• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓ அமெரிக்கா ...

பயன் பெறவும், பயன் தரவும் எண்ணினால்,

பயன் பெறவும், பயன் தரவும் எண்ணினால்,
பயம் வேண்டாம் பேனா பிடித்து எழுதுவதற்கு!

தமிழ்த் தாயை நாமே ஒடுக்க நினைக்காமல்,
தமிழ் உயர ஒற்றுமையாய் நின்றிடுவோம்!

அடக்கம் அமரருள் உய்க்கும்! :nod:

உங்கள் நடை மிகவும் எதார்த்தமாய் இருக்கிறது !
வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் பனி !
அதுசரி யாருக்கோ சூடு கொடுத்துள்ளீர்கள் போல் தெரிகிறதே?

''ஹா ஹா ஹா''
 
உங்கள் நடை மிகவும் எதார்த்தமாய் இருக்கிறது !
வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் பனி !
அதுசரி யாருக்கோ சூடு கொடுத்துள்ளீர்கள் போல் தெரிகிறதே?

''ஹா ஹா ஹா''
நான் உபதேசம் செய்வதும் அரிது; செய்தாலும், எனக்கும் சேர்த்தே அது!

என் மனத்தில் எழும் நல்ல எண்ண அலைகளை வடிப்பேன்; அவ்வளவே!

குறிப்பு:
பனி தரும் குளிர்ச்சி!
பணி என்றால் வேலை!!

பிழை இல்லா அழகு தமிழ் வளரட்டும்!
 
மன்னிக்கவும்

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ! நன்றி
 
பணிவேன், மலர்த் தாள்களை!

பணிவை எனக்கு என்றும் மாறாது தருமாறு,
பணிவேன், இறைவனின் மலர்த் தாள்களை.

அவன் பணித்தால், என் எண்ண அலைகளை,
தினம் பணிவுடன் வடிப்பேன், கவிதைகளாக!

:hail: :pray2:
 
NRI மகன் வந்தால்....

மனம் மகிழ்ச்சியில் பொங்கும், எங்கள் NRI மகன் வரும்போது;
தினம் காணவே மனம் ஏங்கும்; எனினும், இதுவே பெரும்பேறு!

இரண்டு மூன்று தினங்கள் நம்முடன் இருந்தால் அதுவே பெரிது;
திரண்டு எழும் ஆனந்தத்தில் நாட்கள் பல உருண்டு ஓடும், பிறகு!

கடல் கடந்து சென்றால் மட்டுமே காண முடியும் என்னும் நிலை;
கடல் கடக்கப் பெற்றோர் இருவர் டிக்கட்கள், லக்ஷத்தில் விலை!

வந்த கொஞ்ச நேரத்திலே சுற்றத்தை நாடிக் கூடி இருந்தால், எம்
சொந்த பந்தங்களை இணைக்கும் பாலம் போலவே அது அமையும்!


NRI மகன் வாழ்க!:cheer2:
 
Nri மகன் வாழ்க!

NRI மகன் வந்தால்....

மனம் மகிழ்ச்சியில் பொங்கும், எங்கள் NRI மகன் வரும்போது;
தினம் காணவே மனம் ஏங்கும்; எனினும், இதுவே பெரும்பேறு!

இரண்டு மூன்று தினங்கள் நம்முடன் இருந்தால் அதுவே பெரிது;
திரண்டு எழும் ஆனந்தத்தில் நாட்கள் பல உருண்டு ஓடும், பிறகு!

கடல் கடந்து சென்றால் மட்டுமே காண முடியும் என்னும் நிலை;
கடல் கடக்கப் பெற்றோர் இருவர் டிக்கட்கள், லக்ஷத்தில் விலை!

வந்த கொஞ்ச நேரத்திலே சுற்றத்தை நாடிக் கூடி இருந்தால், எம்
சொந்த பந்தங்களை இணைக்கும் பாலம் போலவே அது அமையும்!

NRI மகன் வாழ்க!:cheer2:


IMG_0078[1].JPG my son, daughter in law, grand daughter rithika.

