• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

தைத் திருநாள்...

புதிய ஆங்கில ஆண்டுத் துவக்கத்தில்,
இனிய பொங்கலுடன் கரும்பும் வைத்து,

உலகு சிறக்க ஒளியும், சக்தியும் அளித்து
உலவும் சூரிய தேவனை வழிபட்டு - தம்

சுற்றம், நட்பு அனைவரிடமும் உரையாட,
உற்ற வாழ்த்துச் செய்திகளைப் பரிமாற,

நிறைந்த நாளாக வந்த பொங்கல், இன்று!
நிறைவான வளங்களைத் தரட்டும் நன்று!
 
hi

வாழ்வு என்றும் வாழ்வதற்கு......இனிய தமிழ் திருநாளில் என்றும் கரும்பு போல் வாழ்க்கையும் இனித்திட
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இந்த புத்தாண்டை கொண்டாடுவோம்....வாழ்க வளமுடன்..
 
madam you are an inspiration
my maiden effort
கட்டை விரலை ஏகலவ்யனிடம் துரோணாசாரியர்
கேட்டார் குருதட்சணையாக, நான் உங்ளிடம
கட்டை விரல் என்ன எல்லா விரலும் தருவேன்
தட்டச்சு செய்ய ஒரு விரல் போதுமே.
 
அடுத்த முயற்சி

மொய்த்தன ஆயிரம் ஈக்கள்
பொய்யாகுமா,லாலா கடை
மிட்டாய் இனிப்பு தான்

ஒலி எழுப்பும் எல்லா பாகங்களும் என்னுடைய காரில்
ஒலிப்பானைத்தவிர
 
மிக்க நன்றி ராஜி அவர்களே
ஊக்கி கிரியா ஊக்கி
even I write nonsense, thanks for your likes
makes me to try writing, thanks
 
Real friends are friends for ever!!
Raji Mam , after reading this I remembered this.
A friend in need is no friend of mine , a man who is approached for hand loan
( கைமாத்து) commented
 
உனக்குதவ யிரும் தருவேன் என்பான்
எனக்குதவி கேட்காத வரை! ?
 
Covid அதிகாரம்.

கைகழுவி உண்பாரே மகிழ்வர் மற்றெல்லாம்
கைவிடுவர் உடல் நலத்தை.
*******************************************************

கற்க கசடறக் கழுவ கழுவியபின்
நிற்க உணவின் முன்.
*******************************************************

இருமல் தும்மல் இவைஎல்லாம் பீதி
வருத்துமே மக்கள் தமக்கு.
********************************************************

தொழுத கையுள் வைரஸ் ஒடுங்கும் அன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து.
*******************************************************

நண்பரை மறப்பது நன்றன்று அணைப்பதை
இன்றே மறத்தல் நன்று.
*******************************************************

மூன்றடி மூன்றடி நீங்கியான் நோதல்
என்றும் இலன் வைரஸால்.
*******************************************************

எப்படி யார்யார் தும்மினும் எட்டடி
எட்டி நிற்றல் நலம்.
*******************************************************

யாகாவாராயினும் முகம் காக்க காவாக்கால்
சோகாப்பர் கொரொனா பட்டு.
*******************************************************

நோயாளி மக்கட்கு ஆற்றுமுதவி தன்முகம்
மறைத்து முகமூடி இடல்.
*******************************************************

Covid தாக்கம் தடுக்க எப்போதும்
கோவிந்தா என்றே நினை.
*******************************************************

நட்புடன்,

ராஜி ராம்
 
நம் உயிர் காப்பான்!

வெளியே செல்லுமுன் உம் இரு கரங்களின்
வெளியே பூசிடுவீர் கொஞ்சம் பசுஞ்சாணி!

எத்தனை சிறந்த எளிய வழி இது என
அத்தனை விஷயமும் உரைக்கிறேன் இப்போது!

நம்மிடம் யாரும் நெருங்கியும் வந்திடார்;
நம்முடன் கைகளைக் குலுக்கவும் முயன்றிடார்!

எந்தப் பொருளையும் நம்மைத் தொடவிடார்;
எந்தப் பொருளையும் நம்மிடம் கொடுத்திடார்!

