A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#4c. யாக யக்ஞங்கள்

“மாயையில் மயங்கிய மனிதர்கள் பின்பு
மயங்குகின்றனர் சத்திய அசத்தியத்தில்!

ஆசைப்பட்டவற்றை அடைவதற்காக மனிதன்
மோசம் செய்கின்றான் வஞ்சக எண்ணத்துடன்.

மறைந்து விடுகின்றது பகுத்தறியும் திறன்;
வெறி பிறக்கிறது விரும்பியதை அடைய.

அஹங்காரம் தோன்றுகிறது ஐஸ்வரியத்தால்!
அஹங்காரத்தினால் தோன்றும் அஞ்ஞானம்!

அசூயை, துவேஷம், பொறாமை, பேராசை,
அதர்ம புத்தி, ஆடம்பரம் டாம்பீகம் என்று

தோன்றுகின்றன பல துர் குணங்கள்;
தோன்றுகின்றன மனிதனை அழிக்க!

விரும்புவதைப் பெற்றிட யாக, யக்ஞங்கள்,
தருமம், தானம், தவம், ஜபம் போன்றவை.

தூய்மையான திரவியங்களால் செய்தால்
தூய்மையான நற்பயன்கள் கிடைக்கும்.

தூய்மையற்ற திரவியங்களால் செய்வது
தூய்மையற்ற பயன்களை அளிக்கும்

துரோகம் செய்யாமல் ஈட்டிய பணம்
தூய்மையானது என்று கூறப்படும்

உற்பத்தி செய்தான் அனைவரையும் பிரமன்
உற்பத்தியாயினர் தேவர் சத்துவ குணத்தில்.

உற்பத்தியாயினர் மனிதர் ராஜச குணத்தில்;
உற்பத்தியாயினர் அசுரர் தாமச குணத்தில்.

துவேஷம், லோபத்துடன் யாகம் செய்வர் மனிதர்
துவேஷ புத்தியுடன் தவத்தைக் கெடுப்பர் தேவர்.

சம்சாரம் உண்டாவது அஹங்காரத்தில் – அந்த
சம்சாரம் தோற்றுவிக்கும் துவேஷ புத்தியை.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#4c. Yaaga, Yagnas.

Sage Vyaasaa continued his explanation to the king Janamejayan.

“Men are deluded by Maayaa and confuse the truth with the falsehood. In order to gain whatever is coveted by him, a man cheats, dupes with behaves treacherously.

He loses the power of thinking lucidly. He gets motivated to possess the desired article. Riches and wealth make a person proud and egotistic. Ego develops ignorance.

Intolerance, Jealousy, enmity, greed, pomp and show are some of the bad qualities developed by ignorance.

Yaaga, Yagna, Daanam, Penance and Japam are prescribed to achieve what a man wishes for. Yaaga done with pure objects yields good results. The yaaga performed with impure objects yield bad results. The money earned in any just means is considered pure and that earned by foul means is unholy.

Brahma procreated all the jeevaas. He created the Deva in Satva GuNaa, the Manushya in Raajasa GuNaa and the Asura in Taamasa GuNaa. Man performs Yaaga with dwesham and lobham (greed). The Deva disturb the penance done by man due to dwesham.

Dwesha buddhi is inevitable in a jeevaa who is in samsaaraa. Ahankaaraa gives birth to samsaaraa and samsaaraa gives birth to dwesha buddhi or animosity.”
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5k. யமதர்மன்.

சிறுவனின் மறுமொழி கேட்டுச்
சினம் கொண்டான் யமதர்மன்.


“என்ன துணிச்சல் சிறுவனுக்கு?
என் வாகனத்தைக் கொண்டு வா!”

அமர்ந்துகொண்டான் அதன் மீதேறி;
அவனே சென்றான் அச் சிறுவனிடம்.

பாசம், தண்டம், சூலம் எடுத்தவனைப்
பார்த்தவுடன் தெரிந்துவிட்டது யாரென!

சிவனிடம் தஞ்சம் புகுந்தான் சிறுவன்;
சினத்துடன் பேசலுற்றான் யமதர்மன்.

“யாது சொன்னாய்? யாது செய்தாய்?
யாது எண்ணுகின்றாய் நீ சிறுவனே?

சிவன் வகுத்த வரைமுறைகளை
அவன் அடியார்களே மீறலாகுமா?

சிவ வழிபாடு போக்கும் தீவினைகளை,
சிவ வழிபாடு போக்குமா இக்கயிற்றை?

பிறப்பும், இறப்பும் விடுவதில்லை
திருமால், பிரமன், தேவர்களையும்.

என் கடமையில் தவறேன் நான்!
என்னுடன் நீ வரவேண்டும் உடனே!”

“இல்லை ஒரு முடிவு சிவன் அடியாருக்கு!
இனிதே வாழ்வார் சிவலோகம் சென்று!

சிவனுக்கும் சிவன் அடியாருக்கும் இல்லை
சிந்தித்துப் பார்த்தால் ஒரு வேற்றுமையும்.

எல்லோரையும் போல் நீ எண்ணாதே!
எல்லாம் வல்ல சிவன் அடியார்களை;

எனக்கு நீ இழைக்கும் துன்பங்கள்
உனக்கே திரும்பவும் வரும் காண்!

அறிவற்றவன் போலச் செயல் படாதே!
திரும்பிச் சென்றுவிடு உடனடியாக!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 (#5 K). MAARKKANDEYAN AND YAMAN.

Yaman became very angry to learn the words of the lad. He ordered his vaahanam to be brought and went to the boy himself.

The moment the lad saw him, he realised his true identity and moved closer to Sivalingam.

“What did you say? What did you do ? What is in your mind? The rules laid by Siva should not be broken by his own devotees.

Worship of Siva will rid you of your sins but it can never save you from my pasam. Even Vishnu, Brahma and Devas have birth and death.

How can you defy death? I will never fail in my duty. You must go with me!” Yama spoke in great anger.

“There is no death for the devotees of Siva. They live for ever in his Sivalokam.
Do not equate the devotees of Siva to the ordinary mortals. The troubles you are going to cause me with backfire on you many fold. Go back to your world and act sensibly”.

The lad spoke unruffled.
 
Sreeman Naaraayaneeyam.

த3ச’கம் 74 ( 1 to 3)

மதுராபுரீ ப்ரவேச’ம்

ஸம்ப்ராப்தோ மது4ராம் தி3னார்த்த4 விக3மே
தத்ராந்தரஸ்மின் வஸன்
ஆராமே விஹிதச’னஸ் ஸகி2 ஜனைர்
யாத:புரீயீக்ஷிதும் |
ப்ராபோ ராஜபத2ம் சிரச்’ருதி த்4ருத
வ்யாலோக கௌதூஹல
ஸ்திரீ பும்ஸோத்3ய த3கண்ய புண்ய நிகலை:
ஆக்ருஷ்யமாணோ நு கிம் || ( 74 – 1)

மத்தியான வேளையில் மதுரையை அடைந்து, அங்கே ஒரு பூந்தோட்டத்தில் தாமதித்து, ஆகாரம் உண்டு விட்டுப் பட்டினத்தைச் சுற்றிப் பார்க்கத் தோழர்களுடன் புறப்பட்டுச் சென்றீர்கள். கேள்விப் பட்டதிலிருந்து தங்களை தரிசிக்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசையை உடைய, ஸ்திரீ புருஷர்களின் விருப்பத்தை நிறைவேற்றும், அளவற்ற புண்ணியங்கள் ஆகிற, சங்கலிகளால் இழுக்கப்பட்டவர் போல, ராஜ வீதியைச சென்று அடைந்தீர்கள் அல்லவா? ( 74 – 1)

த்வத்பாத3 த்3யுதிவத் ஸராக3 ஸுபகாஸ்
த்வன் மூர்த்தி வத்3யோஷித :
ஸம்ப்ராப்தா விலஸத் பயோத4ர
ரூசோ லோலா ப4வத்3 த்3ருஷ்டிவத் |
ஹாரிண்யஸ் ஸ்வது3ர ஸ்த2லீ வத3யி
தே மந்த3ஸ்மித ப்ரௌடி4வத்
நைர்மல்யோல்லஸிதா: கசௌக4 ருசிவத்3
ப்4ராஜத்கலா பாஸ்ரிதா: || ( 74 – 2)

ஹே கிருஷ்ணா! சிவந்து அழகான தங்கள் திருவடிகள் போல நிறமுடையவர்களும், அழகானவர்களும், நீருண்ட மேகம் போன்ற தங்கள் திருமேனியை நிகர்த்த அசைகின்ற ஸ்தனங்களால் சோபை அடைந்தவகளும், சலிக்கின்ற தங்கள் கண்கள் போன்ற மிக லோலைகளும், முத்துமாலை அணிந்த தங்களைப் போன்று முத்துமாலைகள் அணிந்து அழகுற்றவர்களும், மாசற்றுப் பிரகாசிக்கின்ற தங்கள் மந்த ஹாசதின் மேன்மை போல நைர்மால்யதில் விளங்குகின்றவர்களும், மயில் பீலி அணிந்த தங்கள் திருமுடியின் அழகு போல விளங்கும் தலை நகை அணிந்தவர்களும் ஆன பெண்கள் வந்தனர் அல்லவா? ( 74 – 2)

