எழுத்துக்கள் மறையலாம்....
கரும்பலகையில் தான் எழுதுவதை, ஆசான்
விரும்பியபோது அழித்து வேறு எழுதுவார்!
வலைத்தளங்களிலும் அதன் சொந்தக்காரர்,
வலைப் பதிவுகளை இதுபோலவே அழிப்பார்!
வேண்டாத பக்கங்களை அழித்தாலும், அவை
வேண்டாமென மனம் ஒதுக்க விழைந்தாலும்,
தீயினால் சுட்ட புண் ஆறுவது போல ஆறாது,
நாவினால் சுட்ட வடுவைப்போல வருத்தும்!
ஒரு நன்மை இதிலும் உண்டு; என்னவெனில்
ஒரு நல்ல வாய்ப்பு, எழுதியவர் பற்றி அறிய!
கழுவும் மீனில் நழுவும் மீனாக இருந்திடவும்
அறிய வேண்டும் என்று நன்கு உணர்த்திடும்!
:spy: . . . . . :decision:. . . . .eace:
யாரோ? அவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே!! :noidea:யாரோ....அவர்..யாரோ....? Tvk
யாரோ? அவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே!! :noidea:
இதுதான் 'கழுவுற மீனிலே நழுவுற மீன்' டெக்னிக்!! :bolt:
ஒரு 'துப்பு' தருகிறேன்!யாரோ....அவர்..யாரோ....?
ஒரு 'துப்பு' தருகிறேன்!
ஒரு நாள் காலை ஆரம்பித்தது!
ஒரு புகார் யாரோ அனுப்பியதும்,
மறு நாள் பிரம்மமுடி விழுந்தது!
மறு நாள் அது மாயமாகிவிட்டது!
குறிப்பு:
ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது!
நூலைச் சொன்னாலும் ஆளைச் சொல்லக் கூடாது! :nono:
:ranger: . . .ஆஹா...இந்த மாதம் நான் சலூன் பக்கம் போகவேண்டாம்னு நினைக்கிறேன்.....
யாருன்னு ..யோஜனை பண்ணினாலே போறும்... tvk
இரண்டாண்டு நிறைவு!
இந்த இணையதளத்தில் இணைந்தேன் நான்
இதே தேதியில் இரண்டாண்டுகளுக்கு முன்!
என் எழுத்துக்களை ஊக்குவித்து, மகிழ்ந்து,
என் இனிய நட்பு வட்டம் இங்கும் சேர்ந்தது!
எல்லாம் இனிப்பாக இருந்தால் திகட்டுமே!
சொல்லால் வருத்தம் சில பொழுது வந்தது!
இசைப் பகுதியில் திரைப்படப் பாடல்களில்
இசைவாக வந்துள்ள ராகங்களை ஆராய்ந்து,
மனம் மகிழ வாய்ப்பும் கிடைத்தது! மேலும்,
மனம் விரும்பி நான் சென்ற பயணங்களை,
நண்பர் வட்டத்துடன் பகிர்ந்த பின்னர், மனம்
நண்பர்களின் பின்னூட்டங்களால் மகிழ்ந்தது!
எண்ணத்தில் எழுகின்ற அலைகள் பலவற்றை,
எண்ண அலைகளாகத் தொடரவும் முடிந்தது!
இனிய நண்பர் ஒருவரின் அயராத முயற்சியே,
இனிய சில நண்பர்களை அறிமுகம் செய்தது!
தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள,
இனிய சில நண்பர்கள் விலாசம் அளித்தனர்!
இந்த இணையதளம் தந்த இனிய நினைவுகள்
வந்து எழுவதால், இந்தப் பக்கம் வருகின்றது!
உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்ray:
மிக்க நன்றி நண்பரே!congrats... Raji maam.......