நம் முகத்தில் கண், மூக்கு, வாயை
நம் கைகளால் தொடவே கூசுவோம்!

வீடு திரும்பியதும் சோப்பு இட்டு, கைகளைக் கழுவி
-விட்டு உணவைப் பற்றிக் கவலை கொள்வோம்!

மருத்துவர் பரிந்துரை செய்யும் எல்லாமே
கருத்தில் கொள்ளுமே இந்தப் பசுஞ்சாணி!

உலகம் முழுதும் பரப்புவோம் கொரோனாக்
கவசம் தந்திடும் "சாணி-டைசர்" மகிமையை!

"சாணி-டைசர்" புகழ் ஓங்குக!!


🙏🙏🙏
 
வேண்டும்! வேண்டும்!!

அரிதெனினும் வெளி உணவை நிறுத்த வேண்டும்!

ஆசையாக வெளியில் போவதை மறக்க வேண்டும்!

இனிய நட்பு சுற்றத்தை நினக்க வேண்டும்!

ஈக்களுக்கு நுழைவு என்றும் தடுக்க வேண்டும்!

உடல் நலத்தை எப்போதும் பேண வேண்டும்!

ஊறு செய்யா உணவுகளை உண்ண வேண்டும்!

எப்போதும் இறைவன் தியானம் செய்ய வேண்டும்!

ஏமாற்றும் நபரை என்றும் ஒதுக்க வேண்டும்!

ஐயம் இன்றி அறிந்தாலே பகிர வேண்டும்!

ஒருவரையும் வெறுக்காமல் இருக்க வேண்டும்!

ஓய்வு மட்டும் எடுக்காமல் உழைக்க வேண்டும்!

ஔவியம் பேசுவதை ஒழிக்க வேண்டும்!

அஃகம் சுருக்கும் கடைகளை ஒடுக்க வேண்டும்!

அன்புடன்,

ராஜி ராம்
 
Audio file for the following song: (Singer - Ms. Sruthilaya, Singapore)

Thanks to maestro A R R 🙏

கொரோனா! கொரோனா!!

கொரோனா கொரோனா நீ
கொடுங்கோலன் தானா?
திக்குத் திக்கு நெஞ்சில்
கொரோனா!

சீன நாடு தானா நீ
சீண்டிச் சீண்டிப் போனா,
திக்குத் திக்கு நெஞ்சில்
கொரோனா!

வில்லன் ஆனதும் நீ தானா?
கொல்ல வந்ததும் நீ தானா?

முகத்தை மூடி நான்
ஒளிந்து கொள்ளவே
முன்பே டாக்டர் சொன்னானா?
(கொரோனா கொரோனா)

மேலை நாட்டு சொத்து நீயோ
செய்தாய் பல வேலை.

கையைத் தொட்டு நீ போனாலே
துடித்தாளே பேதை!

மெய்யைக் காண மருத்துவர்
தேடினாரே பாதை.

மெய் வருத்தும் நோய் கொடுக்க
உன் மனத்தில் போதை!

வேறு ஊரில் நான் உள்ளேன்
வலம் வர வேண்டாமா?

ஊறு செய்வேன் என்று பலர்
அஞ்சி ஓடல் நியாயமா?

முகமூடி போட்டே நானும்
திரிந்திடல் ஆகுமா?

முடிவாக எம்மை விட்டு
நீயும் செல்ல வேண்டாமா?

தடையேதும் இல்லாமல்
நானும் சுற்ற வேண்டாமா?

(கொரோனா கொரோனா)

சின்னச் சின்ன வைரைஸ் இங்கே
சில கோடி உண்டு;

சின்னவன் நீ ஒரு நாட்டின்
சதி என்றார் இன்று!

கிரீடங்கள் கொண்ட நீயோ
கொடும் சூரன் தானே!

சிறிதாக இருந்தாலும்
உனைத் தொடேன் நானே!

ஜனக் கூட்டம் சேராமலே
நடக்கின்றேன் உன்னாலே;

'ஸானடைசர்' இல்லாவிட்டால்
மருள்கிறேன் உன்னாலே!

ஜுரம் வந்தவரைக் கண்டால்
பயம் வரும் தன்னாலே;

வரம் தந்து எம்மை காக்க
வேண்டுகிறேன் உன்னாலே!

