கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
நாராயணீயம் தசகம் 89

வ்ருகாசுர வத வர்ணனம்

ராமா ஜானே ஜானே (1)

இவ்வுலகில் தங்களின் பக்தர்களிடம் ஐஸ்வர்யம் விரைவில் உண்டாவதில்லை. அதன் காரணம் அது மதத்தை உண்டு பண்ணுவதே ஆகும். சாந்தி அடையாதவர்களுக்குச் சாந்தியைக் கொடுத்து; சாந்தி அடைந்தவர்களுக்கு சீக்கிரமாக எல்லா அபீஷ்டங்களையையும் நிறைவேற்றுகிறீர்கள். நழுவுதல் என்பதே தங்கள் பக்தர்களிடம் கிடையாது அல்லவா?
 
ஸத்3ய: ப்ரஸாத3ருஷிதான் (2)

ஹே பிரபு! சிலர் தங்கள் வாசனைக்குத் தகுந்தபடி, சீக்கிரத்தில் சந்தோஷம் அடைபவர்களும், கோபம் அடைகிறவர்களும், ஆகிய பிரமன், ஈசன் முதலியவர்களைச் சேவித்துத் தீர்க்க தரிசனம் இல்லாத காரணத்தால் பிரஷ்டர்கள் ஆகின்றார்கள். இது மிகவும் கஷ்டமானதே! இதற்கு விருகாசுரன் சிறந்த உதாரணம் ஆவான் அல்லவா?
 
ச'குனி ஜ: (3)

சகுனியின் புத்திரனான விருகாசுரன் ஒருநாள் நாரதரிடம் விரைவாக சந்தோஷம் அடையும் ஈசனைப் பற்றிக் கேட்டான் . அதற்கு நாரதர் பரமேஸ்வரனை உபாசிக்கச் சொன்னார். துஷ்டர்களின் பந்து அல்லாத உங்களை உபாசிக்கச் சொல்லவில்லை
 
தபஸ்தப்த்வா (4)

அந்த விருசாசுரன் கடுமையான தவம் புரிந்தான். ஏழாவது நாளே கோபம் அடைந்து தன் தலையைத் தானே அறுத்து எடுத்தபோது பரமேஸ்வரன் அவன் முன் பிரத்தியக்ஷம் ஆனார். அவரிடமிருந்து " தலை மேல் கை வைப்பதால் மரணம் உண்டாக வேண்டும்!" என்ற மிகவும் துச்சமானதும் கொடியதும் ஆன வரத்தைகே கேட்டுப் பெற்றான். தங்களிடம் பாராமுகம் உள்ளவர்களுக்கு நல்ல புத்தி எங்ஙனம் உண்டாகும்?
 
மோக்தாரம் ப3ந்த முக்தோ (5)

பிறகு அவன், கட்டிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட ஒரு சிங்கம், தன்னை அவிழ்த்து விட்டவனையே பின் தொடருவது போலப் பரமசிவனைப் பின் தொடர்ந்தான். பரமசிவனும் அசுரனிடம் கொண்ட பயத்தால், பின்புறம் திரும்பிப் பார்த்துக் கொண்டே எல்லா திசைகளிலும் ஓடினார். அத்தனை பேரும் பேசாமல் இருக்கும்போது, பரமசிவன் தங்கள் லோகத்திற்கு செல்ல உத்தேசித்ததைக் கண்டறிந்து வெகு தூரத்திலேயே திறமை வாய்ந்த பிரம்மச்சாரியின் உருவத்தில் அசுரனுக்கு எதிரில் பிரகாசமாக நின்றீர்கள் அல்லவா?
 
சா'குநேய தே ப3த்3ரம் (6)

"ஹே விருகாசுரனே! நீ க்ஷேமமா? நீ இந்தப் பிசாசின் சொல்லைக் கேட்டுக் கொண்டு ஏன் வீணாக ஓடித் திரிகின்றாய்? அப்பனே! உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே ஏன் கையை வைக்கவில்லை?" இவ்வாறு தாங்கள் சொல்லக் கேட்டு மதி மயங்கிய அந்த விருகாசுரன் தன் தலையில் தானே கையை வைத்துக் கொண்டான். வேரறுந்த மரம் போல விழுந்து இறந்தான். வேறு கடவுளை உபாசிப்பவனுக்கு இவ்விதமாக நாசம் உண்டாகிறது.
அது மட்டுமல்ல! சூலபாணிக்குக் கூட தாங்களே அபயம்.
 
