• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓ அமெரிக்கா ...


அடி பட்டாலும்.....


நாய்க்குட்டியாகப் பிறந்தாலும், செல்வந்தரின்

நாய்க்குட்டியாக இருக்க வேண்டும் என்பார்கள்!

தம் செல்லப் பிள்ளைகளுக்கு மேல் பாசத்தைத்
தாம் பொழிந்து போற்றுவார் அந்தக் குட்டியை!

புதிய அனுபவங்கள் நமக்கு வரும் தருணங்கள்,
புதிதாய் மனதில் தோன்றும் சில எண்ணங்கள்!

விபத்தில் அடி பட்டாலும், அது அமெரிக்காவில்
விபத்தாக இருக்க வேண்டும்; இது புது எண்ணம்!

அருமையாக வாதிடும் வழக்கறிஞர் கிடைத்தால்,
பெருமையாக ஒரு மென்பொருள் பொறியாளர்

மூன்று ஆண்டுகளிலே சேர்த்திடும் செல்வத்தை,
மூன்று மாதங்களில் கிடைக்கச் செய்வார் அவர்!

வாழ்க அமெரிக்கக் காப்பீட்டுத் திட்டம்! :peace:
 

தாயின் அரவணைப்பு!

தன் மகள் தாய்மைப் பேறு பெறும்போது,

தன் உதவிக கரம் கொடுக்க விழைபவள்,

அருமையாக வளர்த்த தாய்தான்! இந்தப்
பெருமை கிடைப்பதும் நம் நாட்டில்தான்!

கடல் கடந்து சென்று, பணியில் அமர்ந்து,
கடலென அன்பு காட்டும் தாயைப் பிரிந்து,

தாய்மைப் பேறு பெறுகின்ற சில பெண்கள்,
தாயின் உதவியைப் பெறுவதில்லையே!

இந்திய தேசத்தில், குழந்தை பெற்ற பின்,
ஐந்து மாதங்கள் வரை, சொந்த பந்தங்கள்

விருந்தாக வந்து போக, தன் தாய் வீட்டின்
விருந்தோம்பலில் மகிழ்வாள் அன்பு மகள்.

தன் கணவன் உடனிருக்க, பிள்ளை பெற்று,
அவன் உதவிகளை மட்டுமே தான் பெற்று,

தன் சேயை வளர்ப்பாள், அமெரிக்க நாட்டில்
தன் வாழ்வை அமைத்துக்கொண்ட மகள்!

தாயின் அரவணைப்பைத் துணைக்குத் தந்து,
சேயின் வளர்ப்பை எளிதாக்குவன் கணவன்!

'தாயும் தந்தையும் யாவும் நீயே!' என இந்தத்
தாயும் ஆகும் தந்தைகளை வாழ்த்துவோம்!

வாழ்க அன்புக் கணவர்கள்! :high5:


 

ஒரு NRI - யின் புலம்பல்!


அந்தநாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே
நண்பனே நண்பனே நண்பனே!
இந்தநாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே -அது
ஏன், ஏன் நண்பனே?

Bagel என் கையிலே, காபி கப் பையிலே;
போண்டா திங்க வழியே இல்லையே!
டிகிரி காபி கிடைக்கலே லாட்டேயும் ருசிக்கலே - அது
ஏன், ஏன் நண்பனே?

பாஸ்தாவே அடிக்கடி உண்ணுவோம் வீட்டிலே,
பிட்ஸாவும் பார்சலாய் ஃப்ரிஜ்ஜிலே!
இட்லியும் சட்னியும் ஞாபகம் வந்ததே- அது
ஏன், ஏன் நண்பனே?

யானையின் சைஸிலே கத்தரிக்காய் உள்ளதே,
யாரிங்கு செய்தாலும் ருசிக்காதே!
துக்கிணி சைஸிலே வெண்டக்காய் உள்ளதே - அது
ஏன், ஏன் நண்பனே?

அப்பளம் பொரித்தாலே பிசுக்குத்தான் ஆகுதே,
அப்புறம் துடைக்கவே முடியலே!
'என்றுதான் இந்தியா செல்வோமோ லீவிலே',
என்று நான் ஏங்குறேன் நண்பனே!


