கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
பௌ4மாபாஹ்ருத் குண்ட3லம் (9)

தேவமாதர் நாணும் அழகுடைய சத்யபாமையுடன், நரகாசுரன் கவர்ந்திருந்த குண்டலங்களை அதிதிக்குத் திருப்பிக் கொடுக்க, சுவர்க்கலோகம் சென்றீர்கள். இந்திரன் முதலியவர்கள் தங்களைப் பூஜித்தார்கள். கற்பக விருக்ஷத்தை அபகரித்தீர்! கோபத்துடன் எதிர்த்து வந்த இந்திரனை ஜெயித்துத் துவாரகைக்குத் திரும்பினீர். ஐஸ்வரியத்தால் உண்டாகும் கெடுதி என்ன என்பதைத் தெரிவிப்பதற்கே இவ்வாறு செய்தீர்கள் அல்லவா?
 
கல்பத்3ரும் (10)

ஹே குருவாயூரப்பா!

கற்பக விருக்ஷத்தை சத்யபாமையின் வீட்டில் கொல்லைப் புறத்தில் நடச் செய்தீர்
கள். பதினாறாயிரம் சரீரங்களை எடுத்துக் கொண்டீர்கள். பதினாராயிரம் ஸ்திரீக்களை விவாகம் செய்து கொண்டு, பல கிரீடைகள் புரிந்து கொண்டு, எல்லாப் பத்தினிகளிடமும் பத்துப் பத்து பிள்ளைகளை உண்டாக்கி, நாரதரையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய, தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.
 
கிருஷ்ணன் பதினாயிரம் ஸ்திரீக்களை விவாஹம் செய்து கொண்டு
அந்த எல்லாப் பத்தினிகளிடமும் பத்துப் பத்துப் புத்திரர்களை உற்பத்தி செய்து
ஆனந்தமாக வாழ்கின்றான் - தேவ ரிஷி நாரதரே கண்டு வியக்கும்படி.

சண்டைக்கும், எனக்கும் வெகு தூரம் இருக்க வேண்டுமென்று நினைப்பவள் நான்.
சண்டை வராமல் இருப்பதற்கே சில சமயம் சண்டை போடவேண்டி இருக்கிறது!
அது போகட்டும். வேண்டுமென்றே மகா பாரத யுத்தத்தில் நுழைய வேண்டாமே!

குசேல உபாக்யானம், சந்தானகோபால உபாக்யானம், விருகாசுர வத வர்ணனம், பகவானின் விபூதிகள், பகவானின் மஹிமை மற்றும் கேசாதி பாதாந்த வர்ணனத்துடன் இந்தத் தொடரை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து படித்து ஆதரவு தந்தமைக்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
தொடர்ந்து படியுங்கள் இந்தத் தொடரை - இன்னும் இரண்டு மாதங்களில் முடியும் வரை! :pray2:
 
நாராயணீயம் தசகம் 87

குசேலோபாக்கியானம்

குசேலநாமா (1)

சாந்தீபனி முனியின் ஆசிரமத்தில் தங்களுடன் கல்வி கற்றவரும், சாந்த ஸ்வபாவம் உடையவரும், கிருஹச்தரும் ஆன குசேலன் என்னும் பெயருடைய பிராமணன், தங்களிடம் கொண்ட பக்தியால் பணம் முதலியவற்றில் பற்று இல்லாமல் நாட்களைக் கழித்து வந்தார்.
 
ஸமானசீ'லோsபி (2)

குசேலனுக்குச சமமான சீலம் பெற்றவள் ஆயினும், அவர் மனைவி அவரைப் போல மனத் தூய்மை பெற்று இருக்கவில்லை. "செல்வம் கிடைக்கத் தங்கள் தோழனும், லக்ஷ்மியின் கணவனும் ஆன கிருஷ்ணனை ஏன் சேவிக்கக் கூடாது?" என்று அவனிடம் கேட்டாள்.
 
