கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
க்வனு: க3த: (8)

"அந்த இ
டையன் எங்கே சென்று விட்டான்?" என்று சொல்லிக் கொண்டு கோபத்துடன் போருக்கு வந்த அரசர்களை யாதவர்கள் ஜெயித்தார்கள். நாய்களிடைய சிங்கம் கம்பீரமாக இருப்பது போன்றே அரசர்கள் இடையே தாங்கள் கம்பீரமாக இருந்தீர்கள் அல்லவா?
 
தத3னு ருக்மிணம் (9)

அதன் பிறகு போருக்கு வந்த ருக்மியைக் கொல்லாமல், அவனைக் கட்டி வைத்து, விரூபம் செய்து, மதம் அழிந்த அவனை பலராமன் சொற்படி அவிழ்த்து விட்டீர்கள். பிறகு லக்ஷ்மி தேவியின் அவதாரமான ருக்மிணியுடன் துவரகாபுரி சென்றீர்கள் அல்லவா?

 
Last edited:
நவ ஸமாக3ம (10)

ஈசா! புதுச் சேர்க்கையால் வெட்கம் கொண்ட மனதை உடையவளும்; அன்பினாலும், சந்தோஷத்தினாலும் அதிகாரித்த காமவிகாரத்தை உடையவளும்; மந்தஹாசத்தின் காந்தியால் விளங்குகின்ற முகத்தை உடையவளும்; ஆகிய ருக்மிணியை ஏகாந்தத்தில் சுகம் அனுபவிக்கச் செய்தீர்கள் அல்லவா?
 
Last edited:
விவித4நர்மபி4 (11)

இவ்வாறு பல பிரிய வசனங்களால் இரவும் பகலும் மிகவும் சந்தோஷத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்த தாங்கள், ஒரு நாள் விபரீதமான கடுஞ் சொற்களால் நேர்மையான அறிவையுடைய அந்த அழகிய பெண்ணுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணினீர்கள் அல்லவா?


 
தத3தி4கைரத2 (12)

பிறகு கடுஞ் சொற்களைக் காட்டிலும் அதிகமான லாலனம் செய்வதில் உள்ள சாமர்த்தியத்தினால் அன்பு கொண்ட அந்த ருக்மிணியை மீண்டும் சந்தோஷப் படுத்தினீர்கள். முக்தியைக் கொடுக்கும் கிருஷ்ணா! தங்கள் சரிதத்தை கானம் செய்யும் எங்களுடைய வியாதிகளால் உண்டாகும் சோர்வை அகற்ற வேண்டும்.

 
நாராயணீயம் (தசகம் 80)

ச்யமந்தகோ பாக்கியானம்

ஸத்ராஜித (1)

சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த பகவானே! சத்ராஜித் என்ற யாதவனுக்கு ஸ்யமந்தகம் என்ற அபூர்வ ரத்தினம் சூரிய பகவானிடமிருந்து கிடைத்தது. தெய்வத் தன்மை வாய்ந்த அந்த ரத்தினத்தைத் தங்கள் அந்நியன் பொருள் மேல் ஆசை கொண்டவனைப் போல யாசித்தீர்கள் அல்லவா? எனக்கு அதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது. தங்கள் மேல் ஆசைவைந்த அவன் பெண் சத்யபாமாவைத் திருமணம் செய்வதற்கே என்று.
 
அத3த்தம் தம் துப்4யம் (2)

அல்ப புத்தி படைத்த சத்ராஜித் அந்த ரத்தினத்தைத் தங்களுக்குத் தரவில்லை. அதை அவன் தம்பி பிரசேனன் கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். ரத்தினத்தின் காந்தியால் அதை மாமிசம் என்று கருதிய ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டது. ஜாம்பவான் அந்த சிங்கத்தைக் கொன்று விட்டு அந்த ரத்தினத்தைத் தன் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டான்.
 
ச'ச'ம்ஸு: (3)

சத்ராஜித்தின் சொல்லை நம்பியது மக்கள் கூட்டம். தாங்களே ரத்தினத்தைத் திருடியதாகப் பேசிக் கொண்டார்கள். நற்குணம் படைத்தவர்களின் சிறு தவறு கூட வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவுல் ஆகிறது. அதனால்
தாங்கள் தங்கள் பந்துக்களுடன் சென்று ரத்தினத்தைத் தேடினீர்கள். முதலில் பிரசேனனையும் சிங்கதையும் கண்டு பின்னர் ஜாம்பவான் குஹையை அடைந்தீர்கள் அல்லவா?
 
ப4வந்தம் (4)

வயது முதிர்ந்தவனும், சிறந்த பக்தனும் ஆன ஜாம்பவான்; தங்கள் இன்னார் என்று அறியாமலேயே, "விஷ்ணு பக்தன் என்னைத் தடை செய்ய யார் உண்டு?" என்று கேட்டான். "பிரபுவே! ராமா! ஸ்ரீ ஹரி! தாங்கள் மேன்மை பெற்று விளங்க வேண்டும்!" என்று அடிக்கடி உரக்கக் கூறிக் கொண்டு, த்வந்த யுத்தத்தில் இடது வலது சாரியாகப் பிரதக்ஷிணம் செய்து கொண்டு கை முஷ்டிகளால் நன்கு பூஜை செய்தான் அல்லவா?
 
