கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
ஸ்ரீ கிருஷ்ண அவதார வர்ணனம்

ஆனந்த3ரூப (38:1)

ஆனந்த ரூபியாகிய பகவானே! தங்கள் திரு அவதார சமயம் நெருங்கியபோது, தங்கள் திருமேனியில் இருந்து வெளிப்படும் கிரணக் கூட்டங்களை ஒத்த மேகக் கூட்டங்கள், வான வெளியை மறைத்துக் கொண்டு இருக்கும் மழைக் காலமாக இருந்தது.

ஆசா'ஸு சீ'தல தராஸு (38:2)

மழைநீரால் எல்லா திசைகளும் நன்கு குளிர்ந்து, நல்லோர்கள் தாங்கள் விரும்பிய காரியம் கைகூடியதால் ஆனந்த பரவசம் அடைந்தபோது, நடு நிசியில், சந்திரன் உதிக்கும் வேளையில், மூவுலகங்களின் துயர்களைத் துடைக்க வந்த தாங்கள் திரு அவதாரம் செய்தீர்கள்.

பா3ல்வஸ்ப்ருசா' அபி (38:3)

பால பாவத்தை அடைந்திருந்தாலும் ஐஸ்வர்யங்களைத் தரிக்கின்றதும்; ஜொலிக்கின்ற கிரீடம், கை வளைகள், தோள் வளைகள், முத்துமாலைகள் இவற்றால் காந்தியுடன் விளங்குவதும்; சங்கம், சக்கரம், பத்மம், கதை இவற்றுடன் விளங்குவதும்; மேகம் போன்ற நீல நிறத்தை உடையதும் ஆன திருமேனியுடன் பிரசவ அறையில் தாங்கள் விளங்கினீர்கள்.

வக்ஷ:ஸ்த2லீஸு2க நிலீன(38:4)

ஹே வாசுதேவனே ! உங்கள் மார்பில் சுகமாக வாசம் செய்யும் அழகுடைய லக்ஷ்மி தேவியின் வெட்கம் கலந்த கண் பார்வையால், அந்த அறையில் துஷ்டனான கம்சனால் உண்டு பண்ணப்பட்ட அலக்ஷ்மியை நாசம் செய்தீர்கள் நீங்கள்.

சௌ'ரிஸ்து தீ4ரமுனிமண்ட3ல (38:5)

வசுதேவர்,ஞானிகளாகிய முனிவர்களின் புத்திக்கு எட்டாமல் வெகு தூரத்தில் இருக்கும்
தங்கள் திருவடிகளைத் தன் கண்களால் தரிசித்து; ஆனந்தக் கண்ணீர், மயிர்க் கூச்சம், குரல் தழுதழுப்பு இவற்றால் கனிந்து; கண்களுக்குப் பூந்தேன் போன்று இருக்கும் தங்களைத் துதித்தார்.

தே3வ ப்ரஸீத (38:6)

ஸ்வயம் பிரகாசரூபியே! பரபிரம்ம ஸ்வரூபியே! துன்பத் தழைகளை அறுப்பதில் கத்தி போன்றவரே! எல்லோரையும் அடக்கி ஆளுகின்ற, தனது அம்சமான மாயைக் கொண்டு சிருஷ்டி முதலியவற்றைச் செய்கின்ற ஈசா! அருள்வேண்டும். கருணை நிறைந்த கடைக்கண் பார்வையால் வருத்தங்களை அகற்றவேண்டும்" என்றெல்லாம் வசுதேவர் மகிழ்ச்சியுடன் உங்களைத் துதித்தார்.

மாத்ரா ச நேத்ர (38:7)

கண்ணீரால் நனைந்த கொடி போன்ற சரீரத்தை உடைய தாயாலும் புகழ் வசனங்களால் துதிக்கப்பட்டீர். கருணாநிதியாகிய தாங்கள் முந்தைய இரண்டு பிறவிகளிலும் அவர்களின் மகனகப் பிறந்ததைக் கூறினீர். பின்னர் தாயின் சொற்படி மானிடக் குழந்தையின் வடிவை எடுத்துக் கொண்டீர்.
(முந்தைய பிறவிகளில் பிருச்னி சுதபஸ் என்பவர்களுக்குப் பிருச்னிகர்ப்பனாகவும்,
அதிதி கச்யபர்களுக்கு வாமனனாகவும் விஷ்ணு அவதரித்து இருந்தார்.)