தாஸா மாகலயன்னபாங்க3 வலனைர்
மோஹம் ப்ரஹர்ஷாத்3பு4த
வ்யாலோலேஷு ஜனேஷு தத்ர ரஜகம்
கஞ்சித் படீம் ப்ரார்த்த2யன் |
கஸ்தே தா3ஸ்யதி ராஜகீயவஸனம்
யாஹீதி தே நோதி3த:
ஸத்3யஸ் தஸ்ய கரேண சீர்ஷ மஹ்ருதா2:
ஸோSப்யாப புண்யாம் க3திம் || ( 74 – 3)

அந்தப் பெண்களுக்குக் கடைக் கண்பார்வையால் சந்தோஷத்தை உண்டு பண்ணிக் கொண்டு, தங்களால் பட்டணத்து ஜனங்கள் சந்தோஷத்தாலும் ஆச்சரியத்தாலும் பரவசர்களாக இருக்கும்போது, அவ்விடத்தில் வண்ணன் ஒருவனிடன் வஸ்திரத்தை யாசிக்க, “அரசனுடைய வஸ்திரத்தை உனக்கு யார் தருவார்கள்? ஓடி விடு!” என்று அவன் கூறவும் அப்போதே அவனுடைய தலையை கையால் வேறுபடுத்தினீ ர்கள். அவன் உடனே மோக்ஷத்தை யடைந்தான் அல்லவா? ( 74 – 3 )
 
த3ச’கம் 74 ( 4 to 6 )

மதுராபுரீ ப்ரவேச’ம்

பூ4யோ வாயாக மேக மாயதமதிம்
தோஷேண வேஷோசிதம்
தா3ச்’வாம்ஸம் ஸ்வபத3ம் நினேத2 ஸுக்ருதம்
கோ வேத3 ஜீவாத்மனாம் |
மாலாபி4:ஸ்தப3கை: ஸ்தவைரபி
புனர் மாலாக்ருத மானிதோ
ப4க்திம் தேன வ்ருதாம் தி3தே3சி’த2
பராம் லக்ஷ்மீம் ச லக்ஷ்மீ பதே || ( 74 – 4 )


லக்ஷ்மிபதே! பிறகு தாங்கள் அணிவதற்குத் தகுந்த வஸ்திரத்தை மிக சந்தோஷத்துடன் தரும், விசால புத்தியுடைய ஒரு தையல்காரனைத் தங்கள் ஸ்தானத்தை அடைவித்தீர்கள். ஜீவாத்மாக்களின் புண்ணியத்தை யாரால் அறிய முடியும்? அதன் பிறகு மாலைக்காரன் ஒருவன் மாலைகளைக் கொண்டும் பூச்செண்டுகளைக் கொண்டும், ஸ்தோத்திரங்களைக் கொண்டும் வெகுமானிக்க, அவனுக்கு அவன் விரும்பிய உயர்ந்த பக்தியையும், ஐஸ்வரியத்தையும் அளித்தீர்கள் அல்லவா? ( 74 – 4)

குப்ஜா மப்ஜ விலோசனாம் பதி2
புனர் த்3ருஷ்ட்வாSங்கராகே3 தயா
த3த்தே ஸாது4 கிலாங்க3ராக3ம்
அத3தா3ஸ் தஸ்யா மஹாந்தம் ஹ்ருதி3 |
சித்தஸ்தா2 ம்ருஜு தாமத2 ப்ரத2யிதும்
கோ3த்ராSபி தஸ்யா: ஸ்புடம்
க்3ருஹ்ணன் மஞ்ஜு கரேண தாமுதனய
ஸ்தாவாஜ் ஜக3த் ஸுந்த3ரீம் || ( 74 – 5 )


மறுபடி ராஜவீதியில், தாமரைக் கண்ணியாள் ஆன ஒரு கூனியைக் கண்டு, அவள் தந்த சந்தனப் பூச்சால் மகிழ்ந்து, அவள் கொண்ட ஆசையை உசிதமாக திருப்பித் தந்தீர்கள் அல்லவா? அவள் மனத்தில் உள்ள நேர்மையை உடலிலும் கொண்டுவர எண்ணி அவளைக் கையால் மெதுவாகப் பிடித்துக் கொண்டு அவளைத் திரிலோக சுந்தரியாக உயர்த்தினீர்கள் அல்லவா? ( 74 – 5)

தாவன் நிச்’சித வைப4வாஸ் தவ விபோ4
நாத்யந்த பாபா ஜனா
யத் கிஞ்சித்3 த3த3தே ஸ்ம ச’க்த்யனுகுணம்
தாம்பூ3ல மால்யாதி3கம் |
க்3ருஹ்ணான: குஸுமாதி3 கிஞ்சன ததா3
மார்கே3 நிப3த்4தா4ஞ்ஜலிர்
நாதிஷ்ட2ம் ப3த ஹா யதோSத்3ய விபுலா
மார்திம் வ்ரஜாமி ப்ரபோ4 || ( 74 – 6 )

ஹே பிரபு அப்போது மிகவும் பாவிகள் அல்லாத ஜனங்கள் தங்கள் மகிமையை உணர்ந்து கொண்டு, தங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு தாம்பூலம் அல்லது மாலை என்று ஏதேனும் சிலவற்றைத் தங்களுக்குக் காணிக்கையாக அளித்தார்கள் அல்லவா? அப்போது புஷ்பம் அல்லது வேறு எதோ ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அஞ்சலி செய்து நான் வழியில் நிற்கவில்லை அல்லவா?அதனால் தான் இன்று இந்தக் கஷ்டத்தை அனுபவிகின்றேன். ஐயோ கஷ்டம்! ( 74 – 6 )
 
த3ச’கம் 74 ( 7 to 10 )

மதுராபுரீ ப்ரவேச’ம்

ஏஷ்யாமீதி விமுக்தயாSபி ப4க3வன்
நாலேபதாதர்யா தயா
தூ3ராத் காதரயா நிரீக்ஷித க3திஸ்த்வம்
ப்ராவிசோ’ கோ3புரம்|
ஆகோ4ஷானுமித த்வதா3க3ம மஹா
ஹர்ஷோல்லஸத்3 தே3வகீ
வக்ஷோஜ ப்ரக3லத் பயோரஸமிஷாத்
த்வத் கீர்த்தி ரந்தர்க3தா || ( 74 – 7 )

“பிறகு வருகிறேன்” என்று நீங்கள் சொல்லி அனுப்பி இருந்தும், தங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாத அந்த சந்தனப் பூச்சுக்காரி வெகு தூரத்திலிருந்து தங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நீங்கள் கோபுரத்துக்குள் சென்றீர்கள் அல்லவா? ஆரவாரத்தால் அனுமானம் செய்யப்பட்ட தங்கள் வரவால் உண்டான பெரும் ஆனந்தத்தால் குலுங்கிய தேவகியின் ஸ்தனங்களில் இருந்து பெருகிய பாலைப் போலத் தங்கள் கீர்த்தி நகரத்துக்குள் சென்றது. ( 74 – 7)

ஆவிஷ்டோ நக3ரீம் மஹோத்ஸ்வதீம்
கோத3ண்ட சா’லாம் வ்ரஜன்
மாது4ர்யேண து தேஜஸா நு புருஷைர்
தூ3ரேண தத்தாந்தர: |
ஸ்ரக்3பி4ர் பூ4ஷித மர்சிதம் வரத4னுர்
மாமேதி வாதாத் புர:
ப்ராக்3ருஹ்ணா: ஸமரோபய:கில
ஸமாக்ராங்ஷீ ராபா4ங்க்ஷீ ரபி || ( 74 – 8 )

பெரும் உத்சவங்களுடன் கூடிய பட்டணத்திற்குள் சென்று, “கூடாது! கூடாது!” என்று காவல்காரர்களால் தடுக்கபட்டீர்கள். தங்களுடைய ரூப சௌந்தரியத்தாலோ, தேஜஸ் மிகுந்ததனாலோ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட வில்லை யாகசாலையிலிருந்து எடுத்தீர்கள். நாண் ஏற்றினீர்கள். பாணத்தை வைத்து பலமாக இழுத்து வில்லையே முறித்து விட்டீர்கள் அல்லவா? ( 74 – 8)

ச்’வ கம்ஸக்ஷபணோத்ஸவஸ்ய புரத :
ப்ராரம்ப4 தூர்யோபம
ச்’சாபத்4வம்ஸ மஹா த்4வனிஸ் தவ விபோ4
தேவானரோமாஞ்சயத் |
கம்ஸஸ்யாபி ச வேபது2ஸ் தது3தி3த:
கோத3ண்ட3 க2ண்ட3த்3வயீ
சண்டா3ப்4யாஹத ரக்ஷி பூருஷரவை
ருத்கூலிதோSபூ4த் த்வயா || ( 74 – 9 )

ஹே பிரபுவே! மறுநாள் நடக்கப்போகின்ற கம்ச வதமாகிய உத்சவத்துக்கு முன்பே ஆரம்ப பேரிகைக்கு ஒப்பான அந்த வில் முறிந்த பேரொலி தேவர்களையும் மயிர் சிலிர்க்க வைத்தது. அது மட்டுமல்ல அதிலிருந்து உண்டான் கம்சனின் நடுக்கம் வில்லின் இரண்டு துண்டுகளால் அடிக்கப்பட்ட காவல்காரர்களின் கூக்குரலால் அதிகரித்தது அல்லவா? ( 74 – 9)