:decision: . . . :plane:



 
Dear Bushu,

Eagerly awaiting your comments on my new post '
ஒரு NRI - யின் புலம்பல்!'. :blah:
 
Raji,

I am not the right NRI to comment, you know why, I make idli chutney and dosai on a regular basis and eat only regular south indian food most of the time.. occasionally go out to dinner of course Italian and yarru andha indian restaurant chappadu chapiduvaa, I don't like it at all.. when I can make most of it at home.. :))) I don't mind bagle and hot coffee, I do have cereal for breakfast.. I make things for others at home but I am not very particular of having indian food first thing in the morning... I truly love bun butter jam from my school days.. hehehehee!! ippo kooda once in a while romba ruchichu chapiduven.. I love more finger foods indian of course than the regular ukarndhu chapidaradhu, I love any kind of Molagootal though.. just love it.. :) and the vendaikai puli pachadi..

At least I am happy we get almost all veggies now, naan vandha pudisila nothing like this was available.. Ippo ellam kidaichum kooda the younger generation don't seem to appreciate, aanaa the kids who grow up here are cooking a lot of regular indian food like my younger daughter and son do ..

I love what you have said.. I am sleepy talk to you later.. byee :)

by the way that yanai pola kathirikkai can be made into a wonderful kootu or curry, it depends how you make it.. :))
 
hi RR madam,
not like that.....we had rasam with kathrikkai curry twice in week.....murangakai samsambar once in week.....even we had
chinna vengaya sambar with coconut masala once in a week.....arachu vitta sambar regularly in our home ....pizza/subway veggie
sandwich once in a while....french fries may be once in month.....we get everything USA now...sometime better than india...
cheaper and good qualities in a produce depot.....but now a days good manayaal is the problem here...manayaal means
manaivai/thunaivi.....who likes traditional brahmin cooking.....
 
Dear TBS Sir,

I know many 'super' cooks spread all over other overseas countries, including the US of A! I should have written the conditions

of 'that' NRI in that poem! He is a lover of South Indian food who can NOT cook delicious food and 'blessed' with a better half,
who hates South Indian food itself!! With this in mind, please read it again, in 'nadigar thilagam' style and enjoy!! :ranger:

Regards ............ :)
 

எதற்குச் சின்னக் கடன்?


பணம் சேமிப்பதை விரும்பும் கோடீஸ்வரர்,

தினம் புதுவிதமாக யோசனைகள் செய்வார்!

வணிக விஷயமாக வெளிநாடு போக எண்ணி,
பெரிய அளவுக் காரை, தானே ஓட்டிச் சென்று,

ஒரு நாள் காலை, நியூயார்க் வங்கி ஒன்றிலே,
சிறு கடனாக ஐயாயிரம் டாலர் தேவை என்று,

தன் காரை அடமானம் வைத்து, வேண்டினார்!
தன் கடன் இரு வாரங்களில் அடையுமென்றார்!

'கோடீஸ்வரர் இந்தச் சிறு கடன் தொகையைக்
கேட்டாரே!', என வியந்த வங்கி அதிகாரி, அக்

கடன் தொகையைக் கொடுத்து, அவரது காரை
உடனே பத்திரப்படுத்துமாறு ஆணை இட்டார்!

சொன்ன சொல் தவறாத அப் பணக்காரர், தான்
சொன்னபடி இரு வாரங்கள் வெளிநாடு சென்று

வந்த பின், கடனை வட்டியுடன் தந்துவிட்டார்!
அந்த வட்டி வெறும் பதினாறு டாலர்கள்தான்!

'இத்தனை சிறு கடனை ஏன் கேட்டீர்கள்?' என்று
அத்தனை நாளும் வியப்பை அடக்கிய அதிகாரி

கேட்க, வினவினார், 'வேறு எங்கு இந்தக் காசில்
காக்க முடியும் இத்தனை நாள் காரை இவ்வூரில்?
'

:car: . . . :lock1:
 

தந்தையர் தினம்!