அத2 பு3த்3த்4வா (5)

பிறகு தங்களை இன்னார் என்று அறிந்து கொண்டு தன் பெண் ரத்தினம் ஜாம்பவதியையும், ஸ்யமந்தக ரத்தினத்தையும் தங்களுக்குச் சமர்பித்தான் அல்லவா ? அவனை அனுக்ரகம் செய்து விட்டு வந்து உடனேயே ச்யமந்தக மணியை சத்ராஜித்திடம் திரும்பத் தந்தீர்கள் அல்லவா?
 
நாராயணீயம் தசகம் 80

ததனு ச கலு (6)

அதன் பின்னர் வெட்கத்தால் மனம் இளகிய சத்ராஜித் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்தான். வாக்கினால் மட்டும் சதாதன்வா என்ற வேறு ஒருவனுக்கு அளிக்கப் பட்டிருந்த சலிக்கின்ற கண்களை உடைய தன் பெண் சத்யபாமையை ரத்தினதுடன் தங்களுக்கு அளித்தான். தாங்களும் அந்த ரத்தினத்திடமிருந்து கிடைக்கும் சுவர்ணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மணியை சத்ராஜித்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள் அல்லவா?
 
வ்ரீலாகுலாம் (7)

வெட்கம் அடைந்த சத்யபாமையுடன் தாங்கள் ரமித்து இருக்கும்போது குந்தியின் பிள்ளைகள் தீயில் வெந்தனர் என்ற செய்தி கேட்டு உடனேயே குருதேசத்துக்குச் சென்றீர்கள். அப்போது அக்ரூரன், கிருதவர்மன் ஆகியோரின் பேச்சைக் கேட்டு
சததன்வா சத்ராஜித்தைக் கொன்றுவிட்டு ரத்தினத்தை அபகரித்தான்.
 
சோகாத் குரூன் (8)

தகப்பன் இறந்த வருத்தத்தால் குருதேசத்திற்கு வந்த மனைவியைக் கண்டு விரைந்து சததன்வாவைக் கொன்று அவளை சந்தோஷப்படுத்தினீர்கள் அல்லவா? பலராமன் ரத்தினத்தின் விஷயத்தில்
சந்தேகம் கொண்டு மிதிலை அரசன் அரண்மனைக்குச் சென்று துரியோதனனுக்கு கதாயுதப் பயிற்சி அளித்தார்.
 
அக்ரூர ஏஷ (9)

அக்ரூரன் தங்கள் விருப்பத்தாலேயே துர்நடத்தை உடைய சத்ராஜித்தின் மரணத்தை நிகழச் செய்தார். தாங்களும் அக்ரூரனுக்கு அளிப்பதற்காகவே சத்ராஜிதனிடம் இருந்து ரத்தினத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.

 
ப4க்தஸ்த்வயி (10)

ஹே ஈச! அந்த அக்ரூரன் தன்ளிடம் மிகவும் ஸ்திரமான பக்தி உடையவன் அல்லவா? அப்படிப்பட்டவனுக்கே புத்தி ஏன் தீய வழியில் சென்றது? "நான் அறிவுடையவன். நான் மன சாந்தி உடையவன்" என்னும் அவனுடைய கர்வத்தை அடக்கத் தங்களால் செய்யப்பட்டதே அது.
 
யாதம் ப4யேன (11)

ஹே! குருவாயூரப்பா! பயத்தால் கிருதவர்மனுடன் ஓடிச் சென்ற அக்ரூரனை மறுபடியும் வரவழைத்து சததன்வா அவனுக்கு ரத்தினத்தைக் கொடுத்ததாக பிரகடனப் படுத்தினீர்கள். விரத, பூஜைகளை செய்து வந்த அக்ரூரனிடத்திலேயே அதைக் கொடுத்துவிட்டீ
ர்கள். சந்தோஷமாக சத்யபாமையின் குசங்களின் இடையே பள்ளி கொண்டிருந்த தாங்களே காப்பாற்ற வேண்டும்
 
நாராயணீயம் தசகம் 81

சுபத்ரா ஹரண வர்ணனம்

ஸ்நிக்தாம் முக்தாம்(1)

மிகவும் பிரியம் உள்ளவளும், அழகுள்ளவளும் ஆகிய சத்தியபாமையை எப்போதும் இன்புறச் செய்து கொண்டு இருந்தீர்கள். பிறகு அவளுனடனேயே திரௌபதி விவாஹத்திற்குச் சென்றீர்கள். பாண்டவர்கள் சந்தோஷத்திற்காக சில நாள் ஹஸ்த்தினாபுரத்தில் வசித்தீர்கள். இந்திரப் பிரஸ்தம் என்ற பட்டணத்தையும் உருவாக்கினீர்கள் அல்லவா?
 
