• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓ அமெரிக்கா ...


Thank you dear Bushu for your feed back. If I stay here in the US for years together, I may also become like you!

Best wishes, Raji :)

Raji,

I have nothing but admiration for your posts, I simply feel as a group of immigrants we have been here too long and this has become our home and like our forefathers, got out of the village and set up shop in bigger cities and got absorbed, so did we.. so it is just we have become more tolerant and also more let it go attitude, since we are not the ones who are in that boat.

To a great extent we bring up our children the Indian way, and they too hold good values.. I can say this about my children and so many friends children.. I think our future generation is a beautiful blend of East and West and so are we.. so becoming like me is not so bad Raji.. :)

by the way, I was trying to explain to Talwan sir about parents not being or being taken care of and it had nothing to do with your writing.. like I said, I admire writers like you very much and I appreciate that you are doing this so much in detail for everyone to enjoy around the world..
 

வேலையில் ஈடுபாடு.


எந்த வேலையும் சிரித்த வண்ணமே செய்வர்;

அந்த விஷயத்தைப் பாராட்ட வேண்டும், இங்கு!

சென்னை மாநகரில், வேலைக்கு வருவோரின்
பின்னே அலைவது போன்று இங்கு கிடையாது!

சரியாகத் தாம் சொல்லிய வேளையிலே வந்து,
சரியாகத் தம் வேலையை முடித்துச் செல்வார்.

மாற்றங்கள் ஏதும் இருந்தால், அதை வேலை
ஏற்ற நேரத்திற்கு முன்னே சொல்லிவிடுவார்.

இல்லங்களைத் துப்புரவு செய்யும் பணியாளர்
எள்ளளவும் பேராசை கொள்ளவும் மாட்டார்.

விலை உயர்ந்த, மனம் கவரும் பொருட்களும்,
நிலை மாறாது, வைத்த இடத்திலே இருக்கும்.

தம் வயது முதிர்ந்த பெற்றோரைப் பாதுகாக்க,
நம்மவர் நாடுவதும், பணியாளர்களைத்தான்!

குளிக்கவும், உடை மாற்றவும், துவைக்கவும்,
களிப்புடன் வந்து உதவிடுவார்; ஒரு மணிக்கு

இருபது டாலர் போலச் சம்பளம் கேட்டிடுவார்;
ஒரு நொடியும் வீணாக்காது வேலை செய்வார்.

இந்த முறை அமெரிக்க விஜயத்தில், இதுபோல
வந்த செய்திகளால், மன அமைதி கிடைத்தது!

:peace:
 

இயற்கையின் வினோதங்கள்!


இலையுதிர் காலத்தின் வண்ணக் கலவைகள்,
இயற்கையின் ஓவியமாகச் சில இடங்களில்!

தன் காலம் முடிந்த பின்னும் பூத்தன, அழகிய
மென் மலரான ரோஜாப் பூக்கள், தோட்டத்தில்.

அக்டோபர் மாதம் ரோஜாவா என வியந்திட,
அதற்கும் மேல் இன்னொரு வியப்பு வந்தது!

வெண்மை நிறம் அதிகம் காணா வேளையில்,
வெண்மைப் பனிப் பொழிவு, அதைச் சேர்த்தது!

விநோதமாக, திடீப் பனிப் பொழிவும் வந்தது!
வினோதம் கண்டு, உள்ளம் மிகத் துள்ளியது!

முதல் முறை அனுபவிக்கும் எதுவும் இனிதே!
முதல் முறை நான் கண்ட பனிப்பொழிவு, இதே!

அதீத ஆவலில், கையுறையும் கூட அணியாது,
அந்தப் பனித் துளிகளைப் பிடிக்க விழைந்தேன்!

சுடும் சூரியனின் கடும் வெப்பமும், குளிப் பனி
தரும் நடுக்கமும், இந்த விஜயத்தில் கிடைக்க,

இயற்கை அன்னையின் புதுப் பரிமாணங்களை,
வியந்து போற்றி, மன நிறைவும் அடைந்தேன்!

சின்னச் சின்னப் புதுமைகளையும், மனதிலே
எண்ணி எண்ணி ஆனந்திக்க அறிதல், நலமே!

:dance:
 
........Long time no hear.Good Kavitha the latest one.Keep going on...

Dear Sir,

I am writing regularly in the other two threads. Updates of our experiences in the US are posted in
பயணக் க(வி)தைகள். Hope you will enjoy reading them too. :ranger:

Regards.........
 