'தந்தையர் தினம்' என்று தமிழில் கேட்டால்,
சிந்தை கவர்ந்திடும் வகையில் ஒலிக்கிறது!

காணும் பொங்கல், பிறந்த நாள் இவற்றிலே
காணச் செல்வோம், தவறாது நம் தந்தையை!

இங்கும் ஜூன் மாத மூன்றாம் வார ஞாயிறு,
பொங்கும் மகிழ்வுடன், பரிசுகளுடன் சென்று

தம் தந்தையரை வாழ்த்தி மகிழ்வார்; இதைத்
தம் சிந்தையிலும் தவறாது கொள்வார்! நாம்

புதிய கலாச்சாரமாக இதை நினைத்தாலும்,
இனிய நினைவுகளை நமக்குக் கொடுப்பதால்,

நாமும் இன்று தந்தையரைப் போற்றுவோம்!
நாளும் அவர் காட்டிய நல்வழிச் செல்வோம்!


:hail:

 

இதுவா சுதந்திரம்?

எவர் வேண்டுமாயினும் துப்பாக்கி ஏந்தலாம்;

எவரை வேண்டுமாயினும் சுட்டுத் தள்ளலாம்!

பொழுது போக்கத் திரை அரங்கு சென்ற பலர்,
பொது இடத்தில் இன்னுயிர் இழந்துவிட்டார்!

தனி மனித சுதந்திரம் தேவைதான்; ஆனால்
இனிய உயிர் பறிக்கும் உரிமை இருக்கலாமா?

இந்தக் கொடுமை இனியும் நிகழாமல் இருக்க,
இந்த ஊரில் நல்ல பாதுகாப்பும் கிடைக்குமா?
 

உதவும் காவல் துறை!

இதய நோய் தாக்கினால், நன்கு கவனித்து

இயக்க முடியாது அல்லவா, தன் சீருந்தை?

சீருந்தை ஒருவர் ஓட்டும்போது, வீதியில்
சீர்கெட்டு ஓடுவதைப் பார்த்தால், அதிகாரி

அதை நிறுத்தச் சொல்லி, ஓட்டுனர் உடல்
நிலை சோதித்து, அவசர உதவி அழைத்து,

மருத்துவமனையில் சேர்க்கும் உதவியை,
கருத்துடன் செய்கின்றார், இந்த நாட்டிலே!


குறிப்பு: அதிகாரி ஒருவர் இவ்வாறு உதவியும் கூட, எங்கள்
சித்தப்பா மகனின் உயிரைக் காக்க முடியாது போனது, சோகம்!
:pout:
 
முதலிடம்!

பதக்கப் பட்டியலில் பெற்றது அமெரிக்கா
பதக்கங்கள் 104 வென்றதால், முதலிடம்!

மேல் மட்ட வர்க்கம் ஆடும் ஆட்டங்கள்,
மேலான தங்கங்களை அள்ளித் தந்தன!

கடின உழைப்பை மட்டுமே வேண்டுகிற
கடின ஆட்டங்களில் சீனர்கள் வென்றிட,

கோலாகலமாகத் துவங்கிய போட்டிகள்,
கோலாகலமான விழாவுடன் முடிந்தன!



:thumb: , , , :first:



photo.cms
 

அழிவைத் தடுக்குமா?

மில்லியன் டாலர்கள் செலவில்,

துல்லியமான ஆராய்ச்சிகளைச்

சிவந்த வண்ணத்திலே தெரியும்,
சிறந்த செவ்வாய் கிரஹத்திலே

செய்யும் நாடு, பூமிக்கு மனிதர்
செய்யும் தீமைகள் தடுக்குமா?

புதுமை என்ற பெயரில் வருகிற
புதுமைகள் தந்தது இந்த நாடே!

'டயபர்' என்று குழவிகள் பலரும்
உபயோகித்துப் போடும் குப்பை!

தூய்மை தரும் நாப்கின்களைத்
தூக்கிப் போடுவதாலே குப்பை!

உயிரினங்கள் தவிர மற்றவை
உருவாகும் பிளாஸ்டிக் குப்பை!

அழியாத இவை பூமித் தாயை
அழிப்பதைத் தடுக்க முடியுமா?