மும்மூர்த்திகளில் விஷ்ணுவின் மேன்மையை வர்ணிப்பது

ப்3ருகு3ம் கில (7)

சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த தபஸ்விகள் மும்மூர்த்திகளில் அதிகமான சத்துவ குணம் உடையவரைக் கண்டறிவதற்கு ப்ருகு முனிவரை அனுப்பினார்கள் அல்லவா?
அவரும் பிரம்ம தேவர் தன்னை ஆதரிக்காததால் முதலில் கோபம் அடைந்து பிறகு சாந்தம் அடைந்தார். பரமேஸ்வரனும் அவரைக் கொல்ல விரும்பியபோது பார்வதியால் தடுக்கப்பட்டார். அதன் பின் தங்களை வந்து அடைந்தார் அல்லலவா?
 
ஸுப்தம் ரமாங்க பு4வி (8)

லக்ஷ்மி தேவியின் மடியில் நித்திரை செய்கிறவரும், தாமரைக் கண்ணனும் ஆகிய தங்களை அந்த ப்ருகு முனிவர் காலால் எட்டி உதைத்த போது தாங்கள் மிகவும் சந்தோஷத்தோடு எழுந்து, "ஹே முனிஸ்ரேஷ்டரே! எல்லாவற்றையும் பொறுக்க வேண்டும். தங்கள் திருவடியின் அடையாளம் எனது மார்பில் எப்போதும் அலங்காரமாக இருக்கட்டும்" என்று சொன்னீ ர்கள் அல்லவா?
 
நிச்சித்ய தே (9)

சரஸ்வதிநதி தீரவாசிகாளான அம்முனிஸ்ரேஷ்டர்களும் நிச்சயம் பண்ணிக் கொண்டு தங்களிடத்தில் திடமான பக்தி கொண்டு மோக்ஷம் அடைந்தார்கள். ஹே அச்யுதா! இவ்விதம் ச்யுதி அல்லது நழுவுதல் என்ற தோஷம் இல்லாத சத்வ குணப் பிரதான சரீரத்தை உடைய உங்கள் ஒருவரையே நாங்கள் சேவிக்கின்றோம்.
 
ஜக3த்ச்'ருஷ்ட்யாதௌ3( 10)

ஹே குருவாயூரப்பா! உலக சிருஷ்டியின் துவக்கத்தில் ஸ்துதி செய்யும் பாடகர்கள் போல தேவ சமூஹத்தினரால் துதிகப்பட்டவரும்; சச்சிதானந்தரூபியும்; பரமார்த்தரூபியும்;
கோபஸ்த்ரீக்களின் பாக்கியக் குவியலுமான தங்களைத் தாபத்த்ரய நிவர்த்திக்காக நான் நன்றாக சேவிக்கின்றேன்.
 
cleardot.gif

நாராயணீயம் தசகம் 93

பஞ்சவிம்ச'தே கு3ருப்4ய: சிக்ஷணீயச்'ய வர்ணனம்

ப3ந்துஸ்நேஹம் விஜஹ்யாம் (1)

தங்களுடைய கருணையாலே பந்துக்களிடம் கொண்டுள்ள ஸ்நேஹத்தை விடுவேனாகுக.
தங்களிடதிலேயே மனத்தைச் செலுத்தி, உலகம் அனைத்தும் மாயா கல்பிதம் என்று அறிந்து, எல்லாவற்றையும் தியாகம் செய்து திரிவேனாகுக. மனபிரம்மையினால் ஏற்படுகின்ற பேதங்களால், குணங்களையும் தோஷங்களை அறியும் ஞானம் இருக்கும்போது அல்லவா விதி அல்லது நிஷேதம் ஏற்படுகின்றது? அதனால் அத்தகைய வைஷம்ய புத்தி இல்லாத ஒருவனுக்கு அவ்வித நிஷேதங்கள் எப்படி உண்டாக முடியும்?
 
க்ஷுத்த்ருஷ்ண லோபமாத்ரே (2)

பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொள்வதில் மட்டும் எப்போதும் மனதைச் செலுத்தும் பிராணிகள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன. இந்த உலகில் பகுத்தறிவு படைத்த மனிதன் அவற்றை விடவும் மேலானவன். அந்த மனிதப் பிறவியும் கிடைப்பதற்கு அரியதே. அந்த அரிய மனிதப் பிறவியிலும் ஆத்மாவே (தானே) ஆத்மாவுக்கு ( தனக்கு) பந்துவாகவும் அல்லது சத்ருவாகவும் விளங்குவான். எந்த ஒரு ஆத்மா தங்களிடம் மனதைச் செலுத்தியவனாக, தன்னுடைய தாப நிவர்த்திக்காக முயற்சி செய்கின்றனோ, அவன் தான் ஆத்மாவின் பந்து. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆத்மாவுக்குச் சத்ருவே!
 
