• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
ஊரூ சாரூ தவோரூ (8)

மனோஹரமான, பெருத்த, அடர்ந்த, மினுப்பான, காந்தியை உடைய, லக்ஷ்மி தேவியின் மனத்தைக் கவர்ந்த, (அவைகளைக் காணும்) ஜனங்களுக்குக் கலக்கம் உண்டாகுமோ என்று அஞ்சி எப்போதும் மஞ்சள் பட்டாடையால் மறைக்கப்பட்ட தங்கள் இரு தொடைகளையும்; தன்னை வணங்குபவர்களுக்கு எதிரில் வைப்பதற்காகவே தரிக்கப்பட்ட,
புருஷார்த்தங்களோடு கூடின சம்புடத்துக்கு நிகரான இரு முழங்கால்களையும்; கிரமாகப் பெருத்தவைகளும் அழகானவைகளும் ஆகிய கணுக்கால்களையும் சேவிகின்றேன்.
 
மன்ஜீரம் மஞ்சுநாதை3ரிவ (9)
திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால் உபதேசிக்கும் பாதசரத்தையும்;
அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்; உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை ஆசிரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்; மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன்.
 
யோகீந்த்3ராணாம் (10)

ஹே! நாதா! ஹே குருவாயூரப்பா! ஹே கருணைக் கடலே! ஹே கிருஷ்ணா! யோகீஸ்வரர்களுக்கு உங்கள் அவயவங்களுக்குள் மிக மிக மதுரமானதும்,
மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு வாசஸ்தலம் ஆனதும்;
பக்தர்களுக்கு அபீஷ்டத்தை வர்ஷிப்பதில் கற்பக விருக்ஷத்தின் தளிரைப் போன்றதும்;
ஆகிய தங்கள் பாத மூலம் எப்போதும் என் சித்தத்தில் இருந்து கொண்டு
சமஸ்த தாபங்களையும் போக்கடித்து மோக்ஷலக்ஷ்மியை கொடுக்க வேண்டும்.
 
அஞ்ஞாத்வா தி மஹத்வம் (11)

ஹே ஜகன்நாதா! தங்களுடைய மகிமையை அறியாமல் இப்போது என்னால் எது சொல்லப்பட்டதோ அதைத தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரத் துக்கும் அதிகமான ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம் தங்கள் பிரசாதத்தை அ டைவதற்கு ஒரு ஹேதுவாக ஆகவேண்டும். வேதங்களில் ஜனித்ததாலும், லீலாவதாரங்கள் மூலமாக ஸ்துதிக்கத் தக்க தன்மையை வர்ணிப்பதாலும், ஸ்ரீமன் நாராயணனை உத்தேசித்து ஸ்ரீ நாராயண கவியால் எழுதப்பட்ட "நாராயணீயம் " என்னும் இந்த ஸ்தோத்திரம், இவ்வுலகில் உள்ளவர்களுக்கு பூரண ஆயுள், நல்ல தேக ஆரோக்கியம், சௌக்கியம் என்னும் அனைத்தையும் அளிக்கட்டும்.

நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|

நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||

ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
 
Thank you dear friends for walking with me in this long journey extending over a year! :pray2:

Who knows of Krishna ordains me to do so I may still launch the translation of :decision:

Krishna Karnaamrutham followed by Krishna Leela Taranagini and Ashtapathi. :bump2:
 
Last edited:
Thank you dear friends for walking with me in this long journey extending over a year! :pray2:

Who knows of Krishna ordains me to do so I may still launch the translation of :decision:

Krishna Karnaamrutham followed by Krishna Leela Taranagini and Ashtapathi. :bump2:

Traffic continues after more than six weeks now.
Who knows but Lord Krishna,
I may really take translation of these works after all!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top