கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
ஜராசந்த யுத்3த4 வர்ணனம்

விகா4தாஜ் ஜாமாது: (6)
தன் மாப்பிள்ளையும், பிரிய சிநேகிதனும் ஆகிய கம்சனைக் கொன்றதால் அளவற்ற கோபம் கொண்ட ஜராசந்தன் மதுரா மீது படை எடுத்தான். சுவர்க்கத்தில் இருந்து கிடைத்த தேர் முதலியவைகளுடன் கொஞ்சம் சைனியங்களை உடைய தாங்களும் பலராமனும், அந்த ஜராசந்தனால் கொண்டு வரப்பட்ட இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையை சம்ஹாரம் செய்தீர்கள் அல்லவா?
 
ப3த்3த4ம் ப4லாத3த (7)

அதன் பிறகு, பலராமனால் பலவந்தமாகக் கட்டப்பட்டவனும், பலம் பொருந்தியவனும் ஆகிய ஜராசந்தனைத் தாங்கள் ," படையைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் போருக்கு வருவான்!"' என்ற ஆவலால் விடுதலை செய்தீர்கள் அல்லவா? எல்லா திக்குகளையும் ஜெயித்து அவ்விடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சமஸ்த சேனைகளை உடைய அவனைத் தவிர அப்போது பலமும், வீரமும் பொருந்தியவர்கள் வேறு யார் இருந்தார்கள்?
 
ப4க்ன: ச லக்3ன (8)
தோல்வி அடைந்து அதனால் வெட்கம் அடைந்திருந்த போதிலும் அந்த ஜராசந்தன் மற்ற அரசர்களின் தூண்டுதலால் இதே போன்று மேலும் பதினாறு தடவைகள் தங்களுடன் போர் புரிந்தான் அல்லவா? அப்போது மொத்தமாக அவனுடைய முன்னூற்றுத் தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணி சேனைகளைக் கொன்று குவித்தீர்கள் அல்லவா? ஆச்சரியம்! ஆச்சரியம் தான்.
 
அஷ்டா த3சோ'ஸ்ய (9)
பிறகு அந்த ஜராசந்தனின் பதினெட்டாவது போர் நெருங்கிய போது தாங்கள் எதிரில் மூன்று கோடி யவனர்களுடன் வந்திருக்கும் காலயவனனைக் கண்டு, விஸ்வகர்மாவின் உதவியுடன் சமுத்திரத்தின் நடுவில் ஒரு பட்டணத்தை உண்டு பண்ணினீர்கள் . உங்கள் யோக பலத்தால் அத்தனை பிரஜைகளையும் அங்கு கொண்டு சேர்த்தீர்கள் அல்லவா?
 
முசுகுந்தானுக்3ரஹ வர்ணனம்

பத்3ப்4யாம் த்வம் (10)

தாமரை மாலை அணிந்த தாங்கள் பயந்தவர் போலக் கால்நடையாகவே பட்டணத்தில் இருந்து வெளியே வந்து ஓடினீ ர்கள். தங்கள் கையால் வதம் செய்யபடும் பாக்கியம் பெறாத மிலேச்சன் அரசன் தங்களைப் பின் தொடர்ந்தான். ஒரு மலையில் மறைந்து விட்டீர்கள் தாங்கள். நன்கு உறங்கிக் கொண்டிருந்தவரும், காலால் உதைத்து எழுப்பப் பட்டவரும் ஆகிய முசுகுந்தனால் அந்த யவனன் சாம்பலாக்கப் பட்டான். முசுகுந்தனுக்கு மிக அழகான திருமேனியுடன் காட்சி தந்தீர்கள் அல்லவா?
 
ஏக்ஷ்வாகோஹம் (11)

ஹே சர்வேஸ்வரனே! நான் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன். எல்லா ராஜ போகங்களையும் வெறுத்துத் தங்கள் அருள் ஒன்றையே விரும்பி இருக்கின்றேன் என்று சொல்லித் துதிக்கும் அரசன் வரங்களில் ஆசையற்றவனாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் அடைந்தீர்கள். மோக்ஷத்துகுச் சமமாபக்தியைக் கொடுத்தீர்கள் . பிராணி ஹிம்சையால் உண்டான பாவம் விலகுவதற்கு தவம் புரிய வேண்டுமென்றும் என்று கூறினீர்கள்
 
தத3னு மது2ராம் (12)

அதன் பிறகு மதுரா புரிக்குச் சென்று காலயவனன் அழைத்து வந்த சேனையைக் கொன்று, வழியில் மகத தேசத்து அரசனான் ஜரா சாந்தனால் முன்போலவே தடுக்கப்பட்டு அவனுக்கு கர்வம் உண்டாக்குவதற்கு வெற்றியை அளித்து ஒடிச் சென்று சமுத்திரத்தில் இருக்கும் த்வாரகா புரியை அடைந்தீர்கள் அல்லவா? அப்படிப் பட்ட குருவாயூரப்பா என்னைக் காப்பாற்றும்.



