• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓ அமெரிக்கா ...

Thanks for your kind appreciation, Sir!

Google transliteration (indic/ Tamil) helps to write Tamil fonts. If the email id is in gmail, all the more easy! The page to compose mails has many language options and 'Thanglish' typing is needed to get Tamil fonts! Pl. check just before the BOLD font option for the language option. In other mail systems, message after the transliteration should be copy pasted in the necessary place.

Regards,
Raji Ram
 
அன்புள்ள ராஜி ராம் அவர்களுக்கு,

தங்கள் தமிழ் ஆர்வம் கண்டு வியக்கிறேன். தங்களுடைய கூர்மையான கவனிக்கும் திறனையும், தாங்கள் கண்டதை நேர்த்தியாகவும், கோர்வையாகவும் தங்கத் தமிழிலே வடித்துத் தந்தமைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
 
என் படைப்புகள் பாராட்டுப் பெறும்போது மிக்க மகிழ்ச்சியே!

நன்றி,
ராஜி ராம்
 
மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... I

குறிப்பு:

ஒரு முறை நியூயார்க்கைக் கலக்கிய சில மணி நேரப்
பெரும் மின் வெட்டு, அனைவருக்கும் நினைவிருக்கும்!

அந்நாளில் மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்ட மகன்
தன் அனுபவங்களை உரைக்க, மலர்ந்தது இக் கவிதை.

************************************************

தொடர்ந்து நாற்பது மணி நேரம் உழைத்து ஓய்ந்தபின்,
அயர்ந்து நன்கு உறங்கலாம் என அவன் எண்ணினான்!

அலுவலகம் விட்டு வெளியேறியபோது, வேறோர்
அலுவலும் இருப்பது அவன் நினைவிற்கு வந்தது!

மான்ஹாட்டனில் இரு நாளில் மீட்டிங் ஒன்று உள்ளது;
அவன் போக வேண்டிய கட்டாயமும் உள்ளது! எனவே

விமான டிக்கட் எடுத்தார்கள்; கொடுத்தார்கள். அந்த
விமானம் மறுநாள் காலை நாலரைக்கு ஏற வேண்டும்!

கிடைத்த கொஞ்ச நேரத்தில் அயர்ந்து உறங்கிவிட்டு,
அடுத்த நாள் விரைந்து சென்று விமானம் ஏறினான்!

மான்ஹாட்டனில் அவன் தங்க இரு அறைகள் உள்ள இடம்;
அவன் கொண்டு சென்ற சிறு பைக்கு அது மிக அதிகம்!

இரு நாள் பயணம்தானே என்று எண்ணிக்கொண்டு,
ஒரே ஒரு மாற்றுடைதான் கொண்டு சென்றிருந்தான்!

வசதியாக இருந்த அறையில் சில மணிகள் தங்கிவிட்டு,
அசதியாகும் வரை நண்பனுடன் 'ஷாப்பிங்' சென்றான்.

'மீட்டிங்' மறுநாள் நன்றாக நடந்தது - இடையிடையே
'ஈட்டிங்'கும் அருமைதான்; ருசியாக இருந்தது!

ஆனால், மாலை நாலு மணிக்கு ஒரு FIRE ALARM - வெளியே
போனால் புகையோ, தீயோ கண்ணிலே படவில்லை.

எல்லோரும் மெதுவாகக் கீழ்த்தளத்தில் கூடுகின்றார்;
எல்லோரும் படிக்கட்டு வழியாகவே வருகின்றார்!

செல் உலாப் பேசியில் பேசவும் முடியவில்லை - அந்தச்
செல் உலா எங்கோ உலாச் சென்று விட்டது!

ஒருவருக்கும் 'கனெக்க்ஷன்' கிடைக்கவில்லை - அந்தத்
தெருவிலும் எந்த 'சிக்னல்' விளக்கும் எரியவில்லை!

அப்போதுதான் புரிந்தது மகனுக்கு - அங்கே
அப்போது 'பவர் கட்' ஆகிவிட்டது என்று! :shocked:

தொடரும்...