சி’ஷ்டைர் து3ஷ்ட ஜனைச்’ச த்3ருஷ்ட மஹிமா
ப்ரீத்யா ச பீத்யா தத:
ஸம்பச்’யன் புரஸம்பத3ம் ப்ரவிசரன்
ஸாயம் கதோ வாடிகாம் |
ஸ்ரீதா3ம்னா ஸஹ ராதி4கா விரஹஜம்
கே2த3ம் வத3ன் ப்ரஸ்வபன்
ஆனந்த3ன் அவதாரத கார்ய க4டனாத்3
வாதேச’ ஸம்ரக்ஷ மாம் || ( 74 – 10)

ஹே குருவாயூரப்பா! சாது ஜனங்களால் பிரியத்துடனும், துஷ்டர்களால் பயத்துடனும் பார்க்கப்பட்ட மகிமை உடையவராக, பட்டணத்து அழகை பார்த்துக் கொண்டும் , சுற்றிக்கொண்டும் , மாலைப் பொழுதில் பூந்தோட்டத்துக்குச் சென்று ஸ்ரீ தாமாவுடன் ராதையின் பிரிவினால் உண்டான வருத்தத்தைச் சொல்லிக் கொண்டும், தூங்கிக் கொண்டும், அவதார காரணம் நெருங்குவதால் ஆனந்தம் அடைந்தவரும் ஆகிய தாங்கள் என்னைக் காக்க வேண்டும். ( 74 – 10)
 
த3ச’கம் 75 ( 1 to 3)

கம்ஸ வத4ம்

ப்ராத: ஸந்த்ரஸ்த போ4ஜ க்ஷிதிபதி
வசஸா ப்ரஸ்துதே மல்ல தூர்யே
ஸங்கே3 ராக்ஞாம் ச மஞ்சானாபி4யுயுஷி
க3தே நந்த3கோ3பேSபி ஹர்ம்யம் |
கம்ஸே சௌதா4தி4 ரூடே4 த்வமபி ஸஹபல:
ஸானுகச்’ சாருவேஷோ
ரங்க3த்3வாரம் க3தோ பூ: குபித
குவலயபீட3 நாகாவலீட4ம் || ( 75 – 1 ​)

மறு நாட்காலையில் அதிகம் பயந்துவிட்ட கம்சனுடைய கட்டளையால் மல்யுத்தத்தை தெரியப்படுத்தும் பேரிகை முழக்கப்பட்டது. அரசர்கள் கூட்டம் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தது. நந்தகோபர் மாடிக்கும், கம்சன் அரண்மனை மாளிகைக்கும் சென்றபோது, பலராமனுடன், தாங்களும், தங்கள் பரிவாரங்களும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கோபம் கொண்ட குவலயாபீடம் என்ற யானையால் தகையப்பட்ட மல்லர்கள் போர்புரியும் போர்க்கள வாயிலை அடைந்தீர்கள் அல்லவா? ( 75 – 1)

பாபிஷ்டா2பேஹி மார்கா3த்3
த்3ருதமிதி வசஸா நிஷ்டுரக்ருத்3த4 புத்3தே4
அம்ப3ஷ்ட2ஸ்ய ப்ரணோ தாத3தி4க
ஜவஜுஷா ஹஸ்தினா க்3ருஹ்யமாண:|
கேலி முக்தோSத2 கோ3பி குச கலச’
சிரஸ்பர்த்தி4னம் கும்ப4மஸ்ய
வ்யாஹத்யாலீயதாஸ்த்வம் சரபுவி
புனர் நிர்க3தோ வல்கு3ஹாஸீ || (75 – 2)

“அடேய் மகா பாவி! சீக்கிரமாக வழியை விட்டுத் தூரமாக நில் !” என்ற உங்கள் வாக்கைக் கேட்டு நிஷ்ட்டூரமும், கோபமும் அடைந்தான் மாவுத்தன். அவனுடைய ஏவலினால் யானை அதிக வேகத்துடன் வந்து தங்களைப் பிடித்தது. விளையாட்டாகவே அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டீர்கள். கோபிகைகளின் கலசம் போன்ற ஸ்தனங்களுடன் வெகு நாளாகப் போட்டிபோடும் யானையின் மத்தகத்தில் நன்றாக அடித்துவிட்டு, அதன் கால்களுக்கு அடியில் தாங்கள் ஒளிந்துகொண்டீர்கள். (75 – 2)

ஹஸ்த ப்ராப்யோSப்யக3ம்யோ ஜடிதி
முனிஜனஸ்யேவ தா4வன் க3ஜேந்த3ரம்
க்ரீட3ன்னாபயத்ய பூ4மௌ புனரபி4பதம்
ஸ்தஸ்ய த3ந்த3ம் ஸஜீவம் |
மூலாது3ன்மூல்ய தன்மூலக3 மஹித
மஹா மௌக்திகான்யாத்ம மித்ரே
ப்ராதா3ஸ்த்வம் ஹாரமேபி4ர் லலித
விரசிதம் ராதி4காயை தி3சே’தி || ( 75 – 3
)

முனி ஜனங்களுக்குக் கையில் கிடைக்கக் கூடியவராக இருந்த போதிலும் துதிக்கையால் பிடிக்க முடியாதவராகி, விரைந்து யானைக்கு எதிரில் ஓடிச் சென்று, விளையாடிக் கொண்டும், மறுபடியும் நிலத்தில் வீழ்ந்தும், தங்களை எதிர்த்து வந்த யானையின் உயிருடன் கூடிய தந்தத்தை வேருடன் பிடுங்கி விட்டீர் . அக்கொம்புகளின் அடிப்பகுதியில் இருக்கும் பெரிய முத்துக்களை சிநேகிதனிடம் கொடுத்துவிட்டு, “இவைகளைக்கொண்டு உண்டு பண்ணப்பட்ட அழகான மாலையை ராதிகைக்குக் கொடு!” என்று சொன்னீர்கள் அல்லவா? ( 75 – 3 )
 
த3ச’கம் 75 ( 4 to 7)

கம்ஸ வத4ம்

க்3ருஹ்ணன் த3ந்த மம்ஸே யூதமத2
ஹலினா ரங்க3 மங்கா3விச’ன்தம்
த்வாம் மங்க3ல்யாங்க3 ப4ங்கீ3ரப4ஸ
ஹ்ருத மனோலோச்சனா வீக்ஷ்ய லோகா:|
ஹோ த4ன்யோ நு நந்தோ3 நஹி நஹி
பசு’பாலாங்க3னா நோ யசோதா
நோ நோ த4ன்யேக்ஷணா: ஸ்மஸ்த்ரிஜக3தி
வயமேவேதி ஸர்வே ச’ச’ம்ஸு :|| ( 75 – 4 )


ஹே கிருஷ்ணா! பிறகு தோளில் யானைத் தந்தத்தை வைத்துக் கொண்டு, பலராமனுடன் யுத்தத்துக்குச் செல்லும் தங்களைக் கண்ட ஜனங்கள்; மங்களகரமான தங்கள் அவயவயங்களைக் கண்டு பலவந்தமாகக் கவரப்பட்ட கண்களையும் மனதையுமுடையவர்கள் ஆனார்கள்.
“ஆச்சரியம் ஆச்சரியம்! மூன்று உலகங்களிலும் நந்தகோபன் பாக்கியசாலி. இல்லை இல்லை யசோதா தான் பாக்கியசாலி. இல்லை இல்லை கோபிகைகள் தாம் பாக்கியசாலிகள்! இல்லை இல்லை இல்லை இவனைக் காணும் பாக்கியம் பெற்ற நாமே பாக்கியசாலிகள்” என்று பலவாறு புகழ்ந்தனர் அல்லவா? ( 75 – 4 )

பூர்ண ப்3ரஹ்மைவ ஸாக்ஷான் நிரவதி4
பரமானந்த3 ஸாந்த்3ர ப்ரகாச’ம்
கோ3பேஷு த்வம் வ்யலாஸீர்ன க2லு
ப3ஹு ஜனைஸ்தாவ தா3வேதி3தோ பூ4:|
த்3ருஷ்ட்வாSத2 த்வாம் ததே3த3ம் ப்ரதம
முபக3தே புண்யகாலே ஜநௌகா4 :
பூர்ணானந்தா3 விபாபாஸ் ஸரஸ
மபி4 ஜகு3ஸ் த்வத் க்ருதானி ஸ்ம்ருதானி || ( 75 – 5)


எங்கும் நிறைந்து இருப்பவரும்; நித்தியமானவரும்; பரமானந்தரூபியும் விஞ்ஞான கன ரூபியும் ஆனவரும்; பரப்ரஹ்ம ஸ்வரூபியாகவே இருக்கின்றவரும் ஆகிய தாங்கள் பிரத்யக்ஷமாக அந்த கோபர்களுக்கு இடையில் பிரகாசித்தீர்கள் அல்லவா? அநேகம் ஜனங்கள் தாங்கள் எவ்விதமானவர் என்பதை அறியவேயில்லை. புண்ணியம் பலனைக் கொடுக்கும் தருணம் வந்தபோது முதல் முதலாகத் தங்களை தரிசித்த உடனேயே பாவம் நீங்கியவர்களாகி, ஆனந்தம் நிறைந்தவர்கள் ஆகி, அப்போது நினைவுக்கு வந்த தங்கள் லீலைகளை ரசமாகப் பாடினார்கள் அல்லவா?
( 75 – 5 )