கட்டுப்பாடு இல்லாத நான்
கட்டுப்பட்டேன் உன்னாலே!

(கொரோனா கொரோனா)
___________________
அன்புடன்,
ராஜி ராம்
 

காமம் கொடியது!

இதிஹாஸங்கள் இரண்டும் காணும்போது,
மதியில் வரும் சில நிஜமான புரிதல்கள்!

அறு வகைத் தீமைகளில் முதன்மையாக
வரும் காமம்; அதன் பின் பிற தொடரும்.

காமத்தால் வரும் கேடுகள் எல்லாம், நம்
க்ஷேமத்திற்காகப் பெரியோர் உரைத்தார்!

முதுமையில் அடி வைக்கும் காலம், காமக்
கொடுமையால், உயிர் துறந்தனர் இருவர்.

மனைவிக்கு மதி மயங்கித் தந்த வரங்களால்,
மகனைப் பிரிந்து, வருந்தி, இறந்தார் ஒருவர்.

வாசம் மிக்க பெண்ணை மோகித்து, மணந்து,
நேசம் மிக்க முதல் மகனை 'பீஷ்மன்' ஆக்கி,

தன் தவறை உணர்ந்து, மனமுடந்து, அதனால்
தன் உயிரைத் துறந்தார் மற்றொருவர். ஆனால்

காம வயப்படாது, அரசர்கள் வாழ்ந்திருந்தால்,
நாம் படிக்க இதிஹாசங்கள் கிடைத்திராதோ?

நட்புடன்,

ராஜி ராம்
 
அன்றும், இன்றும்!

ஆண்டாண்டு காலமாய் உள்ள வழக்கம்,
ஆணாதிக்கம் தந்தது என எக்காளமிட்டு,

தீட்டுக் காலத்திலும் சபரிமலை செல்லத்
திட்டமிட்ட பெண்களே! இன்று கண்டீரா,

உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர்
உள்ளது தீட்டு என விலகி ஓடும் விந்தையை?!

பண்பாடும், பாரம்பரியமும் மதிக்கப் பழகாவிடில்,
படும் பாடு என்னவென்று புரிந்ததா இப்போது?
 
அன்றும், இன்றும்!

ஆண்டாண்டு காலமாய் உள்ள வழக்கம்,
ஆணாதிக்கம் தந்தது என எக்காளமிட்டு,

தீட்டுக் காலத்திலும் சபரிமலை செல்லத்
திட்டமிட்ட பெண்களே! இன்று கண்டீரா,

உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர்
உள்ளது தீட்டு என விலகி ஓடும் விந்தையை?!

பண்பாடும், பாரம்பரியமும் மதிக்கப் பழகாவிடில்,
படும் பாடு என்னவென்று புரிந்ததா இப்போது?

hi


அரசன் அன்று கொல்வான் ...தெய்வம் நின்று கொல்லும் ....அழிவு ஆரம்பம் கேரளா தான்...இந்த கஷ்டத்திற்கு

எந்த கோர்ட் நீதி சொல்லாது....தெய்வம் ஒன்று தான் நீதி சொல்லும்.....இது காலத்தின் கட்டாயம்...

சுத்தமாக இருக்க சொன்னால்....அதற்கு swaccha bharat என்று பெயர் .....இன்று ஒன்றும் சொல்லாமல் காற்றும்

நீரும் ரோடும் சுத்தமாக இருக்கிறது.....கங்கையும் யமுனையும் இன்று சுத்தமான நதி .....மனிதனால்

முடியாததை......ஏதோ ஒரு சின்ன virus கண்ணுக்கும் தெரியாமல் மருந்துக்கும் வழியில்லாமல் இன்று

உலகம் நடுங்கிக்கறது...
 
Last edited:
hi

thanks.....


