6#13q. சலந்தரன் அழிவு
திருவிளையாடலை விழைந்தார் பெருமான்.
ஒருகுடை, கமண்டலம் ஏந்தினார் கைகளில்.
நடை தளர்ந்தார், தடியை ஊன்றினார்;
நரை திரை மலிந்த கிழவராக ஆனார்.
பார்ப்பனக் கோலம் தரித்து வந்தார்;
பார்வையில் படாது வந்தனர் தேவர்.
“யார் நீ? எங்கு வசிப்பவன் எனக் கூறு!
யாரைத் தேடித் படையுடன் நடந்தாய்?”
“நிலவுலகில் வசிக்கும் அவுணன் நான்.
கடலரசனின் வளர்ப்பு மகன் சலந்தரன்.
வந்துள்ளேன் போரில் வெல்வதற்கு
அந்தச் சிவனையும் தேவர்களையும்!”
நகைத்தார் கிழவர், உரைத்தார் மேலும்.
“பகைத்தால் சிவனை இறப்பது உறுதி!
பிழைக்க விரும்பினால் திரும்பிச் செல்!
அனைத்தும் அறிவேன் சிவனைப் பற்றி!”
மாறுவேடக் கிழவர் யார் என்றறியாமல்
வேறுபட்டு நின்று, சீறிச் சினந்தான்.
“சிறியவனாக எண்ணிவிட்டீர் என்னை!
சிறிது நேரம் நின்று பாரும் ஆற்றலை!”
“ஆற்றலைக் காணவே வந்துள்ளேன்”
கீற்றினர் திருவடியால் சிவபெருமான்
நிலத்தில் உருளை வடிவம் ஒன்றினை.
“தலையில் தாங்க வல்லாயோ இதை?”
“உருளையைத் தலையில் தாங்குவது
ஊதிப் புகையைத் தள்ளுவதற்கு ஒப்பு!”
உருளைப் படையை எடுத்தான் மேலே;
உருளை இருந்தது மிகவும் பாரமாக.
முயன்று உயர்த்தி மார்பில், தோளில்,
தயங்கித் தலையில் சுமந்தான் அதை.
உருளை உடலை இரு கூறாக்கியது!
குருதி பெருகி எங்கும் பரவியது!
உடன் வந்த படையைத் திருக்கண் தீ
சுடலைச் சாம்பலாக மாற்றி விட்டது!
மெய்வடிவுடன் நின்று அருள் செய்த
ஐயனை வணங்கித் துன்பம் தீர்ந்தனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
திருவிளையாடலை விழைந்தார் பெருமான்.
ஒருகுடை, கமண்டலம் ஏந்தினார் கைகளில்.
நடை தளர்ந்தார், தடியை ஊன்றினார்;
நரை திரை மலிந்த கிழவராக ஆனார்.
பார்ப்பனக் கோலம் தரித்து வந்தார்;
பார்வையில் படாது வந்தனர் தேவர்.
“யார் நீ? எங்கு வசிப்பவன் எனக் கூறு!
யாரைத் தேடித் படையுடன் நடந்தாய்?”
“நிலவுலகில் வசிக்கும் அவுணன் நான்.
கடலரசனின் வளர்ப்பு மகன் சலந்தரன்.
வந்துள்ளேன் போரில் வெல்வதற்கு
அந்தச் சிவனையும் தேவர்களையும்!”
நகைத்தார் கிழவர், உரைத்தார் மேலும்.
“பகைத்தால் சிவனை இறப்பது உறுதி!
பிழைக்க விரும்பினால் திரும்பிச் செல்!
அனைத்தும் அறிவேன் சிவனைப் பற்றி!”
மாறுவேடக் கிழவர் யார் என்றறியாமல்
வேறுபட்டு நின்று, சீறிச் சினந்தான்.
“சிறியவனாக எண்ணிவிட்டீர் என்னை!
சிறிது நேரம் நின்று பாரும் ஆற்றலை!”
“ஆற்றலைக் காணவே வந்துள்ளேன்”
கீற்றினர் திருவடியால் சிவபெருமான்
நிலத்தில் உருளை வடிவம் ஒன்றினை.
“தலையில் தாங்க வல்லாயோ இதை?”
“உருளையைத் தலையில் தாங்குவது
ஊதிப் புகையைத் தள்ளுவதற்கு ஒப்பு!”
உருளைப் படையை எடுத்தான் மேலே;
உருளை இருந்தது மிகவும் பாரமாக.
முயன்று உயர்த்தி மார்பில், தோளில்,
தயங்கித் தலையில் சுமந்தான் அதை.
உருளை உடலை இரு கூறாக்கியது!
குருதி பெருகி எங்கும் பரவியது!
உடன் வந்த படையைத் திருக்கண் தீ
சுடலைச் சாம்பலாக மாற்றி விட்டது!
மெய்வடிவுடன் நின்று அருள் செய்த
ஐயனை வணங்கித் துன்பம் தீர்ந்தனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.