கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
அவ்யக்தம் மார்க்கயந்த: (6)

வெறும் ஞானத்தை மட்டும் விரும்புபவர்கள் உபநிஷத்துகளைக் கொண்டும், மீமாம்ச நியாயங்களைக் கொண்டும், அவ்யக்தமான பிரம்மத்தை விசாரம் செய்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். பல ஜன்மங்களின் முடிவிலே அவர்கள் மோக்ஷத்தைப் பெறுகிறார்கள்.

கர்ம யோகமும் சுவர்க்க லோகம் போன்ற பலன்களைத் தருவதால், பரம புருஷார்த்தமான மோக்ஷத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது.

ஹே பகவன்! ஆதிமுதலே மனதைக் கவருவதும், விரைந்து தங்களிடம் அடைவிப்பதுவும் ஆகிய இந்த பக்தி யோகமே எனக்கு விருத்தி அடையக் கடவது.
 
ஞானாயைவாதியத்னம் (7)

வியாச முனிவர் கேவல ஞானத்தை மட்டும் அடையப் பல கிரந்தங்களைப் படித்துச் செய்யப்படும் அதிகமான பிரயத்தனத்தை நிஷேதிக்கின்றார்.

ஆனால் எவன் ஒருவன் பிரம்மதத்துவத்தைக் கேட்டு, அறிந்து, தங்கள் திருவடிகளில் பக்தியுடன் உறுதியாகச் சரணம் அடைகின்றானோ அவனுக்கு மோக்ஷமானது அவன் கைக்கு வெகு அருகிலேயே இருக்கிறது

ஆனால் இந்த பக்தி யோகத்தையும் மனதின் சஞ்சலம் காராணமாக எளிதில் செய்யமுடியாது என்பது துல்லியமே. ஆயினும் அந்த தியானத்தை அப்யாசத்தாலும், தங்கள் கிருபையாலும் தங்கள் திருமேனி எழிலாலும் விரைவாக சம்பாதிக்க முடியும்.
 
நிர்விண்ண: கர்மமார்கே3 (8)

ஹே லோகநாதா! கர்ம மார்க்கத்தில் வெறுப்பு அடைந்தவனாக இருந்தாலும்;
தங்கள் சரித்திரம் முதலியவற்றில் திடமான சிரத்தை உடையவனாக இருந்தாலும்;
கர்மங்களை முழுவதுமாக விட்டு விடும் சக்தியற்றவன் ஆகின்றேன்.
ஆகையால் தங்களிடத்தில் உறுதியுடன் மனத்தைச் செலுத்திக்கொண்டும்,
தோஷ புத்தியுடன் அந்தக் கர்மங்களையும் அனுபவித்துக் கொண்டும்,
பக்தியை வளர்ப்பேன் ஆகுக
தாங்கள் இதயத்தை வந்து அடைந்தால் விஷயங்களில் உள்ள பற்றுதல் விரைவில் நாசம் அடையும் அல்லவா?
 
கச்'சித் க்லேஷார்ஜித (9)

முன்னொரு காலத்தில் ஒரு பிராமணன், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள் நாசம் அடைந்ததால் வெறுப்படைந்து, அதனால் மாசற்ற மனம் உடையவனாகி, ஜனங்களால் துன்புறுத்தப்பட்டு இவ்வாறு கூறினான்,
"என்னுடைய துக்கத்துக்கு காரணம் ஜனங்களோ , காலமோ, கர்மமோ, கிரஹங்களோ அல்ல. . மனது தான் எனது வருத்தத்துக்குக் காரணம். அந்த மனதானது ஆத்மாவிடத்தில் கர்த்ருத்வம் முதலியவற்றை ஆரோபணம் செய்து எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது" என்று சொல்லி மனச் சாந்தி அடைந்தவனாகத் தங்களை வந்து அடைந்தான்
ஹே பிரபு! அந்த மனச்சாந்தியை எனக்கும் தந்தருள்வீர்
 
ஐல: ப்ராகுர்வசீ'ம் (10)

முன்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற ஓர் அரசன் ஊர்வசியிடம் மிகவும் பரவசம் அடைந்து, வெகு நாள் அவளை அனுபவித்த பிறகு, திடமான வைராக்கியத்தை அடைந்து, "இந்த ஸ்திரீ சுகம் மிகவும் துச்சமானதே!" என்று சொல்லித் தங்களிடம் பக்தியை அடைந்து, பூர்ண மனோரதனாக பவித்து, வெகு சுகமாக சஞ்சரித்தான்.