இதீரிதோsயம் (3)

பசியால் வருந்தும் தன் மனைவி இவ்விதம் கூறியவுடன், அந்தக் குசேலன் கர்வத்தை உண்டு பண்ணும் செல்வத்தை வெறுத்த போதிலும், தங்களைத் தரிசிக்க விரும்பினர். தங்களுக்குக் காணிக்கையாக வஸ்திரத் தலைப்பில் கொஞ்சம் அவுலை எடுத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றார்.
 
க3தோsயமாச்ச்சர்யமயீம் (4)

அந்தக் குசேலன், ஆச்சரியங்கள் நிறைந்த தங்கள் நகரை அடைந்து பதினெட்டாயிரம் வீடுகளுக்கு இடையில் சை'ப்3யையின் வீட்டை அடைந்து வைகுண்டத்தையே அடைந்து விட்டவர் போல ஆனந்தம் எய்தினார். தங்களுடைய சிறந்த உபசாரமே அதற்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ?
 
ப்ரபூஜிதம் தம் (5)

தங்களால் நன்கு பூஜிக்கப்பட்டார். தங்கள் பத்தினி விசிறி வீசினாள். குசேலனைக் கையால் பிடித்துக் கொண்டு பழங்கதைகள் பேசினீர்கள். குருபத்தினி விறகு கொண்டு வரச் சொன்னபோது காலம் அல்லாத காலத்தில் பெய்த மழையைப் பொறுத்தது எப்படி என்று.
 
த்ரபாஜுஷோ (6)

பிறகு ஸ்ரீபதிக்கு ஒருபிடி அவல் கொடுப்பதற்கு வெட்கம் அடைந்த அந்தக் குசேலனிடம் இருந்து பலவந்தமாக அவலைப் பிடுங்கி உண்டீர்கள். ஒரு பிடி அவல் உண்ட துமே லக்ஷ்மி தேவி ஓடி வந்து "போதும் போதும் இத்தனை அனுக்ரஹம் செய்தது!" என்று தங்கள் கையைப் பற்றித் தடுத்தாள் அல்லவா?
 
ப4க்தேஷு ப4க்தேன (7)

அடியவர்களுக்கு அடியவர் ஆகிய தங்களால் நன்கு உபசரிக்கப்பட்டு, குசேலர் அந்த இரவை மிகவும் சுகமாக துவாரகையில் கழித்தார். அடுத்த நாள் செல்வம் எதுவும் தங்களிடமிருந்து பெறாமலேயே திரும்பிச் சென்றார். தங்களுடைய அனுகிரஹம் விசித்திரமானது அல்லவா?
 
யதி3 ஹ்யயாசிஷ்யம் (8)

"நான் செல்வத்தை யாசித்து இருந்தால் நிச்சயமாகக் கிருஷ்ணன் தந்திருப்பான். ஆனால் நான் கேட்கவும் இல்லை! அவன் தரவும் இல்லை! பத்தினி கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்?" என்று ஆலோசித்துக் கொண்டு நடந்த அந்தக் குசேலன், உங்கள் இனிமையான வார்த்தைகளையும், மந்தஹாசத்தையும் நினைவில் கொண்டு மனம் லயித்தவனாகச் சென்றான். ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற ஒரு அழகிய கிருஹத்தைக் கண்டான்.
 
கிம் மார்க3விப்4ரம்ச' (9)

"வழி தவறி வந்துவிட்டேனா என்ன?" என்று சிறிது நேரம் பிரமித்து நின்றான் குசேலன். பிறகு வீ ட்டுக்குள் சென்ற குசேலன் தோழிகளால் சூழப்பட்டவளும், பொன்னாலும், மணிகளாலும் அலங்கரிக்கப் பட்டவளும் ஆகிய தன் மனைவியைக் கண்டான். தங்களின் கருணையை உணர்ந்தான்.
 
