• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
கண்ணனின் கதை இது.

நாரயணீயத்தை, குறிப்பாக கிருஷ்ண ஜனனம் முதல் அளிக்கவேண்டும் என்று நெடுநாள் அவா.

நாளை முதல் கண்ணன் அருளுடன் அதைத் தொடங்க எண்ணியுள்ளேன்.

நூல் மூலத்தை உச்சரிப்புடன் வழங்குவது என் வழக்கம் எனினும்
நேரத் தட்டுப்பாட்டினால் உரையை மட்டும் அளிக்க நிச்சயித்துள்ளேன்.

தசகம் எண்ணையும், ஸ்லோகம் எண்ணையும், பாடலின் முதல் வார்த்தையையும் அளிப்பதால் மூல நூலையும் உடன் வைத்துக் கொண்டு வாசிக்க இயலும்.

தியான சுலோகங்களுடன் தொடரைத் தொடங்குவோம் :pray2:
 
Guruvayoorappan+Picture+Guruvayur+Temple+Kerala.jpg
 
நாராயணீயம் (உரை)

சூர்யஸ்பர்தி4 கிரீட (2:1 )

சூரியனுக்கு நிகராகப் பிரகாசிக்கும் கிரீடத்தையும்; திலகத்தால் அழகூட்டபட்ட

நெற்றியையும்; கருணை வழியும் கண்களையும்; கனிந்த புன்னகையையும்;

அழகிய நாசியையும்; கன்னங்களில் பிரகாசிக்கும் இரு மகர

குண்டலங்களையும்; வனமாலை, முத்து மலை, ஸ்ரீ வத்சம் இவைகள் விளங்கும்

தங்கள் தோற்றத்தையும் நான் சேவிக்கின்றேன்.
 
நாராயணீயம் (உரை)

கேயூராங்க3த3 ( 2:2)

தோள்வளைகள், கைக்கட்டு வளையல்கள், மணிக்கட்டு வளையல்கள், சிறந்த

ரத்தினங்கள் பதித்த மோதிரங்கள், இவைகளால் அலங்கரிக்கப் பட்ட காந்தி

பொருந்திய நான்கு கைகளில் இருக்கின்ற கதை, சங்கு, சக்கரம் , தாமரைப் பூ

இவைகளையும்; தங்க அரை நாணால் அலங்கரிக்கப் பட்ட பிரகாசிக்கும்

பட்டுப் பீதாம்பரத்தையும்; நிர்மலமான தாமரைப்பூ போன்ற காந்தியுடைய

திருப்பாதங்களையும்; துக்கங்களைப் போக்கடிக்கும் திருமேனியையும் நான்

ஆச்ரயிக்கின்றேன்.
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

ஸாந்த்3ரானந்த3தனோ (37:1)

பூர்ண ஆனந்த ஸ்வரூபியாகிய ஸ்ரீ கிருஷ்ணா! முன்னொரு

காலத்தில், தேவ அசுர யுத்தத்தில், தங்களால் கொல்லப்பட்ட

அசுரர்கள் புண்ணிய பாப கர்மங்களுக்கு வசப்பட்டு

இருந்ததால் முக்தி அடையவில்லை. பூலோகத்தில் ஜனித்த

அந்த கொடியவர்களின் பாரத்தல் பூமிதேவி மிகவும்

துன்புற்று, சத்தியலோகத்தில் இருக்கும் பிரமதேவனிடம்

சென்றாள்
 
[h=2]கண்ணனின் கதை இது.[/h]dear VR !
nice you are starting kannan stories on Krishnastami day.
let us the blessings of SRI KRISHNA &GURUVAYURAPPAN
 
Thank you very much Guruji and Ms. Uma!

I LOVE Naaraayaneeyam. :love:

I wish I had enough free time to give the story with the Moolam

with correct pronunciation the way I used too!
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

ஹா ஹா து3ர்ஜன (37:2)

"கஷ்டம்! கஷ்டம்! துஷ்டர்களின் பாரத்தால் வருந்துகின்ற,

சமுத்திரத்தில் விழப்போகும் என்னை காப்பாற்றுங்கள்!