தத்ப்ரேரிஸ்தத3னு (38:8)

அதன் பிறகு தங்கள் வசுதேவரை ஏவினீர்கள். நந்தகோபனுடைய பெண்ணுடன் இடம் மாற்றுவதற்கு யோகிகளால் மனத்தில் தரிக்க தகுந்தவரும், தாமரை மலரில் வீற்றிருக்கும் இருக்கும் ஹம்சக் குஞ்சுபோன்ற தங்களை கையில் எடுத்துக் கொண்டார்.

ஜாதா ததா3 பசு'பசஸத்3மனி (38:9)

அப்போது தங்களுடைய ஏவுதலால் நந்தகோபர்
வீ ட்டில் அவதரித்திருந்த யோகமாயை பட்டணத்து ஜனங்களை நித்திரையில் ஆழ்த்தினாள். அறிவற்றவைகளும், நன்கு பூட்டப்பட்டு இருந்தவைகளும் ஆகிய கதவுகளும் தாமாகவே திறந்து கொண்டன! என்ன ஆச்சரியம்!

சேஷேண பூ3ரிப2ண (38:10)

அநேகம் படங்களைக் கொண்ட ஆதிசே ஷேன் மழைக்குக் குடை பிடித்தது.
தன் தலைகளில் உள்ள ரத்தினங்களால் வழி காட்டியது. மஹாபாக்கியவனாகிய வசுதேவர்,
எந்தத் தடையும் இன்றித் தங்களை எடுத்துக் கொண்டு சென்றார்.

 
Last edited:
# 21.

images


Deva and Gods praying to Lord Narayana.
 
யோகமாயையைக் கொண்டு வருவது.

ப4வந்தமயமுத்3வஹன் (39:1)

images
images


யதுகுல சிரேஷ்டரான வசுதேவர் தங்களை எடுத்துக்கொண்டு போகும்போது யமுனை நதி ஆகாயம் வரை

உயர்ந்து எழுந்த ஜலப் பிரவாஹத்துடன் கூடி இருந்தது. ஆனால் அந்த ஜலப் பிரவாஹம் இந்திர ஜாலத்தால்

தோன்றியது போன்றே அக்கணமே வெறும் கணுக்கால் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஆச்சரியம்!
 
எப்படி முருகு = அழகு என்கின்றோமோ

அப்படியே கண்ணன் = இனிமை

கண்ணால் காண்பதும் இனிமை!

காதுகளால் கேட்பதும் இனிமை!

வாயால் பாடுவதும் இனிமை!

ஓயாமல் நினைப்பதும் இனிமை!
 
மூர்த்தியும், கீர்த்தியும்!



“மூர்த்தி சிறியது ஆனாலும் அவர்
கீர்த்தி மிகவும் பெரியது” என்பார்;
இந்தச் சொற்களின் விந்தைப் பொருளைச்
சிந்தையில் சேர்க்கும் வாமனன் கதை.

உலகம் மூன்றையும் வென்றதுடன்,
உவந்தவர் உவந்ததை அளிக்கவல்ல
பலிச் சக்கரவர்த்தியின் கர்வத்தை
பலி வாங்க வந்தவனே வாமனன்.

“பாரினில் இறங்கிய சனத்குமாரனோ?
சூரியனோ இவன்?” எனக் காண்பார் ஐயுற,
குறு வடிவு எடுத்துக்கொண்டு வந்த
திருமாலின் ஐந்தாவது அவதாரம்!

தன் காலடிகளால் அளக்கப்பட்ட
மூன்றடி மண் மட்டுமே தன் தேவை,
என்ற பாலகனிடம் பலி சொன்னான்,
“மூன்று உலகுமே கேள், நான் தருவேன்!”

