2 (# 32b). மாலின் சூழ்ச்சி.
மயக்கும் மோகினி இனிக்கப் பேசினாள்;
தயக்கம் இன்றிக் காதல் வலை வீசினாள்.
"அமுதம் உள்ளது இதோ பொற்குடத்தில்!
அமுதனைய நானும் உள்ளேன் உம் முன்பு!
விரும்பும் பொருளைத் தேர்வு செய்யுங்கள்;
விரும்பியதை அடைந்து இன்புறுவீர்கள்."
"எமக்கு வேண்டியது அழகி நீயே!"- அசுரர்;
"எமக்கு வேண்டியது அமுதம் இதுவே!"- சுரர்;
அமுதத்தை அடைவதற்குத் தேவர்கள்!
அழகியை அணைப்பதற்கு அசுரர்கள்.
மோகினியைத் தழுவ முயன்றவர்கள்
மோஹத்தால் தமக்குள் போரிட்டனர்.
ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
ஒருவரை ஒருவர் காயப் படுத்தினர்.
அவுணர்களில் இருவர் ஏமாறவில்லை.
அவர்கள் விரும்பியதும் இனிய அமுதமே!
கள்ளத் தேவர் வடிவம் எடுத்துக் கொண்டு
மெள்ளக் கூட்டத்தில் கலந்து விட்டார்கள்.
பங்கிட்டார் அமுதத்தைத் நெடிய திருமால்;
பருகினர் அமுதத்தை விரைந்து இருவரும்.
கூரிய மதியால் இனம் கண்டுகொண்ட
சூரிய சந்திரர்கள் திடுக்கிட்டு நின்றனர்.
மெள்ளக் குறிப்பினால் திருமாலுக்குக்
கள்ளத் தேவர்களை ஜாடை காட்டிட,
சினந்த திருமால் அகப்பையால் அடிக்க
தனித்துத் துண்டாயின இருவர் தலைகளும்.
அழியவில்லை அமுதம் உண்ட தலைகள்!
அழிந்து பட்டன இருவர் உடல்களும்!
சிவனை நோக்கித் தவம் செய்தனர்,
சிறந்த கோள்களாக மாறிவிட்டனர்.
கோளுரைத்த சூரிய சந்திரர்களைக்
கோள் வடிவத்தில் மறைக்கலாயினர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
மயக்கும் மோகினி இனிக்கப் பேசினாள்;
தயக்கம் இன்றிக் காதல் வலை வீசினாள்.
"அமுதம் உள்ளது இதோ பொற்குடத்தில்!
அமுதனைய நானும் உள்ளேன் உம் முன்பு!
விரும்பும் பொருளைத் தேர்வு செய்யுங்கள்;
விரும்பியதை அடைந்து இன்புறுவீர்கள்."
"எமக்கு வேண்டியது அழகி நீயே!"- அசுரர்;
"எமக்கு வேண்டியது அமுதம் இதுவே!"- சுரர்;
அமுதத்தை அடைவதற்குத் தேவர்கள்!
அழகியை அணைப்பதற்கு அசுரர்கள்.
மோகினியைத் தழுவ முயன்றவர்கள்
மோஹத்தால் தமக்குள் போரிட்டனர்.
ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
ஒருவரை ஒருவர் காயப் படுத்தினர்.
அவுணர்களில் இருவர் ஏமாறவில்லை.
அவர்கள் விரும்பியதும் இனிய அமுதமே!
கள்ளத் தேவர் வடிவம் எடுத்துக் கொண்டு
மெள்ளக் கூட்டத்தில் கலந்து விட்டார்கள்.
பங்கிட்டார் அமுதத்தைத் நெடிய திருமால்;
பருகினர் அமுதத்தை விரைந்து இருவரும்.
கூரிய மதியால் இனம் கண்டுகொண்ட
சூரிய சந்திரர்கள் திடுக்கிட்டு நின்றனர்.
மெள்ளக் குறிப்பினால் திருமாலுக்குக்
கள்ளத் தேவர்களை ஜாடை காட்டிட,
சினந்த திருமால் அகப்பையால் அடிக்க
தனித்துத் துண்டாயின இருவர் தலைகளும்.
அழியவில்லை அமுதம் உண்ட தலைகள்!
அழிந்து பட்டன இருவர் உடல்களும்!
சிவனை நோக்கித் தவம் செய்தனர்,
சிறந்த கோள்களாக மாறிவிட்டனர்.
கோளுரைத்த சூரிய சந்திரர்களைக்
கோள் வடிவத்தில் மறைக்கலாயினர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.