ஹே குருவாயூரப்பா! அது போலவே பற்றுதலை வெகு தொலைவில் விலக்கி வைத்து, என்னையும் பக்தர்களில் சிறந்தவனாகச் செய்வீராகுக! முதலில் என் வியாதிகளை அகற்ற வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 99

பகவன்மஹிமானு வர்ணனம்

விஷ்ணோர்வீர்யாணி கோ வா (1)

எவருடைய மூன்றடிகளால் மூவுலகங்களும் அளக்கப்பட்டு,
அதனால் ஐஸ்வர்யம் நிறைந்ததாகச் சந்தோஷப்படுகின்றதோ;
எந்த பகவான் உலகங்கள் அனைத்தையும் தாங்குகின்றாரோ,
எங்கும் நிறைந்திருக்கும் அந்த விஷ்ணுவின் வீரியங்களை
யாரால் எடுத்து உரைக்க முடியும் ?
பூமியின் துகள்களை யாரால் எண்ண முடியும்?
எந்த உலகத்தில் விஷ்ணு பக்தர்கள் சந்தோஷப்படுகின்றார்களோ,
எந்த உலகத்தில் மோக்ஷம் என்னும் பூந்தேன் பெருக்கெடுக்கின்றதோ,
அந்த விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிரியமானதும் மேலானதும் ஆகிய
வைகுண்டத்தை நான் இந்த உலகிலேயே அடைவேன் ஆகுக!
 
ஆத்யாயாசேஷகர்த்தே (2)

பக்தி நிறைந்த மனதை உடைய எவன் ஒருவன்
( எல்லாவற்றுக்கும் முதலில் இருப்பவரும்;
எல்லாவற்றையும் படைத்தவரும்;
ஒவ்வொரு கணத்திலும் புதிதாகத் தோன்றுகின்றவரும்,
அணிமாதி ஐஸ்வரியங்களைத் தரிக்கின்றவரும் ஆகிய )
ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு; யாகம், பூஜை முதலியவற்றில் ஹவிஸ், புஷ்பம், பழம் முதலியவற்றை சமர்ப்பணம் செய்கின்றானோ அல்லது
எவன் ஒருவன் மஹானான விஷ்ணுவின் மிகவும் பூஜ்யகரமான கிருஷ்ண அவதாரத்தை வர்ணிக்கின்றானோ;
அவனே இந்த உலகில் சந்தோஷமாகக் கீர்த்திகள் நிறைந்தவனாக வாழ்ந்திருந்துவிட்டு கடைசியில் தங்கள் வைகுண்ட லோகத்தைத் தாமதம் இன்றி அடைவான்.
 
ஹேஸ்தோதார: (3)

துதிக்கின்ற கவி ஸ்ரேஷ்டர்களே! பிரமாணச் சித்தரும், வேதத்தின் சார பூதருமான அந்த மஹாவிஷ்ணுவை எவ்விதம் நீங்கள் அறிகின்றீர்களோ, அவ்விதமாகவே இவ்வுலகில் அங்கீகரிக்கப்பட்ட லீலா விசேஷங்களின் கதைகளால் நன்கு துதியுங்கள்!

ஹே அறிஞர்களே! எல்லோருக்கும் எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கின்ற அந்த விஷ்ணுவின் திருநாமங்களை நன்கு கீர்த்தனம் செய்யுங்கள்!

ஹே விஷ்ணுவே! நாம சங்கீர்த்தனம் முதலியவற்றாலேயே நான் மஹானாகிய தங்களுடைய தத்துவ ஞானத்தை அடைவேன் ஆகுக!
 
