A poem a day to keep all agonies away!

#9. A poem a day to keep agonies at bay!

இல்லாமல் முடியாது!

பொல்லாத நண்பர்கள் இல்லாமல்
கல்லூரியில் கலாட்டா செய்யவோ, :brick:

தோழிகள் துணையின்றி தலைவி
திரைப்படங்களில் நடனம் ஆடவோ, :dance:

குண்டர்படை துணையின்றித் தலைவன்
தொண்டர்களிடம் அரசியல் செய்யவோ,

அடியாட்கள் இன்றித் திரை வில்லன்
அடாவடிகள் அடுக்காகச் செய்யவோ, :heh:

பக்தர் கூட்டம் இன்றி சில மனிதர்கள்
முக்தி அளிக்கும் சந்நியாசிகள் ஆகவோ :angel:

முடியாது, முடியாது, முடியவே முடியாது!
ஒடித்து இவர்களை நாம் விலக்கிவிட்டால்

ஹீரோக்கள் ஜீரோக்கள் ஆகிவிடுவார்கள்.
ஹீரோயின்களும் கூட அங்ஙனமே!!!
 
Last edited:
#10. A poem a day to keep agonies at bay!

ஊணும், உறக்கமும்.

ஊணும், உறக்கமும் தேவை
உயிர் வாழ்ந்திட உலகினில்!

எவ்வளவு தேவை என்பதும்
எவ்வளவு கிடைக்கும் என்பதும்

ஒன்றைச் சார்ந்துள்ளன - அந்த
ஒன்று தான் நமது யோகம்.

உணவு இருக்கும்... ஆனால்
உட்கார்ந்து உண்ண முடியாது.

ஒரு காரணம் நேரம் இன்மை!
மறு காரணம் உடல் நிலைமை!!

உறக்கம் வரும் பேரலை போல!
உறங்க முடியாது நிம்மதியாக!!

மணி ஒலி எழுப்பும் காலையில்!
மனிதர்கள் எழுப்புவர் மாலையில்;

என்றாவது ஒருநாள் அறியாமல்
கண்ணயர்ந்து விட்டோம் என்றால்!

உடல் நலம், மனநலம் மட்டுமன்றி
உண்மையில் அனைத்தும் யோகமே!
 
Last edited:

#11. A poem a day to keep agonies at bay!

சுண்டைக்காய் கால் பணம்;
சுமை கூலி முக்கால் பணம்.
(Penny wise and pound foolish).

'பழம் மொழி' என்று நினைத்தேன் நானும்!
பழமைக்குப் பழமையும், புதுமையும் இது!

வெறும் இருபது ரூபாய் படுத்தும் பாடு!!
வெறுப்பேற்றிவிடும் கேட்பவர் மனதிலும்.

தன் எடையையே தாங்க முடியாதவளை
தன் எடைக்கச் சமமான ஒரு பளுவைத்

தூக்கவைக்கும் அன்பான கணவர்களே!
துவண்டு கீழே விழுந்தால் என்ன ஆவாள்?

கால் முறிந்தால் காலத்துக்கும் அவதி
கட்டின கணவனையும் பாதிக்காதோ?

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுருண்டால்
கொஞ்சச் செலவா ஆகும் சிகிச்சைக்கு?

சிக்கனம் தேவை தான் வாழ்க்கையில்.
சிந்திக்க வேண்டும் சிறிதளவேனும்!

இடம், பொருள், ஏவல், காலம் என
இடர்ப்பாடுகள் உள்ளனவே ஏராளம்!
 
Last edited:
#12. A poem a day to keep agonies at bay!

இன்னும் என்ன சுமக்க வேண்டும்?

கருவினை வயிற்றில் சுமப்பாள்.
திருவினை முகத்தில் சுமப்பாள்.

குழவியை இடுப்பில் சுமப்பாள்.
குடும்பத்தை நெஞ்சில் சுமப்பாள்

கடமையைக் கண்ணில் சுமப்பாள்.
கண்ணியத்தைப் பண்பில் சுமப்பாள்.

