[TABLE="class: Bs nH iY"]
[TR]
[/TR]
[TR]
[/TR]
[/TABLE]
#26c. மனமோகினி
வரம் பெற்றவர் வலிமை பெறுவர்;
வலிமை பெற்றவர் கொடுமை புரிவர்.
பாரினில் அன்றும் இன்றும் என்றும்
மாறாமல் நிகழ்வது இதுவே அன்றோ?
தேவர்கள் அஞ்சினர் விரோச்சனனிடம் ;
தேவர்கள் கெஞ்சினர் விஷ்ணுவிடம்;
அபயம் அளித்தார் அவர் தேவர்களுக்கு
அழகிய மோகினி வடிவம் எடுத்தார்!
மனமோகினி அசுரன் முன் வந்தாள்;
மயங்கி விட்டான்அசுரன் அவளிடம்.
"தேவகன்னியோ? கந்தர்வ கன்னியோ?"
தேடிச் சென்றான் அவளிடம் அசுரன்!
மாயையை அறியவில்லை சிறிதும்;
மயக்கம் வளர்ந்து பெருகியது விரகம்.
இழுத்த இழுப்புக்கு வளைந்தான்;
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல!
"அசுரர் அரசே! பாக்கியம் எனதே!
பேச இயலுமோ உன் பராக்கிரமத்தை?
நேசம் பெருகுகிறது உன் வலிமை கண்டு!
நெஞ்சம் விரும்புகிறது உன் நெருக்கத்தை!
உறுதி ஒன்று வைத்துள்ளேன் நெடுநாளாக;
அருகில் நெருங்குமுன் எண்ணெய்க் குளியல்.
விரும்பினால் செய்விக்கின்றேன் ஸ்நானம்;
விருப்பத்தை நிறைவேற்றுவேன் அதன்பின்!
தையல் மேல்கொண்ட அதீத மையலால்
மெய் மறந்தே போனான் விரோசனன்.
அமர்ந்தான் கிரீடத்தைக் கழற்றிவிட்டு,
ஆயிரம் சுக்கலானது சிரம், கரம் பட்டதும்!
சூரியன் தந்த வரம் அசுரனைக் காக்கும்,
அரிய கிரீடம் தலை மீது உள்ளவரையே!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
[TR]
[/TR]
[TR]
[/TR]
[/TABLE]
#26c. மனமோகினி
வரம் பெற்றவர் வலிமை பெறுவர்;
வலிமை பெற்றவர் கொடுமை புரிவர்.
பாரினில் அன்றும் இன்றும் என்றும்
மாறாமல் நிகழ்வது இதுவே அன்றோ?
தேவர்கள் அஞ்சினர் விரோச்சனனிடம் ;
தேவர்கள் கெஞ்சினர் விஷ்ணுவிடம்;
அபயம் அளித்தார் அவர் தேவர்களுக்கு
அழகிய மோகினி வடிவம் எடுத்தார்!
மனமோகினி அசுரன் முன் வந்தாள்;
மயங்கி விட்டான்அசுரன் அவளிடம்.
"தேவகன்னியோ? கந்தர்வ கன்னியோ?"
தேடிச் சென்றான் அவளிடம் அசுரன்!
மாயையை அறியவில்லை சிறிதும்;
மயக்கம் வளர்ந்து பெருகியது விரகம்.
இழுத்த இழுப்புக்கு வளைந்தான்;
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல!
"அசுரர் அரசே! பாக்கியம் எனதே!
பேச இயலுமோ உன் பராக்கிரமத்தை?
நேசம் பெருகுகிறது உன் வலிமை கண்டு!
நெஞ்சம் விரும்புகிறது உன் நெருக்கத்தை!
உறுதி ஒன்று வைத்துள்ளேன் நெடுநாளாக;
அருகில் நெருங்குமுன் எண்ணெய்க் குளியல்.
விரும்பினால் செய்விக்கின்றேன் ஸ்நானம்;
விருப்பத்தை நிறைவேற்றுவேன் அதன்பின்!
தையல் மேல்கொண்ட அதீத மையலால்
மெய் மறந்தே போனான் விரோசனன்.
அமர்ந்தான் கிரீடத்தைக் கழற்றிவிட்டு,
ஆயிரம் சுக்கலானது சிரம், கரம் பட்டதும்!
சூரியன் தந்த வரம் அசுரனைக் காக்கும்,
அரிய கிரீடம் தலை மீது உள்ளவரையே!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி