• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

International Men's Day - Nov 19 focuses on raising awareness for discrimination & male health. But for us, It's the time to recollect their contributions, sacrifices, support and progress. Such Push instills that of MEN nurturing their women to make power in Society. So the topic is ' Behind every successful woman there is a man.' Who/How has influenced you most in life?
Give a detailed account
 
ஆதரவு?

தமிழில் எழுத எழுந்த ஆர்வத்தால் - இங்கு
தமிழில்
சில நூல்களைத் தொடங்கினேன்!

எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள
இனிய இணையதளம் உதவுவது உண்மை!

சில நண்பர்களால் ஊக்கம் கிட்டிட - நானும்
பல ஆண்டுகள் பதிவுகளை இடுகின்றேன்!

நண்பர்களுக்கு நன்றி பாராட்ட எழுதுவது
'தங்கள் ஊக்கம்; எந்தன் ஆக்கம்', என்பதே!
 
உடல் தானம்!

மருத்துவ ஆராய்ச்சிக்கென, தன் உடலை
ஒருவர் அளித்திட, மனத் திடம் தேவை!

உயிர் பிரிந்த பின், சுற்றத்தார் அலங்கரித்த
உடல், எரியுண்டு, பிடி சாம்பலாக - ஆத்மா

வைதீக காரியங்களாலும், தானங்களாலும்,
வைதரணி நதியைக் கடக்குமென்பது ஐதீகம்!

உடல் தானம் செய்தாலோ, ஆடையே இன்றி,
ம் செய்யப்பட்டு, என்னென்னவோ ஆகும்!

அந்நிலையில்
தன்னைக் கற்பனை செய்வதே,
தந்திடும் உடல் முழுவதும் ஒரு நடுக்கத்தை!

எங்கள் உறவில் ஒருவர் இவ்வாறு செய்தது,
எங்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது!

முற்போக்கு சிந்தனை இருப்பவர்களால்தான்
முடியும், அஞ்சா நெஞ்சுடன், இப்படிச் செய்ய!

மருத்துவப் படிப்பிற்காக, இந்தத் தானமளித்த
மருவில்லா அந்த ஆத்மா, சாந்தி பெறட்டும்!

:pray2: ..... :rip:
 

புத்தாண்டு பிறந்தது!

புத்தாண்டு பிறந்துவிட்டது இன்று!
புத்துணர்வுகள் பெருகட்டும் நன்கு!

என் எழுத்துக்களை ஊக்குவிக்கும்
என் இணையதள நண்பர்களுக்கும்,

அவர்தம் உற்றார்க்கும் - இவ்வாண்டு
அள்ளித் தரட்டும் இனிய நிமிடங்களை!

பாசமும், நேசமும் பாசிபோலப் படர்ந்து,
பாரதம் மகிழட்டும், அன்போடு இசைந்து!

வாழ்க வளமுடன், :pray2:
ராஜி ராம்
 
முதல் அபிப்ராயம் சிறந்ததா?

முதல் அபிப்ராயம் சிறந்தது என்று,
முன் நாள் முதல் சொல்லுவதுண்டு!

தவறு இந்தக் கருத்து என்பதே - என்
தவறில்லா முடிவு; இது மிக நிஜமே!

நெருங்கிப் பழகாதவரை தெரியாது,
நெஞ்சில் புதைந்துள்ள எண்ணங்கள்!

தனது சிறந்த பக்கத்தை மட்டும்தான்
தன் சகாக்களிடம் காட்டுவார் மனிதர்!

குடம் பாலையும் துளி நஞ்சு கெடுக்கும்;
கெடும் நற் பெயரும் ஒரு தீச் செயலால்!

யாண்டும் நல்லவராகப் பெயர் பெற்றிட,
யாண்டும் கேடுகளே செய்தல் கூடாது!

:angel:
 
ஐயகோ 'ஐ'-யே!!

ஔவையை 'அவ்வை' ஆக்கினர்!
ஐயனையும் 'அய்யன்' ஆக்கினர்!

இப்போது 'மையம்', 'மய்யம்' ஆனது!
இனி என்னென்ன ஆகுமோ, அறியேன்!

:faint:
 

வாழ்வே மாயம்!


ஐம்பத்தி நான்கு வயதிலே வலம் வந்தார்,
ஐம்பது வருடங்கள் திரையுலகில், ஸ்ரீதேவி.

சுட்டிக் குழந்தையிலிருந்து கனவுக் கன்னியாகி,
எட்டினார் சிகரத்தைப் பல மொழிகளில் நடித்து.

தக்க வேடங்கள் ஏற்று, இளமை கடந்த பின்னும்
தக்க வைத்தார் ரசிகரின் இதயங்களில், இடத்தை!

அழகு, பணம், புகழ், அந்தஸ்து என்ன இருப்பினும்,
அறியார் எவரும் என்று உயிர் துறப்போம் என்று!

காலன் இவர் உயிர் பறித்தது மிகவும் கொடுமை.
காலத்தை வென்று இவர் புகழிருக்கும், உண்மை!

அழகு தேவதையாய், பலரின் நெஞ்சில் நிலைத்த
அன்னாரின் ஆன்மா சாந்தி பெற வேண்டுவோம்!

:pray: ..... :rip:
 
எங்கள் ஊர்க் கலைஞர் !?!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை!
ஆனைமலையில் அது நன்கு நிரூபணம் ஆனது!

நாதஸ்வரம் இசைக்க நல்ல கலைஞர் இல்லை;
நானே சிறந்தவன் எனக் கிளம்பிவிட்டார் ஒருவர்!

பற்பல வண்ண ஆடைகளில் அவர் தோன்றினும்,
பற்பல ராகங்களை அறிந்திலார்; அறிந்தது தோடி!

எண்ணற்ற அபஸ்வரக் களஞ்சியமா
கிவிடும் தோடி,
வண்ண உடை எதை அவர் அணிந்தோடி வந்தாலும்!

:dizzy: ...... :faint2:
 
'விளம்பி' பிறக்கின்றது நாளை!
விளம்புவதோ நற் பலன்களை!

தினமும் மகிழ்ச்சி மலரட்டும்!
வளமும், அன்பும் தொடரட்டும்!

வாழ்க வளமுடன்!
ட்புடன், ராஜி ராம்
 
என்ன நடக்கிறது?

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று
நம்மில் பலருக்கும் அறிந்திடவே ஆர்வம்!

புதிய டெக்னாலஜி அளிக்கின்றது, பற்பல
புதிய வழித் தொடர்புகளை, மிக எளிதாக!

ஆயினும், நாம் படிக்கிறது நிஜமா என்பதை
ஆராய்ந்து அறிவோர் மிகச் சிலரே ஆவார்!

எவ் விஷயம் பகிர்வில் வந்தாலும், உடனே
அவ் விஷயம் பரவுகிறது விஷம் போலவே!

கிரா!ஃபிக்ஸ் மூலம் உருவானவற்றையும்
கிளப்பி அனுப்புகின்றார் நிஜம் போலவே!

என்று தவறான விஷயங்களைப் பரப்புவது
நின்று போகுமோ என மனம் ஏங்குகின்றது!
 
வீசை என்ன விலை? :becky:

இசை நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அறிந்து
ம்,
'இசை வீசை என்ன விலை?' எனக் கேட்கும்

அதிகாரி இருக்கையிலே இருந்துவிட்டால்??
சதிதான் செய்வார், ஒளிபரப்பின் பொழுதில்!

வீணைக் கச்சேரி இன்று காலை நேரத்தில்;
கலைவாணியின் புகழ் பாடித் துவங்கணும்!

ஆனால், கச்சேரி துவங்கியதும், சிறந்த ராக
ஆலாபனையுடன் க்ருதி; தனி ஆவர்த்தனம்!

இனிமையான சில துக்கடாக்கள் அதன் பின்!
இரண்டாம் பகுதியில் கலைவாணிப் பாடல்!

ஒரு கச்சேரி எப்படித் தயாராகும் என்றறியாத
ஒரு அதிகாரியின் வேலையே என்றறிந்தேன்!

அரங்க இசை இரு பகுதிகளாகப் பதிவு ஆனது;
இரண்டாவது பகுதி முதற் பகுதி ஆகிவிட்டது!