ஏழுமலையானுக்கு தூங்க மனிதர்கள் நேரம் தரவில்லை......ஆனால் இன்று எழுமையன் நிம்மதியாக

தூங்க முடிகிறது.....மனிதர்கள் செய்ய முடியாததை காலம் செய்யும்....இதுவும் காலத்தின் கட்டாயம் ...
கடவுளுக்கு தூக்கம் தராத மனிதர்களுக்கு ....கடவுள் இன்று எத்தனையோ பேருக்கு நிரந்தரமாக தூக்கம்

தருகிறான்..இது என்ன வென்று சொல்ல....திருந்தாத மனிதர்களை திருந்த வெப்பார் கடவுள்.....நம்பிக்கை

உள்ளவர்களுக்கு இது கடவுள் சித்தம்......நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது இயற்கையின் சிதம்ம்ம்....

எப்படி ஆனாலும் முடிவு ஒன்று தான்...
 
Last edited:
பண்பாடும், பாரம்பரியமும் மதிக்கப் பழகாவிடில்,
படும் பாடு என்னவென்று புரிந்ததா இப்போது?(#2294)

தீட்டு எச்சில் மடி விழுப்பு!


எச்சில்!

இச்சுவை அச்சவை என்பர்

'இச்சில் ' எச்சில் சுவை காணாதார்
 
தீட்டு

தடை உண்டு ...ஆனா இல்லை!

சபரிமலையேற தீட்டு தடை ! ஹஸ்தினாபுரத்தில்?

தடை ஏதுமில்லை மறை மூர்த்தி கண்ணா!
தடை ஏதுமில்லை கோபாலா!
திரௌபத துகில்உறிய
தடை ஏதுமில்லை கோவிந்தா!

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா!
தெரியாமல் நின்றாலும். தடை ஒனறுமில்லை கோபாலா!
 
தீண்டக் கூடாத பிறன் மனையைத்
தீண்டக் கூடாத நாளிலே தீண்டி,

உருவக் கூடாத ஆடைகளையும்
உருவி, மானபங்கம் செய்து, தம்

கௌரவம் தவறவிட்ட அக் கொடிய
கௌரவர் குலமே அழிந்து போனது

உணர்த்துமே மானிட குலத்திற்கு,

உணர வேண்டிய உண்மைகளை!
 
இதோ பழைய மெட்டுக்கு ஒரு பாடல்!!

காலை நீட்ட நேரம் இல்லை
காலை நீவ யாரும் இல்லை

ஜாலியாக ஓய்வெடுக்க
ஜாதகத்தில் வழியுமில்லை

ஜாதகத்தில் வழியுமில்லை

காலை நீட்ட நேரம் இல்லை
ஆஹா ஆ ஆ ஆ ஆ

துணிமணி ஊற வைத்து
கைகளால் துவைத்ததில்லை

வனிதா வேண்டுமென
மனதும் துடித்ததில்லை

பட்டுப் போல் தரை துடைத்து
இடுப்பில் பிடிப்பு வந்து

லாக் டவுன் வேளையிலே
நாக் அவுட் ஆனேனடி

நாக் அவுட் ஆனேனடி (காலை நீட்ட)

காயிலே சுவைப்பதில்லை
கனிந்ததும் கசப்பதில்லை

நோயில்லா உடல் இருந்தால்
நூறு வரை அசதி இல்லை

மாமியார் கொடுமையில்லை
மாமனார் யாரும் இல்லை

வேலை எல்லாம் முடித்துவிட்டால்
சந்தோஷம் குறைவதில்லை

சந்தோஷம் குறைவதில்லை (காலை நீட்ட)



லாக் டவுன் முடித்துவிட்டேன்
கேட்டைத் திறந்துவிட்டேன்

வேலையாளைக் கண்டுவிட்டேன்
வேலைப்பளு குறையக் கண்டேன்

சமைத்த பாத்திரங்களைக்
கூடையில் போட்டுவிட்டேன்

அமைதியாய்க் கூடைதனை
வெளியிலே வைத்துவிட்டேன்

வெளியிலே வைத்துவிட்டேன்

காலை நீட்ட நேரமுண்டு
வேலை செய்ய ஆளும் உண்டு

ஜாலியாக ஓய்வெடுக்க
ஜாதகத்தில் வழியும் உண்டு

ஜாதகத்தில் வழியும் உண்டு

தன்னன்னா தான தன்னே,
தானே தனனனன்னா

வாழ்க வளமுடன்!
 

Latest ads

Back
Top