ஸ ரத்னாசா'லாஸு (10)

அந்தக் குசேலன் அந்த இரத்தின மாளிகையில் வசித்த போதும், பொங்கும் பக்தி குறையாமல் வாழ்ந்து மோக்ஷத்தை அடைந்தான் ஹே குருவாயூரப்பா! இவ்விதம் பக்தர்களுடைய எல்லாக் கோரிக்கைகளை நிறைவேற்றிய தாங்கள் என்னுடைய வியாதிகளை அகற்ற வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 88

சந்தான கோபால உபாக்யானம்

ப்ராகே3வாசார்ய (1)

குரு புத்திரனை அழைத்து வந்ததைக் கேட்டதால், வெகு நாட்களாகவே தன்னுடைய ஆறு புத்திரர்களைக் காண விரும்பினாள் தேவகி. தாங்கள் சுதல லோகம் சென்று மகாபலியால் பூஜிக்கப்பட்டீர்கள். பிரம்ம சாபத்தால் ஹிரண்ய கசிபுவுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தவர்களும், பிறகு வசுதேவருக்குப் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டவர்களும், மரீசியின் முதல் பிள்ளைகளுமான, அவர்களை அழைத்து வந்து தேவகிக்குக் காட்டிய பின்னர் அவர்கள் லோகத்துக்குத் திருப்பி அனுப்பினீர்கள் அல்லவா?
 
ச்'ருததே3வ இதி ச்'ருதம் (2)

ச்ருததேவன் என்று பிரசித்தி பெற்ற பிராமாணோத்தமனையும், பக்தி நிறைந்த பஹுலாச்வன் என்ற அரசனையும் ஒரே சமயத்தில் அனுக்ரஹிக்க விரும்பியதால், தாங்கள் தபஸ்விகளுடனேயே மிதிலைக்குச் சென்றீர்கள் அல்லவா?
 
க3ச்சன் த்3வி மூர்த்தி (3)

இரண்டு உருவங்களை எடுத்துக் கொண்டு, இருவருடைய இல்லங்களுக்கும் ஒரே காலத்தில் சென்றீர்கள். அரசன் பஹுலாச்வனால் மிகுந்த வைபவத்துடனும், அந்தணன் ச்ருததேவனால் மிகவும் எளிமையாக அன்று சம்பாதிக்கப்பட்ட பழங்கள், அன்னம் முதலியவற்றால் உபசரிக்கப் பட்ட தாங்கள், இருவரிடத்திலும் ஒரே போல சந்தோசம் அடைந்தீர்கள் அல்லவா? அவ்விருவருக்கும் ஒரே போல மோக்ஷத்தை அளித்தீர்கள் அல்லவா?
 
பூ4யோsத த்3வாரவத்யாம் (4)

பிறகு துவாரகையில் அடிக்கடி உண்டான ஒரு பிராமணனின் குமாரர்களின் மரணத்தையும், அந்த பிராமணனின் சோகமான புலம்பல்களையும்,
"தலை விதியை யாரால் தடுக்க முடியும்?" என்று சொல்லியவாறு தாங்கள் சகித்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா?

சமஸ்த பிரபஞ்சத்தையும் தரிக்க வல்ல தாங்கள் அவ்வாறு அவற்றைச் சகித்துக் கொண்டு இருந்தது இந்தக் காரணங்களுக்காகவே என்று நான் எண்ணுகின்றேன்.

அர்ஜுனனுடைய கர்வத்தைப் போக்க வேண்டும்; தங்களை வெறும் மனிதனாகவே எண்ணியிருந்த அவன் கருத்தை மாற்ற வேண்டும்; விவேகம் இல்லாத அவன் புத்தியை வைகுண்டத்தைக் காட்டுவதன் மூலம் பரமார்த்த போதத்தை அடைந்ததாகச் செய்ய வேண்டும் என்பவையே அவை என்று நான் எண்ணுகின்றேன்.
 
நஷ்டா அஷ்டாஸ்ய (5)

அந்த பிராமணனுடைய எட்டுப் பிள்ளைகள் இறந்து விட்டனர். தங்கள் உபேக்ஷை காரணமாகவே ஜனங்களுக்கு இடையில் "கஷ்டம்! கஷ்டம்!" என்ற பேச்சு ஸ்பஷ்டமாகக் கேட்கத் துவங்கியது. அதே சமயத்தில் அர்ஜுனனும் துவாரகைக்கு வந்தான். சிநேகத்தால் அர்ஜுனன் அங்கு வசித்திருக்கும் பொழுது, ஒன்பதாவது புத்திரனும் இறந்து போனதால் அந்த பிராமணன் கதறி அழுதான். அதைக் கேட்டு மனம் வருந்திய அர்ஜுனன் கடுமையான ஒரு பிரதிக்ஞை செய்தான், "இனிப் பிறக்கும் குழந்தையை இறக்க விடமாட்டேன். அதையும் மீறி அது இறந்து போனால் அதைத் திருப்பிக் கொண்டு வருவேன். அப்படிக் கொண்டுவர முடியாவிட்டால் நான் அக்னிப் பிரேவேசம் செய்வேன்!" என்று
 
நாராயணீயம் தசகம் 88

மானீ ஸ தாமப்ருஷ்ட்வா (6)

செருக்குற்ற அர்ஜுனன் தங்களிடம் சொல்லாமல் அந்த பிராமணன் வீட்டுக்குச் சென்றான். ஆக்கிநேயம் முதலிய பெரிய அஸ்திரங்களால் பிரசவஅறையை மறைத்து விட்டான். குழந்தை பிறந்தது. உடனே அது மறைந்தும் போயிற்று. உடனேயே அதைத் தேட யமபுரி, இந்திரனின் பட்டணம் , மற்ற தேவர்களின் நகரங்களை தன் யோக வித்தையால் அடைந்த அர்ஜுனனால் குழந்தையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தன் பிரதிக்ஞைப்படி அக்னிப் பிரவேசம் செய்ய முற்படும் போது தங்களால் தடுக்கப்பட்டான்.
 
ஸார்த்த4ம் தேன ப்ரதீசீம் (7)

அந்த அர்ஜுனனுடன் மிகவும் வேகமாகச் செல்லும் தேரில் ஏறிக் கொண்டு, மேற்கு திசையை நோக்கிச் சென்று, லோகாலோக மலைகளைக் கடந்து, அங்கு நிலவிய காரிருளை சுதர்சனச் சக்கரத்தால் அகற்றினீர்கள். அப்போது சுதர்சனத்தின் ஒளியால் கண்கள் வருந்திய அர்ஜுனனிடம்,
" பார்! பார்!" என்று சொல்லிக் காரண ஜலத்துக்கும் அப்பால், வெகு தூரத்தில் இருக்கும், இன்னந்தென்று வர்ணிக்க முடியாத தங்கள் உலகமான வைகுண்டத்தைக் காண்பித்தீர்கள் அல்லவா?
 
தத்ராஸீனம் (8)

அந்த வைகுண்டத்தில் சர்ப்ப ராஜனாகிய ஆதிசேஷன் அமைத்த படுக்கை மேல் வீற்றிருப்பவரும்; சிறந்த ஆபரணங்களை அணிந்து இருப்பவரும்; சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும்; மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; நீருண்ட புதுக் கார்மேகம் போன்ற ஷ்யாமள நிறம் உடையவரும்; ஸ்ரீ பொருந்திய திருமேனி கொண்டவரும்; ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் செய்வதற்கு மும்மூர்த்திகளை நியமிக்கின்றவரும்; சர்வ காரண பூதரும்; வேதங்களுக்கு முக்கிய அர்த்தபூதரும்; மோக்ஷரூபியாகவும் இருக்கின்ற தங்களையே, தாங்கள் தங்கள் நண்பன் அர்ஜுனனுடன் வணங்கினீர்கள் அல்லவா?
 