த்வத் காருண்யே (3)

ஹே பரமாத்மாவே! தங்கள் கருணைக்குப் பாத்திரம் ஆனால் உலக நடத்தையில் யார் தான் என்னுடைய குருவாக ஆக மாட்டார்கள்?

பூமியானது எல்லோராலும் எல்லாவற்றாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்றாலும் அது சலித்துக் கொள்வது இல்லையல்லவா? அந்த பூமியிடம் இருந்து நான் பொறுமையைக் கற்றுக் கொள்வேனாகுக.

ஹே ஈசா! எல்லா விஷயங்களுடனும் சம்பந்தம் ஏற்பட்ட போதிலும் அவற்றில் பற்றில்லாமல் இருக்கும் தன்மையை நான் வாயுவிடமிருந்து கிரஹித்துக் கொள்வேனகுக!

ஆத்மாவிடமிருந்து எங்கும் நிறைந்து இருக்கும் அதன் தன்மையையும்; ஆகாயத்திடமிருந்து ஒன்றிலும் பற்றிலாமல் இருப்பதையும் நான் கற்றுக் கொள்வேனாகுக.
 
ஸ்வச்ச்2: ஸ்யாம் பாவனோஹம் (4)

நான் ஜலம் போல தெளிந்த நிர்மலனாகவும், பாபங்களை அழிப்பவனாகவும், இனிப்பானவனாகவும் மாறுவேனாகுக!

நான் அக்னி போல எல்லாவற்றையும் பக்ஷிப்பவனாக இருந்தாலும், அவற்றின் தோஷத்தைக் கிரகிக்காது இருப்பேனாகுக!

மரக்கட்டைகளில் அக்னி மறைந்து இருப்பதைப் போலவே, ஆத்மாவாகிய நானும் எல்லா சரீரங்களிலும் மறைந்து இருப்பதை அறிவேனாகுக.

சந்திரனுடைய கலைகளுக்குத் தான் வளர்ச்சியும் தேய்வும் அன்றி சந்திரனுக்கு அல்ல. அதுபோலவே மனிதனுடைய வளர்ச்சியும் தளர்ச்சியும் அவன் சரீரத்துக்கே அன்றி அவன் ஆத்மாவுக்கு இல்லை என்று நான் அறிவேனாகுக!

ஒவ்வொரு நீர்ப் பரப்பிலும் வெவ்வேறாகத் தோன்றும் சூரியனைப் போலவே வெவ்வேறு சரீரங்களில் தோன்றும் ஆத்மா என்பது ஒன்றே என்று அறிவேனாகுக.
 
ஸ்நேஹாத் (5)

சினேஹம் காரணமாக வேடனால் கொல்லப்பட்டத் தன் புத்திரர்களை எண்ணி வருந்தி இறந்து போன மாடப்புறா போல ஆகாது இருப்பேனாகுக!

மலைப்பாம்பு போலத் தற்செயலாகக் கிடைத்ததை உண்டு பசியாறுவேனாகுக!

சமுத்திரம் போல கம்பீரமாக இருப்பேனாகுக!

தீயில் சென்று வெட்டுக்கிளி விழுவது போல, ஸ்த்ரீ முதலியவற்றில் விழாமல் இருப்பேனாகுக!

வண்டு போல சாரம்சத்தை மட்டும் கிரஹிப்பேனாகுக!

ஆனால் அந்த வண்டு போலப் பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டு நாசம் அடையாமல் இருப்பேனாகுக!
 
மாப3த்4யாஸம் (6)

பெண் யானையால் ஆண் யானை பந்தம் அடைவதைப் போல, ஸ்த்ரீ காரணமாக பந்தத்தை அடையாது இருப்பேனாகுக.

பணக் குவியலை சம்பாதிக்காமல் இருப்பேனாகுக. தேன் எடுப்பவன் தேனீக்கள் சேர்த்து வைத்த தேனை எடுத்துக் கொள்வது போல வேறொருவன் அதை அபகரிப்பான்.

மான் போல ஆபாசமான பாட்டுக்களுக்கு நான் மயங்காது இருப்பேனாகுக.