சாணுரோ மல்லவீரஸ் தத3னு
ந்ருப கி3ரா முஷ்டிகோ முஷ்டிசா’லி
த்வாம் ராமனஞ்சாபி4 பேதே3 ஜட ஜடிதி
மிதோ2 முஷ்டிபாதாதி ரூக்ஷம் |
உத்பாதா பாதனாகர்ஷண விவித4
ரணான்யாஸதாம் தத்ர சித்ரம்
ம்ருத்யோ: ப்ராகே3வ மல்ல ப்ரபு4
ரகமத3யம் பூ4ரிசோ’ ப3ந்த3 மோக்ஷான் || (75 – 6 )


அதன் பின்னர் கம்சனின் கட்டளைப்படி மல்ல வீரனான சாணூரன் , முஷ்டி யுத்தத்தில் திறமை வாய்ந்த முஷ்டிகன் பலராமனையும், சட சட என்ற சத்தத்துடன், முஷ்டியைக் கொண்டு இடித்து பயங்கரமாக எதிர்த்தனர் அல்லவா? உந்தி எறிவது, கீழே தள்ளுவது, பிடித்து எழுப்புவது போன்ற பலவித போர்களிளும் சரியே மல்லர்களின் அரசனான சாணூரன் அவன் மரணத்திற்கு முன்பே பலமுறை பந்தங்களையும் மோக்ஷங்களையும் (கட்டுதலையும் , விடுதலையையும் ) அடைந்தான் அல்லவா?
( 75 – 6)

ஹா தி4க் கஷ்டம் குமாரௌ ஸுலலித
வபுஷௌ மல்ல வீரௌ கடோ2ரௌ
ந த்3ரக்ஷ்யாமோ வ்ரஜாமஸ்த்வரிதமிதி
ஜனே பா4ஷமாணே ததா3னீம் |
சாணூரம் தம் கரோத்3ப்4ராமண
விக3லத3ஸும் போத2யாமாஸி தோர்வ்யாம்
பிஷ்டோSபூ4ன் முஷ்டிகோSபி
த்3ருதமத2 ஹலினா நஷ்டசி’ஷ்டைர் த3தா4வே || ( 75 – 7)

“கஷ்டம்! கஷ்டம்! குழந்தைகள் ஆகிய ராம, கிருஷ்ணர்கள் கோமள சரீரம் உடையவர்கள்! மல்ல வீரர்கள் இருவரும் மிகவும் முரடர்கள்! சமம் இல்லாதவர்களின் போரை நாம் காண வேண்டாம்! விரைவாக நாம் வெளியேறிவிடுவோம்!” என்று என்று ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் கையில் பிடித்துச் சுழற்றியதால் முற்றிலுமாக உயிர் இழந்துவிட்ட சாணூரனைத் தரையில் ஓங்கி அடித்தீர்கள் அல்லவா? அதன் பின்னர் முஷ்டிகனும் பலராமனால் நசுக்கபட்டான். இறந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் விரைந்து ஓடினார்கள் அல்லவா? ( 75 – 7 )
 
த3ச’கம் 75 ( 8 to 10)

கம்ஸ வத4ம்

கம்ஸஸ்ஸம்வார்ய தூர்யம் க2லமதி
ரவித3ன் காத்ய மார்யான் பித்ரூம்ஸ்தான்
ஆஹந்தும் வ்யாப்த மூர்தேஸ் தவ ச
ஸமசி’ஷத்3தூ3ரமுத் ஸாரணாய|
ருஷ்டோ து3ஷ்டோக்தி பி4ஸ்த்வம்
க3ருட3 இவ கி3ரிம் மஞ்ச மஞ்சன்னுத3ஞ்சத்
க2ட்க3 வ்யாவல்க3 து3ஸ்ஸங்க்3ரஹமபி ச
ஹ்டாத் ப்ராக்3ரஹீ ரௌக்3ராஸேனிம் || ( 75 – 8 )


துர்புத்தியுடைய அந்தக் கம்சன் பேரிகையை நிறுத்தச் செய்தான். என்ன செய்வது என்று அறியாமல் சாதுக்களாகிய நந்தன், வாசுதேவன், உக்ர சேனன் முதலியவர்களைக் கொல்லவும், எங்கும் நிறைந்துள்ள தங்களை வெகு தூரத்துக்கு விரட்டவும் கட்டளையிட்டான். தீய சொற்களால் கோபமடைந்த தாங்கள், கருடன் மலைமீது பாய்வதுபோல சிம்மாசனத்தின் மீது பாய்ந்தீர்கள். வாளை உயர எடுத்து வீசுவதால் பிடிக்க முடியாதவனாக இருந்தும் கூட அந்தக் கம்சனை பலாத்காரமாகப் பிடித்தீர்கள் அல்லவா? ( 75 – 8)

ஸத்3யோ நிஷ்பிஷ்ட ஸந்தி4ம் பு4வி
நரபதி மபாத்ய தஸ்யோபரிஷ்டாத்
த்வய்யா பாத்யே ததை3வ த்வதுபரி
பதிதா நாகினாம் புஷ்ப வ்ருஷ்டி:|
கிம் கிம் ப்3ரூமஸ் ததா3னீம் ஸததமபி
பி4யா த்வத்3 க3தாத்மா ஸ பே4ஜே
ஸாயுஜ்யம் த்வ்த்3வதோ4த்தா2 பரம பரமியம்
வாஸனா காலநேமே: || ( 75 – 9)

அப்போதே சந்திபந்திகள் நொறுங்கின. கம்சனைத் தரையில் தள்ளித் தாங்களும் அவன் மேல் விழ, தேவர்கள் பூமாரி பெய்தனர். பரமாத்மனே என்னவென்று கூறுவேன்? இடைவிடாத பயத்தினால் தங்கள் மீது இடைவிடாது மனத்தைச் செலுத்திய அந்தக் கம்சனும் அப்போதே சாயுஜ்யத்தை அடைந்துவிட்டான். இவ்விதம் சாயுஜ்யத்தை அடையக் காரணம் காலநேமியை தங்கள் கொன்றதால் உண்டான முன் ஜன்ம வாசனைதான். ( 75 – 9)

தத்3 ப்3ராத்ரூ நஷ்ட பிஷ்ட்வா த்3ருதமத2
பிதரௌ ஸன்னமன்னுக்3ரஸேனம்
க்ருத்வா ராஜான் முச்சைர் யது3குலம்
அகி2லம் மோத3யன் காமதா3னை:|
ப4க்தானா முத்தமஞ்சோத்3த4வம்
அமர கு3ரோ ராப்த நீதிம் ஸகா2யம்
லப்3த்4வா துஷ்டோ நக3ர்யாம்
பவன புரபதே ருந்தி4 மே ஸர்வ ரோக3ன் || ( 75 – 10
)

குருவாயூரப்பா! அதன் பிறகு விரைவாக கம்சனின் தம்பிகளான எட்டுப் பேர்களையும் கொன்று, தாய் தந்தையாராகிய தேவகி வசுதேவரை வணங்கி, உக்ரசேனரை அரசராக்கி, யதுகுலத்தவர் எல்லோருக்கும் அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்து, மனங்களை மகிழ்வித்து, பக்தர்களில் சிறந்தவரும் தேவகுருவும் ஆகிய பிருஹச்பதியிடம் இருந்து நீதி சாஸ்த்திரம் கற்றவரான உத்தவரையும் தோழராக அடைந்து, மிகவும் சந்தோஷம் அடைந்தவராக, மதுராபுரியில் வசித்து வந்த தாங்கள் எனது வியாதிகளை எல்லாம் அகற்ற வேண்டும். ( 75 – 10)
 
VINAAYAKA PURAANAM 1.

27b. வன்னிப் பத்திரம்

நொந்த மனத்துடன் வருந்தியவளிடம்
வந்தான் புரோகிதன் ஒருவன் அப்போதே.

“கஷ்டங்கள் தீர்ந்துவிடும் தாயே – தாங்கள்
இஷ்டத்துடன் வினாயகரை பூஜித்தால்.

மனக் குறை நீங்கும், வாழ்வு செழிக்கும்;
கணவன் அன்பு கிடைக்கும் மீண்டும்!”

மனக் கவலை உடனே ஒழிந்தாள் கீர்த்தி;
தினமும் தொழுதாள் விதிப்படி ஐயனை.

தோழியர் சேகரித்து வந்த அறுகம் புல்
வேழமுகன் அர்ச்சனைக்குப் பயன்பட்டது.

அறுகம் புல் கிடைக்கவில்லை ஒருநாள்!
அருகில் இருந்த வன்னி இலை கிடைத்தது.

“அறுகம் புல் இல்லாத விநாயக பூஜையா?
அறுகம் புல்லுக்கு ஈடாகுமோ வன்னி இலை?

இறைவா பொறுத்தருளும் இக்குறையை
அறுகம் புல் இல்லாத இந்த பூஜையை “

அறுகம் புல்லால் பூஜை செய்யாத
குறை நீங்கிட இருந்தாள் உபவாசம்.

காலையில் தோன்றினார் கனவில் கணபதி!
“கவலை வேண்டாம் என்னைப் பார்” என்றார்.