விஷணோ: கர்மாணி (4)


எந்த எந்தப் பிரவிருத்திகளைக் கொண்டு தர்மங்களை அந்த அந்த அதிகாரிகளுடன் சேர்த்து வைத்தாரோ அந்த விஷ்ணு பகவான் -

தேவேந்திரக்கு ஒரு வேலைக்காரனைப் போலவும், பிரியமுள்ள தோழனைப் போலவும், க்ஷேமத்தை செய்வதற்கு எந்த எந்த பிரவிருத்திகளைச் செய்தாரோஅந்த விஷ்ணு பகவான் ;

யோகசித்தி பெற்றவர்கள் எந்த விஷ்ணு பகவானுடைய நன்கு பிரகாசிக்கின்ற சிறந்த ஸ்தானத்தை எப்போதும் பார்கின்றர்களோ அந்த விஷ்ணு பகவான்;

எந்த ஸ்தானத்தை பிராமணோத்தமர்கள் பலதரப்பட்ட ஸ்துதிகளால் பிரகாசப் படுதுகின்றார்களோ அந்த விஷ்ணு பகவான்;

அப்படிப்பட்ட அந்த விஷ்ணு பகவானின் பிரவிருத்திகளை எப்போதும் மனதில் தியானம் செய்யக் கடவீர்
 
நோ ஜாதோ ஜாயமானோsபி (5)

ஹே தேவா! தங்கள் மகிமையின் முடிவைக் கண்டவன் பிறந்ததும் இல்லை, பிறக்கப் போவதும் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் ஈசா! சிரேய சாதனங்களை அறிந்த நான் தங்கள் திருநாமத்தை ஒவ்வொரு கணமும் கீர்த்தனம் செய்கின்றேன். இந்த மூவுலகங்களுக்கும் மேலே வைகுண்டத்தில் வாசம் பண்ணிக் கொண்டிருக்கும் அப்படிப் பட்ட தங்களை பலவிதமாக நன்கு துதிக்கின்றேன்.
 
ஆப: ஸ்ருஷ்ட்யாதி3ஜன்ய: (6)

ஹே பிரபு! சிருஷ்டியின் துவக்கத்தில் உண்டான ஜலம், முதலில் தங்களைக் கர்ப்பத்தில் தரித்தது.
ஜலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரியே! அந்த ஜலத்தின் நடுவில் இருக்கும் தங்களிடத்திலேயே சகல ஜீவர்களும் ஒன்று சேர்த்து ஐக்கியம் அடைந்தனர்.
அந்த ஜலத்தில் படுத்திருப்பவரும், பிறப்பற்றவரும் ஆகிய தங்களுடைய நாபியில் ஒரு தாமரைப் பூ உண்டானது அல்லவா?
அந்த தாமரைப் பூ திக்குகளாகிய இதழ்களை உடையதாகவும் மஹா மேருவாகிய தாமரைக் கொட்டையை உடையதாகவும் லோக ரூபமாகவும் கூறுகின்றனர்
 
ஹே லோகா விஷ்ணுரேதத்3 (7)

ஹே ஜனங்களே! விஷ்ணு பகவான் இந்த உலகத்தை சிருஷ்டித்தார்.

இவ்விதம் என்று சொல்ல முடியாததும், ஜீவனைக் காட்டிலும் வேறானதுமான விஷ்ணு ரூபம்

உங்கள் ஹிருதயத் தாமரையில் இருக்கிறது. அதையும் நீங்கள் அறிவதில்லை.

பனிக்கு ஒப்பான மாயையால் மறைக்கப்பட்ட மனதை உடையவர்களாகவும்;

நாம ரூபங்களால் மோஹம் அடைந்தவர்களாகவும்;

பிராணனைத் திருப்தி செய்வதிலேயே திருப்தி அடைந்தவர்களாகவும்;

யாகத்தை அனுஷ்டிப்பவர்களாகவும் நீங்கள் சுற்றித் திரிகின்றீர்கள்.

மோக்ஷத்தை அளிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடத்தில் உங்களுக்கு பிரேமை உண்டாவதில்லையே! கஷ்டம்!
 
மூர்த்4னாமக்ஷ்ணாம் (8)

தலைகள் உடைய, கண்கள் உடைய, கால்கள் உடைய அனேக ஆயிரம் ஜீவன்களைத் தரிக்கின்றீர்கள்.
இந்த பிராமாண்டம் முழுவதும் வியாபித்து, அதையும் கடந்து வியாபித்து இருக்கின்றீர்கள். ஆனாலும் குறுகிய துவாரத்தை உடைய மனதிலும் பிரகாசிக்கின்றீர்கள்.
ஹே புருஷோத்தமா! கடந்து சென்றதும், இனிவரப்போவதும் எல்லாம் தாங்களே!
தேஹம், இந்திரியங்கள் முதலியவற்றில் தாங்கள் பிரவேசித்தவராக இருந்த போதிலும் அவைகளில் இருந்து வெளியேறியவராகவும் இருப்பதால் தான்
மோக்ஷ சுகத்தின் ரசத்தையும் தாங்கள் அனுபவிக்கிறீர்கள்.
 