திருமதி ராஜி ராம் அவர்களுக்கு ,

இப்பொழுதுதான் என் மகன் , மருமகள் மற்றும்
பேத்தி ரித்திக்கா இவர்களைப்பற்றி நினத்துக்கொண்டே
காற்று வந்தால் தலை சாயும் நாணல் (p.b.s. p.suseela)
பாட்டு- கேட்டுக்கொண்டு இருந்தேன். தங்களின் NRI மகன் வந்தால்....
வந்து சேந்தது. பார்த்தவுடன் - படித்தவுடன் சிரிப்புத் தான் வந்தது.

நன்றி.

சிவசண்முகம்.
 
Last edited:
உங்கள் சிரிப்பு, மகிழ்ச்சியின் வெளிப்பாடு என எண்ணுகிறேன்! :party:
 
குறைந்த ஆடை பற்றிச் சொல்லிவிட்டு,
சிறந்த ஆடைகளை மறந்து போனேன்!

இதோ:

சிறந்த ஆடைகள்....


ஒருவர் வீடு இல்லை என்ற பலகை வைத்து
வருவோர் போவோரிடம், பணம் கேட்டாலும்,

கோட்டு அணிந்து கொண்டுதான் கேட்பார்;
ரோட்டில் வந்து தொப்பியைக் காட்டுவார்!

கழிவறைகள் சுத்தம் செய்யும் பெண்களும்,
அழகுற ஆடைகளையே அணிந்திடுவார்!

குப்பை லாரி என்று நாம் ஏளனம் செய்யும்
குப்பை வண்டிகள் ஓட்டுபவரும் 'ஸ்டயிலே'!

ஹீரோ போலவே வந்து, மிக பந்தாவாக,
He Man கணக்காய் 'டிராஷ்' பை எடுப்பார்!

உடையை வைத்து எடைபோடுவது, இங்கு
உடனே நாம் அறிந்துகொள்ள முடியாதது!

:hat:
 
ராஜி!
கூர்ந்த நோக்கு உங்களுக்கு. தீட்சணயமான பார்வை. சின்னஞ்சிறு விஷயங்களையும் கவனித்து எழுதி இருக்கிறீர்கள்.
எஙகளுக்கு அமெரிக்கா அலுத்துவிட்டது.
மகனும் மகளும் கூப்பிடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையில் இருக்கிறோம்.
அழுக்கோ, அவதியோ - பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே - என்ற பாரதியின் வேதவாக்கு எங்களுக்குப் பிடித்துப் போனது.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
ஜலஜா கிருஷ்ணமூர்த்தி
 
Dear Smt. Jalaja and Sri. Krishnamoorthy,

தாய் நாட்டின் மீது நமக்குப் பாசம் அதிகமே; தாய் மீது கொண்டது போலவே! ஆனாலும், பிள்ளைப் பாசம் கொள்ளையாக வைத்தால், பாடுதான்! இதோ, இந்த ஜூன் மாதம், எங்கள் மூன்றாவது யூ எஸ் பயணம்... முதல் முறை, மகன் பிரம்மச்சாரி; இரண்டாம் முறை, திருமதியுடன்; இந்தமுறை, எங்கள் பேத்தி அழைக்கிறாள்! எனக்கும் எழுத, சில புது விஷயங்கள் கிடைக்கலாம்!

என் இரு யூ எஸ் பயணங்கள் பற்றியும் விரிவாக 'பயணக் க(வி)தைகளில்' கடல் கடந்த அனுபவங்களாக எழுதியிருக்கிறேன்! நேரம் கிடைக்கும்போது, படித்து ரசிக்க வேண்டுகிறேன்!

நட்புடன்,
ராஜி ராம் :typing:
 
காக்கும் கரங்கள்...

030%20SEPT%2011.jpg


உலக நாடுகளையே உலுக்கிய பயங்கர நிகழ்வு;
உலகின் அழகிய இரட்டை கோபுரங்கள் அழிவு!

ஆகாய விமானங்களையே, ஏவு கணையாக்கி,
ஆகாய வழியே வந்து மோதினர், பேரிடி போல.