அர்ச்சனை செய்த வன்னி இலை எல்லாம்
உற்சாகமாக இருந்தன உச்சந்தலையில்!

“மறுக வேண்டாம் அறுகம் புல்லுக்காக.
சிறந்த வன்னி இலைகள் இருக்கையில்”

கண்களில் பெருகியது ஆனந்தக் கண்ணீர்
கண்கண்ட கணபதியைத் தொழுதாள் அவள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM 1.

27b. The Vanni Leaf

When Keerthi was considering ending her life a prohit approached her from nowhere. He told her,” All you troubles will be removed if you pray to Vinayaka with love. Your worries will disappear. Your life will become happy. You will win your husband’s love and affection”

Keerthi felt a little more cheerful. She started doing puja to Vinayaka in the prescribed manner. Her friends gathered enough green grass for the daily puja.

But on one day they could not find a single green grass fit for the puja. Keerthi had to perform the puja with the leaves of the Vanni tree instead.

She was not happy about her puja without the grass arcs. She went on upavaasam to nullify the defect in her puja.

Early in the morning she had a vivid dream. Vinayaka appeared in it and spoke to her,

” Look at me my child!” She looked up and saw all the leaves of the Vanni offered by her still stuck to the head of her god. “Do not worry if you can’t get the green grass. I like the leaves of Vanni tree equally well”

She was overcome with joy and shed tears of happiness. God had accepted happily what she imagined to be her defective puja.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#5a. நர, நாராயணர்

வியாசர் தொடர்ந்தார் தம் மறுமொழியை,
விசனப்படும் மன்னனைத் தேற்றுவதற்கு.

“யுகம் ஒவ்வொன்றும் அக்காலத்தினருக்கு
யுக்தமாக இருப்பதை மறுக்க முடியாது நாம்.

யுக்தமானது சத்திய யுகம் உத்தம புருஷருக்கு.
யுக்தமானது இக் கலியுகம் அதம புருஷருக்கு.

தர்ம நெறியாக இப்பிறப்பில் கைக் கொள்வதை
நிர்ணயிப்பவை முற்பிறவியின் வாசனைகள்.

பிறந்தான் பிரமனின் இருதயத்திலிருந்து
தருமன் என்னும் மகன் சத்திய விரதன்.

மணந்தான் தக்ஷனின் பத்துப் பெண்களை!
இணங்கி வாழ்ந்தனர் ஒற்றுமையாகவே!

ஹரி, கிருஷ்ணன் என்ற இரு மகன்கள்
நர, நாராயணன் என்ற பெயர் பெற்றனர்.

சித்தி பெற்றனர் பதரிகாசிரமத்தில் – ஒரு
சக்தி வாய்ந்த தவத்தைச் செய்ததால் !

செய்து வந்தனர் கடும் தவம் மேன்மேலும்,
வெய்யிலெனத் தகித்தது தவாக்னி உலகை!

கதி கலங்கினான் இந்திரன் இது கண்டு – தன்
விதி மாறிவிடும் தவம் நிறைவு பெற்றால்!

கெடுக்கவேண்டும் இவர்கள் தவத்தினை
ஒடுக்கவேண்டும் இவர்கள் சிறப்பினை

விரைந்தான் ஐராவதத்தில் ஆரோஹணித்து;
வியந்தான் ‘இரட்டைச் சூரியர்களோ?’ என்று.

தவத்தின் வலிமையால் ஒளிர்ந்தனர் அங்கு
தருமனின் இரு குமாரர்களும் ஒருபோலவே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#5a. Nara, Naaraayanan

Vyaasaa continued to explain to king Janamejayan.

“Each yugam is the best suited for the jeevaas who are going to live in that period. Sathya yugam was best suited for the utthama jeevaas who lived in that period. Kali yugam is the best suited for the adhama jeevaas who are living in this period. Our attitudes and aptitudes in our previous births decide how we are going to behave in this birth.

Dharman also known as Satyavrathan was Brahma’s son born out of his heart. He married ten of Dakshan’s many daughters. They all lived in perfect harmony. Their two sons Hari and Krishna were the Nara and Naaraayanan of this story.

They did severe penance in Badarikaasramam and obtained special powers called as siddhis. They continued their penance and the heat of their tapas acted like the scorching Sunlight for the rest of the world. Indra was afraid that if their penance was successful, they may displace him from the throne of the swarggam.

He decided that he had to ruin their penance at any rate and at any cost. He sat on his four tusked white elephant Airaavat and went to see them. He was surprised at the brilliance they had gained because of their severe penance.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5l. யமன் இறத்தல்.

சிறு பயலின் சொற்களைக் கேட்டு
சீற்றம் தலைக்கேறியது யமனுக்கு.


இடி போல ஆரவாரம்செய்தான்;
இடியின் மின்னலாகக் கண்களில் தீ!

பாசக் கயிற்றை வீசி இழுத்தான்
பாசத்துடன் சிவனை அணைத்தவனை!

கயிற்றினால் ஒரு துன்பமும் நேரவில்லை;
மயிர்க் கூச்செறிய வெளி வந்தான் சிவன்!

“மதம் தலைக்கேறியது எமனுக்கு!”- ஒரு
பதம் தூக்கி உதைத்தருளினான் யமனை .

வீழ்ந்து இறந்தான் யமன் அங்கேயே!
அழிந்தன அவன் படையும், ஊர்தியும்.

“முடிவில்லாத ஆயுளைத் தந்தோம்!” என
அடியவனை வாழ்த்தி மறைந்தார் சிவன்.

சிரஞ்சீவி ஆகிவிட்ட மார்க்கண்டேயன்
விரைந்து சென்றான் தன் பெற்றோரிடம்.

சிவப்பதிகள் சென்று சிவனைப் பாடி
சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகின்றான்.

யமன் இறந்ததால் இல்லை இறப்பு!
உயிர்கள் தோன்றிப் பெருகலாயின!

வருந்திய நிலமகள் மாலிடம் கூற,
திருமாலும், பிரமனும் சிவனிடம் கூற,

உயிர்ப் பிச்சை தந்தார் யமனுக்கு
துயர் தீர்த்தார் நிலமகள் சுமையின்.

“என் அடியவர்களை நெருங்காதே!
என் அடியவர்கள் எனக்கே சமம்.

என்றும் நீ இதை மறந்து விடாதே!”
எமன் திரும்பினான் தன் தென்புலம்.

“தவத்தின் பெருமையை உணர்வீர்!
தவம் பிழைப்பித்தது மணமகளை!

தவம் உய்வித்தது மதயானையை.
தவம் உயர்வித்தது மிருகண்டூயரை.

தவம் தந்தது ஓர் ஒப்பற்ற மகனை.
தவம் வென்றது ஊழ்வினைகளை.

தவத்தின் பெருமையை உணர்வீர்!
தவம் செய்து மேன்மைகள் பெறுவீர்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 (# 5L). THE DEATH OF YAMA.

Yama became terribly angry by the lad’s reply. He roared like the thunder clouds and his eyes shone like the lightning in the cloud.

He threw his paasam around the lad-who was hugging the Sivalingam and pulled him with all his might.

The lad did not suffer any pain but Siva emerged from the lingam. He Kicked Yama with one leg. Yama dropped down quite dead. His army and vaahanam also got killed.

Siva blessed the boy, ‘You will be chiranjeevi!” and disappeared. The lad ran back home to tell the good news to his worried parents. He visits Siva temples and sings the glory of Siva to this day.

With the death of Yama there was no more death of any form of life. The population grew so much that the Goddess of earth could not bear the weight . She told her sufferings to Vishnu. He told it to Siva.

Siva resurrected Yama and told him, “Never approach any of my devotees. Remember they are equal to me!” Yama returned to his kingdom.

The sage Kasyapa concluded his long speech to his children thus:

“Realise the greatness of penance. It brought back to life the bride-to-be. It gave moksham to a troubled elephant. It placed Mrugandooyar among the Devas.
It gave mrugandoo a great son. It nullified the evil effects of fate. So my dear children do penance and become great people on earth!”
 