யஸ்து த்ரைலோக்ய ரூபம் (9)

ஹே அனந்த! தாங்கள் மூவுலகமாகிய உருவத்தைத் தரித்தபோதிலும், அம் மூவுலகங்களில் இருந்து வெளிபட்ட சுத்த ஞான ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள்.
எது எல்லாம் இங்கு இருக்கின்றதோ அது எல்லாம் தங்களுடைய மகிமை தான். தங்களுடைய நான்கில் ஒரு பாகமே இந்தப் பிரபஞ்சமாகக் காணப்படுகிறது.
முக்கால் பாகம் பிரம்மாண்டத்துக்கும் மேலே பரமானந்த ரூபமாக விளங்குகிறது.
அத்தகைய அனந்த ரூபியான உமக்கு என் நமஸ்காரம்.
 
அவ்யக்தம் தேஸ்வரூபம் (10)

எந்த ஒரு இந்திரியத்திற்கும் புலப்படாத தங்களின் நிர்குண ஸ்வரூபமானது பிரயத்தனப்பட்டும் அறிய முடியாததாகவே இருக்கிறது.
சுத்த சத்துவ ரூபமான சகுண ஸ்வரூபமோ எனில் எளிதில் அறியக் கூடியதாக இருக்கிறது. மேலும், பிரகாசிக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய சகுண ஸ்வரூபமே பிரம்மானந்தம் ஆகிய சமுத்திரத்தின் அலைகளுக்கு ஒப்பனதாக இருக்கிறது.
ஆகையால் இவ்வுலகில் , எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் மேன்மையானதும், பிரியமானதும், பக்த வாத்சல்யம் போன்ற குணங்களின் இனிமையால் மனத்தைக் கவருவதும் ஆகிய தங்கள் மூர்த்தியை நான் ஆசிரயிக்கிறேன்.
ஹே கிருஷ்ணா! குருவாயூரப்பா! என்னை சமஸ்த ரோகங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
 
இந்தத் தொடரின் பின்புலக் கதை இது !


யோகதர்ஷன் மாஸ்டர் ஸ்ரீமன் நாராயணீயத்தை விளக்கினார்.
ஒவ்வொரு வரியும் ஒரு மினி ரயில் வண்டி போல இருக்கும். :bump2:

எங்கே நிறுத்த வேண்டும்? எப்படிப் பிரிக்க வேண்டும்? தெரியாது.

படிப்பதை விடப் பாடுவது எளிதாக இருக்கும் போலத் தோன்றியது. :sing:

திருச்சூர் ராமச்சந்திரன் அவர்களின் ஒலிநாடாவை வைத்துக் கொண்டு

மிகவும் சிரமப்பட்டு 100 வேறு ராகங்களில் பாடக் கற்றுக் கொண்டேன்.

ஒவ்வொரு தசகமும் வெவ்வேறு ராகம். இது ஒரு 100 ராக மாலிகை.

அப்போதும் முழு மனத் திருப்தி ஏற்படவில்லை எனக்கு. :pout:

வார்த்தைகளின் பொருள் தெரிந்தால் நன்றாக இருக்கும்

என்று முனைப்பாகப் புத்தகத்தைத் தேடத் தொடங்கினேன்.

ஏறக் குறைய நான் பிறந்த போது வெளிவந்த ஒரு புத்தகத்தில்

பதம் பிரித்துச் சொற்களின் பொருளும் அழகாகத் தரப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த புத்தகத்தைக் கடனாகக் கொடுப்பதற்குக் கூட

அதை வைத்திருந்த அவர்கள் சம்மதிக்க வில்லை.

ஏறக் குறைய நம்பிக்கையை இழந்து விட்டேன் அது கிடைக்கும் என்று.

இவருடைய அத்திம்பேரின் தம்பியிடம் அது பற்றி பேசியபோது

அவர் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்,

"உனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியுமா?"

"தெரியும்" என்றேன். அவர் முகம் மலர்ந்து விட்டது.

"நீ தேடும் புத்தகம் என்னிடம் ஒரு காபி உள்ளது.

எத்தனையோ பேர்கள் தரச் சொல்லிக் கேட்டார்கள்.

