எண்ண அலைகள்....


Without comments!

Tasmac526996_327949533931052_100001480250403_874517_1440945556_n.jpg


Photo courtesy: Google images.


SPACE MANAGEMENT....??!! [ After reading crowd Management ..in Thirupathi...thread...!! ]

TVK
 

அது போதுமா,
நண்பனே!

இரு நண்பர்களின் நட்பு மலர்ந்தது,

ஒரு டாஸ்மாக் கடையில்! அதுவே

இணை பிரியாத நட்பாக உயர்ந்தது,
துணை ஒருவருக்கு ஒருவரே என!

காலம் உருண்டு ஓடிட, ஒருவனின்
காலம் முடியும் தருணமும் வந்தது!

'நண்பா! உன்னை ஒன்று கேட்பேன்!
நண்பகல் தினமும் எனது சமாதிக்கு

அன்புடன் வந்து, ஒரு மதுபானத்தை
என்னை நினைத்தபடி ஊற்றுவாயா?'

என்று கெஞ்சிக் கேட்க, அவனருகே
நின்று நண்பன் இப்படி வினவினான்:

'உனக்காக நிச்சயமாகச் செய்வேன்!
எனக்காக ஒரு உதவியும் கேட்பேன்!

ஊற்றும் மதுவை நான் ஜீரணித்த பின்
ஊற்றினால், அது போதுமா நண்பனே!'

:fish:


 

இது புத்திசாலித்தனம்!


ஐந்து நாட்கள் நடந்த கிரிகெட் ஆட்டம், பின்
ஐம்பது ஓவர்கள் விளையாட்டாகச் சுருங்கி,

இதனைக் காணவும் பொழுது கிடைக்காமல்,
இது இன்று சுருங்கியது இருபது ஓவர்களாக!

கிரிகெட் விளையாட்டு சுருங்கும் காலமிது;
கிரிகெட் ரசிகர்கள் கொண்டாடும் சமயமிது!

காலம் பொன்னானது என்பதால், குறிப்பிட்ட
காலத்திலே இருபது ஓவர்கள் போடாவிடில்,

அணித் தலைவனின் தவறாகக் கருதப்பட்டு,
அவன் இரண்டாம் முறை அதைச் செய்தால்,

அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாமல்
தடுத்து விடுவார்கள் அவனை; இதுவே விதி!

நல்லதொரு தலைவன் இத் தவறைச் செய்ய,
நல்ல ஆட்டக்காரனை வேண்டிய அந்த அணி,

அணித் தலைவனை உடனே மாற்றிவிட்டது!
இனி, தலைவனாக மீண்டும் தவறைச் செய்து,

விளையாட முடியாமல் போய்விட இயலாதே!
விளையாட்டில் நல்ல புத்திசாலித்தனம் இதே!


:peace:
 
A recent survey says that around 10% of the students (aged between 12-16 years)
are exposed to alcohol. There are two reasons for this. One, sometimes parents
drink at home in the presence of children and the second one many of them are
exposed to drinking through media. There are some reports that even women
are exposed to alcohol as compared with those men whom they are trying to
control but least exposed. Of late, girls are exposed to alcohol in big big hotels with
their male counterparts, which is yet to be surveyed.

Balasubramanian
Ambattur
 

எழுத்துக்கள் மறையலாம்....


கரும்பலகையில் தான் எழுதுவதை, ஆசான்
விரும்பியபோது அழித்து வேறு எழுதுவார்!

வலைத்தளங்களிலும் அதன் சொந்தக்காரர்,
வலைப் பதிவுகளை இதுபோலவே அழிப்பார்!

வேண்டாத பக்கங்களை அழித்தாலும், அவை
வேண்டாமென மனம் ஒதுக்க விழைந்தாலும்,

தீயினால் சுட்ட புண் ஆறுவது போல ஆறாது,
நாவினால் சுட்ட வடுவைப்போல வருத்தும்!

ஒரு நன்மை இதிலும் உண்டு; என்னவெனில்
ஒரு நல்ல வாய்ப்பு, எழுதியவர் பற்றி அறிய!

கழுவும் மீனில் நழுவும் மீனாக இருந்திடவும்
அறிய வேண்டும் என்று நன்கு உணர்த்திடும்!

:spy: . . . . . :decision:. . . . . :peace:
 

எழுத்துக்கள் மறையலாம்....


கரும்பலகையில் தான் எழுதுவதை, ஆசான்
விரும்பியபோது அழித்து வேறு எழுதுவார்!

வலைத்தளங்களிலும் அதன் சொந்தக்காரர்,
வலைப் பதிவுகளை இதுபோலவே அழிப்பார்!

வேண்டாத பக்கங்களை அழித்தாலும், அவை
வேண்டாமென மனம் ஒதுக்க விழைந்தாலும்,

தீயினால் சுட்ட புண் ஆறுவது போல ஆறாது,
நாவினால் சுட்ட வடுவைப்போல வருத்தும்!