என்னுடைய இந்த நிலையை நீர் தான் போக்க வேண்டும்!"

என்று புலம்பிய பூமிதேவியைக் கண்ட பிரமதேவன்;

சுற்றிலும் உள்ள தேவர்களின் முகங்களைப் பார்த்துவிட்டு

தங்களைக் குறித்து தியானித்தார் அல்லவா?
 
Last edited:
Orutthi maganai pirandhu orutthi maganai valarndhavan kannan. Kannanin perumayai engu kettalum, engu paditthalum suvaiye. Suki sivam sollakkettalum, Madam VR avargal ezhudhuvadai padittalum inimaye. Vazgha ungal thondu. Kannan pirandh idatthai parka bakkiayam petren but valarndha idatthirku sellum bakkiam eppo varumo?
 
Orutthi maganai pirandhu orutthi maganai valarndhavan kannan. Kannanin perumayai engu kettalum, engu paditthalum suvaiye. Suki sivam sollakkettalum, Madam VR avargal ezhudhuvadai padittalum inimaye. Vazgha ungal thondu. Kannan pirandh idatthai parka bakkiayam petren but valarndha idatthirku sellum bakkiam eppo varumo?

dear Mr. Ramanathan,
I have seen neither the birth place of Krishna nor where he grew up but I have learned to see Krishna in every child I come across . So I do not feel that I have missed something in my life.
After all our mind only makes or mars things in our lives.
Here are three simple but lovely poems on Krishna written by me
for the lovers of Krishna like myself. :)
Thank you for the feedback! :pray2:
 
அகர வரிசைப் பாட்டு.


அன்பர் உள்ளம் உறைபவனே வா வா கண்ணா;
ஆலிலை மேல் பாலகனே வா வா கண்ணா.

இடையர் குலத்திலகமே நீ வா வா வா கண்ணா;
ஈரேழ் உலகும் காப்பவனே வா வா கண்ணா.

உலகை உண்டு உமிழ்ந்தவனே வா வா வா கண்ணா;
ஊதும் குழல் கை அழகா வா வா கண்ணா.

எதுகுலத்தில் உதித்தவனே வா வா வா கண்ணா;
ஏழுமலை ஆண்டவனே வா வா கண்ணா.

ஐவர்களின் நண்பனே நீ வா வா வா கண்ணா;
ஒளி விடும் நடனாகரனே வா வா கண்ணா.

ஓங்கி வளர்ந்த வாமனனே வா வா வா கண்ணா;
ஒளஷதமே ஆரமுதே வா வா கண்ணா.

ஆடி வா நீ ஓடி வா நீ வா வா வா கண்ணா;
ஓடி வா நீ ஆடி வா நீ வா வா கண்ணா.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
Source <visalramani.wordpress.com>



 
babkris.jpg



THE DIVINE BABY KRISHNA.

He who resides in His Baktha’s hrudhayam,
He who floats in the waters of Pralayam;

He who is a gem among the innocent cowherds,
He who is the protector of the fourteen worlds;

He who conceals and restores Creation,
He who plays flute for His recreation;

He who grew up in Yadhu Kula,
He who is the Lord of Thirumala;

He who is is the friend of Pandavas,
He who on Kaliya did divine Thandavas;

He who as Thrivikrama performed the improbability,
He whose name is the nectar bestowing immortality.

Come to me! Come tome! Come to me!


Source my blog of Tamil poems <visalramani.wordpress.com>
 
[h=1]குறும்புக்காரன்![/h]
குறும்புகள் செய்யும் குட்டிக் கண்ணனை
விரும்புவரே அன்றி வெறுத்திடார் எவரும்!
குறும்புகள் செய்யும் குழந்தையை இன்றும்
குறும்புக்காரக் கண்ணன் என்கின்றோமே!

எழில் புன்னகையில் முத்துப் பற்கள்;
குழல் கற்றைகள் ஆடும் நெற்றியில்;
சிணுங்கும் பாதசரங்கள், தண்டைகள்;
குலுங்கும் கை நிறைய வளையல்கள்.

முன்னே ஓடும்போதும், திரும்பிப்
பின்னே பார்த்தபடிச் சென்று விழுந்து
புழுதியும் சேறும் பூசிய பின்னும் மிக
எழிலுருவாகக் காட்சி தருவது யார்?

இடைச் சிறுவருடன் ஆட்டம், பாட்டு;
இடையிடையே வெண்ணை பூனைக்கு!
கன்றுகளின் வாலைப் பற்றிக் கொண்டு
மண் மீது வழுக்கிச் செல்வது யார்?

கறந்த பாலைக் குடிப்பது மட்டுமின்றி,
கறக்கும் முன்பே பசுவிடம் குடிப்பது;
வெண்ணை, தயிர் எல்லோர் வீட்டிலும்
வேண்டுமளவு திருடித் தின்பது யார்?

நிலவைப் பழம் என்று நினைத்துக் கொண்டு,
நிலாப் பழத்தை வேண்டிக் கையை உயர்த்த,
வான் நிலவும் கீழே இறங்கி வந்து அவன்
வான் நோக்கிய கையில் அமர்ந்ததாமே!

குறும்புகள் செய்தால்தான் அது ஒரு குழந்தை;
வெறும் பொம்மையே வைத்தபடியே இருந்தால்!
குறும்புக்காரக் குழந்தைகளே வளர்ந்த பின்பு
துறு துறு மனிதர்களாக விளங்கிடுவார்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
.
Source <visalramani.wordpress.com>
 
503545147_981ba52919.jpg


KRISHNA THE NAUGHTY CHILD.

KrishnA was the very personification of mischief and yet none could really hate Him for that!

Even today we hear people saying that the baby is as mischievous as KrishnA himself!

His pretty smile reveals two rows of pearl-like teeth.
His forehead is adorned by His lovely curly hair.

Silver bells tinkle on His feet and bangles make a pleasant sound on his wrists.
He runs forward but keeps looking backwards. He tumbles on the ground and gets coated with the mud and sand – only to become even more beautiful!

He sings and dances with His cowherd friends. He feeds butter to the kitten now and then. He goes skidding on the ground, holding on to the tail of a speeding calf!

He drinks the milk stored in the houses. Not satisfied with that, He drinks milk directly from the cows, pushing away their calves.

He will rob butter from every house and share it with his friends as well as His other animal friends.

Once He thought that the moon was a giant fruit and put out His palm asking for it. What a wonder ! The moon came down and sat on His outstretched palm!
Such was His loveliness, sweetness and charm!

The child who does a lot of mischief is the real child. If it sits quietly it is a mere doll! Only mischievous children grow up to become active and interesting personalities, in their adulthood.
 
[h=1]கண்ணன் என் கடவுள்.[/h]
எண்ண இனிப்பவன் கண்ணன்,
என்றும் இனியவன் கண்ணன்;
எங்கும் இருப்பவன் கண்ணன்,
எங்கள் இதயத்தில் கண்ணன்.

மண்ணை உண்டவன் கண்ணன்,
விண்ணை அளந்தவன் கண்ணன்;
மங்கையைக் காத்தவன் கண்ணன்,
மாயங்கள் செய்தவன் கண்ணன்.

குன்றை எடுத்தவன் கண்ணன்,
கோகுலம் காத்தவன் கண்ணன்;
கன்றை மயக்கிடும் கண்ணன்,
கன்னியர் விரும்பிடும் கண்ணன்.

இசையின் கடவுளும் கண்ணன்,
இடையர் பிள்ளையும் கண்ணன்;
கீதையைத் தந்தவன் கண்ணன்,
கிரிதரனும் அந்தக் கண்ணன்.

மேதைகள் போற்றிடும் கண்ணன்,
பேதைகள் வணங்கிடும் கண்ணன்;
தேவர்கள் தொழுதிடும் கண்ணன்,
தெய்வங்களின் தலைவன் கண்ணன்.

நீயே கதி என்று சொன்னால்,
நித்தமும் காத்திடும் கண்ணன்;
தாயும் தந்தையுமாகி நல்ல
தயை புரிந்திடும் கண்ணன்.