 
மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... II

பக்கத்துக் கட்டிடத்தில் 'பவர்' வரும் வரை நண்பன்
பக்கத்தில் இருக்க எண்ணி அங்கு அவன் சென்றான்.

நண்பனைக் காணவில்லை! LIFT ல் மாட்டினானோ?
எண்ணியபடியே சில நிமிடம் காத்திருந்தான்.

விமானம் ஏறி BOSTON சென்றுவிட எண்ணினால், எந்த
விமானமும் போகவே இயலாது என்றார்கள்! 'அட

ஹோட்டல் அறையையும் காலி செய்துவிட்டேனே!'
ஹோட்டலில் மறுபடியும் அறை எடுக்க எண்ணினான்.

கணினி இன்றி எதுவுமே நடக்காதே! அதனால்
கணிசமான் நேரம் 'பவர்' வரக் காத்திருந்தான்!

மக்களெல்லாம் தவித்தனர். கழிவறைகள் ஏதுமில்லை!
திக்கின்றித் திணறினர். வீடுகளில் உள்ளவர்களோ,

யாருக்கும் அனுமதி கிடையாதென விரட்டினர்! அன்று
பாருக்குள் பாரதமே சிறந்தது என உணர்ந்தான்.... ஆம்!

உதவி செய்ய முன் வந்தது, இந்திய உணவகங்களே!
உதவும் மனம் மத்திய வர்க்கத்திடம்தான் கண்டான்!

பேருந்துகள் நிறைந்து வழிந்தன; CAB கள் விரைந்தன;
மருந்துக்கும் இடமில்லை, எங்கும் எதிலும்!

ஊர் செல்லவே இயலாது என்பது புரிந்தது;
வேறு ஏற்பாடு செய்யவேண்டும் அப்போது!

மான்ஹாட்டனில் உள்ளனர் ரெட்டி, கார்த்திக்;
அவன் கொண்டு போகவில்லை அவர்கள் விலாசம்!

செல் உலாவில் உள்ளதே நம்பர்கள் என, எழுதிக்
கொள்ளாமல் சென்றது தப்பாகப் போயிற்று!

செல் உலாப் பேசியின் 'சார்ஜ்' குறைந்தது! ரெட்டி வீடு
செல்வதற்கு விலாசம் வேண்டி, நினைவிலிருந்த ஒரே

தொலைபேசி நம்பரில் தொடர்பு கொண்டான் - நண்பனோ
'இல்லை விலாசம், தெருவின் பெயர் தெரியும்' என்றான்!

தொலை தூரம் நடந்து அந்தத் தெருவினை அடைந்தான்!
கொலைப் பட்டினிதானோ இன்றிரவு என்றும் பயந்தான். முதல்

கட்டிடத்தில் வீடுகளே இல்லை என்றனர். ஆனால் அந்தக்
கட்டிடத்தில்தான் அவன் வீடு உள்ளதாம்; பின்னர் அறிந்தான்!

அடுத்த கட்டிடத்தில் 'ரெட்டி' எவரும் இல்லை என்றார்!
தொடுத்த கேள்விகளுக்குச் சரியான பதிலும் இல்லை!

மூன்றாம் கட்டிடத்தில் மீண்டும் இதே கதைதான்;
நான்காம் கட்டிடத்தில் சோம்பேறி நபர் ஒருவர்!

அங்கு வசிப்பவர்கள் பெயரைக் காட்டச் சொன்னால்,
'இங்கு விளக்கில்லை பார்ப்பதற்கு' என்றார்! பின்பு

வேண்டிய வெளிச்சம் காட்ட அவன் LAP TOP ஐத் திறக்க,
வேண்டா வெறுப்பாகப் புத்தகத்தைப் புரட்டினார்! :doh:

தொடரும் .....

 
மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... III

துரதிருஷ்டம் தொடர்ந்தது! ரெட்டி பெயர் அதிலும் இல்லை!
மறுபடியும் தொலைபேசினான்.. 'கார்த்திக் வசிக்கும் இடம்

ஒரு மணி நேரம் நடந்தால் வரும்!' என்ற பதில் வந்தது.
ஒருவழியாக நடந்து களைத்து, அங்கு சென்றுவிட்டான்.