“மூன்றடி மண் மனத் திருப்தி தராவிடில்,
மூன்று உலகமும் அதைத் தராது அன்றோ?
மூன்றடி மண்ணே எனக்குப் போதும்;
மூன்று உலகங்கள் வேண்டவே வேண்டாம்!”

மூன்று உலகங்களுக்கு அதிபதியானவன்,
மூன்று அடி மண் கொடுக்க இயலாதபடி,
வளர்ந்தான் வாமனன் வானளாவியபடி;
அளந்தான் ஈரடியால் ஈருலகங்களை!

மண்ணைத் தன் ஓரடியாலும், பின்னர்
விண்ணைத் தன் ஓரடியாலும் அளந்தவன்,
அடுத்த அடியை வைக்க இடம் கேட்டு,
கெடுத்தான் மகா பலியின் கர்வத்தை!

தன் தலையையே மூன்றாம் அடியைத்
தாங்க அளித்தான் தன் சொல் காக்க;
தயங்காமல் தன் அகந்தையை விட்டுத்
தந்ததால், பலிக்கு இன்று வரை ஓணம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
MOORTHI AND KEERTHI.

img5zfgtj.png


There is a proverb in Tamil which says,”His moorthy may be very small but his keerthi is very big!” This statement is best proved by the story of VAmana avatAr of Lord VishnU.

VAmanA was the fifth avatAr of Lord VishnU, in which He appeared as a short, young brahmachAri.
Bali had become very proud because he had conquered all the three worlds and was able to give as dAnam anything desired by any one! VAmanA came down to earth to demolish the pride of Bali Chakravarthi.

VAmanA had such a brilliant tejas that whoever set his eyes on Him wondered whether the boy was the Sun God himself or Sanat KumAra!

VamanA asked for a gift of three strides of land measured by his own feet. Bali liked the brilliant brahmachari so much that he wanted to give away all the three worlds to Him.

“If three strides of land will not satisfy a person, neither will the three worlds. I need only three strides measured by me and I do not need the three worlds” was VAmanA’s reply.

Even as people watched VAmana grew shy high and measured the whole earth with one stride and the heaven with his second stride. There was nothing left for the third step. Bali offered his head to VAmanA to place His third step.

Since Bali happily gave away everything he possessed, his Atma nivEdanam became total and exemplary.
The World celebrates Onam festival in honor of Bali ever since.
 
யோகமாயையைக் கொண்டு வருவது.


pic1.jpg


ப்ரஸுப்த பசு'பாலிகாம் (39:2)

இந்த வசுதேவர், நன்கு நித்திரை செய்யும் கோப ஸ்த்ரீக்களையும், மெதுவாக அழுகின்ற பெண்

குழந்தையையும், திறக்கப்பட்ட கதவுகளையும் உடைய நந்தகோபருடைய வீட்டுக்குச் சென்றார்.

தங்களைப் பிரசவப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்த கபடப் பெண் குழந்தையை

எடுத்துக் கொண்டு மிக வேகமாகத் தம் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

 
யோகமாயையைக் கொண்டு வருவது.


images


ததஸ்த்வத3னுஜாரவக்ஷபித (39:3)

தங்கள் தங்கையான யோகமாயையின் அழுகையால் நித்திரை கலைந்து,

வேகமாக ஓடிய சேவக சமூஹம் கம்சனுக்குப் பிரசவ சமாச்சாரத்தை அறிவித்தது.

வருத்தம் அடைந்தவனாக , தலை விரிகோலமாக கம்சன் ஓடிவந்தான்.

சந்தோஷம் அடையாத அவன் கண்டது இரங்கத் தக்க தங்கையின் கரங்களில் ஒரு பெண் குழந்தையை.
 
