணன்;
கண்டு அதிசயித்தான் அகால வசந்தத்தை!

மலர்களை, மலர் மணத்தை, தென்றலை,
கலவி இன்பம் காணும் விலங்குகளை!

எழுப்பினான் நரனை நிஷ்டையிலிருந்து,
குழம்பினான் நரனும் கண்ட காட்சிகளால்.

கண்டுகொண்டான் காரணத்தை நாராயணன்,
விண்டான் நரனுக்கு நன்கு விளங்கும்படி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6a. Untimely Spring Season

Even before Manmathan entered Badarikaasramam, spring season made its entry there to welcome Manmathan and his retinue.

Trees, plants and creepers bloomed with colorful and fragrant flowers. The bees filled the air with a mesmerizing reengaaram while visiting those fragrant flowers.

The birds chirped, the cuckoos sang and all the animals went after their mates. A cool breeze blew and created a romantic atmosphere.

The ascetics and rushis were disturbed from their spiritual activities by the surging of love and lust in them – due to the season and the human nature.

Manmathan entered the Badarikaasramam with his retinue. The apsaras sang sweetly and danced divinely. The birds sang, the animals danced and mated with their respective partners.

Naaraayanan opened his eyes and was surprised to see the sudden changes around him. The spring season was untimely!

He pulled Naran out is his meditation and he too was equally puzzled by these sudden changes. Naaraayanan however guessed the reason for the sudden change in the season and explained it to Naran.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM


8a. சூரபத்மனின் புறப்பாடு.

தாயின் அறிவுரை இனித்தது மிகவும்;
மாயை கூறியபடி வடதிசை சென்றனர்.


தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.
தம்பியர் இரு படைக்காவலர் ஆயினர்.

முன் நின்று நடத்தினான் படையை
முகம் சிங்கமாகிய முதல் இளவல்!

இறுதியில் நடந்து காவல் புரிந்தான்
உறுதியாக, யானைமுகன் தாரகாசுரன்.

நிலமும்,வானமும் அதிர நடந்தனர்;
நிலமகள் வருந்தித் துயர்மிக உற்றாள்.

தளர்ந்தான் பாரத்தால் ஆதி சேடன்.
தளர்ந்தனர் திக்கஜ, திக்பாலகர்கள்!

சூரபத்மன் வெம்படையின் நடுவில்
சூரியன் போல் ஜொலித்து வந்தான்!

சுக்கிராச்சாரியார் காண விழைந்தார்
சூரனை, அசுரப்படையின் தலைவனை !

உயிர்களை வசப்படுத்தும் மந்திரம் ஓதி,
உயர்ந்த வான்வழி அணுகினார் அவனை.

“உம்மைக் கண்டதும் உருகுகிறது உள்ளம்,
உம் மேல் அன்பு பெருகி வளருகிறது!

நீர் யார் என அறிய விரும்புகிறேன்!”
நீர்மையுடன் வினவினான் சூரபத்மன்.

“உன் குலகுரு சுக்கிராச்சாரியன் நான்!
உன் நன்மை விழைந்து வந்துள்ளேன்.

கடின வேள்விகள் நீ செய்யும் காலை
கொடிய பகைவர் செய்வர் இடையூறு!

சிவனின் இந்த மந்திரத்தை ஓதினால்
அவன் மனம் மிக மகிழ்ச்சி அடையும்.”

காதில் ஓதினார் அரிய மந்திரத்தை;
கண நேரத்தில் மறைந்து போனார்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM


2 (# 8 a) THE MARCH TOWARDS THE NORTH.

Maayai’s four children loved her sound advice. They started marching towards the north. Simha mukhan guarded the army from the front and Taaraka asuran from the rear.

The Earth trembled under the weight of the marching army. The Heaven also shook. The goddess of Earth could not bear the stain caused by the marching army. The ashta dig gaja, and the ashta dig paalakaa had a tough time too.

Soorapadman was in the middle of the army shining like the bright morning sun. Sukraachaarya wanted to meet him.

Crossing the path of such an army is the surest way of embracing the God of Death. So he chanted the mantra which made the people kindly disposed and then went to meet Sooran.

Sooran’s heart melted at the sight of this strange man and he spoke kindly.” My heart melts even by looking at you. Who are you Sir?”

“I am the kulaguru of the asuras. My name is Sukraachaarya. I wish to help you to get what you seek. When you perform the yaaga, there will be many disturbances from your sworn enemies. I shall teach you a mantra which will please lord Siva and help you get whatever you want”

He chanted the mantra secretly in Sooran’s ears and disappeared promptly.
 
SREEMAN NAARAAYANEEYAM

[h=1]த3ச’கம் # 82 to # 86[/h] கிருஷ்ணன் பதினாயிரம் ஸ்திரீக்களை விவாஹம் செய்து கொண்டு அந்த எல்லாப் பத்தினிகளிடமும் பத்துப் பத்துப் புத்திரர்களை உற்பத்தி செய்து ஆனந்தமாக வாழ்கின்றான் – தேவ ரிஷி நாரதரே கண்டு வியக்கும்படி.
சண்டைக்கும், எனக்கும் வெகு தூரம் இருக்க வேண்டுமென்று நினைப்பவள் நான். சண்டை வராமல் இருப்பதற்கே சில சமயம் சண்டை போடவேண்டி இருக்கிறது!அது போகட்டும். வேண்டுமென்றே பாரத யுத்தத்தில் நுழைய வேண்டாமே!
குசேல உபாக்யானம், சந்தானகோபால உபாக்யானம், விருகாசுர வத வர்ணனம், பகவானின் விபூதிகள், பகவானின் மஹிமை மற்றும் கேசாதி பாதாந்த வர்ணனத்துடன் இந்தத் தொடரை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.
 
த3ச’கம் 89 ( 1 to 5)

வ்ருக அஸுர கதா

ரமாஜானே ஜானே யதி3ஹ தவ ப4க்தேஷு விப4வோ
ந ஸத்3யஸ் ஸம்பத்3யஸ் ததி3ஹ மத3க்ருத்வா த3ச’மினாம்|
ப்ரசா’ந்தீம் க்ருத்வைவ ப்ரதி3ச’ஸீ தத: காம மகி2லம்
ப்ரசா’ந்தேஷு க்ஷிப்ரம் ந க2லு ப4வதீயே ச்யுதி கதா2|| ( 89 – 1 )


இவ்வுலகில் தங்களின் பக்தர்களிடம் ஐஸ்வர்யம் விரைவில் உண்டாவதில்லை. அதன் காரணம் அது மதத்தை உண்டு பண்ணுவதே ஆகும். சாந்தி அடையாதவர்களுக்குச் சாந்தியைக் கொடுத்து; சாந்தி அடைந்தவர்களுக்கு சீக்கிரமாக எல்லா அபீஷ்டங்களையையும் நிறைவேற்றுகிறீர்கள். நழுவுதல் என்பதே தங்கள் பக்தர்களிடம் கிடையாது அல்லவா? ( 89 – 1)

ஸத்3ய: ப்ரஸாத3 ருஷிதான் விதி4 ச’ங்கராதீ3ன்
கேசித்3 விபோ4 நிஜ கு3ணானுகுணம் பஜந்த்ய:|
ப்4ரஷ்டா ப4வந்தி ப3த கஷ்ட மதீ3ர்க4 த்3ருஷ்ட்யா
ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதா3ஹரணம் கிலாஸ்மின் || (89 – 2 )


ஹே பிரபு! சிலர் தங்கள் வாசனைக்குத் தகுந்தபடி, சீக்கிரத்தில் சந்தோஷம் அடைபவர்களும், கோபம் அடைகிறவர்களும், ஆகிய பிரமன், ஈசன் முதலியவர்களைச் சேவித்துத் தீர்க்க தரிசனம் இல்லாத காரணத்தால் பிரஷ்டர்கள் ஆகின்றார்கள். இது மிகவும் கஷ்டமானதே! இதற்கு விருகாசுரன் சிறந்த உதாரணம் ஆவான் அல்லவா? ( 89 – 2 )

ச’குனி ஜஸ்ஸ து நாரத3 மேகதா3
த்வரித தோஷ மப்ருச்ச2 த3தீ4ச்’வ்ரம்|
ஸ ச தி3தே3ஷ கி3ரீச’ முபாஸிதும்
ந து ப4வந்த மப3ந்து4 மாஸாது4ஷு || ( 89 – 3 )


சகுனியின் புத்திரனான விருகாசுரன் ஒருநாள் நாரதரிடம் விரைவாக சந்தோஷம் அடையும் ஈசனைப் பற்றிக் கேட்டான் . அதற்கு நாரதர் பரமேஸ்வரனை உபாசிக்கச் சொன்னார். துஷ்டர்களின் பந்து அல்லாத உங்களை உபாசிக்கச் சொல்லவில்லை. ( 89 – 3 )

தபஸ் தப்த்வா கோ4ரம் ஸ கலு குபிதஸ் ஸப்தம தி3னே
சி’ர: சி2த்வா ஸத்3ய: புரஹர முபஸ்தா2ப்ய புரத:|
அதி க்ஷுத்3ரம் ரௌத்3ரம் சி’ரசி’ கர தானேன நித4னம்
ஜகன்னாதாத் வவ்ரே ப4வதி விமுகா2னாம் க்வ சு’ப4தீ4:|| ( 89 – 4)

அந்த விருசாசுரன் கடுமையான தவம் புரிந்தான். ஏழாவது நாளே கோபம் அடைந்து தன் தலையைத் தானே அறுத்து எடுத்தபோது பரமேஸ்வரன் அவன் முன் பிரத்தியக்ஷம் ஆனார். அவரிடமிருந்து ” தலை மேல் கை வைப்பதால் மரணம் உண்டாக வேண்டும்!” என்ற மிகவும் துச்சமானதும் கொடியதும் ஆன வரத்தைகே கேட்டுப் பெற்றான். தங்களிடம் பாராமுகம் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி எங்ஙனம் உண்டாகும்? ( 89 – 4 )

மோக்தாரம் ப3ந்த4முக்தோ ஹரிண பதி
ரிவ ப்ராத்3ரவஸ்தோ(S)த2 ருத்3ரம்
தை3த்யாத் பீ4த்யா ஸ்ம தே3வோ தி3சி’ தி3சி’
வலதோ ப்ருஷ்ட2தோ த3த்த த்3ருஷ்டி:|
தூஷ்ணீகே ஸர்வலோகே தவ பத3 மதி4
ரோக்ஷ்யந்தம் உத்3வீக்ஷ்ய ச’ர்வம்
தூ3ராதே3வாக்3ரதஸ்த்வம் படு வடு
வபுஷா தஸ்தி2ஷே தா3னவாய|| ( 89 – 5 )


பிறகு அவன், கட்டிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட ஒரு சிங்கம், தன்னை
அவிழ்த்து விட்டவனையே பின் தொடருவது போலப் பரமசிவனைப் பின் தொடர்ந்தான். பரமசிவனும் அசுரனிடம் கொண்ட பயத்தால், பின்புறம் திரும்பிப் பார்த்துக் கொண்டே எல்லா திசைகளிலும் ஓடினார். அத்தனை பேரும் பேசாமல் இருக்கும்போது, பரமசிவன் தங்கள் லோகத்திற்கு செல்ல உத்தேசித்ததைக் கண்டறிந்து வெகு தூரத்திலேயே திறமை வாய்ந்த பிரம்மச்சாரியின் உருவத்தில் அசுரனுக்கு எதிரில் பிரகாசமாக நின்றீர்கள் அல்லவா? ( 89 – 5 )
 
த3ச’கம் 89 ( 6 to 10 )

வ்ருக அஸுர கதா

ப4த்3ரம் தே சா’குநேய ப்4ரமாஸி கிமது4னா
த்வம் பிசா’சஸ்ய வாசா
ஸந்தே3ஹச்’சேன்மதுக்தௌ தவ கிமு ந
கரேஷ்யங்கு3லீ மங்க3 மௌலௌ|
இத்த2ம் த்வத்3 வாக்ய மூட4ச்’சி’ரஸி
க்ருதகரஸ்ஸோSபதச்சின்ன பாதம்
ப்ரம்சோ’ ஹ்யேவம் பரோபாஸிது ரபி
ச கதி: சூ’லினோSபி த்வமேவ || ( 89 – 6 )

“ஹே விருகாசுரனே! நீ க்ஷேமமா? நீ இந்தப் பிசாசின் சொல்லைக் கேட்டுக் கொண்டு ஏன் வீணாக ஓடித் திரிகின்றாய்? அப்பனே! உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே ஏன் கையை வைக்கவில்லை?” இவ்வாறு தாங்கள் சொல்லக் கேட்டு மதி மயங்கிய அந்த விருகாசுரன் தன் தலையில் தானே கையை வைத்துக் கொண்டான். வேரறுந்த மரம் போல விழுந்து இறந்தான். வேறு கடவுளை உபாசிப்பவனுக்கு இவ்விதமாக நாசம் உண்டாகிறது. அது மட்டுமல்ல! சூலபாணிக்குக் கூட தாங்களே அபயம். ( 89 – 6 )

ப்3ருகு3ம் கில ஸரஸ்வதி நிகட வாஸினஸ் தாபஸாஸ்
த்ரிமூர்த்திஷு ஸமாதிச’ன்னதி4க ஸத்வதாம் வேதி3தும்|
அயம் புன ரனாத3ராத் உதி3த ருத்3த4 ரோஷே விதௌ4
ஹரேSபி ச ஜிஹீம்ஸிஷௌ கி3ரிஜயா த்4ருதே த்வாமகா3த் ||
(89 – 7 )


சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த தபஸ்விகள் மும்மூர்த்திகளில் அதிகமான சத்துவ குணம் உடையவரைக் கண்டறிவதற்கு ப்ருகு முனிவரை அனுப்பினார்கள் அல்லவா? அவரும் பிரம்ம தேவர் தன்னை ஆதரிக்காததால் முதலில் கோபம் அடைந்து பிறகு சாந்தம் அடைந்தார். பரமேஸ்வரனும் அவரைக் கொல்ல விரும்பியபோது பார்வதியால் தடுக்கப்பட்டார். அதன் பின் தங்களை வந்து அடைந்தார் அல்லலவா?
( 89 – 7 )

ஸுப்தம் ரமாங்கபு4வி பங்கஜ லோசனம் த்வாம்
விப்ரே விநிக்4னதி பதே3ன முதோத்திதஸ்த்வம்|
ஸர்வம் க்ஷமஸ்வ முனிவர்ய ப4வேத்ஸதா3 மே
த்வத் பாத3சிஹ்ன மிஹ பூ4ஷணமித்யவாதீ3: || ( 89 – 8 )


லக்ஷ்மி தேவியின் மடியில் நித்திரை செய்கிறவரும், தாமரைக் கண்ணனும் ஆகிய தங்களை அந்த ப்ருகு முனிவர் காலால் எட்டி உதைத்த போது தாங்கள் மிகவும் சந்தோஷத்தோடு எழுந்து, “ஹே முனிஸ்ரேஷ்டரே! எல்லாவற்றையும் பொறுக்க வேண்டும். தங்கள் திருவடியின் அடையாளம் எனது மார்பில் எப்போதும் அலங்காரமாக இருக்கட்டும்” என்று சொன்னீ ர்கள் அல்லவா? ( 89 – 8 )

