இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

இதோ ஒரு மரபு கவிதை (அவ்வைப் பாட்டி என்னை மன்னிக்க வேண்டுகிறேன் )

இளமையில் வறுமை,
முதுமையில் தனிமை,
இவை கொடுமையிலும் கொடுமை.
தாயே பாசமில்லா வாழ்வு நாசமே.

நலம்கோரும்,
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்
 
எங்கள் பள்ளிப் பருவத்தில் சொல்லும் ஒரு குறள் (??) (திருக்குறள் இல்லை, சத்தியமாக!)

'டை'கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
கைகட்டிப் பின்செல் பவர்.

விரும்பாதவை பேச வேண்டாம் என்கின்றார் திருவள்ளுவர்!

எனவே, இதோ புதுக் குறள்:

'ஓ'போட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரைப்
போஎன்று பின்தள்ளு வார்.

:bump2::bump2:
 
Ref. Post # 102

சொற்களைக் கொஞ்சம் மாற்றிப் போடுங்கள் சார்!

இதோ அரும் குறும் கவிதை! (ஔவைப் பாட்டி மகிழ்வாள்... :becky:)

இளமையில் வறுமை கொடுமை;

முதுமையில் தனிமை கொடுமை!

வாழ்வில் இலாத்தாய்ப் பாசமே,

வாழ்வை ஆக்கிடும் நாசமே!

:peace:
 
தமிழை இப்படியா எழுதுவார்கள்?

இன்று இணைய தளத்தில் பார்த்த ஒரு பழமொழி, இதோ:

'கொண்டையைப் போட்டு விராலை இழுக்கிறது'.

தமிழ் வாழ்க! :hail:
 
எழுத்தும், கருத்தும்!

தமிழ்ச் சொற்களைச் சரியாக எழுதாமல் இருக்கக் கண்டு நான் வருந்த,

தமிழ் வார இதழ் முயலுகிறது, மிகத் தவறான கருத்துக்களைப் பரப்ப!

சமீபத்தில் வெளியான ஒரு செய்தியின் சாரம்:

"கணினியின் முன், சிறுவர்கள் பலர், பல மணி நேரம் அமர்கின்றனர்!

கணினிக்கு, 'வைரஸ்' என்ற கிருமியின் தாக்குதல் வர வாய்ப்பு உண்டு!

இந்த வைரஸ் சிறுவர்களைத் தாக்காது, பெற்றோர் காத்திட வேண்டும்!

இந்தக் கொடுமையைச் சொல்லி, எங்கு போய் அழுவதோ! அறியேன்!!
:whoo:

எழுத்துப் பிழையை மன்னிக்கலாம்! கருத்துப் பிழையை?? :noidea:

 
வயது!

விழைந்தாள் அவள்

தன் வயது நாற்பது

என வலியுறுத்த

அழைத்தாள்

தோழியைத்

தேநீர் விருந்துக்கு

அணிந்தாள்

கண்கவர் மின்னும்

வண்ணப் புடவை

அளித்தார் என் கணவர்

நாற்பதாவது

பிறந்தநாள் பரிசாக

என்றாள்

விடுவாளா தோழி

உரைத்தாள் சிரித்தபடி

ஆண்டுகள் பல ஆகியும்

வண்ணம் சிறிதும்

மங்கவே இல்லையே!

:bowl::whip:
 
அவனும், அவளும்

கோபத்தில் கத்தினான்

அவன்

இரண்டு விஷயங்கள்

சொல்ல வேண்டும்

ஒன்று நீ அழகி

இரண்டு நீ மண்டு

சிரித்தாள் அவள்

சரியாகச் சொன்னாய்

முதல் முறையாக

நான் அழகி

அதனால் நீ

என்னை மணந்தாய்

நான் மண்டு

அதனால் நான்

உன்னை மணந்தேன்!

:fencing:
 
.....நான் மண்டு

அதனால் நான்

உன்னை மணந்தேன்!
Mrs. Raji Ram, as always you amaze me, I am happy to read this poem, I like it, really like it.

Cheers!
 
சங்கீதப் பாடம்!

