• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
ச'கடாசுர வத4 வர்ணனம்


sakatasuran 2.jpg

ததஸ்ததா3கர்ண (42:3)

அப்போது அந்த ஆரவாரத்தைக் கேட்டு பரபரப்புடன் ஓடி வந்ததால் உண்டான சிரமத்தால் அசைகின்ற

ஸ்தனங்களை உடைய கோபஸ்திரீகள் நான்கு புறங்களிலும் பயங்கரமாக வீழ்ந்திருக்கும் மரங்களையும்

அவற்றின் நடுவில் இருக்கும் தங்களையும் கண்டனர்.
 
ச'கடாசுர வத4 வர்ணனம்

சி'சோ'ரஹோ கிம் (42:4)

"கஷ்டம்! குழந்தைக்கு என்ன நேர்ந்தது? என்ன நடந்தது?" என்று கேட்டுக் கொண்டே நந்தகோபனும்,

இடையர்களும், அந்தணர்களும் கண்ணும் கண்ணீருமாக ஓடிவந்து, யசோதையின் கைகளில் தங்களைப்

பார்த்து ஆறுதல் அடைந்தனர்.


 
ச'கடாசுர வத4 வர்ணனம்

கஸ்கோ நு கௌதஸ்குத (42:5)

"இது என்ன? இது என்ன? எங்கிருந்து உண்டானது? விசாலமான வண்டி உடைந்தது மிகவும் ஆச்சரியமே!

இதற்கு இந்த இடத்தில ஒரு காரணமும் இல்லை!" என்று கூறி அவர்கள் தங்கள் மூக்கின் மேல் விரலை

வைத்து அதிசயித்துத் தங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அல்லவா?

 
ச'கடாசுர வத4 வர்ணனம்

குமாரகஸ்யாஸ்ய (42:6)

"பால் குடிக்க விரும்பிய இந்தக் குழந்தை அழுதது. அழும் போது அசைகின்ற தாமரை போன்ற காலினால்

உதைக்கப்பட்ட வண்டி தலை கீழாக விழுந்ததை நான் பார்த்தேன்; நான் பார்த்தேன்!" என்று தங்களுக்குக்

காவலாக இருந்த குழந்தைகள் சொன்னார்கள் அல்லவா?
 
ச'கடாசுர வத4 வர்ணனம்

பி4யா ததா4 கிஞ்சித் (42:7)

அப்போது பயத்தினால் கூறும் இந்தச் சிறிய குழந்தைகளின் சொற்கள் பொருத்தம் அற்றவை என்றே

எல்லோரும் எண்ணினார்கள். அவர்கள் தங்களின் மகிமையை அறியாதவர்கள். ஆனால் பூதனையின் கதியைக்

கண்டிருந்த நந்தகோபன் முதலானவர்கள் சிறிது சந்தேகம் அடைந்தார்கள் அல்லவா?
 
ச'கடாசுர வத4 வர்ணனம்

ப்ரவாலதாம்ரம் (42:8)

"பவழம் போன்று சிவந்த இந்தக் கால்கள் அடிபட்டனவா? தாமரை போல் இருக்கும் இரு கைகளும்

புண்பட்டனவா?" என்று கருணை வெள்ளம் பெருகிய கோப ஸ்திரீகள் தங்கள் திருமேனியைத் தொட்டுத்

தொட்டுத் தடவினார்கள் அல்லவா?
 
ச'கடாசுர வத4 வர்ணனம்

அயே ஸுதம் தேஹி (42:9)

ஏ கோபியே! ஜகதீசனுடைய கிருபா கடாக்ஷத்தால் ரக்ஷிக்கப்பட்ட என் குழந்தையை என்னிடம் கொடு." தங்கள்

தந்தை தங்களைக் கையில் எடுத்துக் கொண்டு ரோமாஞ்சனம் அடைந்து தங்களுடைய சிறிய சரீரத்தை

அடிக்கடி ஆலிங்கனம் செய்துகொண்டார் அல்லவா?

 
ச'கடாசுர வத4 வர்ணனம்

அனோநிலீன: (42:10)

வண்டியில் ஒளிந்து கொண்டு தங்களைக் கொல்ல வந்த அசுரன் தங்கல்ல இந்த விதத்தில் கொல்லப் பட்டான்

அல்லவா? அந்த அசுரனின் பொடி கூட காணப் படவில்லை.

(அந்த அசுரனின் ரஜோ குணம் காணப் படவில்லை)

நிச்சயமாக அந்த அசுரன் சுத்த சத்துவ ஸ்வரூபியாகிய தங்களிடம் லயித்துவிட்டான் அல்லவா?
 
ச'கடாசுர வத4 வர்ணனம்

ப்ரபூஜிதைஸ்தத்ர (42:11)

குருவாயூரப்பா! அதன்பின் அங்கு பிராமணர்கள் நன்கு பூஜிக்கப்பட்டார்கள்.