நிச்’சித்ய தே ச ஸுத்3ருட4ம் த்வயி ப3த்3த4பா4வா:
ஸாரஸ்வதா முனிவர த3தி4ரே விமோக்ஷம்|
த்வாமேவ மச்யுத புனச்’ ச்யுதி தோ3ஷஹீனம்
ஸத்வாச்சயைக தனுமேவ வயம் ப4ஜாம:|| ( 89 – 9 )

சரஸ்வதிநதி தீரவாசிகாளான அம்முனிஸ்ரேஷ்டர்களும் நிச்சயம் பண்ணிக் கொண்டு தங்களிடத்தில் திடமான பக்தி கொண்டு மோக்ஷம் அடைந்தார்கள். ஹே அச்யுதா! இவ்விதம் ச்யுதி அல்லது நழுவுதல் என்ற தோஷம் இல்லாத சத்வ குணப் பிரதான சரீரத்தை உடைய உங்கள் ஒருவரையே நாங்கள் சேவிக்கின்றோம். ( 89 – 9 )

ஜக3த் ஸ்ருஷ்ட்யாதௌ3 த்வாம் நிக3ம நிவஹைர் வந்தி3பி4ரிவ
ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித் பரம ரஸ நிர்த்3வைத வபுஷம்|
பராத்மானம் பூ4மான் பசு’ப வனிதா பா4க்3ய நிவஹம்
பரீதாபச்’ராந்த்யை பவனபுர வாஸின் பரிப4ஜே || ( 89 – 10)


ஹே குருவாயூரப்பா! உலக சிருஷ்டியின் துவக்கத்தில் ஸ்துதி செய்யும் பாடகர்கள் போல தேவ சமூஹத்தினரால் துதிகப்பட்டவரும்; சச்சிதானந்தரூபியும்; பரமார்த்தரூபியும்;கோபஸ்த்ரீக்களின் பாக்கியக் குவியலுமான தங்களைத் தாபத்த்ரய நிவர்த்திக்காக நான் நன்றாக சேவிக்கின்றேன். ( 89 – 10 )
 
த3ச’கம் 93 ( 1 to 3)

சதுர்விம்ச’தி கு3ரவ:

ப3ந்துஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி
கருணயா த்வய்யுபாவேசி’தாத்மா
ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி
ஜக3த்3 வீக்ஷ்ய மாயாவிலாஸம்|
நானாத்வாத்3 ப்4ராந்தி ஜன்யாத் ஸதி க2லு
கு3ணத்தோ3ஷாவ போ3தே4 விதி4ர்வா
வ்யாஸேதோ4 வா கத2ம் தௌ த்வயி
நிஹிதமதேர் வீத வைஷம்யபு3த்3தே4 || ( 93 – 1 )


தங்களுடைய கருணையாலே பந்துக்களிடம் கொண்டுள்ள ஸ்நேஹத்தை விடுவேனாகுக. தங்களிடதிலேயே மனத்தைச் செலுத்தி, உலகம் அனைத்தும் மாயா கல்பிதம் என்று அறிந்து, எல்லாவற்றையும் தியாகம் செய்து திரிவேனாகுக. மனபிரம்மையினால் ஏற்படுகின்ற பேதங்களால், குணங்களையும் தோஷங்களை அறியும் ஞானம் இருக்கும்போது அல்லவா விதி அல்லது நிஷேதம் ஏற்படுகின்றது? அதனால் அத்தகைய வைஷம்ய புத்தி இல்லாத ஒருவனுக்கு அவ்வித நிஷேதங்கள் எப்படி உண்டாக முடியும்? ( 93 – 1)

க்ஷுத்துஷ்ணா லோபமாத்ரே ஸததக்ருததி4யோ
ஜந்தவ: ஸந்த்யனந்தாஸ்
தேப்யோ4 விஞ்ஞானவத்வாத் புருஷ இஹ
வரஸ் தஜ்ஜனிர் து3ர்லபை4வ|
தத்ராப்யாத்மாSSத்மன: ஸ்யாத் ஸுஹ்ருத3பி
ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்தாசேதாஸ்
தாபோச்சி2த்தேருபாயம் ஸ்மாரதி ஸ ஹி
ஸுஹ்ருத்ஸ்வாத்மவைரி ததோSன்ய:|| ( 93 – 2 )

பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொள்வதில் மட்டும் எப்போதும் மனதைச் செலுத்தும் பிராணிகள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன. இந்த உலகில் பகுத்தறிவு படைத்த மனிதன் அவற்றை விடவும் மேலானவன். அந்த மனிதப் பிறவியும் கிடைப்பதற்கு அரியதே. அந்த அரிய மனிதப் பிறவியிலும் ஆத்மாவே (தானே) ஆத்மாவுக்கு ( தனக்கு) பந்துவாகவும் அல்லது சத்ருவாகவும் விளங்குவான். எந்த ஒரு ஆத்மா தங்களிடம் மனதைச் செலுத்தியவனாக, தன்னுடைய தாப நிவர்த்திக்காக முயற்சி செய்கின்றனோ, அவன் தான் ஆத்மாவின் பந்து. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆத்மாவுக்குச் சத்ருவே! ( 93 – 2 )

த்வத் காருண்யே ப்ரவ்ருத்தே க இவ ந ஹி
கு3ரூர் லோகவ்ருத்தேS விபூ4மன்
ஸர்வ க்ராந்தாSபி பூ4மிர் ந ஹி சலதி
ததஸ்ஸத்க்ஷமாம் சி’க்ஷயேயம்|
க்3ருஹ்ணீயாமீச’ தத்தத்3 விஷய
பரிசயேSப்ய ப்ரஸக்திம் ஸமீராத்3
வ்யாப்தத்வஞ்சாத்மனே மே
க3க3ன கு3ரு வசா’த்3 பா4து நிர்லேபதா ச || (93 – 3)


ஹே பரமாத்மாவே! தங்கள் கருணைக்குப் பாத்திரம் ஆனால் உலக நடத்தையில் யார் தான் என்னுடைய குருவாக ஆக மாட்டார்கள்? பூமியானது எல்லோராலும் எல்லாவற்றாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்றாலும் அது சலித்துக் கொள்வது இல்லையல்லவா? அந்த பூமியிடம் இருந்து நான் பொறுமையைக் கற்றுக் கொள்வேனாகுக. ஹே ஈசா! எல்லா விஷயங்களுடனும் சம்பந்தம் ஏற்பட்ட போதிலும் அவற்றில் பற்றில்லாமல் இருக்கும் தன்மையை நான் வாயுவிடமிருந்து கிரஹித்துக் கொள்வேனகுக!ஆத்மாவிடமிருந்து எங்கும் நிறைந்து இருக்கும் அதன் தன்மையையும்; ஆகாயத்திடமிருந்து ஒன்றிலும் பற்றிலாமல் இருப்பதையும் நான் கற்றுக் கொள்வேனாகுக. ( 93 – 3 )
 
த3ச’கம் 93 ( 4 to 6)

சதுர்விம்ச’தி கு3ரவ:

