6#1b. தக்கனும், நான்முகனும்.
படைத்தும், காத்தும், அழித்தும், மீண்டும்
படைத்தும், காத்தும், அழிப்பவன் சிவனே!
அனைத்துலகங்களின் அருட்தந்தை அவன்;
அறு குணங்களுடைய பெருவலிவுடையவன்;
அரிய ஒண்ணாத ஒளி வடிவானவன் அவன் ;
அறிவு வடிவாகி அனைத்திலும் உறைபவன்;
தேவர்களின் முதன்மை தெய்வம் அவன்;
தூய முக்கண்களை உடையவன் அவன்;
சிவன் அருளின்றி முக்தி பெறுவது, அது
விசும்பின் தோலை உரித்து உடுப்பது!
சிவம் பரம்பொருள் என்பதற்கு உள்ளன
பவம் தீர்க்கும் பரமனின் புகழ் மொழிகள்.
மறைகள் போற்றுவது அவ்விறைவனையே!
மறந்தும் நாம் சமம் ஆகவே மாட்டோம்!
சிவனின் தொண்டர்கள் தேவர்கள் ஆவர்;
சிவனே தலைவன் உயிர்த் தொகைக்கு;
பாசத்தால் பந்திக்கப் பட்டவர் மேலும்
மோசம் போகாமல் இருக்க விரும்பினால்
ஈசனின் பாதங்களைப் பற்ற வேண்டும்;
நேசத்துடனும், மாறாத பக்தியுடனும்!"
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.