#22b. கிருதவீர்யன்
தாளிடப் பட்டிருந்தது வாயிற் கதவு - முதல்
நாளிலிருந்தே முழுப் பட்டினி தான் மகன்.
களைத்துச் சுருண்டிருப்பான் என நினைத்து,
அழைத்து மும்முறை தட்டினான் கதவை.
மனம் கலங்கினான் மகன் எழுந்து வராததால்;
மனம் உடைந்தான் அவன் இறந்ததைக் கண்டு!
இரவு முழுவதும் அவன் கதறி அழுததால்,
பிரிந்தது அவன் ஆவி விடியற்காலையில்!
அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி ஆம்.
அன்ன ஆகாரம் இன்றி உயிர் துறந்ததால்
விண்ணுலகிலிருந்து வந்தது ஒரு விமானம்.
விண்ணுலகேகினான் அதில் அமர்ந்த மகன்.
பிராமணர்களைக் கொன்றுவிட்ட தோஷம்
பிரம்மஹத்தியாக வந்து பீடித்தது சாம்பனை.
மும்முறை "கணேசா!" என்று அழைத்ததால்
மன்னனாகப் பிறந்துள்ளான் இப்பிறவியில்.
பிரம்மஹத்தி நீங்கும் வரை கிடைக்காது
இம்மையில் மக்கட்செல்வம் அவனுக்கு!"
"பிரம்மஹத்தி நீங்கிட வழி கூறுவீர்!"என
பிரமனை வேண்டினார் மன்னனின் தந்தை.
"சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒன்றே
சங்கடங்களை நீங்கும் முற்றிலுமாக.
மாசி மாதம் அமர பட்ச செவ்வாய் அன்று
பூசித்துத் தொடங்கவேண்டும் கணபதியை.
மந்திரங்கள் ஜபிக்க வேண்டும் நீராடிவிட்டு.
சந்திரோதயத்தில் செய்ய வேண்டும் பூஜை!
அந்தணர்களுக்கு அன்னமிட்டு ஆராதித்து,
கண்விழித்துக் கேட்பீர் கணபதி கதைகளை!
இடைவிடாது ஓராண்டு செய்தால் விரதம்
தடையின்றித் தரும் நல்ல சந்ததிகளை.
வன்னி மரத்தடியில் இதை அனுஷ்டித்தால்
சின்னச் சின்னக் குறைகள் கூட நீங்கிவிடும்!"
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
தாளிடப் பட்டிருந்தது வாயிற் கதவு - முதல்
நாளிலிருந்தே முழுப் பட்டினி தான் மகன்.
களைத்துச் சுருண்டிருப்பான் என நினைத்து,
அழைத்து மும்முறை தட்டினான் கதவை.
மனம் கலங்கினான் மகன் எழுந்து வராததால்;
மனம் உடைந்தான் அவன் இறந்ததைக் கண்டு!
இரவு முழுவதும் அவன் கதறி அழுததால்,
பிரிந்தது அவன் ஆவி விடியற்காலையில்!
அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி ஆம்.
அன்ன ஆகாரம் இன்றி உயிர் துறந்ததால்
விண்ணுலகிலிருந்து வந்தது ஒரு விமானம்.
விண்ணுலகேகினான் அதில் அமர்ந்த மகன்.
பிராமணர்களைக் கொன்றுவிட்ட தோஷம்
பிரம்மஹத்தியாக வந்து பீடித்தது சாம்பனை.
மும்முறை "கணேசா!" என்று அழைத்ததால்
மன்னனாகப் பிறந்துள்ளான் இப்பிறவியில்.
பிரம்மஹத்தி நீங்கும் வரை கிடைக்காது
இம்மையில் மக்கட்செல்வம் அவனுக்கு!"
"பிரம்மஹத்தி நீங்கிட வழி கூறுவீர்!"என
பிரமனை வேண்டினார் மன்னனின் தந்தை.
"சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒன்றே
சங்கடங்களை நீங்கும் முற்றிலுமாக.
மாசி மாதம் அமர பட்ச செவ்வாய் அன்று
பூசித்துத் தொடங்கவேண்டும் கணபதியை.
மந்திரங்கள் ஜபிக்க வேண்டும் நீராடிவிட்டு.
சந்திரோதயத்தில் செய்ய வேண்டும் பூஜை!
அந்தணர்களுக்கு அன்னமிட்டு ஆராதித்து,
கண்விழித்துக் கேட்பீர் கணபதி கதைகளை!
இடைவிடாது ஓராண்டு செய்தால் விரதம்
தடையின்றித் தரும் நல்ல சந்ததிகளை.
வன்னி மரத்தடியில் இதை அனுஷ்டித்தால்
சின்னச் சின்னக் குறைகள் கூட நீங்கிவிடும்!"
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.