யுவாம் மாமேவ (9)

பிரகாசமான ஐஸ்வரியத்தை உடையதாக இருப்பதாலும்;
மறைந்த ஐஸ்வரியத்தை உடையதாக இருப்பதாலும் ;
பரமாத்மாவாகவும் ஜீவாத்மாவாகவும் பிரிந்தவர்களும்;
நானாகவே இருப்பவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும்
என்று நானே பிராமணனின் குழந்தைகளை இங்கே கொண்டு வந்தேன்.
அவர்களைச் சீக்கிரமாக அழைத்துச் செல்லுங்கள் "
என்று சொல்லிக் குழந்தைகளைத் திருப்பித் தரவும்,
அர்ஜுனனுடன் விரைந்து திரும்பி வந்து
அவனால் புகழ் பெற்றுவிட்ட அந்த பிரமணனிடம்
குழந்தைகளைத் திருப்பித் தந்தீர்கள் அல்லவா?
 
ஏவம் நானாவிஹாரை (10)

இவ்விதம் பற்பல லீலைகளைச் செய்துகொண்டும்;
உலகத்தைக் களிப்புறச் செய்து கொண்டும்;
வ்ருஷ்ணீ வம்சத்தை ஓங்கி வளரச் செய்துகொண்டும்;
பற்பல யாகங்களைச் செய்து கொண்டும்;
ஒப்பற்ற லீலா விஹாரங்களால் மான் கண்ணியரான
பெண்களை சந்தோஷப்படுத்திக் கொண்டும்;
பூபாரத்தை ஒழிப்பது என்ற வியாஜத்தால் தங்கள் மலரடிகளைச் சேவித்தவர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதற்கு என்றே யது வம்சத்தில் அவதரித்த;
எங்கும் நிறைந்துள்ள பரப்ரம்ம ஸ்வரூபியாகிய தாங்கள்;
மனிதத் தன்மையால் மறைக்கப்பட்டு விளங்கினீர்கள் அல்லவா?
 
ப்ராயேண த்3வாரத்யா (11)

ஹே பகவன்! நாரதர் தங்கள் சேவையில் ஈடுபட்டவராக அதிக நாட்கள் துவாரகையில் வசித்து வந்தார் அப்போது ஒரு நாள் தங்கள் பிதாவாகிய புண்ணிய சீலர் வசுதேவர் அந்த நாரதரிடமிருந்து ஞானோபதேசத்தைப் பெற்றார். பக்தர்களில் முந்தியவரும் புத்திசாலியுமான அந்த உத்தவரும் தங்களிடமிருந்தே ஞானசாரத்தை அடைந்தார். அந்த உத்தவர் ஜனங்களின் நன்மைக்காக இன்றும் பதரிகாசிரமத்தில் இருக்கின்றார் அல்லவா?
 
ஸோயம் க்ருஷ்ணாவதாரோ (12)

ஹே பிரபூ! எந்தக் கிருஷ்ணாவதாரத்தில் சௌஹார்த்தம், பயம், துவேஷம், அனுராகம் முதலிய ஒப்பற்ற, கஷ்டமில்லாமல் மனதைச் செலுத்தக் கூடிய உபாய விசேஷங்களால், எல்லா இடங்களிலும் எல்லா ஜனங்களும் துன்பங்களைக் கடந்து மோக்ஷத்தை அடைந்தனரோ; அந்தக் கிருஷ்ணாவதாரம் உலகப்பிரசித்தி பெற்று விளங்கிகிறது.
அப்படிப்பட்ட தாங்கள் எல்லோரும் எல்லாத் துன்பங்களும் நீங்கி சாந்தி அடையவும், எல்லோருடைய பக்தி பரிபூரணம் அடையவும் அருள வேண்டும்.
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top