ரோஜாவும், பனிப் பொழிவும்!


ரோஜாக்களின் மாதமே, ஜூன் மாதம்தான்;
ரோஜாக்கள் அக்டோபரில் வருவது அதிசயம்!

குளிர் பனி பொழியும் காலம், டிசம்பர் மாதமே;

குளிர் பனி அக்டோபரில் வருவது அதிசயமே!

பனிப் பொழிவிலே ரோஜா ஒன்று சிறைப்பட,

பனியில் சென்று, காமராவில் சிறைப்பிடிக்க,

அருமையான அரிய காட்சியாக அது தெரிய,

அருமையான வாசகர்களுக்கு அளிக்கிறேன்!

:photo:

DSCN7324.JPG
 

ஆலை இல்லா ஊருக்கு....


அமெரிக்காவில் அமர்க்களமாக செட்டிலான பின்னும்,

அமரிக்கையான நம்ம கலாச்சாரத்தை வேண்டுகிறார்!

இந்தியக் கலாச்சாரத்தில்
குழந்தைகளை வளர்த்திட,
இந்தியர் பலர் முயற்சி செய்து வந்தாலும், அவ்வாறு

செய்வது எத்தனை கடினம் என்பது, அந்த நாட்டிற்குச்
சென்று வந்தால்தான் புரிந்துகொள்ள முடியும்! அங்கு

வானிலை முதல் வாழ்க்கை முறை வரை எல்லாமே
மாறி இருப்பதால், நம் வாழ்வு முறை அங்கு கடினமே!

நம்ம நாட்டுச் செருப்பு கூட வேகமாகத் தேய்ந்துவிடும்!
நம்ம நாட்டு உடைகளும், உபயோகமில்லாது போகும்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு தேர்வு நடக்கிறது;
தொலை தூரம் வந்து சில குழந்தைகளும் பாடுகிறார்.

எத்தனை கற்றுக் கொடுத்தும், இங்கு வாழ்பவர்போல்
அத்தனை அழகாகக் குழந்தைகள் பாட முடியவில்லை.

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது
நாளும் நாம் கேட்கும் பழமொழி அல்லவா? இது நிஜமே!

ஆனாலும், நம்ம கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொண்டு

ஆசையுடன் பாடும் அவர்களைப் பாராட்டவே வேண்டும்!
:lalala: :clap2:
 

நேர மாற்றம்!


கோடைக் காலத்தில், தன் பணியை என்றுமே
சோடை போகாமல் புரியும் ஆதவன், எழுவான்

நாலரை மணிக்கே! இரு மாதங்கள் சென்றால்,

ஆறரை மணி என மெதுவாக வருவான்; பின்பு

இன்னும் ஒரு மணி நேரம் அதிகம் உறங்குவான்;

மின்னும் ஒளிக்கிரணம் வர ஏழரை மணி ஆகும்!

ஆதவனை விரைவில் எழுப்ப என்ன செய்யலாம்?

ஆதவனுக்கு ஏற்றபடி நேரத்தை மாற்றிவிடலாம்!

ஆம்! நவம்பர் மாதம் வந்தவுடன், சில பகுதிகளில்,

நேரம் மாற்றப்படும் அறுபது நிமிடம் முன்னதாய்!

நேரம் மாற்றும் இரவில் ஆச்சரியம்தான். தூங்கும்

நேரம் ஒரு மணி அன்று அதிகரித்துவிடும். வசந்த

காலத்தில்
மீண்டும் தொலைத்திடும் நேரமாயினும்,

காலை நேரம் விரைவிலே வந்திடுவானே ஆதவன்!

மாலை ஐந்து மணிக்கே இருள் பரவிவிடும்; ஆனால்,

வேளை தவறாது வரும் விடியல் உயர்வே அல்லவா?
:peace:
 
Posting this again because the Thanksgiving day is special in the USA!

thanksgiving_101.gif


அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன்,
அமர்க்களமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவதே,

நன்றி தெரிவிக்கும் Thanksgiving Day என்னும் விழா; இந்த
நன்றி தெரிவித்தல், ஆண்டவன் அருளிய நலன்களுக்காக.

ஆண்டவனை, தொடர்ந்து நல்வாழ்வு தரவும் வேண்டுவர்.
ஆண்டவனை நம்பாதோர், தனக்கு உதவி செய்வோருக்கு,

நன்றி பாராட்டி, அவர்களை அழைத்துப் பரிசுகள் வழங்கி,
நல்ல விருந்து படைத்து, கூடி உணவை உண்டு மகிழ்வர்.