அரக்கு மாளிகை எரிந்து சாம்பல் ஆனதுபோல,
இரக்கம் இல்லாத் தாக்குதலால், பெருந்தீ மூள,

சரியாகப் பணிக்குச் சென்றவர், தப்ப முடியாது,
பரிதாப மரணத்தால், விண்ணுலகு சென்றனர்.

தீவிரவாதம் என்ற பெயரால், அச்சத்தைத் தந்த
தீவிரவாதி, ஓயாது முயற்சிகள் பலவும் செய்ய,

பல ஆண்டுகள், கோடிகள் செலவு செய்து தேடி,
பல நாட்களாகத் தீவிரமாக வேட்டையும் ஆடி,

அக்கால அசுரர் வதம் செய்யப்பட்டதுபோலவே,
இக்கால Bin Laden னும் வதம் செய்யப்பட்டான்!

அசுரர்கள் மாண்டால், வாரிசுகள் பொங்கி எழும்;
அசுரர்கள் பட்டாளமே, தீமைகள் செய்ய வரும்!

நிறைவான அவன் படை, பழி தீர்த்திட வராது,
இறைதான் உயர்ந்த அமெரிக்காவைக் காத்து,

தேசங்கள் எல்லாமே நிம்மதியாய் வாழ்ந்திட,
நேசமுடன், காக்கும் கரங்களை நீட்டிடணும்!


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray2:
 
Last edited:
சிந்திப்பீர் ஒருகணம்!

வரம் கேட்டா வரும் இந்த தீவிரவாதம்?
வந்தவுடன் தெரியும் அதன் கோர வாதம் !

வறுமை என்னும் சொல் இருக்கும் வரை
வற்றாது இதன் ஊற்றுக்கண் வளரும் அன்றோ?

பெற்ற பிள்ளையைத் தவிக்க விட்டு - பால்
வாங்கப் புறப்பட்டார் சிலர் பாலை நிலத்தில் !

அவர்தம் மடமையை நினைத்து திகைத்தாலும் நீவிர்-
சிந்திப்பீர் ஒருகணம் அவர்தம் வாழ்வில் ஒளியேற்ற !

with regards
sivashanmugam.
 
Last edited:
கலியின் கொடுமையோ?

நிறங்கள் உலகில் பல; ஒவ்வொரு தன்மைக்கும்,
நிறங்களில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!

வறுமையின் நிறம் சிவப்பு; மிகவும் நிஜமேதான்!
வறுமை தரும் பசி, அக்னிக் கனலே - அது சிவப்பு;

வறுமையால் வரும், அடித்து எடுக்கும் தீய குணம்;
கொடுமையான செயலால் வழியும் ரத்தம் - சிவப்பு!

கலியின் கொடுமை, வறுமையை வளர்க்கிறதோ?
விதியின் பிடியால், கொடுமையும் நிறைகிறதோ?

கொஞ்சம் கல்வியும் தரா வறுமை, தீவிரவாதியைத்
தஞ்சம் அடையச் செய்வதால், இளம் பிஞ்சுகள் பல

மூளைச் சலவை செய்யப்பட்டு, தமது குடுபத்தினர்,
நாளை நல்வாழ்வு பெறுவார் என்ற நம்பிக்கையில்,

பொருட் செல்வ மோகத்தால், தமது உயிரைக்கூட
பொருட்படுத்தாது, தீவிரவாத அடிமைகள் ஆவார்.

ஒருபுறம் பணக்காரர்கள், மேலும் மேலும் செழிக்க,
மறுபுறம் பணமின்றி, ஏழைகளும் தவித்து இருக்க,

சிறு வயதிலே, விஷமான தீவிரவாதத்தை ஏற்று,
பெறும் பணத்தால், தன் குடும்பத்தாரும் தழைக்க,

தினம் மனித வெடிகுண்டாக மாறுவோர், எத்தனை!
மனம் இரங்கி, எவர் வந்து காத்திடுவார், இத்தரை?

:hail: . . . :angel:
 
Last edited:
கலியின் கொடுமையோ?

நிறங்கள் உலகில் பல; ஒவ்வொரு தன்மைக்கும்,
நிறங்களில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!