இங்கு அவனுக்குக் கொஞ்சம் நல்ல நேரமே! கார்த்திக்
தங்கும் வீடு பதினேழாம் மாடியிலென அறிந்தான்!

பதினெட்டு மாடிக் கட்டிடத்தில் அமைந்த அனைத்துப்
படிக்கட்டு ஓரத்திலும் மெழுகுவர்த்தி வைக்காமல்,

படிகள் ஏற நிறையப் பேர் சேர்ந்த பின் - ஒரு ஆள்
படிகள் ஏற வழிகாட்டி விளக்குடனே போனாராம்!

அகம் மிக மகிழ்ந்தான் நண்பனைக் கண்டு - அவனும்
முகம் மலர்ந்து நன்கு வரவேற்று உணவளித்தான்!

நல்ல நேரம் ஆரம்பம் என்று அவன் எண்ணியபோது
மெல்ல நின்று போனது குழாய்களில் தண்ணீர் வரவு!

மின்சாரம் இல்லாது தண்ணீர் ஏற்றவே முடியாதே;
பின் என்ன? இனிமேல் எல்லாமே 'DRY CLEAN' தான்!

இரவில் மின்சாரம் வரும் என வானொலி அறிவிப்பு;
இருந்தாலும் வரவில்லை; அவர்களுக்கோ மிகக் கடுப்பு!

ஒருவாறு கண்ணயர்ந்து உறங்க முயன்றனர்;
மறுநாள் விடியலில்தான் எத்தனை பேரின்பம்!

மின் விசிறி இல்லை; குளிர் சாதனம் இல்லை; ஆனால்
மின் விளக்கு வேண்டாமே அன்று இரவு நேரம் வரை! :peace:


தொடரும் .....
 
Last edited:
மான்ஹாட்டனில் மாட்டிக்கொண்டான் ..... IV

அரைக் குவளை நீரில் பல் தேய்த்து, முகம் துடைத்து,
விரைவாக 'பஸ்' பிடிக்க எண்ணி, அவன் சென்றான்.

'பஸ் ஸ்டாண்ட்' பாதாளத்தில்; விளக்கில்லை; கும்மிருட்டு!
பஸ் அனைத்தும் சென்றன, வீதியிலிருந்தே புறப்பட்டு!

எவரிடமும் பணமில்லை A T M எதுவும் இயங்காததால்;
பலரிடமும் I D CARD இருந்ததால் அன்று பிழைத்தார்கள்!

டிக்கட் காசு இல்லாதோர், அதை அடமானம் வைத்து - 'கனெக்
டிக்கட்' டில் A T M உபயத்தால் அதைத் திரும்பப் பெற்றார்கள்!

(கனெக்டிக்கட் என்ற ஊர் N Y - BOSTON வழியில் உள்ளது)

சப்வே ரயில் வேண்டாம்; மின்சார பஸ் வேண்டாம்;
இப்போ வீடு செல்ல வேண்டும் என்று தோன்றியதாம்!

பாஸ்டனில் இறங்கியதும், பார்த்த முதல் CAB இல்,
பாங்காக இனிய இல்லம் விரைந்தான் - வழியில்

'இன்று இங்கு A T M இயங்குமா?' எனக் கேட்டான்;
'நன்று! இயங்குமே!' என்ற பதில் வந்தாலும்,

பண நோட்டே இல்லையோ உங்களிடம் என்பதுபோல்
கணம் நோட்டமிட்ட ஓட்டுனர், A T M இல் நிறுத்தினார்!

வீணாகப் பொழுது போக்காமல், நேராக வீட்டுக்கு வந்தான்;
காணாததைக் கண்டதுபோல குளியலறைக்கு விரைந்தான்!

ஒரு மணி நேரம் ஆசை தீர நீராடி மகிழ்ந்தான்;
சிறு பாடம் கற்றான், இம்முறை, பயணத்தால்!