தூண்டிலில் மீன் போல ஆகாரத்தில் அதிகப் பற்றுக் கொள்ளாமல் இருப்பேனாகுக

பிங்களை என்ற வேசியைப் போல ஆசையற்றவனாகத் தூங்குவேனாகுக

மாமிசத்துடன் கூடிய குரரம் என்ற பறவையைப் போல, என்னால் காப்பாற்றப்படவேண்டிய பொருளின் சேர்க்கையால், நான் மற்றவர்களால் துன்புறுத்தப் படாமல் இருப்பேனாகுக
 
வர்தேய த்யக்தமான: (7)

சிறு குழந்தையைப் போல என் அபிமானத்தை விட்டு விட்டுச் சுகமாக இருப்பேனாகுக.

கன்னிகையின் ஒற்றை வளையல் போலச் சஹாயமற்றவனாகவும், வீண் விவாதங்களை விட்டவனாகவும் நான் சஞ்சரிப்பேன் ஆகுக.

பாணத்தை உண்டு பண்ணும் கருமான் அரசன் வரும்போது உண்டாகும் சத்தத்தை அறியாமல் இருப்பது போலத் தங்களிடம் மனத்தை செலுத்திய நான் வேறு ஒன்றும் அறியாமல் இருப்பேன் ஆகுக.

எலியின் வளையில் பாம்பு வசிப்பது போல, பிறரால் உண்டுபண்ணப்பட்ட வீட்டில் நான் வசிப்பேன் ஆகுக.
 
த்வய்யேவ த்வத்க்ருதம் (8)

தாங்கள், தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தைத் தங்களிடமே லயிக்கச் செய்கிறீர்கள் என்ற உண்மையை நான் சிலந்தியிடமிருந்து அறிவேனாகுக.

தங்கள் மீது செய்யும் தியானம் தங்கள் ஸ்வரூபத்தை உண்டு பண்ணுகிறது என்ற உண்மையை நான் குளவியிடம் இருந்து கற்றுக் கொள்வேனாகுக.

மலமாகவோ, சாம்பலாகவோ மாறும் தன்மை வாய்ந்த இந்தச் சரீரமும் சிறந்த குருவாக ஆகிவிடுகிறது. இந்தச் சரீரம் நன்கு ஆலோசித்து விவேகத்தையும் விரக்தியையும் உண்டு பண்ணுகிறது

என்னுடைய இந்த தேஹமோ பல வியாதிகளால் பீடிக்கப்பட்டு விசேஷமான விவேகத்தையும் வைராக்கியத்தையும் உண்டு பண்ணுகிறது.
 
ஹீ ஹீ மே தே3ஹமோஹம் (9)

ஹே குருவாயூரப்பா! ஆச்சரியம்! ஆச்சரியம்! என்னுடைய சரீரத்தில் இருக்கும் மோஹத்தைப் போக்கடிபீராகுக.

எந்த சரீரத்தின் மீது இருக்கும் பிரேமை காரணமாக வீட்டிலும், பணத்திலும், பத்தினி முதலியவரிடத்திலும் பரவசம் அடைந்து, தங்கள் திருவடிகளை மறக்கின்றார்களோ; அந்த சரீரமானது இவ்வுலகில் இறந்த பிறகு அக்கினிக்கு அல்லது நாய்களுக்கு உணவாகிறது.

உயிருடன் இருக்கும் பொழுது தன் வசம் அற்ற இந்த சரீரத்தைக் கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்பவை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கின்றன.

ஒன்றாவது தங்கள் பதாரவிந்தங்களுக்கு இழுப்பதில்லை
 
து3ர்வாரோ தே3ஹமோஹோ (10)

ஹே தாமைரைக் கண்ணனே! சரீரத்தில் இருக்கும் மோஹமானது தடுக்க முடியாததாக இருக்குமேயானால், இந்த ஜென்மத்திலேயே என்னுடைய சமஸ்த ரோகங்களையும் போக்கடித்துத் தங்கள் பாதாரவிந்தங்களில் திடமான பக்தியை உண்டு பண்ண வேண்டும்.

நிச்சயமாக அனேக ஜன்மங்களுக்குப் பின்னர் என்னால் அடையப்பட்ட, மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய இந்த பிராமண சரீரத்தைத் துச்சமான விஷய சுகங்களில் தள்ள வேண்டாம்! தள்ள வேண்டாம்! ஹே குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்றுவீராகுக
 
நாராயணீயம் தசகம் 96

பகவத் விபூதி வர்ணனம்

த்வம் ஹி ப்3ரஹ்மைவ (1)

அதிக மகிமை உடைய விஸ்வமூர்த்தியே! தாங்களே சாக்ஷாத் பரப்ரம்மம் ஆவீர்கள். அக்ஷரங்களுக்குள் அகாரமாகவும்; மந்திரங்களுக்குள் பிரணவமாகவும்; அரசர்களுக்குள் மனு மஹாராஜாவாகவும்; முனிவர்களுக்குள் ப்ருகு மற்றும் நாரதர் ஆகவும், அசுரர்களுக்குள் ப்ரஹ்லாதனாகவும்; பசுக்களில் காமதேனுவாகவும்; பட்சிகளில் கருடனகவும்; நாகங்களில் அனந்தனாகவும், நதிகளில் கங்கையாகவும் தாங்கள் இருகின்றீர்கள்.
 