வான்கோழிகள் தலை தெறிக்க ஓடும்! ஏன் தெரியுமோ?
வான்கோழிகளை வதைத்து உணவுகள் செய்வதால்தான்!

கருப்பு நிறம் லாபத்தைக் குறிக்குமாம்! மறுநாள் வெள்ளி;
விருப்புடன் தள்ளுபடி விற்பனை; அந்நாள் கருப்பு வெள்ளி!

விற்பனை செய்து, நிறைந்த லாபமும் பெற்று சிறந்திடவே
கற்பனை செய்து, குறைந்த விலையில் விற்க முனைவர்!

ஒரு போலீஸ் அதிகாரி, வண்டிகளின் நெரிசலால், இதைக்
கருப்பு வெள்ளி என்று கூறினார் என்றும் சொல்வதுண்டு!

நீண்ட வார விடுமுறையாக வருவதால், பலர் தவறாமல்
நீண்ட பயணம் செய்து, சுற்றம் நட்பைக் கண்டு மகிழ்வர்!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அல்லவா? இந்த நன்நாள்
கூடி மகிழ சந்தர்ப்பம் தருவதால், பொன்நாளே எனலாம்!

:dance:. . . :dance:
 
Posting this again because the Thanksgiving day is special in the USA!
Some more tid bits about Thanksgiving day....

Canada also celebrates Thanksgiving, but a little earlier than USA.

It was celebrated on different days by different states and it was Lincoln who made it into a national holiday on the same day all over USA. It was the final Thursday until FDR, who made the 4th Thursday in November Thanksgiving day in 1941.

Obama gave a radio address to mark the holiday and did not mention god in his two and half minute speech, and all hell broke lose in the conservative blogosphere. He did mention god in the last two Thanksgiving addresses.

No presents are exchanged during Thanksgiving (exchange of gifts is done for Christmas), only food, beer and football -- the U.S. kind, one that does not involve feet except one single player from each team who kicks the oblong shaped ball.

Thanksgiving day marks the beginning of Christmas holiday season, i.e. shopping season. All the Christmas decorations will come out in the lawn, Christmas tree will be put up inside homes, shopping malls will be crowded, difficult find parking, long lines at checkout, traffic everywhere, pretty miserable if you ask me, this is why I never go shopping -- any time of the year :).

Christmas is celebrated by everyone, it is no longer a Christian holiday. It is the time to make holly and jolly, drink and make merry. It is no longer Merry Christmas, it is Happy Holidays, something that drives the Conservative Pundits nuts.

But, there is a darker side, as they sing:

Deck the halls with boughs of holly,

Fa la la la la, la la la la.

'Tis the season to be jolly,
Fa la la la la, la la la la.


it is the most depressing of times for many folks who see all this holly and jolly all around, but in their own lives there is no one to care, no one to share, no holly and no jolly. Suicide and attempted suicide peak to levels second only to Spring time.

Cheers!
 
Thank you Prof Sir for your feed back. My sister in law who lives in West Virginia invites her relatives and friends for

thanksgiving and presents gifts to them and hence I thought it was a custom in the US! May be, she has added an

Indian touch to thanksgiving!

Regards.........

PS: My brother in law used to say, why only the ladies are given blouse bits along with 'thamboolam' when they visit
relatives or friends and guys don't get shirt bits? :decision:
 

சூரிய சக்தி!


solar-water-heating1.jpg


மின்சாரம் அதிகமான செலவு வைப்பதால்,

மின்சாரம் சேமித்திடும் வழிகளைக் கண்டு,

சூரியனிடம் சக்தியைப் பெறுகின்ற வழியை,
சீரிய முறையில் தேடுகின்றார், இந்நாட்டில்.

வெந்நீர் வரவு எப்போதும் தேவையானதால்,
வெந்நீர் தயாரிக்க சூரியனை நாடுகின்றார்!

சூடான கிரணங்கள் வராவிட்டாலும், அந்த
சூரியனின் ஒளியே போதுமெனக் கூறினர்!

பல வீடுகளில் கூரையில் இந்தப் Panel கள்,
அழகாக அமைந்திருப்பதைப் பார்த்தோம்.

வீட்டின் புல்வெளியில், இவற்றை மகன்
வீட்டில் அமைத்துள்ளார்; சேமிப்பு வாழ்க!