ஆனால் சம்ஸ்க்ருதம் படிக்கத் தெரிந்தவருக்குத் தான் கொடுப்பது

என்று தீர்மானமாகக் கொடுக்க மறுத்து விட்டேன்.

இனி அந்தப் புத்தகம் உன்னுடையது" என்றார்.

எனக்கு மகிழ்ச்சியில் பேசக் கூட முடியவில்லை.

அவர் புத்தகத்தில் என் பெயர் எழுதியிருந்தது போலும்!

புத்தகத்தை அனுப்பி வைத்தார் சென்னை சென்ற உடனேயே.

இப்போது அது என் இணை பிரியாத் துணை ஆகிவிட்டது!

அந்தப் புத்தகம் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால்

இந்தத் தொடர் பிறந்து இருக்கவே முடியாது நிச்சயமாக!

அந்தத் தாத்தாவுக்கு நன்றி நம் எல்லோர் சார்பிலும்!

ஏறக் குறைய ஓராண்டு இந்தத் தொடர் தொடர்ந்து இருக்கிறது!

ஏதோ பெரிதாக சாதித்தது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது.

"கண்ணன் அருள் எல்லோருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்"

என்று வேண்டிக் கொண்டு இந்தத் தொடரை முடிக்கின்றேன்.

இதை யாரோ 4 பேர்கள் like பண்ணி இருக்கிறார்கள்.

அந்த நாலு பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஒருவருக்கு உபயோகப்பட்டாலே அதை செய்யத் தயாராக இருப்பவள் நான்.

வேறு எந்தத் தொடருக்கும் கிடைக்காத LIKE இதற்குக் கிடைத்ததற்கும்

கண்ணன் அருள் தான் காரணமாக இருக்க முடியும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை வசிக்கலாம்.

தினப்படியும் வாசிக்கலாம்! கோகுலாஷ்டமிக்கும் வாசிக்கலாம்!

நாரயணீயம் புத்தகத்தையும் வைத்துக் கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள

மூல ஸ்லோகத்தைப் படித்துவிட்டு பொருளைப் படிப்பது மிகவும் நல்லது. :pray2:
 
நாராயணீயம் தசகம் 100

கேசா'தி3 பாதா3ந்த வர்ணனம்

நாளை முதல் தொடரும்.
 
நாராயணீயம் தசகம் 100

கேசா'தி3 பாதா3ந்த வர்ணனம்

அக்3ரே பச்'யாமி (1)

நான் மிகவும் நெருக்கமான காசாம்பூக் கூட்டம் போன்ற அழகான ஒரு தேஜசை என் எதிரில் பார்க்கிறேன். அதனால் நான் அமிர்தத்தில் மூழ்கடிக்கப் பட்டவன் போல ஆகிறேன். அதன் பின் அதன் நடுவில் தெய்வத் தன்மையோடு கூடினதாகவும், யௌவன வயதின் ஆரம்பத்தில் இருப்பதால் மிக அழகானதாகவும் உள்ள, ஒரு குழந்தையின் வடிவைக் காண்கிறேன்.
பரமானந்த ரசத்தை அனுபவித்து, மயிர்க் கூச்சடைந்த அவயவங்களை உடைய, நாரதர் முதலானவர்களும், சோபிக்கின்ற உபநிஷத்துகள் ஆகிய சுந்தரிகளின் சமூஹங்களும் அதனைச் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறேன்.
 
நீலாப4ம் குஞ்சிதாக்3ரம் (2)

நீலநிறம் உடையதும், நுனியில் வளைந்ததும், அடர்ந்ததும், சுத்தமானதும், அழகான மடிப்புடன் கட்டப்பட்டதும், ரத்தின மயமான நகைகளால் அழகடைந்ததும், விளங்கும் மயில் கண்களால் அழகு பெற்ற மயில் தோகைகளின் வரிசைகளால் சுற்றப்பட்டதும், மந்தார மாலையால் சுற்றப் பட்டதும் ஆகிய தங்களுடைய தலை ரோம பாரத்தையும்; பளபளப்புள்ள, வெண்மையான, ஊர்த்துவ புண்ட்ரத்தையும்; அழகான இளஞ் சந்திரனைப் போன்ற நெற்றித் தடத்தையும்; நான் பார்க்கிறேன்.
 