ப்2ரஹ்மண்யானாம் (2)

தாங்கள் பிராமண பக்தர்களுக்குள் பலிச் சக்கரவர்த்தியாகவும்; யக்ஞங்களுக்குள் ஜப யக்ஞமாகவும்; வீரர்களுக்குள் அர்ஜுனனாகவும்; பக்தர்களுக்குள் உத்தவனாகவும், பலவான்களின் பலமாகவும்; தேஜஸ்விகளின் தேஜஸ் ஆகவும் இருக்கின்றீர்கள் தங்கள் விபூதிக்கு ஒரு எல்லையே இல்லை. விசேஷமாக பிரகாசிக்கின்ற மேன்மையுடைய எல்லாப் பொருட்களும் தாங்களே ஆவீர்கள்! ஜீவனும் தாங்களே ; பிரகிருதியும் தாங்களே, இந்த பிரபஞ்சத்தில் தாங்கள் இல்லாத பொருள் என்று ஒன்றுமே இல்லை அல்லவா?
 
த4ர்மம் வர்ணாச்'ரமானாம் (3)

நான்கு வர்ணங்களுக்கும், நான்கு ஆசிரமங்களுக்கும், வேதமார்கங்களில் விதிக்கப்பட்ட தர்மத்தை ஈஸ்வர அர்ப்பணமாக அனுஷ்டித்துக் கொண்டு;
அதனால் மனதில் வைராக்கியம் உதிக்கும்போது கிரமமாக அந்த தர்மங்களைத் தியாகம் பண்ணிக் கொண்டு இருப்பவர்கள்;
சச்சிதானந்த ரூபமானதும், வேறு வேறாகத் திகழும் எல்லாப் பொருட்களிலும் காரண ரூபமாக நிறைந்திருப்பதும், தனக்குக் காரணம் இல்லாததும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் பரமாத்மாவாகிய தங்களின் சுத்த ஸ்வரூப ஞானத்தை அடைகின்றார்கள்.
 
நாராயணீயம் தசகம் 96

பகவத் விபூதி வர்ணனம்


ஞானம் கர்மாபி (4)

இவ்வுலகில் ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் மூன்றும் தங்களை அடைவிக்கும் சாதனங்கள் ஆகும்.

இவைகளில், இவ்வுலகில் இருக்கும் விஷயசுகம் அனைத்தின் மீதும் வெறுப்பு அடைந்தவர்களுக்கே ஞான யோகத்தில் அதிகாரம் சித்திக்கும்.

விஷய சுகங்களில் பற்று உடையவர்களுக்குத் தங்களிடம் அர்ப்பணம் செய்யப்பட் ட கர்ம யோகம் விதிக்கப்பட்டுள்ளது.

எவர்களுக்கு விஷய சுகங்களில் மிகுந்த பற்று இல்லையோ, மிகுந்த வைராக்கியமும் இல்லையோ , தங்களிடம் பிரேமையும் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு பக்தி யோகம் விதிக்கப்பட்டுள்ளது
 
Last edited:
நாராயணீயம் தசகம் 96

பகவத் விபூதி வர்ணனம்

ஞானம் த்வத்3 ப4க்ததாம் (5)

ஞானத்தையாவது, தங்களிடம் பக்தியையாவது மனிதர்கள் தம்முடைய பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால் பிரயாசை இன்றி அடைகின்றார்கள்.

ஆகையால் பகவன்! சுவர்க்கத்தை அடைந்தவனும், நரகத்தை அடைந்தவனும், மனித உலகத்தில் வந்து பிறப்பதையே விரும்புகின்றான்.

சம்சாரம் ஆகிய சாகரத்தைத் தாண்ட ஒரு மரக்கலம் போல இருக்கும் இந்த மானிட சரீரத்தில் புகுந்துள்ள என்னையும், ஆச்சாரியானைப் படகோட்டியாகச் செய்து, தாங்களே அதற்கு அனுகூலமான காற்றாக இருந்து, என்னைக் கரை சேர்ப்பீர் ஆகுக.
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top