SREEMAN NAARAAYANEEYAM


த3ச’கம் 76 ( 1 to 4)

உத்3த4வ தூ3த்யம்

க3த்வா ஸாந்தீ3பனிமத2
சதுஷ் ஷஷ்டி மாத்ரை ரஹோபி4:
ஸர்வக்ஞஸ்தவம் ஸஹ முஸலினா
ஸர்வ வித்3யாம் க்3ருஹீத்வா|
புத்ரம் நஷ்டம் யமனிலயனா
தா3ஹ்ருதம் த3க்ஷிணார்த்த2ம்
த3த்வா தஸ்மை நிஜபுர
மகா3நாத3யன் பாஞ்சஜன்யம் || ( 76 – 1 )

அதன் பிறகு சர்வஞனான தாங்கள் பலராமனுடன் ஸாந்தீபனியிடம் சென்று அறுபது நான்கு நாட்களில் எல்லா வித்யைகளையும்ம்கற்றுக் கொண்டீர். குருதக்ஷிணைக்காக அவருடைய இறந்து போன பிள்ளையை யமலோகத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தீர். பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதிக்கொண்டு மதுராபுரி திரும்பிச் சென்றீர்கள். ( 76 – 1)

ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா பசு’ப ஸுத்3ருச:
ப்ரேம பா4ப்ரணுன்னா:
காருண்யேன த்வமபி விவச':
ப்ராஹிணோருத்3த4வம் தம் |
கிஞ்சா முஷ்மை பரம ஸுஹ்ருதே3
ப4க்த வர்யாய தாஸாம்
ப4க்த்யுத்3ரேகம் ஸகல பு4வனே
துர்லப4ம் த3ர்ச’யிஷ்யன் || ( 76 – 2 )

பிரேமையின் மேன்மையால் பரவசம் அடைந்த கோப ஸ்திரீக்களை நினைத்து நினைத்து தாங்களும் கருணையால் பரவசர் ஆனீர்கள். அது மட்டுமின்றி பக்தர்களில் சிறந்தவரும், பிரிய சிநேகிதரும் ஆகிய உத்தவரை கோபிகைகளிடம் அனுப்பினீர்கள். உலகம் முழுவதும் ஒருவராலும் அடைய முடியாத கோபிகைகளின் பக்தியின் மேன்மையை நீங்கள் உத்தவருக்குக் காண்பிக்க விரும்பினீர்கள் . ( 76 – 2)

த்வன் மாஹாத்ம்ய ப்ரதி2மபி சு’னும்
கோ3குலம் ப்ராப்ய ஸாயம்
த்வத்3 வார்த்தாபி4ர் ப3ஹு ஸ
ரமயாமாஸ நந்த3ம் யசோ’தா3ம் |
ப்ராதர் த்3ருஷ்ட்வா மணிமய ரத2ம்
ச’ங்கிதா பங்கஜாக்ஷ்ய :
ச்’ருத்வா ப்ராப்தம் ப4வத3னு சரம்
த்யக்த கார்யாஸ் ஸமீயு:|| ( 76 – 3)

அந்த உத்தவர் சாயங்காலத்தில் தங்களின் மகிமையயை நிரூபிக்கின்ற கோகுலத்தை வந்து அடைந்தார். தங்கள் விருத்தாந்தங்களைச் சொல்லி நந்த கோபரையும் யசோதையையும் சந்தோஷப்படுத்தினார். விடியற்காலையில் ரத்தினமயமான தேரைக் கண்ட கோபிகைகள் தங்களின் தூதன் ஒருவன் வந்திருப்பதை அறிந்து, வீட்டு வேலைகளைப் போட்டது போட்டபடி விட்டு விட்டு உத்தவரிடம் வந்தார்கள். ( 76 – 3)

த்3ருஷ்ட்வா சைனம் த்வது3பம
லஸத்3 வேஷ பூ4ஷாபி4 ராமம்
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா தவ விலஸிதான்
யுச்சகைஸ்தானி தானி |
ருத்3தா4லாபா: கத2மபி புனர்
க3த்3 க3தா3ம் வாசமூசு:
சௌஜன்யாதீன் நிஜ பரபி4தா3
மாப்யலம் விஸ்மரந்த்ய: || ( 76 – 4)

தங்களுடையது போன்று விளங்கும் ஆடை ஆபரணங்களால் அழகாக விளங்கிய அந்த உத்தவரைக் கண்டு தங்களுடைய சிருங்கார சேஷ்டைகளை நினைத்து நினைத்துப் பேச்சு தடைபட்டவர்கள் ஆகிப் பிறகு அன்னியன் என்ற வேற்றுமையை மறந்து தழ தழக்கும் குரலில் கூறினார்கள். (76 – 4)
 
த3ச’கம் 76 ( 5 to 8 )

உத்3த4வ தூ3த்யம்

ஸ்ரீமன் கிம் த்வம் பித்ரு ஜனக்ருதே
ப்ரேஷிதோ நிர்த3யேன
க்வாசௌ காந்தோ நக3ர ஸுத்3ருசா’ம்
ஹா ஹரே நாத2 பாயா:|
ஆச்’லேஷாணா மம்ருத வபுஷோ
ஹந்த தே சும்ப3னனாம்
உன்மாதா3னாம் குஹகவசஸாம்
விஸ்மரேத காந்த கா வா || ( 76 – 5 )

லக்ஷ்மி கடாக்ஷம் பொருந்திய உத்தவரே! கருணை அற்ற அந்தக் கிருஷ்ணன் தன் தாய் தந்தையர்களுக்காக உங்களை இங்கு அனுப்பினானோ? பட்டணத்துப் பெண்களின் கணவன் ஆகிய அந்தக் கிருஷ்ணன் எங்கே இருக்கின்றான்? துயரங்களைப் போக்கடிக்கும் ஹே நாதனே! எங்களைக் காப்பாற்றவேண்டும். ஹே காந்த! மிகவும் கஷ்டம்! அமிருதமயமான தங்கள் சரீரத்தையும், தங்கள் ஆலிங்கனங்கலளையும், சுன்பனங்களையும், மனதை மயக்கும் கபடவசனங்களையும் எந்தப் பெண் தான் மறப்பாள் ! ( 76 – 5)

ராஸ க்ரீடா3 லுலித லலிதம்
விச்’லத2த் கேச’ பாச’ம்
மந்தோ3த்3 பின்ன ச்’ரம ஜல கணம்
லோப4நீயம் த்வத3ங்க3ம் |
காருண்யாப்3தே4 ஸக்ருத3பி
ஸமாலிங்கி3தும் த3ர்ச’யேதி
ப்ரேமோன் மாதா3த்3 பு4வன மத3ன
த்வத் ப்ரியாஸ்த்வாம் விலேபு:|| ( 76 – 6)

கருணைக் கடலே! ராசக்ரீடையில் கசக்கப் பட்டதும், மிருதுவானதும், கட்டவிழ்ந்த சிறந்த கேசங்களை உடையதும், கொஞ்சம் வியர்வைத் துளிகளை உடையதும் விரும்பத் தக்கதும் ஆன தங்கள் திருமேனியை ஒரு தடவை தழுவிக் கொள்ள வேண்டும் என்று உலகத்தையே மயக்கும் கிருஷ்ணா! தங்கள் பிரேமைக்கு உரியவர்கள் ஆகிய கோபிகள் தங்கள் பிரேமையால் உண்டான மனக் கலக்கத்தால் தங்களைப் பற்றி விலபித்தனர். ( 76 – 6)

ஏவம் ப்ராயைர் விவச’ வசனை
ராகுலா கோ3பிகாஸ்தா
ஸ்த்வத் ஸந்தே3சை': ப்ரக்ருதி மனயத்
ஸோSத விஞ்ஞான கர்ப்பை4:|
பூ4யஸ் தாபி4ர் முதி3த மதிபி4ஸ்
த்வன் மயீபி4ர் வதூ4பி4
ஸ்தத்3 வார்த்தா ஸரஸமனயத்
கானி சித்3வாஸராணி || ( 76 – 7 )

அதன் பிறகு உத்தவர் பரவச வசனங்களுடன் முற்றிலுமாக வருத்தம் அடைந்த கோபியர்களை தத்துவ ஞானம் செறிந்த தங்கள் வசனங்களால் சமாதானப்படுத்தி இயல்பு நிலையை அடைவித்தார். மனச் சாந்தி அடைந்த அந்த கோபிகைகளுடன் சில நாட்களை அந்தந்த விருதாந்தங்களைக் கேட்டவண்ணம் ஆனந்தத்துடன் கழித்தார் அல்லவா? ( 76 – 7)

த்வத் ப்ரோத்3கா3னைஸ் ஸஹித
மனிச’ம் ஸர்வதோ கே3ஹ க்ருத்யம்
த்வத் வார்த்தைவ ப்ரஸரதி மித2ஸ்
சைவ சோத்ஸ்வாபலாபா:|
சேஷ்டா: ப்ராயஸ்த்வ த3னுக்ருதயஸ்
த்வன் மயம் ஸர்வமேவம்
த்3ருஷ்ட்வா தத்ர வ்யமுஹ த3தி4கம்
விஸ்மயாது3த்3த4வோSயம் || (76 – 8)

இரவும், பகலும், எல்லாவிடத்திலும், வீட்டுவேலைகளிலும் தங்கள் சரிதத்தின் கானங்களுடன் கூடிய பேச்சாகவே இருந்தது. தங்கள் பேச்சு எதிலும் பரவியது. தூங்கும் போது வந்த கனவுகளின் பேச்சுக் கூடத் தங்களைப் பற்றியதே. பிரவ்ருத்திகள் எல்லாமே தங்களை அனுகரணம் செயப்பட்டவை தாம்.. இவ்விதமாக அங்கே எல்லாம் தங்கள் மயமாகவே இருப்பதைக் கண்டு அந்த உத்தவர் ஆச்சரியத்தால் மிகவும் மோஹம் அடைந்தார். ( 76 – 8)
 
த3ச’கம் 76 ( 9 to 11)

உத்3த4வ தூ3த்யம்

ராதா4யா மே ப்ரியா தம மித3ம்
மத்ப்ரியைவம் ப்3ரவீதி
த்வம் கிம் மௌனம் கலயஸி ஸகே3
மானினீ மத் ப்ரியேவ |
இத்யாத்3யேவ ப்ரவத3தி ஸகி2
த்வத் ப்ரியோ நிர்ஜனே மாம்
இத்தம் வாதை3: அரமய த3யம்
தத் ப்ரியா முத்பலாக்ஷீம் || ( 76 – 9)