'சமுகத்தின் மகிழ்ச்சி' இச் சானல் எனத் தினம்
சலிக்காது சொன்னால் மட்டும் மகிழ்ச்சி வருமா?

dejection.png
dejection.png
dejection.png
 
ஆமை புகுந்த வீடு?!?

'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பது
ஆமையைப் பழித்திடும் இழிந்த செயலே!

நீரிலும், நிலத்திலும் வாழும் இந்த ஜீவன்
வீட்டினுள் வந்தால் தீங்கு வருமா நமக்கு?

சரியாகப் புரியாமல், பழமொழிகளை மாற்றி,
அறியாமையைப் பிரகடனம் செய்கின்றோம்!

திருமாலின் திரு அவதாரங்களில் - அழகாக
வருகிறதே ஆமை வடிவம், இரண்டாவதாக!


நிஜமான பழமொழி உருமாறியதும் நிஜமே;

நிஜமான பழமொழியை அறிவோம் இன்றே!

காளான் பெருகும் ஈரப் பதத்திலும், மற்றும்
உளுத்துப் போய்விட்ட மரப் பொருட்களிலும்!

நல்ல சூரிய ஒளியும், நல்ல காற்றோட்டமும்

நன்கு இல்லையேல், எளிதில் பரவும்
, காளான்!

உடல் நலம் கெடுத்து, இல்லத்தில் உள்ளோரின்

உயிரையும் எடுத்துவிடும், அகால மரணத்தால்!

செந்தமிழ் குறிப்பிடும் காளானை 'ஆம்பி'யென்று.
இந்த ஆம்பி இல்லத்தில் புகுந்தால் கேடு வருமே?

'ஆம்பி புகுதல் கேடு தரும்', என்பதைத் தெரிவிக்க,
'ஆம்பி புகுந்த வீடு உருப்படாது' என்றனர், அன்றே!

'ஆம்பி பூத்த' என்பதுதான் 'ஆமி பூத்த'; 'ஆமெ பூத்த';
'ஆமெ பூந்த'; '
ஆமை புகுந்த' என உருக்குலைந்தது!

ஆதவனின் ஒளியும், நல்ல வளியும் எளிதிலே வர
ஆக்குவோம் நம் இனிய இல்லங்களை! அத்துடன்,

அறியாமை, கல்லாமை என்ற ஆமைகளை ஒழித்து,
அறிவோம் ஆமைகளை என்றென்றும் காத்திடவே!

வாழ்க வளமுடன்!
 
மேற் காணும் புதுக் கவிதை, இணையதள நண்பர் திரு. சுப்ரமணியன் அவர்கள் அனுப்பிய

செய்தியிலிருந்து தோன்றியது! அவருக்கு நன்றி. :)

அவரின் இணையதளப் பெயர் 'naithru'.
 
ஆத்திக நாத்திகர்கள்!

கடவுள் இல்லையெனப் பறைசாற்றுவார் - தாம்
கடவுளை வணங்குவது மனைவிக்காக என்பார்!

மூட நம்பிக்கையை உடைத்து எறி என்பார் - தமது
மூட நம்பிக்கைகள் தம் துணைவியாலே என்பார்!

ஊருக்கு உபதேசம் செய்வது எளிதே! என்றும் தமது
பேருக்குக் களங்கம் வராதிருக்க மனைவி உண்டே!

மறதி ஒரு வசதி! மக்களின் மறதிதான் மூலதனம்!
இறுதிவரை 'இது'
ஏற்றமுடன் வாழ வைத்துவிடும்!

:hail:
 
அருமையான வரிகள்! பல பேர் நேரத்தை வடிவேலு மேமேயிலும், நக்கல் மற்றும் நய்யாண்டியில் போக்கி வரும் காலம்! இன்றுள்ள online வசதிகள் யாரும், எதையும், எங்கேயும், எப்போதும் கற்க வாய்ப்பு அளிக்கிறது. நீங்கள் சொல்வது போல கற்க வேண்டும்! உங்கள் கருத்துக்கு நன்றி!!
 

Latest ads

Back
Top