கவலையை கருத்தில் சுமப்பாள்
தலைவனைக் கற்பில் சுமப்பாள்.

இத்தனை சுமப்பது போதாது என்றால்
இன்னும் என்னென்ன சுமக்க வேண்டும்?
 
Last edited:
#13. A poem a day to keep agonies at bay!

இக்கரைக்கு அக்கரை பச்சை ?!

பல் முளைக்கும் முன்பே வேண்டும்
பலகாரங்கள், பழங்கள் விதவிதமாக!

உமிழ்நீர் ஊறி வழியப் பார்க்கும், கேட்கும்
உண்ண முடியாத உணவு வகைகளை!

குடிக்க முடிந்த பால் வேண்டவே வேண்டாம்!
கடிக்க முடியாதவைகளோ எல்லாம் வேண்டும்!

மூன்று மாதம் என்பது மாறி இப்போது
மூன்று வயது நிரம்பி விட்டது என்றால்;

அன்று விரும்பிய உணவுகளைக் கண்டு
இன்று பிடிக்கும் ஓட்டம் வீடு முழுவதும்!

துரத்தித் துரத்தி ஊட்டவேண்டும் உணவை;
விரட்டி விரட்டிப் பிடித்து அவர்களுக்கு!
 
உமிழ்நீர் ஊறி வழியப் பார்க்கும், கேட்கும்
உண்ண முடியாத உணவு வகைகளை!
Dear VR maam, beautifully written. I am reminded of my daughters all 24hours dripping mouth. Long time since experienced this. May be you are in constant encounter with your grands with dripping mouth? Very beautifully written as if from the point of view of the child!! cheers :thumb:
 
#1580.

One should join revelution. Learn to say 'no'. ( note - say 'no' very softly). When the time is ripe to retire, one should retire. House wife also should retire. ( House wife job is equally important just like money earning job). Husband should earn enough to ask wife not to woek' to ask wife to take it easy; ask wife to 'rest her feet'.

House wife is entitled to get husband to cook her meals; to give her foot massage; to iron her dresses; to pamper her every often with dinner outings; to pamper her with comfortable shopping trips.

Cheers!
 
I am in charge of the five months old grandson

who wants to eat everything from forbidden food and plastics to wood.

My 2 and 1/2 year old grandson and 3 and 1/2 year old grand daughter

are the ones who make their parents chase them all over their sprawling homes. :)
 
Last edited:
#1580.

One should join revelution. Learn to say 'no'. ( note - say 'no' very softly). When the time is ripe to retire, one should retire. House wife also should retire. ( House wife job is equally important just like money earning job). Husband should earn enough to ask wife not to woek' to ask wife to take it easy; ask wife to 'rest her feet'.

House wife is entitled to get husband to cook her meals; to give her foot massage; to iron her dresses; to pamper her every often with dinner outings; to pamper her with comfortable shopping trips.

Cheers!

Revolution or no revolution...:nono:

all wives can not be equally lucky!!!:pout:
 
#14. A poem a day to keep agonies at bay!

எதற்கு இது நமக்கு ?

Pet Peeve என்பது உண்மையே இங்கே.
Pet என்ன status symbol ஆகிவிட்டதா?

நிறையப் பணம் வேண்டும் அவற்றை
சரியாகப் பராமரிக்க எண்ணினால்!

நிறைய சமயம் வேண்டும் அவற்றுடன்
குறைவின்றி விளையாடிக் களிப்பதற்கு!

ஒருமுறை pet vet சாதா விசிட் = 50 $
ஒருமுறை சிகித்சைக்கு எத்தனை $???

ஊரைவிட்டுப் போனால் pet sitter நம்மை
உறிஞ்சி விடுவார் baby sitter போலவே!

எல்லா இடங்களுக்கு எடுத்துச் செல்வதும்
எல்லோரையும் சமாளிப்பதும் மிகக் கடினம்.