“நண்பா! என் ராதைக்கு இது பிரியமானது. என் பிரியை ராதை உன்னைப் போலவே சொல்லுவாள். நீயும் அபிமானமுடைய என் பிரியை ராதையைப் போலவே என் மௌனமாக இருக்கின்றாயே! ஹே ராதே! உன் பிரியனான கிருஷ்ணன் ஏகாந்தத்தில் இது போன்ற விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லுவான் ” போன்ற வசனங்களால் அந்த உத்தவர் தங்கள் ப்ரீதிக்கு உரியவளாகிய தாமரைக் கண்ணி ராதையை சந்தோஷப்படுத்தினார். ( 76 – 9 )

ஏஷ்யாமி த்3ராக் அனுபம க3மனம்
கேவலம் கார்ய பா4ராத்
விச்’லேஷேSபி ஸ்மரண த்3ருட3தா
ஸம்ப4வான் மாஸ்து கே2த3:|
ப்3ரஹ்மானந்தே3 மிலதி நசிராத்
ஸங்க3மோ வா வியோக3
ஸ்துல்யோ வ: ஸ்யாதி3தி தவ கி3ரா
ஸோSகரோன்னிர்வ்யதா2ஸ்தா:|| ( 76 – 10)

“தாமதியாமல் அங்கு வருவேன். இப்போது அங்கு வராமல் இருப்பது அதிக வேலை இருப்பதால் தான். என்னை விட்ட போதும் திடமான நினைவு உண்டாவதால் வருந்த வேண்டாம். சீக்கிரமாகவே பிரமானந்தம் கைக் கூடும். அப்போது கூடி இருப்பதும், பிரிவும் உங்களுக்கு சமமாகவே இருக்கும் !” என்ற தங்கள் மொழிகளாலேயே அந்தப் பெண்களை வருத்தம் அற்றவர்களாகச் செய்தார் அல்லவா? ( 76 – 10)

ஏவம் ப4க்திஸ் ஸகல பு4வனே
நேக்ஷிதா ந ச்’ருதா வா
கிம் சா’ஸ்த் ரௌகை4: கிமிஹ தபஸா
கோ3பிகாப்4யோ நமோSஸ்து |
இத்யானந்தா3குல முபக3தம்
கோ3குலாது3த்3த4வம் தம்
த்3ருஷ்ட்வா ஹ்ருஷ்டோ கு3ருபுரபதே
பாஹி மாம் ஆமயௌகா4த் || ( 76 – 11)

இப்படிப்பட்ட சிறந்த பக்தியை உலகில் வேறு எங்குமே கண்டதில்லை. கேட்டதும் இல்லவேயில்லை. இந்த விஷயங்களில் சாஸ்திரங்களால் என்ன பயன்? தவத்தால் என்ன பயன்? கோபிகைகளுக்கு நமஸ்காரம்!” என்று ஆலோசித்து ஆனந்தத்தால் பரவசம் அடைந்து கோகுலத்தில் இருந்து திரும்பி வந்தார் உத்தவர். அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த குருவாயூரப்பா. என்னை வியாதிக்கூட்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். ( 76 – 11)
 
த3ச’கம் 77 (1 to 4)

உபச்’லோக உத்பத்தி

சைரந்த்4ர்யாஸ் தத3னு சிரம் ஸ்மாராதுராயா
யாதோSபூ4ஸ் ஸுலலிதா முத்3த4வேன ஸார்த்த4ம்|
ஆவாஸம் தது3பக3மோத்ஸவம் ஸதை3வ
த்4யாயன்த்யா: ப்ரதிதி3னவாஸ ஸஜ்ஜிகாயா:|| ( 77 – 1 )

அதன் பிறகு வெகு நாட்களாகக் காமத்தில் வருந்தினவளும், தங்கள் சேர்க்கையால் உண்டாகும் ஆனந்ததையே எப்போதும் தியானித்துக் கொண்டு இருப்பவளும், ஒவ்வொரு நாளும் தன்னையும் தன் வீட்டையும் அலங்கரித்துக் கொண்டு நாயகன் வரவை எதிர்பார்த்து இருக்கும் வாஸசஜ்ஜிகை என்ற நாயகியாக பாவித்தவளும் ஆகிய சைரந்திரியின் வீட்டுக்கு, உத்தவருடன் மிக அழகாக அலங்கரிதுக்கொண்டு சென்றீர்கள் அல்லவா? ( 77 – 1)

உபக3தே த்வயி பூர்ண மனோரதம்
ப்ரமத3 ஸம்ப்4ரம கம்ப்ரபயோத4ராம்|
விவித4 மானன மாத3த4தீம் முதா3
ரஹசி தாம் ரமயாஞ்ச க்ருஷே ஸுக2ம் || ( 77 – 2 )

தாங்கள் பக்கத்தில் வந்தபோது தன் மனோரதம் நிறைவேறியவளும், சந்தோஷம் அதிகரித்தால் சலிக்கின்ற ஸ்தனங்களை உடையவளும், பற்பல மரியாதைகள் செய்பவளும், ஆகிய அந்த சைரந்திரியை ஏகாந்தத்தில் மிகவும் சந்தோஷமாக ரமிக்கச் செய்தீர்கள் அல்லவா? ( 77 – 2 )

ப்ருஷ்டா வரம் புனரஸாவவ்ருணோத்3 வராகீ
பூ4யஸ்த்வயா ஸுரதமேவ நிசா’ந்தரேஷு |
ஸாயுஜ்ய மஸ்த்விதி வதே3த்3 பு3த4 ஏவ காமம்
ஸாமீப்ய மஸ்த்வ நிச’மித்யபி நாப்3ரவீத் கிம் || ( 77 – 3 )

மறுநாட்காலையில் தாங்கள் புறப்படும்போது “என்ன வரம் வேண்டும்?” என்று தாங்கள் கேட்டபோது, அந்தப் பேதைப் பெண் அது போன்றே மற்ற இரவுகளிலும் சுரதத்தையே வரமாகக் கேட்டாள். தங்களுடைய சாயுஜ்ய முக்தி வேண்டும் என்று ஒரு ஞானியால் தான் கேட்க முடியும். எப்போதும் தாங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று கூட அவள் கேட்க வில்லையே! ( 77 – 3)

ததோ ப4வான் தே3வ நிசா’ஸு காஸுசித்
ம்ருகீ3 த்3ருச’ம் தாம் நிப்4ருதம் விநோத3யன் |
அதா3 து3பச்’லோக இதி ச்’ருதம் ஸுதம்
ஸ நாரதா3த் ஸாத்வத் தந்த்ர வித்3ப3பௌ4|| ( 77 – 4)

பிரகாசரூபியே! தாங்கள் சில ராத்திரிகள் மான்கண்ணியாகிய அந்தப் பெண்ணை ஏகாந்தத்தில் ரமிக்கச் செய்து கொண்டு உபச்லோகன் என்னும் பிரசித்தி பெற்ற புதல்வனைக் கொடுத்தீர்கள். அவன் நாரதரிடமிருந்து வைஷ்ணவ சாஸ்திரத்தை அறிந்து கொண்டு சிறந்து விளங்கினான். ( 77 – 4 )
 
த3ச’கம் 77 ( 5 to 8 )

உபச்’லோக உத்பத்தி

அக்ரூர மந்தி3ர மிதோSத ப3லோத்3த4வாப்4யாம்
அப்4யர்சிதோ ப3ஹு நுதோ முதி3தேன தேன|
ஏனம் விஸ்ருஜ்ய விபினாக3த பாண்ட3வ்யோ
வ்ருத்தம் விவேதி3த2 ததா3 த்3ருதராஷ்ட்ர சேஷ்டாம் || ( 77 – 5)

பிறகு பாலராமனுடனும், உத்தவனுடனும், அக்ரூரன் வீட்டுக்குச் சென்று , அவனால் பூஜிக்கப்பட்டு துதிக்கப் பட்டீர்கள் அல்லவா? அந்த அக்ரூரனனை அனுப்பிக் காட்டில் இருந்து திரும்பிவந்த பாண்டவர்களின் விருத்தாந்ததையும் மேலும் திருதிராஷ்டிரன் செய்கைகளையும் அறிந்து கொண்டீர்கள் அல்லவா?
( 77 – 5 )

விகா4தாஜ் ஜாமாது: பரம ஸுஹ்ருதோ3 போ4ஜ ந்ருபதே
ஜராஸந்தே4 ருந்த4த்யனவதி4ருஷாSன் தே4Sத2 மது2ராம்|
ரதா2த்3யைர் த்3யாலப்3தை4: கதிபய ப3லஸ்த்வம் ப3லயுத
ஸ்த்ராயோ விம்ச’த்ய க்ஷௌஹிணி தது3பநீதம் ஸமாஹ்ருதா2|| (77 – 6 )

தன் மாப்பிள்ளையும், பிரிய சிநேகிதனும் ஆகிய கம்சனைக் கொன்றதால் அளவற்ற கோபம் கொண்ட ஜராசந்தன் மதுரா மீது படை எடுத்தான். சுவர்க்கத்தில் இருந்து கிடைத்த தேர் முதலியவைகளுடன் கொஞ்சம் சைனியங்களை உடைய தாங்களும் பலராமனும், அந்த ஜராசந்தனால் கொண்டு வரப்பட்ட இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையை சம்ஹாரம் செய்தீர்கள் அல்லவா? ( 77 – 6 )