யோகமாயையைக் கொண்டு வருவது.

images


த்4ருவம் கபடசா'லினோ (39:4)

இந்தக் கன்னிகை கபடசாலியாகிய மதுசூதனனின் மாயையாக இருக்கவேண்டும் என்று எண்ணிய கம்சன்,

இளம் தங்கை தன் கைகளால் அணைத்துக் கொண்டிருக்கும் பெண் குழந்தையை, தாமரைக் குளத்தின் நடுவில்

இருக்கும் ஒரு தாமரைத் தண்டைப் பிடுங்கும் யானையைப் போல் பிடுங்கினான். உடனேயே ஒரு

கற்பாறையில் மாயாதேவியை ஓங்கி அடித்தான்.
 
Last edited:
யோகமாயையைக் கொண்டு வருவது.

images


ததோ ப4வதுபாஸக: (39:5)

அப்போது தங்களை உபாசிக்கும் பக்தன் யமபாசத்தில் இருந்து விடுபடுவது போன்றே

விரைவாக யோகமாயை கம்சனின் கைகளில் இருந்து விடுபட்டாள்.

பூமிக்கு வராமலேயே வேறு ஒரு ரூபத்தை அடைந்தாள்.

எட்டுக் கரங்களையும் அவற்றில் விளங்கும் அற்புத ஆயுதங்களுடனும்

அவள் ஆகாயத்தில் ஆச்சரியமயமாக விளங்கினாள்.

 
யோகமாயையைக் கொண்டு வருவது.


images


ந்ருச'ம்ஸதர கம்ஸ (39:6)

"மிகக் கொடியவனான ஹே கம்சனே! என்னைக் கொல்லுவதால் உனக்கு என்ன லாபம்?

உன்னைக் கொல்பவன் எங்கோ ஓரிடத்தில் ஒளிந்திருக்கிறான். உன்னுடைய நன்மையைப் பற்றிச்

சிந்திப்பாய்!" துஷ்டனான கம்சனிடம் இவ்வாறு கூறிவிட்டு, தேவ கணங்களால் துதிக்கப்பட்டவளாக,

அங்கிருந்து அகன்று அனேக ஆலயங்களைச் சென்று அடைந்தாள் யோக மாயை.

 
யோகமாயையைக் கொண்டு வருவது.

ப்ரகே3புனரகாத்மஜாவசன (39:7)

கம்சன் மறுநாள் காலையில் யோகமாயையின் வசனத்தை பிற அசுரர்களுக்குச் சொன்னான்.

துரபிமானம் உடைய பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள் தங்களைக் கொல்ல விரும்பி,

பிற குழந்தைகளைக் கொன்று குவித்து, பயமற்று உலகில் திரிந்தனர்.

கருணை அற்றவர்களால் என்ன தான் செய்ய இயலாது?
 
யோகமாயையைக் கொண்டு வருவது.

images


தத: பசு'பமந்தி3ரே (39:8)

முக்தியளிக்கும் கண்ணனே! அதன் பிறகு நந்தகோபன் வீட்டில் நந்தனின் மனைவி யசோதையின் பிரசவப்

படுக்கையில் படுத்துக் கொண்டு கால்களை உதைத்துக் கொண்டு நீங்கள் அழுதீர்கள். நித்திரை விட்டு எழுந்த

ஸ்திரீக்கள் புத்திரப் பேற்றை எல்லோருக்கும் எடுத்துக் கூற, கோகுலம் முழுவதுமே ஆனந்த வெள்ளத்தில்

பரவசம் அடைந்தது அல்லவா?

 

Attachments

  • gokulam.webp
    gokulam.webp
    19.9 KB · Views: 91
Last edited:
யோகமாயையைக் கொண்டு வருவது.


suckling OK.webp

அஹோ க2லு யசோத3யா (39:9)

புதுக் காயாம்பூ போல் மனத்தைக் கவருகின்ற தங்கள் மேனியை அருகில் முதல் முதலில் பார்த்து;

தன் ஸ்தனங்களைப் பருகச் செய்து; சந்தோஷமாக உங்கள் மனோஹரமான சரீரத்தைத் தொடும்

பாக்கியம் பெற்ற யசோதை; உலகில் உள்ள அத்தனை புண்ணிய சீலர்களையும் ஜெயித்துவிட்டாள்

அல்லவா? என்ன ஆச்சரியம்!
 
Status
Not open for further replies.
Back
Top