:popcorn:
 

வார விடுமுறை...


வார விடுமுறைக்கு வேண்டி, விரும்பி,

வாரம் ஐந்து நாட்களும் காத்திருப்பார்!

வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்க,
வீட்டுப் பராமரிப்புப் பணிகளைச் செய்ய,

உணவு வகைகளைச் சமைத்து வைக்க,
உள்ளாடை முதல் எல்லாமே துவைக்க,

இறைவனை வேண்டக் கோவில் செல்ல,
இனிய நட்பு வட்டத்தை சந்திக்க, என்று

எல்லாவற்றுக்கும் வார விடுமுறையை,
எல்லோரும் எதிர்பார்த்து இருக்கின்றார்!

பிறந்த தேதி எப்போது வந்தாலும், அந்தப்
பிறந்த நாளைக் கொண்டாடக் கூடுவதும்

வார விடுமுறையிலேதான்! இதனாலே,
வார விடுமுறையும் உயர்வு பெறுகிறது!

:couch2: . . . :grouphug: . . . :thumb:
 

அதுதான் அமெரிக்கா!


பாஸ்டன் நகருக்கு எம்மைக் காண, நியூயார்க்கிலிருந்து
பாசமுடன் வந்தான் எங்கள் நண்பரின் மகன். அதுபோல,

ஒரு நாள் சந்திப்பிற்காக, ஆறு மணி நேரம் பயணித்து, எம்
உறவினர்களைக் காண நாங்களும் சென்றோம்! ஆனால்,

சில மைல்கள் சென்று நம்முடைய நண்பரைக் கண்டு வர,
சிங்காரச் சென்னையிலே ஏன் மனம் வருவதே இல்லை?

நூறு மைல்கள் பயணிக்கச் சலிக்காமல் செல்லும் நாம்
ஆறு மைல் பயணத்திற்குச் சலித்துக் கொள்ளுவது ஏன்?

நிலவின் குழிகள் போல, பரந்து விளங்கும் தெருக்களாலா?
அலகில்லா ஜனப் பெருக்கத்தால் நெருக்கும் வழிகளாலா?

விலைவாசி ஏற்றத்தால் பெருகிய வண்டிச் செலவினாலா?

விரிவாகப் பேசிக்கொள்ளத் தொலைபேசியே இருப்பதாலா?

இனிய பயணங்கள் மேற்கொண்டு, சுற்றம் நட்புக் காண
இனிய வழிகள் வகுப்பது, அமெரிக்க வாழ்க்கைதானோ?

:car:
 

எல்லாம் இன்ஷ்யூரன்ஸ் மயம்!


உடல் நிலையில் பாதிப்பு வந்தால்,
முதல் கேள்வியாக, மருத்துவர்கள்

இன்ஷ்யூரன்ஸ் பற்றிக் கேட்பார்கள்,
இந்நாட்டு மருத்துவ மனைகளில்!

சிங்காரச் சென்னையில், இதுபோல
எங்கும் கேட்பதில்லை; கத்தையாகச்

செலுத்தியபின்தான், மருத்துவமே
செய்ய ஆரம்பிக்கும் நிலை, இன்று!

மருத்துவ உதவி பாஸ்டனில் பெற்று,
மாதங்கள் ஏழு ஆகிவிட்டன; ஆனால்,

இன்னும் பேரம் நடக்கிறது, அந்த Billஐ
ன்னும் குறைத்துப் போடுவதற்கு,

இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கும், அந்த
இனிய மருத்துவமனைக்கும்! நாங்கள்

இதுவரை பணம் செலுத்தாததை, நான்
இப்போதும் நம்பவே முடியவில்லை!
 
இது என் நாடு!

அமெரிக்காவில் சென்று சில ஆண்டுகள் ஆகி,

அமெரிக்கக் குடிமகன்களாகவும் மாறிய பின்பு,

அந்த வாழ்வு முறைதான் இனிப்பாக இருக்கும்;
எந்த வித இடர்பாடுகள் எதிர் வந்து நின்றாலும்!

'தோட்டி முதல் தொண்டைமான் வரை', என்பது
ஏட்டில் பலர் படித்தது; அமெரிக்க வாழ்வே அது!

வசதி படைத்தவர், வேலையாட்களை அமர்த்தும்
வசதி செய்துகொள்வர்; மற்றவர்கள் எல்லோரும்,

'தன் கையே தனக்கு உதவி' என்ற பழமொழியைத்
தம் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்திடுவார்!