ஒரு நன்மை இதிலும் உண்டு; என்னவெனில்
ஒரு நல்ல வாய்ப்பு, எழுதியவர் பற்றி அறிய!

கழுவும் மீனில் நழுவும் மீனாக இருந்திடவும்
அறிய வேண்டும் என்று நன்கு உணர்த்திடும்!

:spy: . . . . . :decision:. . . . . :peace:



யாரோ....அவர்..யாரோ....?


Tvk
 
யாரோ....அவர்..யாரோ....? Tvk
யாரோ? அவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே!! :noidea:

இதுதான் 'கழுவுற மீனிலே நழுவுற மீன்' டெக்னிக்!! :bolt:
 

குரு சார்!

நீங்க சொல்லறது 'மொரார்ஜின்'! :yuck:

திரு. மொரார்ஜி தேசாயின் காலை பானத்திற்கு V R Mam வைத்த பெயர். :spit:
 
யாரோ? அவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே!! :noidea:

இதுதான் 'கழுவுற மீனிலே நழுவுற மீன்' டெக்னிக்!! :bolt:


நான் சுத்த சைவம்....கழுவற மீனும் தெரியாது...நழுவற மீனும் தெரியாது...

Tvk



 

தவக் கவி அவர்களே! எனக்கும் கேள்வி ஞானம்தான்! :becky:

மீன் கடையைக் கண்டாலே காத தூரம் ஓடிவிடுவேன்! :car:
 
dear RR !
it is known to all. but for that sake all can not be sri morarji !!
can you explain why &at what context the 'கழுவுற மீனிலே நழுவுற மீன்' டெக்னிக்!! proverb is uttered
guruvayurappan
 

Dear Guru Sir,

'பழமொழியை ஆராயக் கூடாது; அனுபவிக்கணும்!'
Anyway, I used it to say that we should not get caught in problems! :lock1:
 
யாரோ....அவர்..யாரோ....?
ஒரு 'துப்பு' தருகிறேன்!

ஒரு நாள் காலை ஆரம்பித்தது!

ஒரு புகார் யாரோ அனுப்பியதும்,

மறு நாள் பிரம்மமுடி விழுந்தது!
மறு நாள் அது மாயமாகிவிட்டது!

குறிப்பு:

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது!

நூலைச் சொன்னாலும் ஆளைச் சொல்லக் கூடாது! :nono:
 
ஒரு 'துப்பு' தருகிறேன்!

ஒரு நாள் காலை ஆரம்பித்தது!

ஒரு புகார் யாரோ அனுப்பியதும்,

மறு நாள் பிரம்மமுடி விழுந்தது!
மறு நாள் அது மாயமாகிவிட்டது!

குறிப்பு:

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது!

நூலைச் சொன்னாலும் ஆளைச் சொல்லக் கூடாது! :nono:

ஆஹா...இந்த மாதம் நான் சலூன் பக்கம் போகவேண்டாம்னு நினைக்கிறேன்.....


யாருன்னு ..யோஜனை பண்ணினாலே போறும்...

tvk

 
ஆஹா...இந்த மாதம் நான் சலூன் பக்கம் போகவேண்டாம்னு நினைக்கிறேன்.....

யாருன்னு ..யோஜனை பண்ணினாலே போறும்... tvk
:ranger: . . . :pound:
 

நம்பிக்கையே வாழ்க்கை!

விண்ணில் ஒரு விமானம் பறந்த பொழுது,

தன்னிலை தடுமாறிப் பறக்க ஆரம்பித்தது!

பயணிகள் யாவரும், நிலைகுலைந்து போய்,
பயத்தால் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்க,

ஒரு சிறுவன் மட்டும் தான் விளையாடிடும்
ஒரு விளையாட்டை, விடாது தொடர்ந்தான்!

விமானம் சிறிது நேரத்தில் மிக அமைதியாக,
விமானதளத்தில் தரையிறங்கி நின்றபோது,

சிறுவனை ஒருவர் கேட்டார், 'அனைவருமே
சிந்தை தடுமாறிப் பயந்த போது, நீ மட்டுமே

பயமின்றி விளையாட்டைத் தொடர்ந்தாயே!
பயம் என்றாலே என்னவென்று அறியாயோ?'

சிந்தை கவர்ந்த அந்தச் சிறுவன் உரைத்தான்,
'தந்தை விமானம் ஓட்டும் போது, தனையன்

அறிவான் அன்றோ, அவர் அந்த விமானத்தை
சரியாகத் தரையிறக்குவார் என்கிற நிஜத்தை!'


:plane: . . . :cool:

 

தன் வினை .....

தன் நாட்டிலே இறுதிப் போட்டி நடந்து,
தானும் அதில் விளையாட நேர்ந்தால்,

தமக்கு ஏற்றபடி ஆடுகளத்தை மாற்றி,
தம் வெற்றிக்கு வழி வகுப்பது நிஜமே!

