மற்ற மகிஷிகளை விவாஹம் செய்வது
தாத்ரா கிரீடன் அபி (3)
அப்போது இந்திரப்பிரஸ்தத்தில் பொழுதுபோக்கிக் கொண்டு இருந்த தாங்கள் காண்டவ வனத்தைக் கெடுத்து அக்னியைத் திருப்தி செய்தீர்கள். யமுனைக் கரையில் காணப்பட்ட காலிந்தீ என்பவளைப் பெற்றுக்கொண்டீர்கள். துவாரகை திரும்பினீர்கள். சகோதரர்களிடம் அஞ்சிய, தங்கள் மேல் உள்ள காதலால் தன் வசம் இழந்த, அத்தை மகளாகிய, அவந்தி தேசத்து அரசன் மகளாகிய மித்ரவிந்தை என்பவளை, அரசர்களுக்கு மத்தியில் விரைந்து அபகரித்தீர்கள் அல்லவா?