ஸ்வச்ச2: ஸ்யாம் பாவனோSஹம் மது4ர
உத3கவத்3 வஹ்னிவன் மாஸ்ம க்3ருஹ்ணாம்
ஸர்வான் நீனோSபி தோ3ஷம் தருஷு தாமிவ
மாம் ஸர்வ பூ4தேஷ்வ வேயாம்|
புஷ்டிர் நஷ்டி: கலானாம் ச’சி’ன இவ
தனோர்நாத்மனோSஸ்தீதி வித்3யாம்
தோயா தி3வ்யஸ்த மார்த்தாண்ட வதபி ச
தனஷ்வேகதாம் த்வத் ப்ரஸாதா3த் || ( 93 – 4 )


நான் ஜலம் போல தெளிந்த நிர்மலனாகவும், பாபங்களை அழிப்பவனாகவும், இனிப்பானவனாகவும் மாறுவேனாகுக! நான் அக்னி போல எல்லாவற்றையும் பக்ஷிப்பவனாக இருந்தாலும், அவற்றின் தோஷத்தைக் கிரகிக்காது இருப்பேனாகுக! மரக்கட்டைகளில் அக்னி மறைந்து இருப்பதைப் போலவே, ஆத்மாவாகிய நானும் எல்லா சரீரங்களிலும் மறைந்து இருப்பதை அறிவேனாகுக. சந்திரனுடைய கலைகளுக்குத் தான் வளர்ச்சியும் தேய்வும் அன்றி சந்திரனுக்கு அல்ல. அதுபோலவே மனிதனுடைய வளர்ச்சியும் தளர்ச்சியும் அவன் சரீரத்துக்கே அன்றி அவன் ஆத்மாவுக்கு இல்லை என்று நான் அறிவேனாகுக! ஒவ்வொரு நீர்ப் பரப்பிலும் வெவ்வேறாகத் தோன்றும் சூரியனைப் போலவே வெவ்வேறு சரீரங்களில் தோன்றும் ஆத்மா என்பது ஒன்றே என்று அறிவேனாகுக. ( 93 – 4 )

ஸ்னேஹாத்3 வ்யாதா4ஸ் த புத்ர வ்யஸன
ம்ருத கபோதாயிதோ மாஸ்ம பூ4வம்
ப்ராப்தம் ப்ராச்’னன் ஸஹேய க்ஷுத4மபி
ச’யுவத் ஸிந்து4 வத் ஸ்யாமாகா3த4:|
மா பப்தம் யோஷிதாதௌ3 சி’கி2னி ச’லப4வத்3
ப்4ருங்க3வத் ஸாரபா4கீ3
பூ4யாஸம் கிந்து தத்3வத்3 த3ன சயன
வசா’ன்மாSஹமீச’ ப்ரணேச’ம்|| ( 93 – 5 )


சினேஹம் காரணமாக வேடனால் கொல்லப்பட்டத் தன் புத்திரர்களை எண்ணி வருந்தி இறந்து போன மாடப்புறா போல ஆகாது இருப்பேனாகுக! மலைப்பாம்பு போலத் தற்செயலாகக் கிடைத்ததை உண்டு பசியாறுவேனாகுக!
சமுத்திரம் போல கம்பீரமாக இருப்பேனாகுக! தீயில் சென்று வெட்டுக்கிளி விழுவது போல, ஸ்த்ரீ முதலியவற்றில் விழாமல் இருப்பேனாகுக! வண்டு போல சாரம்சத்தை மட்டும் கிரஹிப்பேனாகுக! ஆனால் அந்த வண்டு போலப் பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டு நாசம் அடையாமல் இருப்பேனாகுக. ( 93 – 5)

மா ப3த்3த்4யாஸம் தருண்யா கஜ இவ
வச’யா நார்ஜயேயம் த4னௌக4ம்
ஹர்தான்யஸ்தம் ஹி மாத்4வீ ஹர இவ
ம்ருக3வன்மா முஹம் க்3ராம கீ3தை:|
நாத்யா ஸஜ்ஜேய போ4ஜ்யே ஜஷ இவ
ப3டி3சே’ பிங்க3லாவன் நிராச':
ஸுப்யாம் ப4ர்தவ்ய யோகா3த் குரர இவ
விபோ4 ஸாமிஷோSன்யைர் ந ஹன்யை || (93 – 6)


பெண் யானையால் ஆண் யானை பந்தம் அடைவதைப் போல, ஸ்த்ரீ காரணமாக பந்தத்தை அடையாது இருப்பேனாகுக. பணக் குவியலை சம்பாதிக்காமல் இருப்பேனாகுக. தேன் எடுப்பவன் தேனீக்கள் சேர்த்து வைத்த தேனை எடுத்துக் கொள்வது போல வேறொருவன் அதை அபகரிப்பான். மான் போல ஆபாசமான பாட்டுக்களுக்கு நான் மயங்காது இருப்பேனாகுக. தூண்டிலில் மீன் போல ஆகாரத்தில் அதிகப் பற்றுக் கொள்ளாமல் இருப்பேனாகுக பிங்களை என்ற வேசியைப் போல ஆசையற்றவனாகத் தூங்குவேனாகுக மாமிசத்துடன் கூடிய குரரம் என்ற பறவையைப் போல, என்னால் காப்பாற்றப்படவேண்டிய பொருளின் சேர்க்கையால், நான் மற்றவர்களால் துன்புறுத்தப் படாமல் இருப்பேனாகுக. ( 93 – 6 )
 
த3ச’கம் 93 ( 7 to 10)

சதுர்விம்ச’தி கு3ரவ:

வர்தய த்யக்தமானஸ் ஸுக2மதி சி’சு’வன்
நிஸ்ஸஹாயச்’சரேயம்
கன்யாயா ஏகசே’ஷோ வலய இவ விபோ4
வர்ஜிதான் யோன்ய கோ4ஷ:|
த்வத்சித்தோ நாவ புத்3த்4யை பரமிஷு க்ருதீ3வ
க்ஷ்மாப்4ருதாயான கோ4ஷம்
கே3ஹேஷ்வன்ய ப்ரணீ தேஷு அஹரிவ
நிவாஸன் யுந்தி3ரோர் மந்தி3ரேஷு || ( 93 – 7)


சிறு குழந்தையைப் போல என் அபிமானத்தை விட்டு விட்டுச் சுகமாக இருப்பேனாகுக. கன்னிகையின் ஒற்றை வளையல் போலச் சஹாயமற்றவனாகவும், வீண் விவாதங்களை விட்டவனாகவும் நான் சஞ்சரிப்பேன் ஆகுக.
பாணத்தை உண்டு பண்ணும் கருமான் அரசன் வரும்போது உண்டாகும் சத்தத்தை அறியாமல் இருப்பது போலத் தங்களிடம் மனத்தை செலுத்திய நான் வேறு ஒன்றும் அறியாமல் இருப்பேன் ஆகுக.எலியின் வளையில் பாம்பு வசிப்பது போல, பிறரால் உண்டுபண்ணப்பட்ட வீட்டில் நான் வசிப்பேன் ஆகுக. (93 – 7 )

த்வய்யேவ த்வத் க்ருதம் த்வம் க்ஷபயஸி
ஜக3தீ3த் யூர்ண நாபா4த் ப்ரதீயாம்
த்வத் சிந்தா த்வத் ஸ்வரூபம் குருத இதி
த்ருட4ம் சி’க்ஷயே பேச’காராத்|
விடப4ஸ்மாத்மா ச தே3ஹோ ப4வதி
கு3ருவரோ யோ விவேகம் விரக்திம்
த4த்தே ஸன்சிந்த்ய மானோ மம து ப3ஹுருஜா
பீடி3தோயம் விசே’ஷாத் || ( 93 – 8 )