வறுமையின் நிறம் சிவப்பு; மிகவும் நிஜமேதான்!
வறுமை தரும் பசி, அக்னிக் கனலே - அது சிவப்பு;

வறுமையால் வரும், அடித்து எடுக்கும் தீய குணம்;
கொடுமையான செயலால் வழியும் ரத்தம் - சிவப்பு!

கலியின் கொடுமை, வறுமையை வளர்க்கிறதோ?
விதியின் பிடியால், கொடுமையும் நிறைகிறதோ?

கொஞ்சம் கல்வியும் தரா வறுமை, தீவிரவாதியைத்
தஞ்சம் அடையச் செய்வதால், இளம் பிஞ்சுகள் பல

மூளைச் சலவை செய்யப்பட்டு, தமது குடுபத்தினர்,
நாளை நல்வாழ்வு பெறுவார் என்ற நம்பிக்கையில்,

பொருட் செல்வ மோகத்தால், தமது உயிரைக்கூட
பொருட்படுத்தாது, தீவிரவாத அடிமைகள் ஆவார்.

ஒருபுறம் பணக்காரர்கள், மேலும் மேலும் செழிக்க,
மறுபுறம் பணமின்றி, ஏழைகளும் தவித்து இருக்க,

சிறு வயதிலே, விஷமான தீவிரவாதத்தை ஏற்று,
பெறும் பணத்தால், தன் குடும்பத்தாரும் தழைக்க,

தினம் மனித வெடிகுண்டாக மாறுவோர், எத்தனை!
மனம் இரங்கி, எவர் வந்து காத்திடுவார், இத்தரை?

:hail: . . . :angel:

மதிப்பிற்குரிய ராஜி ராம்
அவர்களுக்கு ...இந்த கேள்விக்கு பதில்
என்னுடைய '' யார் குற்றவாளி'' ? யில்
வரும் ...நன்றி
 

பின்னூட்டத்திற்கு நன்றி, சண்முகம் சார்!
ராஜி ராம் :ranger:
 
என்றுதான் புரியுமோ?

ஒவ்வொரு முறை வருகின்ற போதும்,
ஒவ்வொரு வித லூட்டி செய்கிறேன்!

மகன் பாரிஸ் சென்றதால், பெண்ணரசி,
அவன் அமைத்த burgler's alarm ஒன்றை

செட் செய்து வைத்தது தெரியாத நான்,
சட்டென்று புது ரோஜாக்களைக் காணும்

ஆவலால் உந்தப்பட்டு, வாயிற்கதவைத்
திறக்க, திடீரென உச்ச ஸ்தாயியில் ஓர்

அலாரம் அடித்து அமர்க்களம் செய்ய,
அலாரத்தை நிறுத்தத் தெரியாது நான்

தவிக்க, மாடியில் இருந்த பெண்ணரசி
தாவி, இறங்கி வந்து அதை நிறுத்திவிட,

சில நொடிகள் இதயம் துடிக்க மறந்து,
சில்லென உறைந்து போனது, நேற்று!

என்றுதான் இந்த US வாழ்வு புரியுமோ? :noidea:
 
Hi Raji,
Enge irrukel neengall in US.. I can understand, my MIL was so scared when the smoke alarm went off when she was doing the karpura harathi.. so I had to remove the device, to silence that.. :)

Bayapadaadheengo Raji, we all have gone through similar experiences.. take care

Subhalakshmi :)
 
Dear Lakshmi,

Nice to get your feed back! Glad that in spite of your busy schedule to arrange

for your daughter's wedding, you have gone through my write-up. I have been

doing 'loottys' often, which I have given in detail in this thread and also in

my travel experiences, but this time I started a little too early - soon after

we landed in the US!


We are in Boston (Woburn). If there is a possibility to meet you, I will be happy!


Raji Ram
:thumb:
 
Dear Raji,

I was amused by your loottys in the US.. hahahahaaa!!! very amused indeed, you write so well.. Well I live in Southern California, I will be going to New Jersey in the month of July, and if you have a chance to come there, we certainly can meet.. I would love to.. I am still settling in California, been here for a short time now.. send me a message privately with your phone number and we can talk if you want.. have more fun.. :)
Best Wishes

Bushu :)
 
அங்கும், இங்கும்...

