மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... IV
அரைக் குவளை நீரில் பல் தேய்த்து, முகம் துடைத்து,
விரைவாக 'பஸ்' பிடிக்க எண்ணி, அவன் சென்றான்.
'பஸ் ஸ்டாண்ட்' பாதாளத்தில்; விளக்கில்லை; கும்மிருட்டு!
பஸ் அனைத்தும் சென்றன, வீதியிலிருந்தே புறப்பட்டு!
எவரிடமும் பணமில்லை A T M எதுவும் இயங்காததால்;
பலரிடமும் I D CARD இருந்ததால் அன்று பிழைத்தார்கள்!
டிக்கட் காசு இல்லாதோர், அதை அடமானம் வைத்து - 'கனெக்
டிக்கட்' டில் A T M உபயத்தால் அதைத் திரும்பப் பெற்றார்கள்!
(கனெக்டிக்கட் என்ற ஊர் N Y - BOSTON வழியில் உள்ளது)
சப்வே ரயில் வேண்டாம்; மின்சார பஸ் வேண்டாம்;
இப்போ வீடு செல்ல வேண்டும் என்று தோன்றியதாம்!
பாஸ்டனில் இறங்கியதும், பார்த்த முதல் CAB இல்,
பாங்காக இனிய இல்லம் விரைந்தான் - வழியில்
'இன்று இங்கு A T M இயங்குமா?' எனக் கேட்டான்;
'நன்று! இயங்குமே!' என்ற பதில் வந்தாலும்,
பண நோட்டே இல்லையோ உங்களிடம் என்பதுபோல்
கணம் நோட்டமிட்ட ஓட்டுனர், A T M இல் நிறுத்தினார்!
வீணாகப் பொழுது போக்காமல், நேராக வீட்டுக்கு வந்தான்;
காணாததைக் கண்டதுபோல குளியலறைக்கு விரைந்தான்!
ஒரு மணி நேரம் ஆசை தீர நீராடி மகிழ்ந்தான்;
சிறு பாடம் கற்றான், இம்முறை, பயணத்தால்!
என்னதான் வசதிகள், செல் உலாக்கள்,
வண்ண விளக்குகள், A T M கள் இருந்தாலும்,
பயணத்திற்கென்று ஒரு அட்ரஸ் புத்தகமும்,
பயபக்தியுடன் வேண்டிய பணமும், டார்ச் லைட்டும்,
அவசியம் கொண்டு செல்ல வேண்டும்; இல்லையேல்
அனாவசிய இன்னல்களைச் சந்திக்க நேரிடும்! :nod: :wave: