எண்ண அலைகள்....

நாம் எங்கே போகிறோம்??

பிறரின் அந்தரங்கத்தினுள் நுழைவது
பிறன் மனை நோக்குவதற்கு இணை!

சமூகத்தில் அந்தஸ்து பெற்றோர் என
சக நடிக, நடிகைகளை அழைத்து வந்து,

அவர்களின் அந்தரங்க நிகழ்வுகளை
அலுக்காமல் தினமும் காட்டுவதும்,

அதனைக் காணப் பலர் விழைவதும்,
அதைக் கொண்டாடி மகிழ்வதும் ஏன்?

இத்தனை பொருட் செலவை வைத்து,
எத்தனை நற் செயல்கள் செய்யலாம்?

ஏழைகள் பலர் வாழும் நாட்டில், இது
தேவைதானா? மனம் வருந்துகிறது!

நாம் எங்கே போகிறோம்? :doh:
 
மிரட்டும் தமிழ்!

Source: Maname Kanamum (மனமே கனமும்)

பல்லவி
மனமெ கனமும் மரவாதெய்
ஜகதீஸன் மலர் பதமெய்


அனுபல்லவி

மொஹம் மூழ்கி பாழாகாதெய்
மய வாழ்வு ஸதம…


கரநம் 1

னாதன் னாமம் னீ பஜி இன்ட்ரெய்
னாலை என்பார் யாரை கன்டார்
ஆதலால் பவ ரொஹம் ஒழின்டிட வெய்…


கரநம் 2

னடயும் தலர டேஹம் ஒடுன்க
னாவது குழர கன்கல் மன்க
என்ன ஸெஇவார் துனை யார் வருவார் உனக்கு..
:boom: ............... :faint:

அட ராமா ராமா !! எங்கே போய் முட்டிக்கறதுன்னு தெரியலியே.......
 
நாம் எங்கே போகிறோம்??

பிறரின் அந்தரங்கத்தினுள் நுழைவது
பிறன் மனை நோக்குவதற்கு இணை!

சமூகத்தில் அந்தஸ்து பெற்றோர் என
சக நடிக, நடிகைகளை அழைத்து வந்து,

அவர்களின் அந்தரங்க நிகழ்வுகளை
அலுக்காமல் தினமும் காட்டுவதும்,

அதனைக் காணப் பலர் விழைவதும்,
அதைக் கொண்டாடி மகிழ்வதும் ஏன்?

இத்தனை பொருட் செலவை வைத்து,
எத்தனை நற் செயல்கள் செய்யலாம்?

ஏழைகள் பலர் வாழும் நாட்டில், இது
தேவைதானா? மனம் வருந்துகிறது!

நாம் எங்கே போகிறோம்? :doh:

இது என்ன பிக் பாஸ் பத்தின கமென்டா? என்னன்னு புரியலியே......
 
அட ராமா ராமா !! எங்கே போய் முட்டிக்கறதுன்னு தெரியலியே.......
தமிழ் மெல்லச் சாகிறது! இதற்கு இணையதளம் துணை போகிறது!

இந்தப்
பாடலைக் கண்டு, நான் மிரண்டுதான் போனேன்! :fear:
 
இது என்ன பிக் பாஸ் பத்தின கமென்டா? என்னன்னு புரியலியே......
வேறு யார் பல காமராக்களை வைத்துக்கொண்டு படம் பிடிக்கிறார்களாம்? :drama:

பல மனித மணி நேரங்கள் வீணாகப் போகின்றன! :sad:
 
கற்றதனால் ஆய பயன் ....

''கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்'', என்றார் வள்ளுவர்.

இறையை மட்டும் தொழுதுவிட்டு, பிறருடைய
குறையைத் தேடித் துருவி, ஆராய்ந்து, அறிந்து,

இன்னாச் சொற்களால் வருத்தி, ஆனந்திப்பது
என்ன பயனைத் தரும், கற்ற அனைத்திற்கும்?

நிறை குடம் தளும்பாது என்பதை அறிவோம்!
குறை கூறி வருத்தாது, இன்புற்று வாழ்வோம்!

:angel: ..... :grouphug:
 

திருமதி ஜெ. ஜெ தூண்டிய ஒரு பொறி; உதித்தவை இரு புதுக் குறள்கள்.

அதிகாரம் ஒன்றில் பத்து குறள்கள் வேண்டுமே! இதோ - புது அதிகாரம்.

கார்ட்டுடைமை.

பெற்றிடுவர் பண்டங்களை மலிவாக ரேஷன்கார்ட்
பெற்றுள்ள ஏழை எனின். (1)

காசின்றி எதனையும் வாங்குவர் க்ரெடிட்
கார்டினை வைத்துள் ளவர். (2)

பட்டாசில் ஐம்பதாயிரம் இன்வெஸ்ட் செய்வர்

பான்கார்ட் காட்டு பவர். (3)

தனக்குவமை இல்லா ஆதார்கார்ட் இல்லாரின்
மனக்கவலை மாற்றல் அரிது. (4)

எண்ணியது எண்ணியாங்கு எய்துப
தன்னுடன்
ஆதார்கார்ட் இருக்கப் பெறின். (5)


தற்காத்துத் தன்கார்ட் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண். (6)

செல்லுலாப் பேசியும் செல்லாது ஆதாருடன்

சேர்க்காது போகப் பெறின். (7)

ஆண்டவனைக் காணார் இறந்தால் எரியார்
ஆதார்கார்ட் இல்லா தவர். (8)


வேண்டும் ஆதார்கார்ட் கையில் இருப்போர்க்கு
யாண்டும் இடும்பை இல. (9)


கார்டுகள் வாழ்விற்கு இன்பம் அதற்கின்பம்
ஆதார்கார்ட் கிடைக்கப் பெறின். (10)

:peace:
 
Last edited:
hi

just add...

ஆதார் கார்டு இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.....பாண் கார்டு இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை...
 
பேன் என்ப ஏனைய ஆதார் என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு
 
Last edited:

அந்த நாள் ஞாபகம்....


நாட்காட்டியில் பார்க்கிறேன் தேதியை இன்று;
காட்டுகின்றது எனக்கு, அக்டோபர் பத்து என்று.

பத்து, பத்து, பத்து என்ற நாளிலேதான், நானும்
இந்த அழகிய இணையதளத்திலே நுழைந்தேன்!

ஆண்டுகள் ஏழு உருண்டு ஓடிவிட்டன என்பதை
நான் உணர்கின்றேன்; காலச் சக்கரம் நில்லாது!

என்னை க்குவிக்கின்ற இனிய நண்பர்களுக்கு,
என் மனமார்ந்த நன்றி, மறவாது உரைக்கிறேன்!

:pray2:
 
hi

i joined in nov 2008.....closer to 20 yrs...look like two decades with this forum...still my thumps ups/downs less than you...still im in double digits..

you are in trip;e digits...
.
 
அதிகாரம் ஒன்றில் பத்து குறள்கள் வேண்டுமே! இதோ - புது அதிகாரம்.

கார்ட்டுடைமை. (#2233 Raji)
புது அதிகாரம்? சர்வாதிகாரம்!
மக்கள் குரல் ஒடுக்கும் ஆணவ அதிகாரம்!
 
திருமலை ரகசியம்!

'ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்த,
ஏதும் தர வேண்டாம் தலை மழிப்பவருக்கு' - என

அறிவிப்பு உள்ளது; பணம் வாங்கியதால் - வேலை
பறிக்கப்பட்டதாம், 243 முடி திருத்துபவர்களுக்கு!

பத்து, இருபது என, தலை ஒன்றுக்கு வாங்கியதாய்,
பத்திரிகைக்கு அவர்கள் சொல்லுவது மிகத் தவறு!

எங்கள் வீட்டுக் குழந்தைக்காக, நூறு ரூபாய் த
ந்தி,
எங்களிடம் கேட்டார், 'பிய்யம், பப்பு, நூனி லேதா?'

தெலுங்கு அறிந்த நான் புரிந்துகொண்டேன், அவர்
எதிர்பார்ப்பதை! அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய்!!

பின் என்ன? இன்னும் ஒரு நூறு ரூபாயை
த் ந்து
,
இன்னும் பேசாமல் அவர் வாயை அடக்கினோம்!

:popcorn: .... :tape2:

 

ஐயோ பாவம் அர்ச்சகர்கள்! :tsk:


வியாபாரமாகத் திருமணம் ஆகிவிட்ட காலத்தில்,
வியாபாரம் செய்கின்றனர், கோவில் அர்ச்சகர்களை!

அர்ச்சகரின் பெண்கள்கூட இந்த ஜீவன்களை மணக்க
அச்சப்பட்டு, வேறு தொழிலாளிகளைத் தேடுவதால்,

அர்ச்சகரை மணப்பவளுக்கு மூன்று லட்சம் பரிசு என
அரசாங்க அறிக்கை ஒன்றும் வெளிவந்துவிட்டதாம்!

மயக்கிவிடும் நிலையில் விலைவாசி உள்ள சமயம்,
மயங்குவாரோ பெண்கள், இந்த மூன்று லட்சத்திற்கு!

:nono:
 
Back
Top