தாங்கள், தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தைத் தங்களிடமே லயிக்கச் செய்கிறீர்கள் என்ற உண்மையை நான் சிலந்தியிடமிருந்து அறிவேனாகுக. தங்கள் மீது செய்யும் தியானம் தங்கள் ஸ்வரூபத்தை உண்டு பண்ணுகிறது என்ற உண்மையை நான் குளவியிடம் இருந்து கற்றுக் கொள்வேனாகுக. மலமாகவோ, சாம்பலாகவோ மாறும் தன்மை வாய்ந்த இந்தச் சரீரமும் சிறந்த குருவாக ஆகிவிடுகிறது. இந்தச் சரீரம் நன்கு ஆலோசித்து விவேகத்தையும் விரக்தியையும் உண்டு பண்ணுகிறது என்னுடைய இந்த தேஹமோ பல வியாதிகளால் பீடிக்கப்பட்டு விசேஷமான விவேகத்தையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகிறது. ( 93 – 8 )

ஹீ ஹீ மே தே3ஹ மோஹம் த்யஜ
பவன புராதீ4ச’ யத் ப்ரேமஹேதோர்
கே3ஹே வித்தே கலத்ராதி3ஷு ச விவசி’தாஸ்
த்வத் பத3ம் விஸ்மரந்தி|
ஸோSயம் வஹ்னேச்’ சு’னோ வா பரமிஹ பரத:
ஸாம்ப்ரதஞ்சாக்ஷி கர்ண
த்வக்3 ஜிஹ்வாத்3யா விகர்ஷ ந்யவச’மத இத:
கோபி ந த்வத் பதா3ப்ஜே || (93 – 9)


ஹே குருவாயூரப்பா! ஆச்சரியம்! ஆச்சரியம்! என்னுடைய சரீரத்தில் இருக்கும் மோஹத்தைப் போக்கடிபீராகுக.
எந்த சரீரத்தின் மீது இருக்கும் பிரேமை காரணமாக வீட்டிலும், பணத்திலும், பத்தினி முதலியவரிடத்திலும் பரவசம் அடைந்து, தங்கள் திருவடிகளை மறக்கின்றார்களோ; அந்த சரீரமானது இவ்வுலகில் இறந்த பிறகு அக்கினிக்கு அல்லது நாய்களுக்கு உணவாகிறது. உயிருடன் இருக்கும் பொழுது தன் வசம் அற்ற இந்த சரீரத்தைக் கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்பவை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கின்றன.
ஒன்றாவது தங்கள் பதாரவிந்தங்களுக்கு இழுப்பதில்லை ( 93 – 9 )

து3ர்வரோ தே3ஹ மோஹோ யதி3 புனரது4னா
தார்ஹி நிரசே’ஷ ரோகா3ன்
ஹத்வா ப4க்திம் த்3ரடி4ஷ்டாம் குரு தவ
பத3 பங்கேருஹ பங்கஜாக்ஷ |
நூனம் நானா பா4வந்தே ஸமதி4க3த மிமம்
முக்தித3ம் விப்ர தே3ஹம்
க்ஷுத்3ரோ ஹா ஹந்த மா மா க்ஷிப விஷய ரஸோ
பாஹிமாம் மாருதேச’ || ( 93 – 10)


ஹே தாமைரைக் கண்ணனே! சரீரத்தில் இருக்கும் மோஹமானது தடுக்க முடியாததாக இருக்குமேயானால், இந்த ஜென்மத்திலேயே என்னுடைய சமஸ்த ரோகங்களையும் போக்கடித்துத் தங்கள் பாதாரவிந்தங்களில்
திடமான பக்தியை உண்டு பண்ண வேண்டும். நிச்சயமாக அனேக ஜன்மங்களுக்குப் பின்னர் என்னால் அடையப்பட்ட, மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய இந்த பிராமண சரீரத்தைத் துச்சமான விஷய சுகங்களில் தள்ள வேண்டாம்! தள்ள வேண்டாம்! ஹே குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்றுவீராகுக ( 93 – 10 )
 
VINAAYAKA PURAANAM 1.

27f. வேழமுக வேந்தன்

சீடன் மந்தாரனைக் காணாத் சௌனக முனிவர்
சீடர்களை அனுப்பினார் ஔரவ முனிவரிடம்.

மந்தாரன் சென்றான் அன்றே மனைவியுடன்;
வந்து சேரவில்லை இன்னம் ஆசிரமத்துக்கு!

ஞான திருஷ்டியில் கண்டார் சீடன் மந்தாரன்,
மோனத்தவ முனிவரின் சாபத்தைப் பெற்றதை.

விநாயகர் அருள் பெற்ற புருசுண்டி முனிவரை
அனாவசியமாகச் சினம் ஊட்டிய பிள்ளைகள்;

சுய உருவடைய வேண்டும் என்று விரும்பிக்
கயமுகனைத் தொழுதனர் அவர் பெற்றோர்.

பன்னிரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர்
பத்துக் கரங்களுடன் வந்தார் கணபதி.

“பக்தனின் சாபத்தை மாற்ற இயலாது!
பக்தி செய்தீர் பன்னிரண்டு ஆண்டுகள்.

ஒன்றுக்கும் உதவாத மரமாக நிற்பவரை
மண்ணுலகம் போற்றிட வழி செய்வேன்!

இம்மர நிழலில் என்னைப் பூஜிப்பவருக்கு
இம்மை, மறுமை இரண்டிலும் ஆனந்தமே!”

மரங்களின் நிழலில் எழுந்தருளினார்.
மரங்களின் சிறப்புப் பல்கிப் பெருகியது.

மந்தார மலர், வன்னி இலைகள் கொண்டு
மனதாராப் பூஜித்தனர் நான்கு பெற்றோரும்.

சுமேதை சேர்ந்தாள் விநாயகர் திருவடிகளை.
சூக்ஷ்ம வடிவில் சரீரத்தை வருத்திக்கொண்டு

ஔரவர் அடைந்தார் வன்னியின் கர்ப்பத்தை.
ஔரவர் ஆகிவிட்டார் இப்போது சமீகர்ப்பர்!

அவிர்பாகம் பெற்று தேவர்களுக்குத் தரும்
அனுக்கிரஹம் பெற்றார் அந்த சமீகர்ப்பர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM 1.


#27f. Lord Vinayaka

Sounaka rushi got worried since Mandhaaran never came back after his marriage. He sent his other disciples to Ouravar find out about Mandaaran. Ouravar was equally surprised since the bride and the groom had left their place soon after their wedding.

Sounakar found out the things that happened to them and how the newly weds had been cursed to become useless trees. They had made fun of Brusundi – who had a trunk in his face and resembled Vinayaka in appearance.

The parents of Mandaaran and Sami started praying to Vinayaka to deliver their children from this terrible curse and make them get back their original forms. Twelve years rolled by. Vinayaka took pity and appeared to them with his ten impressive bujam.

He told the parents, “The curse laid by my devotee cannot be removed by me. You have prayed hard for twelve long years. i shall bestow some boons on you. Those who pray to me sitting under the shade of these two trees will get happiness in this birth as well in the next.” He appeared as statues under those two trees.

The parents of the couple prayed and did archanai with the vanni leaves and Mandaara flowers. Sami’s mother Sumedhai merged with Vinayaka’s lotus feet.

Ouravar took the sookshma form and managed to reach the garbbam of the vanni tree. He became Sami grabbar- in charge of giving the avir baagam to the various Devas during a homam.
.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6b. வசந்த லக்ஷ்மி

“குலுங்குகின்றன செடிகளில் மலர்கள் ;
கூவுகின்றன மனோஹரமாகக் குயில்கள்.