ஹ்ருத்3யம் பூர்ணானுகம்ப (3)

ஹே பிரபுவே! நிறைந்த கருணைக் கடலின் மெதுவான பிரவாஹத்தாலும், சலிக்கின்ற புருவங்களின் லீலைகளாலும், மனோஹரமனதும்; மிகவும் கருத்த, பளபளப்பான, இமைமயிர்க் கூட்டத்துடன் விளங்குவதும்; அடர்ந்த, காந்தியையுடைய, அகன்று, சிவந்து, தாமரை இதழ் போன்ற வடிவம் உடையதும்; மிகவும் மனோஹரமான கருவிழிகளை உடையதும்; கருணை கூர்ந்த பார்வையின் லீலையால் உலகங்களைக் குளிர்விப்பதும்; ஆகிய தங்களுடைய இரண்டு கண்களும் அனாதை போன்ற என் மேல் செலுத்தப்படவேண்டும்
 
உத்துங்கோ3ல்லாஸி நாஸம் (4)

உயர்ந்து பிரகாசிக்கின்ற மூக்கை உடையதும்; இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடிபோல விளங்குகின்ற கன்னப் பிரதேசங்களில், அசைகின்ற காதுகளில் தரிக்கப்பட்ட ரத்ன மயமான மகர குண்டலங்களால் பிரகாசிக்கின்றதும்; அழகிய பல் வரிசைகளை உடையதும்; மிகச் சிவந்த நிறமுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளின் மத்தியில் பிரீதியைப் பெருக்குகின்ற புன்னகையால் மிகவும் மதுரமானதும்; ஆகிய தங்கள் திருமுகம் எனக்கு நன்கு பிரகாசிக்க வேண்டும்.
 
பா3ஹுத்3வந்த்3வேன (5)

ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற வளையல்களை தரித்த; சிவந்த தளிர் போன்ற உள்ளங்கைகளை உடைய; இரண்டு கைகளால் எடுக்கப்பட்டு ; எங்கும் பரவிடும் நகங்களின் காந்தியை உடைய விரல்களின் சேர்க்கையால் சித்திர வர்ணம் உடைய புல்லாங்குழலைத் தாமரை போன்ற திருமுகத்தில் வைத்துக் கொண்டு; இனிமையான ராகங்களால் உலகங்களைக் குளிர்விக்கின்ற நாத பிரம்மம் ஆகிய அமிர்தத்தால் என் காதுகள் ஆகிய வீதிகளைத் தாங்கள் நனைக்க வேண்டும்.
 
உத்ஸர்ப்ப கௌஸ்துப4 (6)

உயரக் கிளம்புகின்ற கௌஸ்துப மணியின் காந்தி சமூஹங்களால் சிவந்த, மிக அழகான கழுத்தையும்; ஸ்ரீ வத்ஸம் என்ற மருவால் மனோஹரம் ஆன, சலிக்கின்ற பிரகாசிக்கின்ற முத்து மாலைகளை உடைய மார்பையும்; பல நிறங்களையுடைய புஷ்ப சமூஹங்களையும், தளிர்களையும் உடையதும், அங்கும் இங்கும் சுற்றித் திரியும் வண்டுகளை உடையதும் ஆகிய வனமாலையையும், அவ்விதமே தங்கள் மார்பில் தொங்குகின்ற ரத்தின மாலையையும் நான் தியானிக்கிறேன்.
 
அங்கே பஞ்சாங்க3ராகை (7)

சரீரத்தில் உள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்கள் அதிசயமாக எங்கும் பரப்புகின்ற வாசனையால் ஜனங்களைத் தன்னிடத்தில் ஆகர்ஷிப்பவரும்; அனேக பிரம்மாண்ட சமூகங்கள் தன்னிடத்தில் லயித்திருந்த போதிலும் மிகவும் மெல்லிய இடையை உடையவரும்; இந்திர நீல கல்லில் வைக்கப்பட்ட, உருக்கப் பட்ட, ஜொலிக்கிற தங்கத்தைப் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவரும்; பிரகாசிக்கின்ற கிரணங்களால் தெளிவாகத் தெரியும் ரத்தினங்களை உடைய அரைநாணின் கிண்கிணிகளால் அலங்கரிக்கப் பட்டவரும் ஆகிய தங்களைத் தியானிக்கிறேன்.
 
Status
Not open for further replies.
Back
Top