செல்வம் சேர்த்ததும், தாய்நாடு திரும்புவேன் என,
சொல்லிச் செல்பவர்கள்கூட, வருவது இயலாது!

எத்தனை செல்வம் சேர்ப்பது என்பதும் தெரியாது;
எப்படிக் குழந்தைகள் ஒப்புக்கொள்வார்? முடியாது!

இந்நிலையில் தம் நாடு என அவர்கள் எண்ணுவது,
இந்தியாவை அல்ல! அமெரிக்க நாட்டையேதான்!

:love:
 
'நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்!', என்று பாரதி பாடினார் அல்லவா?
அதனால், அமெரிக்கக் குடிமகன்களுக்கு, அமெரிக்காவே தம் நாடு!
:peace:
 
வாதாடும் வக்கீல்கள்!

எக்காலத்திலும் நம்மால் சில விவாதங்களை,

வக்கீல்களின் சாதுரியத்துடன் செய்ய முடியாது!

வீதி ஓரம், சாதுவாக நடந்து சென்ற என்னவரை
மோதி ஓடிய van உரிமையாரின் கம்பெனி மீது,

நஷ்ட ஈடு கேட்டு வாதாடிய அமெரிக்க வக்கீல்,
கஷ்டம் எமக்குத் தராது, நன்கு செயல்பட்டார்!

இன்ஷூரன்ஸ் கம்பெனியில் நஷ்ட ஈடு வாங்கி,
தன் பங்கு எடுத்துக்கொண்டு, எம் பங்கு தந்தார்!

இந்தியாவில் எங்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனி
இன்னும் பேரம் பேசியபடியே இருக்கிறது! M.G,H

மருத்துவமனைக்கு அளிக்க வேண்டிய தொகை
நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது, இப் பேச்சால்!

:blah:
 

தர்மம் தலைகாக்கும்.

நாம் உபயோகிக்காத நல்ல பொருட்களையும்,

நாம் இப்போது போடாத நல்ல உடைகளையும்,

சிறியவர் விளையாடிய பொம்மைகளையும்,
சிறிய சேதமும் இல்லாவிடில், கொடுக்கலாம்!

இவற்றைப் பெற்றுக்கொள்ளச் சில மையங்கள்;
இவற்றைக் குறிப்பிட்ட நாளில் சேகரிக்கின்றார்.

எந்த நாளில், எந்த நேரம் தரலாம் என்று அறிந்து,
அந்த நாளில் அவைகளைக் கொடுத்துவிடலாம்.

நல்ல நிலையில் இருக்கும் துணிகளை எல்லாம்
நன்கு சலவை செய்து அளிப்பதை எதிர்பார்ப்பார்.

அழுக்கு ஏறாத சோபா, நாற்காலி
போன்றவற்றை
எடுத்து தானமாக அளித்துவிடலாம். இதுபோலச்


சேவை மிக நல்லது! புதியவை
வாங்கும்பொழுது,
தேவை என்போருக்குப் பழையதை அளிக்கலாமே!

ஒரு விநோதமும் காணலாம்; நல்ல பொருட்கள்
தெரு ஓரம் கிடந்தால், மாணவர் எடுத்திடுவார்!

:popcorn:


 
Over the past 10 years, Charity Navigator’s free charity ratings have enabled millions of donors to access relevant

information before they make a donation --- giving them the peace of mind they desire.




10_Year_Anniversary_Banner.png
 
Hello Ms.Raji,

I wholeheartedly agree with the sentiment that India picks up the "bad" things from the American culture more readily than the "good" things (even though good and bad may be relative). Ignoring parents, eating processed junk and promoting it as "healthy" on TV, building homes way out of one's comfort zone, keeping up with the neighbors etc are all vices we have picked up from here.

The flip side of the "clean", "sanitary", "by-the-books" life style - as most of us live in the USA - is that we do not have any time for letting go and living for ourselves. I am actually guilty of it myself to some extent! I used to wonder about "America" like you did here, but I am somewhat disillusioned about the highly controlled, highly scheduled and stressful life.

May be what we (Indians) need to do is reach back to our spiritual roots, revive the simplistic (wholistic) lifestyle, and imbibe that quality into our sons and daughters rather than buy them the latest gadgets and the most expensive gifts...just some random thoughts on a reflective Sunday afternoon....

--- Balaji
 

Latest ads

Back
Top