ரீங்கரிக்கின்றன மதுவுண்ட கருவண்டுகள்;
ஏங்குகின்றன இன்பம் துய்க்க விலங்குகள்;

சிங்கம் போல ஆனது அந்த வசந்தருது.
சிசிரருது ஆனது வலிய யானை போல.

கூரிய நகங்களே முருக்க மலர்கள்;
சீரிய கைகளே அசோக மலர்கள்.

கால்கள் கல்யாண முருக்க மலர்கள்
கார்மேகக் கூந்தல் அசோக மரங்கள்.

முகமே அன்றலர்ந்த தாமரை மலர்,
விகசிக்கும் கண் கருநெய்தல் மலர்.

கண்கவர் தனங்கள் வில்வப் பழங்கள்
கண்கவர் பல்வரிசை குருக்கத்தி மலர்.

அழகிய செவிகள் ஆயின பூங்கொத்து.
செவ்விய உதடுகள் கோவைப் பழங்கள்.

ஒளிரும் நகங்கள் செந்நெல் கதிர்கள்
ஒலிக்கும் குரல் குயில்களின் ஓசை.

மிளிரும் நகைகள் மயில் பீலிகள்;
படரும் ஆடை கடம்ப மரங்கள்;

ஒட்டியாணம் மல்லிகைக் கொடி!
கட்டழகு நடை அன்னப் பேடை!

வந்துள்ள பெண் வசந்த லக்ஷ்மி;
வந்துள்ளாள் தவத்தைக் கலைக்க.

திட்டம் தீட்டியவன் தேவேந்திரன்
திறம்படச் செய்பவன் மன்மதன்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#6b. Vasantha Lakshmi

“The plants and trees are laden with fragrant flowers. The cuckoos are singing sweetly.The bees hum intoxicated with honey. All the animals wish to mate. Spring season can be compared to a brave Lion and the late Winter season to an elephant.

Flowers of the tress in various colors form the nails, the hands and the legs of a lovely lady. The dark colored asoka trees form her dark hair, the fresh lotus flower is her face, the blue water lilies are her eyes, the fruits of vilava tree are her young breasts.

Kurukkathi flowers form her pearly teeth, kovai fruits form her red lips, the song of cuckoo is her sweet voice, the peacock feathers are her jewelry, the kadamba trees are her dress, the jasmine creeper is her waist chain and the swans form her dainty walk.

This lovely lady is known as Vasantha Lakshmi. She has come here to ruin our pnanace. Indra has hatched this scheme and Manmathan is carrying out the plan!” Naaraayanan told this to Naran.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

8b. வேள்விச் சாலை.

வடபுலத்தை அடைந்தான் சூரபத்மன்;
கடல் போன்று அமைத்தான் யாகசாலை.


பதினாயிரம் யோசனை பரப்பு அமைத்து,
பதித்தான் மலைகளை அதன் மதிலாக!

மதிலைச் சுற்றிலும் அவுணர்கள் காவல்;
மதிலின் நான்கு திசைகளில் வாசல்கள்!

வீரமடந்தை வாயில்களில் காவல்புரிய,
வைரவர் கூட்டம் காத்தது வேள்வியை.

ஒரு யாககுண்டம் யாகசாலையின் நடுவே;
பிற யாககுண்டங்கள் அதனைச் சுற்றிலும்.

வேள்விப் பொருட்களை நாடிய சூரபத்மன்
வேள்வியை முடித்துவிட்ட தாயை எண்ண,

அரிமா, வெம்புலி, யானைகள், யாளிகள்,
கரடிகள், குதிரைகள், ஆட்டுக்கடாக்கள்,

குருதியும், ஊனும், எண்ணையும், நெய்யும்,
அரிசி, பால், தயிர், கடுகு, மிளகுடன்,

மது, மலர்கள், நெற்பொறி, கஸ்தூரி,
புது தர்ப்பை, நறுமணப் பொருட்கள்,

சமித்துக்கள், பல கொள்க
ங்கள் என
குமித்துவிட்டாள் மாயை
யாகசாலையில்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 (#8 B). THE YAAGA SAALAA.

Soorapadman reached the right spot for performing the yaaaga. He enclosed an area as big as an ocean. Mountains were planted as the guarding wall around the yaaga saalaa.

There were entrances on all the four sides. The asuras guarded from beyond the mountain-fence.

The entrances were guarded by the brave women goddesses and the yaaga was guarded by the Bhairavas. In the middle of the yaaga saala there was the main yaaga kundam. Surrounding that several smaller kundams were made.

Soora padman needed many things for performing the yaaga. He thought of his mother Maayai who had already finished her yaaga and had got the power to procure whatever she wanted.

She provided everything needed for the successful completion of his yaaga.
She filled the yaagasaala lions, tigers, elephants, yaalis, bears, horses, rams, meat, blood, oil, ghee, milk, curd, pepper, rice, mustard, flowers, honey, kasthoori, incenses, paddy puffs, vessels and samiththu for the agni.
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 96 ( 1 to 3)

ப4கவத் விபூ4தய:

த்வம் ஹி ப்3ரஹ்மைவ ஸாக்ஷாத்
பரமுருமஹிமன்னக்ஷராணாமகார:
தாரோ மந்த்ரேஷு ராஞாம் மனுரஸி முனிஷு
த்வம் ப்4ருகுர் நாரதோ3பி |
ப்ரஹ்லாதோ3 தா3னவனாம் பசு’ஷுச
ஸுரபி4 பக்ஷிணாம் வைனதேயோ
நாகா3னாமஸ்யனந்தச் ஸுரஸரித3பி
ச ஸ்ரோதஸாம் விஸ்வமூர்த்தே || ( 96 – 1)

அதிக மகிமை உடைய விஸ்வமூர்த்தியே! தாங்களே சாக்ஷாத் பரப்ரம்மம் ஆவீர்கள். அக்ஷரங்களுக்குள் அகாரமாகவும்; மந்திரங்களுக்குள் பிரணவமாகவும்; அரசர்களுக்குள் மனு மஹாராஜாவாகவும்; முனிவர்களுக்குள் ப்ருகு மற்றும் நாரதர் ஆகவும், அசுரர்களுக்குள் ப்ரஹ்லாதனாகவும்; பசுக்களில் காமதேனுவாகவும்; பட்சிகளில் கருடனகவும்; நாகங்களில் அனந்தனாகவும், நதிகளில் கங்கையாகவும் தாங்கள் இருகின்றீர்கள் ( 96 – 1 )

ப்3ரஹ்மண்யானம் ப3லிஸ்த்வ்ம் க்ரதுஷு ச
ஜப யக்ஞோஸி வீரேஷு பார்த்தோ2
ப4க்தானாமுத்3த்4வஸ்தம் பலமஸி ப3லினாம்
தா4ம தேஜஸ்வினாம் த்வம்|
நாத்ஸ்யந்தஸ் த்வத் விபூ4தேர் விகாஸ
த3திச’யம் வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா3னம் யதி3ஹ
ப4வத்3ருதே தன்ன கிஞ்சித் ப்ரபஞ்சே || ( 96 – 2 )

தாங்கள் பிராமண பக்தர்களுக்குள் பலிச் சக்கரவர்த்தியாகவும்; யக்ஞங்களுக்குள் ஜப யக்ஞமாகவும்; வீரர்களுக்குள் அர்ஜுனனாகவும்; பக்தர்களுக்குள் உத்தவனாகவும், பலவான்களின் பலமாகவும்; தேஜஸ்விகளின் தேஜஸ் ஆகவும் இருக்கின்றீர்கள் தங்கள் விபூதிக்கு ஒரு எல்லையே இல்லை. விசேஷமாக பிரகாசிக்கின்ற மேன்மையுடைய எல்லாப் பொருட்களும் தாங்களே ஆவீர்கள்! ஜீவனும் தாங்களே ; பிரகிருதியும் தாங்களே, இந்த பிரபஞ்சத்தில் தாங்கள் இல்லாத பொருள் என்று ஒன்றுமே இல்லை அல்லவா? ( 96 – 2 )