என்னதான் வசதிகள், செல் உலாக்கள்,
வண்ண விளக்குகள், A T M கள் இருந்தாலும்,

பயணத்திற்கென்று ஒரு அட்ரஸ் புத்தகமும்,
பயபக்தியுடன் வேண்டிய பணமும், டார்ச் லைட்டும்,

அவசியம் கொண்டு செல்ல வேண்டும்; இல்லையேல்
அனாவசிய இன்னல்களைச் சந்திக்க நேரிடும்! :nod: :wave:

 
Thanks

Thanks for the kavithaigal once again and I also wish to thank you for the response through this thread to know using Tamil Fonts through the system.

regards
 
தமிழ் ஆர்வமுள்ள நீங்கள், உங்களின் மறுமொழியும்,

தமிழிலே அளித்தால், முதலில் மகிழ்வது நானே!

ராஜி ராம்
 
அன்புள்ள உறுப்பினரே!

நன்றி தங்களின் ஊக்குவிப்புக்கும் உதவிக்கும் !
நான் தமிழில் பதில் அளிக்கவும் அறிந்துகொள்ளவும்
கம்ப்யூட்டரில் வாய்ப்பு ஏற்பட்டது !!
உங்களின் அற்புதமான கவிதைகள் மேலும்
ஆர்வத்தை உண்டாக்கியது !!!
கடவுளை வேண்டிக்கொள்ள தூண்டியது
கவிதைகளும் தங்களின் நலமும் சிறப்படைய !!!!
கடவுளின் ஆசியுடன் என் நல் விருப்பங்கள்.

-- குமார்
 
தாய் மொழி வளர என்னாலான சிறு முயற்சி;
தாய் மொழியில் மறுமொழி கண்டு மகிழ்ச்சி! நான்

தமிழில் தட்டெழுத உதவ, நண்பர் குடும்பம் ஒன்று,
தமிழிலேயே கடிதப் பரிமாற்றம் செய்கிறது இன்று!
:clap2:
உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
Thanks

நன்றி பல பல
கவிதைகள் மிக மிக
சிறப்புற வாழ்க வளர்க
என் விருப்பம் ஆகுக!

...குமார்
 
பழமொழி
தடி எடுத்தவன் தண்டல்காரன் :(

புது மொழி
பேனா பிடித்தவன் எழுத்தாளன் :)
 
கொடி பிடித்தவன் தொண்டர் கூட்டம்
கோடி, கோடியாய் அடிப்பவன் தலைவர் கூட்டம்!
 
"கொடி பிடித்தவர் குண்டர் கூட்டம்
கோடி சேர்த்தவர் தலைவர் கூட்டம்"

என்று அல்லவா எண்ணினேன்!:nerd:
 
Last edited:
பயன் பெறவும், பயன் தரவும் எண்ணினால்,
பயம் வேண்டாம் பேனா பிடித்து எழுதுவதற்கு!

தமிழ்த் தாயை நாமே ஒடுக்க நினைக்காமல்,
தமிழ் உயர ஒற்றுமையாய் நின்றிடுவோம்!

அடக்கம் அமரருள் உய்க்கும்! :nod:
 
பயன் பெறவும் பயன் தரவும்
பயன் தந்த கவிதைக்கு நன்றி
அழகு தமிழுக்கு எனது சிறிய பயிற்சி!
அதன் வளர்ச்சி பெருகிட .
 

சித்திரமும் கைப் பழக்கம்; செந்தமிழும் நாப் பழக்கம்.

நித்தமும் முயற்சியும், பயிற்சியும் மேன்மை கொடுக்கும்! :lever:

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
Smt. Raji Ram,
Congrats. to you on your post. You have keenly observed the scene in the US and in India and gave vent to your feelings.
 

பயணக் க(வி)தைகளில் கடல் கடந்த முதல் அனுபவம் படிக்கும் நண்பர்கள்,

என் முதல் மிஸ்ர கவிதைத் தொகுப்பான 'ஓ அமெரிக்காவை'ப் படிக்கலாம்!

முதல் அனுபவங்களின் சுருக்கமான தொகுப்பே இது!

உலகம் உய்ய வேண்டும், :pray:
ராஜி ராம்
 

Latest ads

Back
Top