ஆனால், பந்து மிகவும் திசை திரும்பிப்
போனால் வெற்றி கிட்டுமென்று நம்பி,

ஆடுகளத்தை மாற்றப் போக, எதிரிகள்
ஆடும் பொழுது சாதகமானதில் மகிழ,

தாம் ஆடும்போதும் பந்து திரும்பிவிட,
'தன் வினை தன்னைச் சுடும்', ஆனது!

வெற்றிக் கனியைக் கைப்பற்ற எண்ண,
வெற்றிக் கனியோ கை நழுவிப்போனது!


:first: . . . :nono: . . . :Cry:
 

இரண்டாண்டு நிறைவு!


இந்த இணையதளத்தில் இணைந்தேன் நான்
இதே தேதியில் இரண்டாண்டுகளுக்கு முன்!

என் எழுத்துக்களை ஊக்குவித்து, மகிழ்ந்து,
என் இனிய நட்பு வட்டம் இங்கும் சேர்ந்தது!

எல்லாம் இனிப்பாக இருந்தால் திகட்டுமே!
சொல்லால் வருத்தம் சில பொழுது வந்தது!

இசைப் பகுதியில் திரைப்படப் பாடல்களில்
இசைவாக வந்துள்ள ராகங்களை ஆராய்ந்து,

மனம் மகிழ வாய்ப்பும் கிடைத்தது! மேலும்,
மனம் விரும்பி நான் சென்ற பயணங்களை,

நண்பர் வட்டத்துடன் பகிர்ந்த பின்னர், மனம்
நண்பர்களின் பின்னூட்டங்களால் மகிழ்ந்தது!

எண்ணத்தில் எழுகின்ற அலைகள் பலவற்றை,
எண்ண அலைகளாகத் தொடரவும் முடிந்தது!

இனிய நண்பர் ஒருவரின் அயராத முயற்சியே,
இனிய சில நண்பர்களை அறிமுகம் செய்தது!

தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள,
இனிய சில நண்பர்கள் விலாசம் அளித்தனர்!

இந்த இணையதளம் தந்த இனிய நினைவுகள்
வந்து எழுவதால், இந்தப் பக்கம் வருகின்றது!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:
 
congrats... Raji maam..

இரண்டு ஆண்டுகள் இணயதளத்தில் பூர்த்தி
அதுவே உங்களின் மிகப்பெரிய கீர்த்தி.
நாளும் விடாமல் வரும் உங்கள் எழுத்து
அதுவே இந்த குழுமின் பெரிய சொத்து...

(plese dont laugh at this... this is not a kavidhai etc...only an attempt to wish you in your own style.)..

Cheers.
 

இரண்டாண்டு நிறைவு!


இந்த இணையதளத்தில் இணைந்தேன் நான்
இதே தேதியில் இரண்டாண்டுகளுக்கு முன்!

என் எழுத்துக்களை ஊக்குவித்து, மகிழ்ந்து,
என் இனிய நட்பு வட்டம் இங்கும் சேர்ந்தது!

எல்லாம் இனிப்பாக இருந்தால் திகட்டுமே!
சொல்லால் வருத்தம் சில பொழுது வந்தது!

இசைப் பகுதியில் திரைப்படப் பாடல்களில்
இசைவாக வந்துள்ள ராகங்களை ஆராய்ந்து,

மனம் மகிழ வாய்ப்பும் கிடைத்தது! மேலும்,
மனம் விரும்பி நான் சென்ற பயணங்களை,

நண்பர் வட்டத்துடன் பகிர்ந்த பின்னர், மனம்
நண்பர்களின் பின்னூட்டங்களால் மகிழ்ந்தது!

எண்ணத்தில் எழுகின்ற அலைகள் பலவற்றை,
எண்ண அலைகளாகத் தொடரவும் முடிந்தது!

இனிய நண்பர் ஒருவரின் அயராத முயற்சியே,
இனிய சில நண்பர்களை அறிமுகம் செய்தது!

தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள,
இனிய சில நண்பர்கள் விலாசம் அளித்தனர்!

இந்த இணையதளம் தந்த இனிய நினைவுகள்
வந்து எழுவதால், இந்தப் பக்கம் வருகின்றது!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:


மலரும் நினைவுகள்.....


மனம் வருடும் எண்ணங்கள்.....


மறக்க முடியா நட்பு வட்டங்கள்....


காலை முதல் இரவு வரை


கருத்து பரிமாறல்கள்....


கட்டவிழ்த்து ஓடும் அறிவுஒளிகள்....


கவிதைக்கு "எதுவும்" இலக்கணமென...


""கண்டதை"' அள்ளித்தறும் பயணக் கீற்றுகள்..


தொடு வானமே ஓர் இலக்கென...


தொடரட்டும் தங்கள் இனிய "பணிகள்"


tvk
 
மிக்க நன்றி நண்பரே! :yo:

முதலில் 'கண்டதை' என்று படித்ததும் :fear: அடைந்தேன்.

பின் 'கண்ணால் பார்த்த காட்சிகள்' என்று அறிந்தேன்! :high5:
 
Back
Top