த4ர்மம் வர்ணாச்’ரமாணாம் ச்’ருதி பத2 விஹிதம்
த்வத் பரத்வேன ப4க்த்யா
குர்வன்தோSந்தர் விராகே3 விகஸதி
ச’னகைஸ் ஸந்த்யஜந்தோ லப4ந்தே|
ஸத்தாஸ்பூர்த்தி ப்ரியத் வாத்மகம்
அகி2ல பதா3ர்தேஷு பி4ன்னேஷ்வ பி4ன்னம்
நிர்மூலம் விச்’வமூலம் பரமமஹமிதி
த்வத்3 விபோ4த4ம் விசு’த்3த4ம் || ( 96 – 3 )

நான்கு வர்ணங்களுக்கும், நான்கு ஆசிரமங்களுக்கும், வேதமார்கங்களில் விதிக்கப்பட்ட தர்மத்தை ஈஸ்வர அர்ப்பணமாக அனுஷ்டித்துக் கொண்டு;அதனால் மனதில் வைராக்கியம் உதிக்கும்போது கிரமமாக அந்த தர்மங்களைத் தியாகம் பண்ணிக் கொண்டு இருப்பவர்கள்; சச்சிதானந்த ரூபமானதும், வேறு வேறாகத் திகழும் எல்லாப் பொருட்களிலும் காரண ரூபமாக நிறைந்திருப்பதும், தனக்குக் காரணம் இல்லாததும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் பரமாத்மாவாகிய தங்களின் சுத்த ஸ்வரூப ஞானத்தை அடைகின்றார்கள். ( 96 – 3 )
 
த3ச’கம் 96 ( 4 to 7 )

ப4கவத் விபூ4தய:

ஞானம் கர்மாபி ப4க்திஸ் த்ரிதயமிஹ
ப4வத்3 ப்ராபகம் தத்ரதாவன்
நிர்விண்ணானா மசே’ஷே விஷய இஹ
ப4வேத் ஞான யோகோ3Sதி4கார:|
ஸக்தானாம் கர்மயோக3ஸ் த்வயி ஹி
விநிஹிதோ யே து நாத்யந்த ஸக்தா:
நாப்யப்யந்தம் விரக்தாஸ் த்வயி ச
த்3ருத ரஸா ப4க்தி யோகோ3 ஹ்யமீச’ம்|| ( 96 – 4 )


இவ்வுலகில் ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் மூன்றும் தங்களை அடைவிக்கும் சாதனங்கள் ஆகும்.
இவைகளில், இவ்வுலகில் இருக்கும் விஷயசுகம் அனைத்தின் மீதும் வெறுப்பு அடைந்தவர்களுக்கே ஞான யோகத்தில் அதிகாரம் சித்திக்கும். விஷய சுகங்களில் பற்று உடையவர்களுக்குத் தங்களிடம் அர்ப்பணம் செய்யப்பட் ட கர்ம யோகம் விதிக்கப்பட்டுள்ளது. எவர்களுக்கு விஷய சுகங்களில் மிகுந்த பற்று இல்லையோ, மிகுந்த வைராக்கியமும் இல்லையோ , தங்களிடம் பிரேமையும் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு பக்தி யோகம் விதிக்கப்பட்டுள்ளது ( 96 – 4 )

ஞானம் த்வத்3 ப4க்தானாம் வா லகு4
ஸுக்ருதவசா’ன் மர்த்யலோகே லப4ந்தே
தஸ்மாத் தத்ரைவ ஜன்ம ஸ்ப்ருஹயதி
ப4கவன் நாககோ3 நாரகோ வா|
ஆவிஷ்டம் மாம் து தை3வாத்3 ப4வஜலநிதி4
போதாயிதோ மர்த்ய தே3ஹே
த்வம் க்ருத்வா கர்ணதா3ரம் கு3ருமனுகு3ண
வாதாயிதஸ் தாரயேதா2:|| ( 96 – 5)

ஞானத்தையாவது, தங்களிடம் பக்தியையாவது மனிதர்கள் தம்முடைய பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால் பிரயாசை இன்றி அடைகின்றார்கள். ஆகையால் சுவர்க்கத்தை அடைந்தவனும், நரகத்தை அடைந்தவனும், மனித உலகத்தில் வந்து பிறப்பதையே விரும்புகின்றான். சம்சாரம் ஆகிய சாகரத்தைத் தாண்ட ஒரு மரக்கலம் போல இருக்கும் இந்த மானிட சரீரத்தில் புகுந்துள்ள என்னையும், ஆச்சாரியானைப் படகோட்டியாகச் செய்து, தாங்களே அதற்கு அனுகூலமான காற்றாக இருந்து, என்னைக் கரை சேர்ப்பீர் ஆகுக. ( 96 – 5 )

அவ்யக்தம் மார்க3யந்த: ச்’ருதிபி4ரபி நயை:
கேவல ஞான லுப்தா4:
க்லிச்’யன்தேSதீவ ஸித்3தி4ம் ப3ஹுதர
ஜனுஷா மந்த ஏவாப்னுவந்தி|
தூ3ரஸ்த2: கர்மயோகோ3பி ச பரமப2லே
நன்வயம் ப4க்தியோகஸ்
த்வா மூலாதே3வ ஹ்ருத்யஸ் த்வரிதமயி
ப4க3வத் ப்ராபகோ வர்த்த4தாம் மே|| ( 96 – 6 )

வெறும் ஞானத்தை மட்டும் விரும்புபவர்கள் உபநிஷத்துகளைக் கொண்டும், மீமாம்ச நியாயங்களைக் கொண்டும், அவ்யக்தமான பிரம்மத்தை விசாரம் செய்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். பல ஜன்மங்களின் முடிவிலே அவர்கள் மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். கர்ம யோகமும் சுவர்க்க லோகம் போன்ற பலன்களைத் தருவதால், பரம புருஷார்த்தமான மோக்ஷத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. ஹே பகவன்! ஆதிமுதலே மனதைக் கவருவதும், விரைந்து தங்களிடம் அடைவிப்பதுவும் ஆகிய இந்த பக்தி யோகமே எனக்கு விருத்தி அடையக் கடவது. ( 96 – 6 )

ஞானாயை வாதியத்னம் முனிரப வத3தே
ப்3ரஹ்ம தத்வம் து ச்’ருண்வன்
கா3ட4ம் த்வத் பாத3ப4க்திம் ச’ரணமயதி
யஸ் தஸ்ய முக்தி: கராக்3ரே |
த்வத்3 த்4யானேSபோஹ துல்யா புனரஸுகரதா
சித்த சாஞ்சல்ய ஹேதோ:
அப்4யாஸாதா3சு’ ச’க்யம் தத3பி வச’யிதும்
த்வத் க்ருபா சாருதாப்4யாம்|| ( 96 – 7 )

வியாச முனிவர் கேவல ஞானத்தை மட்டும் அடையப் பல கிரந்தங்களைப் படித்துச் செய்யப்படும் அதிகமான பிரயத்தனத்தை நிஷேதிக்கின்றார். ஆனால் எவன் ஒருவன் பிரம்மதத்துவத்தைக் கேட்டு, அறிந்து, தங்கள் திருவடிகளில் பக்தியுடன் உறுதியாகச் சரணம் அடைகின்றானோ அவனுக்கு மோக்ஷமானது அவன் கைக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. ஆனால் இந்த பக்தி யோகத்தையும் மனதின் சஞ்சலம் காராணமாக எளிதில் செய்ய முடியாது என்பது துல்லியமே. ஆயினும் அந்த தியானத்தை அப்யாசத்தாலும், தங்கள் கிருபையாலும் தங்கள் திருமேனி எழிலாலும் விரைவாக சம்பாதிக்க முடியும். ( 96 – 7 )
 