தங்களை அவர்கள் விசே ஷமாக மங்கள ஆசீர்வாதம் செய்தார்கள். தங்களுடைய பால்ய சேஷ்டைகளால்

கோகுலத்தைக் குதூகலிக்கச் செய்த தாங்களே என் ரோகத்தைப் போக்கி அருள வேண்டும்.
 
திருணாவர்த்த வத4 வர்ணனம்


garima.jpg

த்வாமேகதா3 (43:1)

குருவாயூரப்பா! கரிமா என்ற யோகா சித்தியை ஒரு நாள் நீங்கள் ஏற்று மிகவும் கனமாகிவிட்டீர்கள். தாய்

யசோதை உங்கள் கனத்தைத் தாங்கமுடியாமல் கீழே இறக்கிப் படுக்கையில் விட்டு விட்டு தங்களை

எண்ணிக் கவலை கொண்டவளாக தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அல்லவா?

 
திருணாவர்த்த வத4 வர்ணனம்


trunavarta.jpg

தாவத் விதூ3ரம் (43:2)

அப்போது வெகு தூரத்தில் பயங்கர சப்தத்துடன், உயரக் கிளம்பிய தூளிப் படலத்தால் திக்குகளை மறைத்துக்

கொண்டு, சுழல் காற்றின் வடிவம் கொண்ட திருணாவர்த்தன் என்னும் பெயருடய அசுரன் ஜனங்களின்

மனத்தைக் கவரும் தங்களை கவர்ந்து சென்று விட்டான் அல்லவா?
 
திருணாவர்த்த வத4 வர்ணனம்

உத்3தா4மபாம்ஸு திமிரா (43:3)

எல்லையற்ற புழுதிப் படலத்தால் கண்கள் மறைக்கப்பட்ட இடையர்கள், ஒன்றையும் காண முடியாமல் இருந்த

போது, உங்களைக் காணாத யசோதை, "ஐயோ என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது ?" என்று கதறி உரக்கக்

அழுதாள் அல்லவா?
 
திருணாவர்த்த வத4 வர்ணனம்

தாவத்ஸ தா4னவ வரோபி (43:4)

அப்போது அந்த வலிய அசுரனும் உங்கள் பாரத்தைச் சுமக்க முடியாமல் வேகம் குன்றினான்.

பிறகு அசைவற்று நின்றுவிட்டான். அதன் பின் புழுதியும், சப்தமும் அடங்கிய கோகுலத்தில்

தங்கள் தாயின் அழுகுரல் ஓசை பெருகியது அல்லவா?

 
திருணாவர்த்த வத4 வர்ணனம்

ரோதோ3பகர்ண (43:5)

அழுகுரல் ஓசையைக் கேட்டு வீட்டுக்கு ஓடி வந்த நந்தன் முதலிய கோபர்களும் அழுது கொண்டு இருக்கும்

போது, அந்த அசுரன் மிகவும் சோர்வடைந்து, எல்லோருக்கும் முக்தி அளிக்கும் தங்களை விட்டு விட

விரும்பினான். ஆனால் தாங்கள் அவனை விடாததால் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்தான் அல்லவா?
 
திருணாவர்த்த வத4 வர்ணனம்

thrunavartha.jpg

ரோதாகுலாச்ததனு (43:6)

அதற்குப் பிறகு அழுது கொண்டு இருந்த இடையர்கள் வெளியில் பாறை மேல் விழுந்த மிகப் பெரிய

சரீரத்தையும், அதன் மார்பில் சிறிதும் களைப்படையாமல் நன்றாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும்

தங்களைக் கண்டு அதிசயத்தில் மூழ்கினார்கள் அல்லவா?

 
திருணாவர்த்த வத4 வர்ணனம்

க்3ராவத் ப்ரபாதபரிவிஷ்ட (43:7)

பாறையின் மேல் விழுந்ததால் சிதைந்த பெருத்த சரீரத்திலிருந்து பிராணன் பிரிந்து போன துஷ்ட அசுரன் மேல்

தாமரை போன்ற கையால் அடித்துக் கொண்டும், உரக்கச் சிரித்துக் கொண்டும் இருந்த தங்களை கோபர்களும்,

கோபிகைகளும் பெரிய மலையில் இருந்து ஒரு நீல நிற ரத்தினத்தை எடுப்பது போல எடுத்து வந்தார்கள்

அல்லவா?
 
திருணாவர்த்த வத4 வர்ணனம்

ஏகைகமாசு' பரிக்3ருஹ்ய (43:8)

மிகவும் சந்தோஷம் அடைந்த நந்தன் முதலிய கோபர்கள் ஒவ்வொருவராக சீக்கிரம் எடுத்து ஆலிங்கனம்

செய்தும் முத்தமிட்டும் மகிழ்ந்தார்கள். தங்களை எடுத்துக் கொள்ள விரும்பிய கோபிகைகளின் தாமைரைப் பூ

போன்ற கரங்களில் தாவி விழுந்த தங்களைத் துதிகின்றோம்.
 
