4 # 8 e. இருபத்து நாலாயிரவர்.
அக்கினிமுகன் விழுந்ததும் பெரும்
அதிர்ச்சி அடைந்தனர் அவுணர்கள்.
படை வீர்கள் இருபத்து நாலாயிரவர்
புடை சூழ்ந்தனர் வீரவாத் தேவரை.
கணைகள், உருளைகள் , வேல், மழு
கப்பணம் சொரிந்து போர் புரிந்தனர்.
வீரவாகு வில்லை வளைத்து எய்தார்
நூறு ஆயிரம் கோடிக் கணைகள்.
உரப்பினர் அவுணர்கள் அஞ்சும்படி;
சொரிந்தார் கணைகளை மழையாக.
அவுணர்கள் படைக்கலம் இழந்தனர் .
அவுணர்கள் வெட்டுண்டு விழுந்தனர்.
அழிந்து போயின கரிகளும், பரிகளும்;
ஒழிந்து போயின தேர்கள் எல்லாம்!
பறந்தன பருந்துகள் விண்ணில்;
பரந்தது குருதியாறு மண்ணில்.
மிதக்கும் வேல்களும், வாட்களும்,
மின்னும் கயல்கள் போல் தோன்றின.
செந்நீரில் வெண் குடைகள் சென்றன
செவ்வானில் முழு நிலவைப் போலவே.
ரத, கஜ, துரக, பதாதி என்னும் நாற்படை
எதுவும் மிச்சமின்றி அழிந்து போயிற்று.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
அக்கினிமுகன் விழுந்ததும் பெரும்
அதிர்ச்சி அடைந்தனர் அவுணர்கள்.
படை வீர்கள் இருபத்து நாலாயிரவர்
புடை சூழ்ந்தனர் வீரவாத் தேவரை.
கணைகள், உருளைகள் , வேல், மழு
கப்பணம் சொரிந்து போர் புரிந்தனர்.
வீரவாகு வில்லை வளைத்து எய்தார்
நூறு ஆயிரம் கோடிக் கணைகள்.
உரப்பினர் அவுணர்கள் அஞ்சும்படி;
சொரிந்தார் கணைகளை மழையாக.
அவுணர்கள் படைக்கலம் இழந்தனர் .
அவுணர்கள் வெட்டுண்டு விழுந்தனர்.
அழிந்து போயின கரிகளும், பரிகளும்;
ஒழிந்து போயின தேர்கள் எல்லாம்!
பறந்தன பருந்துகள் விண்ணில்;
பரந்தது குருதியாறு மண்ணில்.
மிதக்கும் வேல்களும், வாட்களும்,
மின்னும் கயல்கள் போல் தோன்றின.
செந்நீரில் வெண் குடைகள் சென்றன
செவ்வானில் முழு நிலவைப் போலவே.
ரத, கஜ, துரக, பதாதி என்னும் நாற்படை
எதுவும் மிச்சமின்றி அழிந்து போயிற்று.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.