த3ச’கம் 96 ( 8 to 10)

ப4கவத் விபூ4தய:

நிர்விண்ண: கர்ம மார்கே3 க2லு விஷமதமே
த்வத்கதா2 யாதௌ3 ச கா3ட4ம்
ஜாதச்’ரத்3தோ4Sபி காமனயி பு4வனபதே
நைவ ச’க்னோமி ஹாதும்|
தத்3 பூ4யோ நிச்’சயேன த்வயி நிஹிதமனா
தோ3ஷபு3த்3த4யா ப4ஜஸ்தான்
புஷ்ணீயாம் ப4க்திமேவ த்வயி ஹ்ருத3ய க3தே
மங்க்ஷு நங்க்ஷயந்தி ஸங்கா3 || ( 96 – 8 )


ஹே லோகநாதா! கர்ம மார்க்கத்தில் வெறுப்பு அடைந்தவனாக இருந்தாலும்; தங்கள் சரித்திரம் முதலியவற்றில் திடமான சிரத்தை உடையவனாக இருந்தாலும்; கர்மங்களை முழுவதுமாக விட்டு விடும் சக்தியற்றவன் ஆகின்றேன். ஆகையால் தங்களிடத்தில் உறுதியுடன் மனத்தைச் செலுத்திக்கொண்டும், தோஷ புத்தியுடன் அந்தக் கர்மங்களையும் அனுபவித்துக் கொண்டும், பக்தியை வளர்ப்பேன் ஆகுக தாங்கள் இதயத்தை வந்து அடைந்தால் விஷயங்களில் உள்ள பற்றுதல் விரைவில் நாசம் அடையும் அல்லவா? ( 96 – 8 )

கச்’சித் க்லேசா’ர்ஜிதார்த்த2க்ஷய
விமலமதிர் நுத்3யமானோ ஜனௌ கை4:
ப்ராகே3வம் ப்ராஹ விப்ரோ ந கலு மம ஜன:
கால கர்மாக்ர ஹாவா|
சேதோ மே து3:க2ஹேதுஸ் ததி3ஹ கு3ணக3ணாம்
பா4வயத்ஸர்வகாரீ
த்யுக்த்வா சா’ந்தோ க3தஸ்த்வாம் மம ச குரு விபோ4
தாத்3ருசீ’ம் சித்த சா’ந்திம் || ( 96 – 9 )


முன்னொரு காலத்தில் ஒரு பிராமணன், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள் நாசம் அடைந்ததால் வெறுப்படைந்து, அதனால் மாசற்ற மனம் உடையவனாகி, ஜனங்களால் துன்புறுத்தப்பட்டு இவ்வாறு கூறினான்,
“என்னுடைய துக்கத்துக்கு காரணம் ஜனங்களோ , காலமோ, கர்மமோ, கிரஹங்களோ அல்ல. . மனது தான் எனது வருத்தத்துக்குக் காரணம். அந்த மனதானது ஆத்மாவிடத்தில் கர்த்ருத்வம் முதலியவற்றை ஆரோபணம் செய்து எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது” என்று சொல்லி மனச் சாந்தி அடைந்தவனாகத் தங்களை வந்து அடைந்தான் ஹே பிரபு! அந்த மனச்சாந்தியை எனக்கும் தந்தருள்வீர் ( 96 – 9 )

ஐல: ப்ராகு3ர்வசீ’ம் ப்ரத்யதிவிவச’மனாஸ்
ஸேவமானச்’ சிரம் தாம்
கா3ட4ம் நிர்வித்3ய பூ4யோ யுவதி ஸுக2மித3ம்
க்ஷுத்3ர மேவேதி கா3யன்|
த்வத்3 ப4க்தீம் ப்ராப்ய பூர்ணஸ்
ஸுக2தரமசரத் தத்3 வது3த்3தூ4யஹ ஸங்க3ம்
ப4க்தோத்தம்ஸம் க்ரியாமாம் பவனபுரபதே
ஹந்தமேருந்தி3 ரோகா3ன் || ( 96 – 10 )


முன்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற ஓர் அரசன் ஊர்வசியிடம் மிகவும் பரவசம் அடைந்து, வெகு நாள் அவளை அனுபவித்த பிறகு, திடமான
வைராக்கியத்தை அடைந்து, “இந்த ஸ்திரீ சுகம் மிகவும் துச்சமானதே!” என்று சொல்லித் தங்களிடம் பக்தியை அடைந்து, பூர்ண மனோரதனாக பவித்து, வெகு சுகமாக சஞ்சரித்தான்.
ஹே குருவாயூரப்பா! அது போலவே பற்றுதலை வெகு தொலைவில் விலக்கி வைத்து, என்னையும் பக்தர்களில் சிறந்தவனாகச் செய்வீராகுக! முதலில் என் வியாதிகளை அகற்ற வேண்டும்.( 96 – 10)
 
VINAAYAKA PURAANAM 1

27g. பிரமனின் யாகம்

பெருமானைக் குறித்துப் பொதியமலையில்
பெரும் யாகம் ஒன்று செய்தார் பிரம தேவன்.

சாவித்திரி தேவியை விட்டுச் சென்றார்,
சரஸ்வதி தேவியுடன் யாகம் செய்வதற்கு.

கோபம் கொண்டாள் உதாசீனம் ஆனவள்.
சாபம் தந்தாள் யாகம் காண வந்தவருக்கு!

ஜலவுருவாகும்படி சபித்தாள் தேவர்களை.
ஜலவுருவாகி விட்டார்கள் வந்த தேவர்கள்!

அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்
ஜலவுருவடைந்த தேவரின் மனைவியர்.

செய்வது அறியாமல் திகைத்த பிரமன்
கைலாசபதியை தியானித்தார் மனத்தில்.

நந்தி வாகனம் மீது காட்சி தந்தார் சிவன்
“தந்தியைத் தொழுதிட மறந்து விட்டீர் நீர்!

இடையூறுக்கு ஆகும் அதுவே காரணம்.
தடைகள் நீங்கும் தொழுவீர் கணபதியை!

ஆதி காரணனை மறந்ததால் யாகம்
பாதியிலேயே நின்று விட்டது பாரும்!”

பெரிதும் வருந்தினர் தவற்றை யுணர்ந்து;
கரிமுக நாதனை பூஜித்தனர் தேவமாதர்!

மந்தார மரத்தடியில் செய்த பூஜையால்
எந்த விளைவுமே ஏற்படவில்லையே!

வன்னிப் பத்திரத்தால் அர்சிக்கும்படிச்
சொன்னது அசரீரி வாக்கு அப்போது .

வன்னிப் பத்திரத்தால் அர்ச்சித்த உடனே
எண்ணப் படிக் காட்சி அளித்தான் தந்தி.

ஏகம்ப கணபதியை நன்கு ஆராதித்து
தேவர்கள் பெற்றனர் தம் சுய உருவை.

பன்னிரண்டு ஆண்டுகள் பூஜித்த பிரமன்
தன்னிரண்டு மனைவியரோடு செய்தான்.

வேழமுகனின் அருளோடு செய்த யாகம்
தாழ்வின்றி நன்றாக நடந்து முடிந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Back
Top