அன்பு செய்ய யாரும் இல்லாத சில பல
அநாதை பணக்காரர்களுக்குத் இவை தேவை

நம்மைப் போன்ற நேரம் இல்லாதவர்களுக்கும்,
நல்ல குடும்பம் உள்ளவர்களுக்கும் இவை எதற்கு?
 
அன்பு செய்ய யாரும் இல்லாத சில பல
அநாதை பணக்காரர்களுக்குத் இவை தேவை

நம்மைப் போன்ற நேரம் இல்லாதவர்களுக்கும்,
நல்ல குடும்பம் உள்ளவர்களுக்கும் இவை எதற்கு?
மிகவும் அற்புதம்!! “அன்பு செய்ய யாரும் இல்லாத பணக்காரர்களுக்கு இவை தேவை நிதர்சனமான உண்மை...
 
..........
நம்மைப் போன்ற நேரம் இல்லாதவர்களுக்கும்,
நல்ல குடும்பம் உள்ளவர்களுக்கும் இவை எதற்கு?
தேவையான ஓய்வையும், தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு

இணையதளத்தில் எழுதும் addiction போ
ல,

தேவையான செல்வத்தையும், நேரத்தையும் கெடுத்துக்கொண்டு

Pet வளர்ப்பதும் ஓர் addiction! :becky:
 
தேவையான ஓய்வையும், தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு

இணையதளத்தில் எழுதும் addiction போ
ல,

தேவையான செல்வத்தையும், நேரத்தையும் கெடுத்துக்கொண்டு

Pet வளர்ப்பதும் ஓர் addiction! :becky:

Is not addiction very different from contribution??? :confused:
 
#15. A poem a day to keep agonies at bay!

பறங்கியோடு ரகளை!

Halloween வந்தாலும் வந்தது பாரும் !
எங்கு நோக்கினும் பறங்கிக் காய்கள்.

தங்க நிறம் கொண்டிருந்த போதிலும்
தாங்க முடியவில்லை தாக்கத்தை!

ஆண்டுக்கு ஒருமுறை உண்போம் இதை
தான்களாகப் பொங்கல் குழம்பில் இட்டு.

அன்றாடம் உண்ணச் செய்வது
என்பது எந்தவிதத்தில் நியாயம்.

தெனாலியின் பூனை போல இனிமேல்
கண்டதும் நாம் பிடிப்போமோ ஓட்டம்?
 
.............. ஆண்டுக்கு ஒருமுறை உண்போம் இதை
தான்களாகப் பொங்கல் குழம்பில் இட்டு.......
சிங்காரச் சென்னையில் பறங்கிக்காய் ஆண்டு முழுதும் விற்பனை ஆகின்றதே!

சில 'பறங்கிப் பிரியர்'களை நான் கண்டுள்ளேன்! அதன் நடுவில் உள்ள வலை போன்ற
பகுதியை எடுத்து,

துவையல் செய்து சாப்பிடுவதும், விதைகளை உடைத்து, உள்ளிருக்கும் பருப்பை உண்பதும் உண்டு! :hungry:
 
#15. A poem a day to keep agonies at bay!

இது என்ன காந்திக் கணக்கு?

Organic food sign up என்றார்கள்
Original natural food என்றார்கள்

விலையோ மூன்று மடங்கு தான் !
விற்கும் இடத்துப் போக வேண்டும்!!

வாரம் வாரம் தலையில் கட்டுவது
பறங்கியும் தர்பூசணியும் மட்டுமே!

"வேண்டம் இவை!" என்றால் கிடைக்கும்
வினோதமான ஒரு விசேஷ சமன்பாடு!

ஒரு தர்பூசணி = ஒரு பறங்கிக் காய்!
ஒரு பறங்கிக் காய் = இரண்டு தக்காளி!!

இரண்டு தக்காளி. = மூன்று வெங்காயம்!!!
மூன்று வெங்காயம்.= ????

அதற்குப் பிறகு இல்லை சமன்பாடு!
இதற்குப் பிறகு இல்லை எதுவும் வேறு.

இத்துடன் முடிந்துவிடவில்லை
அற்புதமான organic மகாத்மியம்.