வெண்ணை திருடிய கண்ணன்,
வெள்ளை மனம்கொண்ட கண்ணன்;
மண்ணில் இவனைப் போல் உண்டோ?
எண்ணித் தெரிந்தவரை இல்லை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி. Source <visalramani.wordpress.com>
 
9.jpg



THE GLORIES OF LORD KRISHNA.

He is deliciously sweet to think about,
The thoughts about Him are also sweet;
With His presence the Universe is built,
He who resides in everyone’s heart.

He ate the soil quite playfully,
He measured world equally playfully;
He saved pAnchAli from public shame,
His countless miracles sing His fame..

He lifted the mountain Govardhana,
And protected Gokulam from Indra;
He mesmerized the calves and cow,
Every pretty damsel was His Lady Love.

He is the God of Music divine,
A cowherd, walking by the ravine;
Giridhara is the great dharma dhAtA,
Through His gospel of The Bagavat Gita.

The learned men always praise Him,
The illiterate men always worship Him,
The Deva and others beings adore Him,
The God of all the Gods-it is always Him.

He becomes the kindest mother,
The guiding and protecting father;
The most dependable elder brother,
To Him who surrender do never bother.

He enjoys eating the stolen butter,
His mind is as soft as the butter;
Can there can be another like Him?
If there is one, I’m yet to find Him!

Seeking His blessings,
For ever and ever,
For everyone here,
Visalakshi Ramani.
 
Coming to think of it, I have written many more poems on Krishna.

But I do not want to over dose it. May be I will give them one at a time on and off! :pray2:
 
post 11#
dear vr !
you have rightly said .we feel pleased to watch young boys and call them kanna! kanna! .that costs us nothing . but what a relaxed mind after spending time with that kuttikals.even my grand daughter declare herself as kutty rathe .
 
post 14 #
when sri Kannan sucking milk directly from the cow we may say naughty Krishnaa .but actually sri krishna treat pasu as his mother and the mother is showing her vatsalyam by licking HIM like one of her calves .that is nicely depicted in the picture
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

ஊசே சாம்பு3ஜபூ4ரமூனயி (37:3)

"ஹே தேவர்களே! பூமி தேவி கூறியது அனைத்தும் உண்மையே!

இந்த பூமியையும், உங்களையும் காப்பாற்றுவதில் சமர்த்தன்

லக்ஷ்மிபதி ஒருவனே ஆவான். நாம் எல்லோரும் பரமசிவனை

முன்னிட்டுக் கொண்டு இங்கிருந்து சீக்கிரமாக

பாற்கடலுக்குச் சென்று அவரை வணங்கித் துதிப்போமாகுக!"

பிரமன் கூறியதும் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உங்கள்

வாசஸ்தலமாகிய வைகுண்டத்தை அடைந்தனர்.
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

தே முக்3தா4நிலசா'லி (37:4)

மந்தமாருதம் வீசும் மனோஹரமான பாற்கடல் கரையை அடைந்து, ஒன்று சேர்ந்து உங்கள்

திருவடிகளை தியானிப்பதில் மனத்தை ஈடுபடுத்தினர். உங்கள் திருவாக்கை உள்ளத்தில்

உணர்ந்த பிரமன் கூறினான், "
ஹே தேவர்களேபரமாத்மா எனக்கு உரைத்ததை உங்களுக்கு

நான் உரைப்பேன்".
 
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்.

ஜானே தீ3னத3சா'மஹம் (37:5)

"கொடிய அசுரர்களால் பூமிக்கும், தேவர்களுக்கும் உண்டாகும் கஷ்டத்தை அறிவேன்.

இவற்றைப் போக்குவதர்க்குப் பூரண கலைகளுடன் நான் யாதவ குலத்தில்

அவதரிப்பேன். தேவர்கள் தங்கள் அம்சங்களுடன் வ்ருஷ்ணீ குலத்தில் பிறக்கட்டும்.

தேவப் பெண்களும் என்னை சேவிப்பதற்காக பூமியில் ஜனிக்கட்டும்" என்னும் தங்கள்

திருவாக்கை பிரமன் எல்லோருக்கும் எடுத்து உரைத்தான்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top