 
நாராயணீயம் தசகம் 78

த்வாரகா வாஸ வர்ணனம்

த்ரி த3ச'வர்த்தி4க (1)

தேவ சிற்பியான விஸ்வகர்மா அதைத் தன் கைத் திறனால் விருத்தி செய்தான். இந்திராதி தேவர்கள் எல்லா ஐஸ்வர்யங்களையும் தந்தனர். சமுத்திரத்தின் நடுவில் அமைந்திருந்த புதிய நகரமான துவாரகையை தங்கள் சரீர காந்தியால் அலங்கரித்தீர்கள் அல்லவா?
 
த3து3ஷி ரேவத பூ4ப்4ருதி (2)

ரேவதன் என்ற அரசன் தன் மகள் ரேவதியை பிரம்மதேவன் கட்டளைப்படி பலராமனுக்கு திருமணம் செய்தபோது மகிழ்ச்சியுற்ற யாதவர்களுடன் நீங்களும்
அந்த விவாஹத்தை மேன்மைப்படுத்தினீர்கள் அல்லவா?
 
ருக்மிணி பரிணயம்

அத2 வித3ர்ப்ப4 ஸுதாம் (3)

தங்களிடம் அனுராகம் கொண்டிருந்தாள் விதர்ப்ப தேச மன்னனின் பெண் ருக்மிணி. அவன் சகோதரன் ருக்மி தன் மதியீனத்தால் அவளை சேதி ராஜன் ஆகிய சிசுபாலனுக்குக் கல்யாணம் செய்து தர விரும்பினான் அல்லவா?
 
சிரத்4ருதப்ரணய (4)

தங்களிடம் வெகு நாட்களாக அன்பு செலுத்திவந்த அந்தப் பெண் ருக்மிணி, தன் விருப்பத்துக்கு மாறாக நடப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தாள். கருணையே இல்லாத மன்மதனால் தனக்கு ஏற்படும் துயரத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரு பிராமணனைச் சொல்லியனுப்பினாள்.

 
த்3விஜஸுதோபி (5)

அந்த பிராமண குமாரன் துர் எண்ணம் கொண்டவர்களால் அடையவே முடியாத தங்கள் நகரை விரைவாக வந்து அடைந்தான். ஜனன மரண துக்கங்களை அகற்றவல்ல தாங்களால் ஸ்வயமாகப் பூஜிக்கப்பட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தான் அல்லவா?
 
ஸ ச ப4வந்த (6)

"குண்டினபுரத்தில் ருக்மிணி என்கின்ற ஒரு அரச குமாரி இருக்கின்றாள் அல்லவா?
தங்கள் இடத்தில் ஆசை வைத்தவளும், தன் தைரியத்தை இழந்து விட்டவளும்
ஆகிய அவளால் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேன்" என்று அந்த குமாரன் தங்களிடம் தெரிவித்தான் அல்லவா?

 
தவ ஹ்ருதாஸ்மி (7)

"நான் தங்கள் குணங்களால் முன்பே கவரப்பட்டுள்ளேன்.
இப்போதோ சிசிபாலன் என்னை அடையப் போகின்றானாம்.
கருணைக்கு இருப்பிடமான லோக நாதா!
என்னை தாங்களே காத்து அருள வேண்டும்!"
என்று அவள் கூறினாள்.
 
அச'ரணம் யதி3 மாம் (8)
"வேறு கதி இலாத எனைத் தாங்கள் கை விடுவீர்களேயானால் நான் அந்த க்ஷணத்தில் என் உயிரை விட்டுவிடுவேன்" என்ற அந்த சுந்தரியின் வார்த்தைகளைக் கூறி அந்த நல்ல மனம் படைத்த பிராமண குமாரன் தங்கள் மனதையும் பயமுற்றதாகச் செய்தான் அல்லவா?
 
அகதய (9)

அப்போது தாங்கள் அந்த பிராமண குமாரனிடம் " ஹே நண்பரே! என்னுடைய விரகதாபம் அவளுடைய காமவேதனையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆகையால் நான் அங்கே வந்து அரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கருவிழிகளை உடைய அந்த அழகியை அபகரிப்பேன்" என்று சொன்னீர்கள் அல்லவா?
 