அடிபட்ட தர்பூசணியைப் பழத்தையும்,
அச்சம் தரும் பெரிய பறங்கிக்காயையும்

உற்சாகமாகக் இவர்கள் கொண்டு வர - நான்
உற்சாகம் இழந்த, காற்றுப்போன ஒரு பலூன்!

இத்தனையும் போதாது என்பது போல
இந்தமுறை அழுகின இரு தக்காளிகள்!!!

(where and when)

இரண்டு தக்காளி = ஒரு பறங்கிக் காய்
ஒரு பறங்கிக் காய் = ஒரு தர்பூசணி
 
#1593 - I don't sign up for anything if I don't get a detailed brochure about the product and procedure. I do get a large variety in the weekly 'flea market' ( வாரந்திரச் சந்தை ) by the way of organic vegetables. I like parngi pumpkin once in a while... possibly I cook that once a month may be? The vegetables expressed in #1593 are no choice at all! In fact, 'inorganic vegetables' are not that bad either. There are too many farms around here... there are many places and many varieties available here. So, I don't sign nothing!
 
When they sign up for the 'seasonal produce' their choice becomes very limited.

Is not the opposite of 'organic' vegetables 'non-organic' vegetables???

You are a worldly-wise man while some others are otherwise!
 
#16. A poem a day to keep agonies at bay!

ஜே! ஜே! to ஜே. ஜே.

Her sworn enemies did huff and puff;

But Miss. J.J. was made of sterner stuff!

Too loud was her supporters' voice in unison

To be rattled by a handful of hooligans!
 
#17. A poem a day to keep agonies at bay!

பாண்டியன் எக்ஸ்பிரஸ்

பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்ததாம்

பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே! :shocked:

பின்னர் கண்டுபிடித்தனர் சிலர் அது
வந்தது ஒரு நாள் தாமதமாக என்று! :clock:

மனிதர்களில் உள்ளனர் இதுபோல!

தனித்துவம் என்னவென்று தெரியுமா? :thumb:

எல்லாமே வரும் ஒரு நாள் தாமதமாக! :bowl:

எல்லோரும் ஆகலாம் பாண்டியன் போல!!
 
Last edited:
#18. A poem a day to keep agonies at bay!

காகமும், யானையும்.

காகம் கரைந்து உண்ணும் - இது
காகத்திடம் உள்ள ஒரே நற்பண்பு!

தன் இனம் வாழ எண்ணும் காகம்!
தன் இனம் இல்லாதவற்றைக் கொத்தும்.

குயிலாக இருந்தாலும் சரி - அன்றி அது
குன்றைப் போன்ற யானையானாலுமே!

ஆகாயத் தோட்டி எனப்படும் பறவை கூட
அடுத்த இனங்களை மட்டுமே தாக்கும்.

ஆனால் ஆறறிவு பெற்ற மனிதர்கள்???
 
#19. A poem a day to keep agonies at bay!

எறும்பும், யானையும்.

யானையின் சக்திக்கு முன்னால் நில்லாது
யானையின் நிறம் கொண்ட சிறு எறும்பு!

ஏமாந்த யானையின் காதில் நுழைந்தால்
ஏற்படுத்தும் பெரிய துயர் கரிய யானைக்கு!

பெருமையை வியந்து எண்ணிக் கொண்டு
அறைகூவும் கரிய எறும்பினால் முடியுமா

பெரிய யானை செய்யும் செயல் ஒன்றேனும்?
பெரியவர் பெரியவரே! சிறியவர் சிறியவரே!!

உயர உயரப் பறந்தாலும் முயன்றாலும்
ஊர்க்குருவி கருடனாக மாற முடியாது!
 
தமிளை வாள வைக்க எண்ணிச் சிளர் :bowl:

கிலம்பும் வேலையை எண்ணுகையிள் :clock:

உல்லம் மகிள்ந்து அத்துடன் உடளும் :happy:

புள்ளரித்து நிள்ளாமள் தல்லாடுகிறது! :faint:
 
Last edited:
Back
Top