திருணாவர்த்த வத4 வர்ணனம்

பூ4யோபி கிம் நு (43:9)

"நாங்கள் என்ன செய்வோம்?தன்னை வணங்கிய அடியவர்களின் துயரங்களைப் போக்கும் மஹா விஷ்ணுவே !

எங்கள் குழந்தையை நீ தான் காப்பாற்ற வேண்டும்" என்று அப்போது தாய், தந்தை முதலிய கோபர்கள்

தங்களைக் காப்பதற்கு தங்ககளையே பிரார்த்தித்தார்கள் அல்லவா?
 
திருணாவர்த்த வத4 வர்ணனம்

வாதாத்மகம் தனுஜ(43:10)

பகவானே! வாத ரூபியான (சுழலக் காற்று ரூபியான) அசுரனை இவ்விதம் சம்ஹாரம் செய்த தாங்கள்

வாதத்தினால் உண்டான எனது ரோகங்களை ஏன் நாசம் செய்வதில்லை? என்னால் வேறு என்ன தான் செய்ய

முடியும்? ஹே குருவயூரப்பா! மீண்டும் மீண்டும் நான் தங்களிடம் மிச்சமில்லாத ரோக நிவாரணத்தையே

வேண்டுகிறேன்.

 
நாமகரண வர்ணனம்.

கூ3ட4ம் வாசுதே3வ கி3ரா (44:1)

பிரபுவே! வசுதேவரின் வாக்கைக் கேட்டு; எந்தக் கிரியைகளும் அற்ற தங்களுக்கு நாமகரணம் முதலிய

ஸம்ஸ்காரக் கிரியைகளை யாரும் அறியாமல் ரஹசியமாகச் செய்வதற்கு; ஜோதிட நூல்களின் தத்துவங்களை

அறிந்த கர்க முனிவர் தங்கள் கிருஹத்திற்கு வந்தார் அல்லவா?
 
நாமகரண வர்ணனம்.

நந்தோ3த2 நந்தி3தாத்மா (44:2)

அப்போது நந்தகோபன் சந்தோஷம் அடைந்தவராக, தபஸ்விகளில் சிறந்த அந்த கர்க முனிவரை

வெகுமானித்துத் தங்களுக்குச் செய்ய வேண்டிய சமஸ்காரங்களைச் செய்யுமாறு மந்தஹாசத்துடன் கேட்டுக்

கொண்டார் அல்லவா?
 
நாமகரண வர்ணனம்.


naamkaranam.jpg

யது3வம்சா'சார்யத்வாத் (44:3)

"ஐயா! நான் யது குலத்திற்கு குருவாக இருப்பதால் இது மிகவும் ரஹசியமாகச் செய்ய வேண்டியது" என்று

சொல்லிக் கொண்டு கர்க முனிவர் புளகம் அடைந்தவராகத் தமையனுடன் கூடிய தங்களுக்கு நாமகரணம்

செய்தார் அல்லவா?
 
நாமகரண வர்ணனம்.

கதமஸ்ச்ய நாமகுர்வே (44:4)

பிரபுவே! "ஆயிரம் பெயர்களை உடையவனுக்கு, அளவில்லாத பெயர்களை உடையவனுக்கு எவ்விதம்

நாமகரணம் செய்வேன்?" என்று ஆலோசித்துத் தான் கர்க முனிவர் ரஹசியமாகத் தாங்களுக்கு நாமகரணம்

செய்து இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.
 
நாமகரண வர்ணனம்.

க்ருஷீதா4தூ ணகராப்4யாம் (44:5)

கர்க முனிவர், 'க்ருஷி' தாது 'ண' காரம் இவைகளைக் கொண்டு 'சத்', 'ஆனந்தம்' என்ற உருவத்துடன் இருக்கும்

தன்மையை வெளிப்படுத்கின்ற அல்லது ஜனங்களின் பாவத்தை அபஹரிக்கும் தன்மையைக் கூறும்

கிருஷ்ணன் என்ற பெயரைத் தங்களுக்கு இட்டார்
 
நாமகரண வர்ணனம்.

அன்யாம்ச்'ச நாம பே3தான் (44:6)

அந்த கர்க முனிவர் வாசுதேவன் முதலிய மற்ற பெயர்களையும், தமையனுக்கு ராமன் முதலிய

பெயர்களையும் அர்த்தத்துடன் விவரமாகக் கூறினார். தங்களை வெளிப்படுத்தாமலேயே தாங்கள்

மனிதர்களைக் கடந்த பிரபாவம் உடையவர் என்பதைச் சொன்னாரல்லவா?




 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top