ப்ரமுதி3தேன (10)
குருவாயூரப்பா! அப்போதே மிகவும் சந்தோசம் அடைந்த அந்த குமாரனுடன் தேரில் ஏறிக் கொண்டு விரைவாகக் குண்டினபுரத்தை அடைந்தீர்கள அல்லவா? அப்படிப்பட்ட தாங்களே என் ஆபத்துக்களைக் குறைத்துக் காக்க வேண்டும்
 
ப்ரமுதி3தேன (10)

குருவாயூரப்பா! அப்போதே மிகவும் சந்தோஷம் அடைந்த அந்த குமாரனுடன் தேரில் ஏறிக் கொண்டு விரைவாகக் குண்டினபுரத்தை அடைந்தீர்கள் அல்லவா? அப்படிப்பட்ட தாங்களே என் ஆபத்துக்களைக் குறைத்துக் காக்க வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 79

ருக்மிணி பரிணயம்

ப3ல ஸமேத ப3லானுக3தோ (1)

தாங்கள், சேனையுடன் கூடிய பலராமன் பின்தொடரக் குண்டினபுரத்தில் பிரவேசித்தீர்கள். அப்ப்போது பீஷ்மக ராஜா தங்களை வெகுமானித்தார். தங்கள் வரவைத் தெரிவித்த அந்த பிராமண குமாரனை ருக்மிணி விரைவாக வந்து வணங்கினாள்.
 
பு4வனகாந்தமவேக்ஷ்ய ( 2)

ஜகன் மோகனன் ஆகிய தங்கள் திருமேனியைக் கண்டும், அரச குமாரன் ருக்மியின் செயலைக் கேட்டும் ஜனங்கள் அளவற்ற வருத்தம் அடைந்தனர். பட்டணத்து ஜனங்களின் அழுகை, பேச்சு இவற்றுடன் அந்த இரவு கழிந்தது.
 
தத3னு வந்தி3தும் (3)

அதன் பிறகு அடுத்த நாட்காலை விவாஹத்திற்கு உரிய ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்ட, பௌர்ணமி நிலவு முகம் உடைய ருக்மிணி; உயிரை உங்களிடத்தில் அர்ப்பணம் செய்தவளாகவும் , சிறந்த காவலர்களால் சூழப்பட்டவளாகவும், மங்கள ரூபிணி ஆகிய பார்வதியை வணங்குவதற்கு
த் தன் அந்தப்புரத்தில் இருந்து முன் சென்றாள்
 
குலவதூ4 (4)

கன்னியான ருக்மிணி குலஸ்த்ரீக்களுடன் ஆலயத்துக்குச் சென்றாள்.
பார்வதி தேவியை மிகுந்த ஆதரவுடன் பூஜித்தாள்.
தேவியின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தாள்.
தாங்களே அவள் பதியாக ஆகவேண்டும் என்று
மீண்டும் மீண்டும் பிரார்த்தித்துக் கொண்டாள்
 
ந்ருபகுலே (5)

அரசர் கூட்டம் ருக்மிணியைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கும்போது, தாங்களும் தனிமையில் இருக்கும் பொழுது, அரசகுமாரி ருக்மிணி தன் சரீர காந்தியினால் திக்குகளை விளங்கச் செய்து கொண்டு பார்வதியின் ஆலயத்தில் இருந்து மிகவும் அழகாக வெளிக் கிளம்பினாள்.
 
பு4வனமோஹன (6)

அப்போது உலகங்களை எல்லாம் மயக்கக் கூடிய சரீர காந்தி படைத்தவளும், அரசர் கூட்டத்தை பரவசம் ஆக்கியவளும், யௌவன வயதின் மதம் உடையவளும் ஆகிய ருக்மிணியின் கடைக்கண் பார்வைகளால் தாங்களும் பரவசம் அடைந்தீர்கள் அல்லவா?
 
க்வனு க3மிஷ்யஸி (7)

"சந்திரன் போன்ற முகம் உடையவளே! எங்கு செல்கின்றாய்?" என்று சொல்லிக் கொண்டே மிகுந்த காதலுடன் அவள் அருகில் சென்றீர்கள். அவளைக் கையால் பிடித்துக் கொண்டு, ஒரு நொடியில் தேரில் ஏற்றிக் கொண்டு, அபஹரித்துச் சென்றீர்கள் அல்லவா? அப்போது பகைவர்களின் கூக்குரல் உலகெங்கும் பரவியது!
 
Status
Not open for further replies.
Back
Top