ப4த்ராம் ப4த்ராம் ப4வதவரஜாம் (2)

மிகுந்த அழகியாகிய தங்கள் தங்கை சுபத்திரையை துரியோதனன் விரும்பினான். ஆனால் உங்கள் திருவாக்கின்படி கபட சந்நியாசி ஆகிய அர்ஜுனனன் அவளை அபகரித்தான். இந்த விஷயத்தில் மிகுந்த கோபம் கொண்டார் பலராமன். அவரை சமாதானப்படுத்தி சத்யபாமையுடன் இந்திரப்ரஸ்தம்சென்றீர்கள் அல்லவா?
 
மற்ற மகிஷிகளை விவாஹம் செய்வது

தாத்ரா கிரீடன் அபி (3)

அப்போது இந்திரப்பிரஸ்தத்தில் பொழுதுபோக்கிக் கொண்டு இருந்த தாங்கள் காண்டவ வனத்தைக் கெடுத்து அக்னியைத் திருப்தி செய்தீர்கள். யமுனைக் கரையில் காணப்பட்ட காலிந்தீ என்பவளைப் பெற்றுக்கொண்டீர்கள். துவாரகை திரும்பினீர்கள். சகோதரர்களிடம் அஞ்சிய, தங்கள் மேல் உள்ள காதலால் தன் வசம் இழந்த, அ
த்தை மகளாகிய, அவந்தி தேசத்து அரசன் மகளாகிய மித்ரவிந்தை என்பவளை, அரசர்களுக்கு மத்தியில் விரைந்து அபகரித்தீர்கள் அல்லவா?
 
ஸத்யாம் க3த்வா (4)

ஒருநாள் அயோத்திகுச் சென்று ஏழு உருவங்களை எடுத்துக் கொண்டீர். ஏழு சிறந்த காளைகளை ஒரு நொடியில் கட்டினீர்கள். நக்னஜித் என்ற அரசன் மகளாகிய சத்தியை என்பவளை விவாஹம் செய்தீர்கள் அல்லவா? பிறகு சந்தர்த்தனன் முதலியவர்கள் பத்ரை என்னும் அவர்களின் சகோதரியைத் தங்களுக்குத் தந்தார்கள். அவளும் தங்கள் அத்தை மகளே.
 
பார்தா2த்3யை: அபி (5)

அர்ஜுனன் முதலானவர்களால் கூட அறுக்கப் படாததும், நீரில் மட்டுமே பார்க்கக்கூடியதும், மீன் உருவம் கொண்ட இலக்கத்தை அறுத்து மத்ர தேசத்து அரசன் பெண் லக்ஷ்மணை என்பவளை வரித்தீர்கள். இப்படித் தங்களுக்கு எட்டுப் பத்தினிகள் அமைந்தார்கள். இதற்கிடையில், தாங்கள் நரகாசுரனுடைய தீச்செயல்களை தேவேந்திரன் கூறக் கேட்டீர்கள் அல்லவா?
 
நரகாசுர வதம்

ஸ்ம்ருதாயதாம் (6)

தாங்கள் நினைத்த மாத்திரத்தில் வந்த பக்ஷிராஜன் கருடன் முதுகின் மேல் ஏறிக்கொண்டு மடியில் சத்யபாமையை வைத்துக் கொண்டு நந்த வனத்துக்குச் செல்பவர் போல சத்ருவின் இருப்பிடத்துக்குச் சென்றீர்கள். சென்ற உடனேயே கோட்டையை உடைத்தீர். கொல்லப்பட்ட சேனைகளின் ரத்தநீரால் பிராக்ஜோதிஷபுரம் என்ற பட்டணத்தைச் சோணிதபுரமாக மாற்றிவிட்டீர்கள் அல்லவா?
 

முரஸ்த்வாம் (7)

ஐந்து தலைகளை உடைய முரன் என்பவன் சமுத்திர நீரின் நடுவில் இருந்து தங்களை எதிர்த்து வந்தான். விரைந்து சக்கர ஆயுதத்தால் அவன் தலைகளை அறுத்துத் தள்ளினீர்கள். நான்கு கொம்புகள் உடைய சிறந்த யானைகளுடன் மேலும் மேலும் விருத்தி அடைந்த போர் புரியும் நரகாசுரனை சக்கர ஆயுதத்தால் வெட்டி, நரகத்தைத் தாண்டி மோக்ஷம் அடைந்தவனாகச் செய்தீர்கள் அல்லவா?

 
சஸ்துதோ பூ4ம்யா (8)

பூமி தேவியால் துதிக்கப்பட்டு, உடனே நரகாசுரானின் மகனான பகதத்தனிடம் ராஜ்ஜியத்தையும், ஒரே ஒரு யானையையும் ஒப்படைத்தீர். மற்ற யானைகள், நரகாசுரனால் பந்திக்கப்பட்டுத் தங்களிடத்தில் மனம் லயித்திருந்த பதினாறாயிரம் பெண்களையும், செல்வக் குவியலையும் தங்கள் நகருக்கு அனுப்பினீர்கள் அல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top