:help:
 

அம்மையப்பன்!


பிள்ளைகளை வளர்ப்பது, இந்தியாவில்
பிள்ளைகளின் தாயின் கடமையாகும்.

கடல் கடந்து சென்று வாழும் பெண்கள்,
உடல் நோக உழைக்கும் காலமே இது!

தாயின் பணிகளில் தானும் பங்கேற்கத்
தானும் விழைகிறார் தந்தையர்களும்!

அம்மையப்பனாக மாறும் இவர்களை
நாம் மனதாரப் போற்றவே வேண்டும்!

:ballchain: . . . :thumb:
 
hi RR madam,
today i went to philly in pennsylvania today...i saw 3 kittens are playing together in car park....i thought imagination...these kittens

are no need of VISA....becoz they are born in america...if it is indian born kittens...may need visa to entry into USA....i imagined

these US born kittens are luckier than human beings....humans need VISa/green card to stay in america....except ABCD...
 

முதல் இடம்!


உலகில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு,
உயர்வின் அடிப்படையில் எண்கள் தந்து

வெளியான பட்டியலில், அமெரிக்காவின்
அழகான பாஸ்டன் நகரில் அமைந்துள்ள,

M I T பல்கலைக் கழகத்திற்கு முதல் இடம்!
M I T யில் படித்தாலே, அது பெருமை தரும்!

தாம் பெறும் பெருமைகளைவிடச் சிறப்பே,
தாம் பெற்ற மக்கள் பெறும் கல்விச் சிறப்பு!

சிங்காரச் சென்னையின் I I T மாணவனாகி,
பாங்காக M I T யில் முதுகலைப் பட்டத்தை

வாங்கிய மகனைப் பெற்றதால், எனக்கும்
பொங்கியது மகிழ்ச்சி, இந்தச் செய்தியால்!


:thumb: . . . :dance:
 

முதல் இடம்!


உலகில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு,
உயர்வின் அடிப்படையில் எண்கள் தந்து

வெளியான பட்டியலில், அமெரிக்காவின்
அழகான பாஸ்டன் நகரில் அமைந்துள்ள,

M I T பல்கலைக் கழகத்திற்கு முதல் இடம்!
M I T யில் படித்தாலே, அது பெருமை தரும்!

தாம் பெறும் பெருமைகளைவிடச் சிறப்பே,
தாம் பெற்ற மக்கள் பெறும் கல்விச் சிறப்பு!

சிங்காரச் சென்னையின் I I T மாணவனாகி,
பாங்காக M I T யில் முதுகலைப் பட்டத்தை

வாங்கிய மகனைப் பெற்றதால், எனக்கும்
பொங்கியது மகிழ்ச்சி, இந்தச் செய்தியால்!


:thumb: . . . :dance:
hi RR madam,
congratularions....one more thing abt boston this year....................last many years our jhon hopkins hospital best in USA,,,

now this year first time boston general hospital best and number one.in USA...its another crown to boston ....
 
Last edited:

Thanks for you feed back, TBS Sir.

When Ram met with an accident last year, he was admitted in MGH for 10 days. Best possible care was given.

It was totally a new experience for us. You must have read in 'பயணக் க(வி)தைகள்' that I wrote from Boston.

Regards .......... :)
 

பயன் உண்டா?


வாரிசுகளைக் காணும் ஆவலோடு,
வான் வழியே செல்லும் பெற்றோர்,

அமெரிக்க வாழ்வுக்குத் தம்மையே
அமைதியாக மாற்ற வழியில்லை!

கார் ஓட்டுவது இயலாது; தனியாகக்
கடையில் எதுவும் வாங்க முடியாது!

இந்தியப் பணத்தை எடுத்துச் சென்று
இந்த ஊரில் செலவழிக்க முடியாது!

உணவுப் பழக்கம் மாற்ற முடியாது;
உதவிகள் பலவும் செய்ய முடியாது!

தினம் காண இயலுமே என்பதையே
தினம் எண்ணி அவர்கள் மகிழலாம்!


:dance:
 

Latest ads

Back
Top