பத்3த4ம் ப3லாத3த2 ப3லேன ப3லோத்தரம் த்வம்
பூ4யோ ப3லோத்3ய மரஸேன முமோசிதைனம்|
நி: சே’ஷ தி3க்3ஜய ஸமாஹ்ருத விச்’வ சைன்யாத்
கோSன்யஸ் ததோ ஹி ப3லபௌருஷ வாம்ஸ் ததா3னீம் || (77 – 7 )

அதன் பிறகு, பலராமனால் பலவந்தமாகக் கட்டப்பட்டவனும், பலம் பொருந்தியவனும் ஆகிய ஜராசந்தனைத் தாங்கள் ,” படையைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் போருக்கு வருவான்!”‘ என்ற ஆவலால் விடுதலை செய்தீர்கள் அல்லவா? எல்லா திக்குகளையும் ஜெயித்து அவ்விடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சமஸ்த சேனைகளை உடைய அவனைத் தவிர அப்போது பலமும், வீரமும் பொருந்தியவர்கள் வேறு யார் இருந்தார்கள்? ( 77 – 7 )

ப4க்னஸ்ஸ லக்3ன ஹ்ருத3யோSபி ந்ருபை: ப்ரனுன்னோ
யத்3த4ம் த்வயா விதி4த ஷோட3ச’ க்ருத்வ ஏவம்|
அக்ஷௌஹிணிச்’சி’வ சிவாஸ்ய ஜக3ந்த2 விஷ்ணோ
ஸம்பூ4ய சைகனவதி த்ரிச’தம் ததா3னீம் || ( 77 – 8 )

தோல்வி அடைந்து அதனால் வெட்கம் அடைந்திருந்த போதிலும் அந்த ஜராசந்தன் மற்ற அரசர்களின் தூண்டுதலால் இதே போன்று மேலும் பதினாறு தடவைகள் தங்களுடன் போர் புரிந்தான் அல்லவா? அப்போது மொத்தமாக அவனுடைய முன்னூற்றுத் தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணி சேனைகளைக் கொன்று குவித்தீர்கள் அல்லவா? ஆச்சரியம்! ஆச்சரியம் தான். ( 77 – 8 )
 
த3ச’கம் 77 ( 9 to 12 )

உபச்’லோக உத்பத்தி

அஷ்டா த2சே’Sஸ்ய ஸமரே ஸமுபேயுஷி த்வம்
த்3ருஷ்ட்வா புரோSத2 யவனம் யவன த்ரிகோட்யா|
த்வஷ்ட்ரா விதா4ப்ய பரமாசு’ பயோதி4 மத்4யே
தத்ராSத2 யோக3 ப3லத: ஸ்வஜனானனைஷீ:|| ( 77 – 9 )

பிறகு அந்த ஜராசந்தனின் பதினெட்டாவது போர் நெருங்கிய போது தாங்கள் எதிரில் மூன்று கோடி யவனர்களுடன் வந்திருக்கும் காலயவனனைக் கண்டு, விஸ்வகர்மாவின் உதவியுடன் சமுத்திரத்தின் நடுவில் ஒரு பட்டணத்தை உண்டு பண்ணினீர்கள் . உங்கள் யோக பலத்தால் அத்தனை பிரஜைகளையும் அங்கு கொண்டு சேர்த்தீர்கள் அல்லவா? ( 77 – 9 )

பத்3ப்4யாம் த்வம் பத்3மமாலீ சகித இவ
புரான் நிர்க3தோ தா4வமானோ
ம்லேச்சே2சே’னானுயாதோ வத4 ஸுக்ருத
விஹீனேன சை’லே ந்யலைஷீ:|
ஸுப்தேனாங்க்4ர்யா ஹதேன த்3ருத மத2
முசுகுந்தே3ன ப4ஸ்மீ க்ருதேSஸ்மின்
பூ4பாயாஸ்மை கு3ஹாந்தே ஸுலலித
வபுஷா தஸ்தி2ஷே ப4க்திபா4ஜே || ( 77 – 10)

தாமரை மாலை அணிந்த தாங்கள் பயந்தவர் போலக் கால்நடையாகவே பட்டணத்தில் இருந்து வெளியே வந்து ஓடினீ ர்கள். தங்கள் கையால் வதம் செய்யபடும் பாக்கியம் பெறாத மிலேச்சன் அரசன் தங்களைப் பின் தொடர்ந்தான். ஒரு மலையில் மறைந்து விட்டீர்கள் தாங்கள். நன்கு உறங்கிக் கொண்டிருந்தவரும், காலால் உதைத்து எழுப்பப் பட்டவரும் ஆகிய முசுகுந்தனால் அந்த யவனன் சாம்பலாக்கப் பட்டான். முசுகுந்தனுக்கு மிக அழகான திருமேனியுடன் காட்சி தந்தீர்கள் அல்லவா? ( 77 – 10 )

ஏக்ஷ்வாகோஹம் விரக்தோSஸ்ம்யகி2ல
ந்ருபஸுகே த்வத் ப்ர ஸாதை3க்க காங்க்ஷீ
ஹா தே3வேதி ஸ்துவந்தம் வரவிததிஷு
தம் நி: ஸ்ப்ருஹம் வீக்ஷ்ய ஹ்ருஷ்யன் |
முக்தேஸ் துல்யாஞ்ச ப4க்திம் து4த ஸகல மலம்
மோக்ஷ மப்யாசு’ த3த்வா
கார்யம் ஹிம்ஸா விசுத்3த்4யை தப இதி ச
ததா3 ப்ராத்த2 லோக ப்ரதீத்யை || ( 77 – 11)

ஹே சர்வேஸ்வரனே! நான் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன். எல்லா ராஜ போகங்களையும் வெறுத்துத் தங்கள் அருள் ஒன்றையே விரும்பி இருக்கின்றேன் என்று சொல்லித் துதிக்கும் அரசன் வரங்களில் ஆசையற்றவனாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் அடைந்தீர்கள். மோக்ஷத்துகுச் சமமான பக்தியைக் கொடுத்தீர்கள் . பிராணி ஹிம்சையால் உண்டான பாவம் விலகுவதற்கு தவம் புரிய வேண்டுமென்றும் என்று கூறினீர்கள் ( 77 – 11 )

தத2னு மது2ராம் க3த்வா ஹத்வா சமூம் யவனா ஹ்ருதம்
மக3த4 பதினா மார்கே3 சைன்ய: புரேவா நிவாரித:|
சரம விஜயம் த3ர்பா யாஸ்மை ப்ரதா3ய சலாயிதோ
ஜலதி4 நக3ரீம் யாதோ வாதாலயேச்’வர பாஹி மாம்|| ( 77 – 12)

அதன் பிறகு மதுரா புரிக்குச் சென்று காலயவனன் அழைத்து வந்த சேனையைக் கொன்று, வழியில் மகத தேசத்து அரசனான் ஜரா சாந்தனால் முன்போலவே தடுக்கப்பட்டு அவனுக்கு கர்வம் உண்டாக்குவதற்கு வெற்றியை அளித்து ஒடிச் சென்று சமுத்திரத்தில் இருக்கும் த்வாரகா புரியை அடைந்தீர்கள் அல்லவா? அப்படிப் பட்ட குருவாயூரப்பா என்னைக் காப்பாற்றும். ( 77 – 12 )
 
VINAAYAKA PURAANAM 1

27c. கிப்பிரப் பிரசாதன்

“மனக் கவலையை விட்டு விடு குழந்தாய்!
மணாளனின் அன்பு கிடைக்கும் மீண்டும்.

மகிழ்வாய் மனம் அன்பு மகன் பிறப்பான்,
திகழ்வான் கிப்பிரப்பிரசாதன் பெயரில்.

மாற்றாந் தாய் இடுவாள் விஷம் மகனுக்கு.
மாற்றி விடுவார் கிருச்சதமர் விஷத்தை.

நெடுங் காலம் வாழ்வான் உன் மகன்!
விடுவாய் கவலையை இனி இன்பமே!”

தூக்கம் கலைந்தது, கண் விழித்தாள்;
தாக்கம் நீடித்தது மேலும் பல நாட்கள்!

வெப்பு நோய் உண்டானது பிரபைக்கு.
வெறுத்தான் பிரிய விரதன் பிரபையை.

கீர்த்தியை நாடினான் முன்போலவே.
கீர்த்தி ஈன்றாள் அழகிய ஆண் மகனை.

கணபதி கனவில் கூறியது போன்றே
கண்ணனின் பெயர் கிப்பிரப் பிரசாதன்.

நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம்;
நன்கு வளர்ந்தான் கிப்பிரப் பிரசாதன்.

” இல்லை அரசுக் கட்டில் பத்மநாபனுக்கு !
தொல்லையே இச்சிறுவன் உள்ளவரை!”

கிப்பிரப் பிரசாதன் உண்ணும் உணவில்
எப்படியோ நஞ்சைக் கலந்தாள் பிரபை.

நினைவின்றி சுருண்டான் உண்டவுடன்;
அனைத்து வைத்தியரும் முயற்சித்தனர்.

மணி, மந்திரம், மருந்துகள் தோற்றன!
கணபதி கூறியது நினைவுக்கு வந்தது.

காக்க வல்லவர் கிருச்சதமர் ஒருவரே!
தூக்கிக் கொண்டு ஓடினாள் தன் மகனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Back
Top