சென்னை வாழ்வும், Boston வாழ்வும், பல

சின்ன விஷயங்களிலும்கூட வேறுபடும்.

கோடை வெய்யில் நூறுகளிலே அங்கு;
சோடை போகாத குளிர் நடுக்கும் இங்கு.

ஒற்றை வஸ்திரத்தில் வியர்வை அங்கு;
மூன்று அடுக்கும் தாண்டிக் குளிர் இங்கு.

ஆதவன் எழுவான் ஆறேகாலுக்கு அங்கு;
ஆதவன் எழுவான் ஐந்தேகாலுக்கு இங்கு.

இருள் வரவு மாலை ஏழு மணிக்கு அங்கு;
இருள் வரவு இரவில் ஒன்பதுக்கே இங்கு.

கோடை மழையானால் கொட்டும் அங்கு;
கோடையைக் குளிர்விக்க, தூறல் இங்கு.

சாலைகளில் வண்டிகள் வழியும் அங்கு;
சாலைகள் பலவும் வெறிச்சோடும் இங்கு.

ஒரு நாளில் படியும் அடர்ந்த தூசி அங்கு;
ஒரு வாரம் ஆனாலும் தூசி குறைவு இங்கு.

பிளாஸ்டிக் பைகளில் பால் வரும் அங்கு;
பிளாஸ்டிக் can களில் வந்துவிடும் இங்கு.

வண்டியில் காய்கறிகள் வரும் அங்கு; நம்
வண்டியில் சென்று வாங்கவேணும் இங்கு.

அருகருகே அமையும் கோவில்கள் அங்கு;
வெகு தொலைவில் ஒரு கோவில் இங்கு.

இரு வாழ்வும் எப்படி மாறுபட்டாலும், நாம்
இரு வாழ்வும் மனம் இருந்தால் ரசிக்கலாம்!

:cheer2:
 
The Almighty decides!

The day I wrote that we are enjoying our 'cool' summer in Boston, my PC crashed and I thought it as a bad omen.

And... Yes it was! My better half had to stay in Mass general hospital at Boston for 10 days from the very next morning.

I am writing those experiences in another thread 'payaNak kavithaigaL'.
:faint2:
 
மருத்துவக் காப்பீடு...

எங்கள் US நண்பி ஒருத்தி அடிக்கடி உரைப்பாள்,

'எங்கள் ஊரில் சாப்பாடு இல்லாமல் இருக்கலாம்;

ஆனால்,'இன்ஷூரன்ஸ் இல்லாமல் முடியாது!'
ஆமாம்! இவை மிக உண்மையான சொற்களே!

நல்ல கவனிப்பு, மருத்துவமனையில் ஒரு நாள்,
நல்ல செலவு தந்திடும்; இரண்டாயிரம் டாலர்!

நம் நாட்டில், முதலில் தொகையைக் கட்டினால்,
நம் சிகிச்சை ஆரம்பமாகும்! ஆனால், இந்நாட்டில்

ஏதும் இல்லா ஏழையானாலும், சிகிச்சை உண்டு;
ஏதோ காரணம் சொல்லிச் சிலநாளில் அனுப்புவர்.

அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இருக்காது; மேலும்
அவர்களிடம் பணம் இருக்காது! மற்ற சேவைக்கு,

மருத்துவர், மருத்துவக் காப்பீட்டிலிருந்து பணம் பெறுவர்.
மருத்துவம் முடிந்ததும், நாம் இல்லம் திரும்பலாம்.

என்னவரின் அன்னை இறந்தபோது, பத்தாயிரம்
எண்ணிக் கொடுத்தால்தான், இறப்புச் சான்றிதழ்

தருவோம் என்று மிரட்டிய, சிங்காரச் சென்னை
மருத்துவமனை, எண்ணத்தில் நிழலாடுகிறது!

:pout:
 
Last edited:

Latest ads

Back
Top