பொங்கும் மகிழ்வுடன்

அவன் சொன்னான்

தப்பே இல்லை

கடன் வாங்கினால்;

ஆண்டவனையே

கடன் வாங்கச்

சொல்கின்றாரே

சங்கீதத்தில்!

வியந்த நண்பன்

எப்படி என்றான்;

ஒரு பாடல் நேற்று

கிருஷ்ணா நீ

பேகனே BORROW;

ஒரு பாடல் இன்று

BORROW

கிருஷ்ணையா!

:peace:
இசை வாழ்க!
 
தவமும், களையும்!

சாமியாரிடம் சென்றான்

பாம்பாட்டி ஒருவன்;

பாம்புக் கூடையை

அழுத்தி மூடினான்

அவரைக் கண்டதும்;

உடன் சென்றவன்

ஏனென்று கேட்க

பயந்தபடிச் சொன்னான்,

பாய்ந்துவிடும் பாம்பு;

சாமியார் முகத்தில்

தவக்களை!

:bolt:
 
கோளம், பூகோளம்!

உலக வரைபடத்தை

விரித்து வைத்து

பல நிமிடங்கள்

பாடம் எடுத்து

மனம் நிறைந்த

பூகோள ஆசிரியர்

இந்தியா எங்கே

என்று ஆவலுடன்

ஒரு மாணவனைக்

கேட்க

உரைத்தான்

பணிவுடன் அவன்

ஐயா, மன்னிக்கவும்

நம் நாட்டை

எப்போதும் நான்

காட்டிக் கொடுக்க மாட்டேன்!

தேச பக்தி வாழ்க! :hail:
 
இளம் கவிஞர்கள்!

பள்ளி, கல்லூரி நாட்களில், பசங்களுக்குப் பாட்டு எழுத ஆசை வரும்!

பள்ளிப் பருவத்தில் என் அண்ணன் 'இயற்றிய' பாட்டு:

(என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... மெட்டு!)

என்னதான் நரைக்கும் நரைக்கட்டுமே!

தலையினில் கருப்பு மறையட்டுமே!

தன்னாலே வெளிவரும் தயங்காதே,

'ஹேர் டை' இருக்குது மயங்காதே!

******************************************

என் மகனின் I I T சகாக்களின் பாடல்:

(I I T யில் குரங்குகள் பட்டாளம் சேஷ்டை பண்ணும்....

மரத்திலிருந்து இறக்கி, அதைத் தூங்க வைக்க, இப்பாடல்!)

(மாங்குயிலே பூங்குயிலே மெட்டு!)

மாங்குரங்கே! பூங்குரங்கே! மரத்தை விட்டு இறங்கு ;

வாழைப்பழம் வாங்கித் தரேன், உண்டு போட்டு உறங்கு!

:music:
 
புழுவும், பாடமும்.

மது உடலுக்குக் கேடு

என்று புரிய வைக்க

முயன்றார் ஆசான்

இதோ பாருங்கள்

மதுக் கிண்ணம்

அதில் போடுகிறேன்

இந்த ஒரு புழுவை

என்று உரைத்துவிட்டுப்

புழுவைப் போட்டார்;

இறந்தது உடனே அது

நெளிந்து துடித்து;

இதிலிருந்து

என்ன புரிகிறது

உங்களுக்கெல்லாம்

என ஆவலுடன்

அவர் வினவ

'கோரஸ்' பாடினர்

மாணவ மணிகள்

மது குடித்தால்

வயிற்றில்

இனி இல்லை

புழுத் தொல்லை!

ஊக்கமது கைவிடேல்!! :peace:
 
சரியான தலைப்பு!

யாப்பிலக்கணத்தை எண்ணி

இலக்கணமே போ

எனத் தலைப்பு இட்டு

பெரியோர்களிடம்

வாங்கினேன் திட்டு

இங்கு நான் எழுதுவதில்

பல கடிகள்

எனவே

கடிக் கவிதைகள்

என்ற தலைப்பே

என்னைக்

காத்திருக்குமோ

நான் அறியேன்! :noidea:
 
ஏன் அவர்கள்?

புகழ் வாய்ந்த

தொழிற்சாலை

மணமான ஆண்களே

வேலைக்கு வேண்டும்

என அறிவிப்பு வர

மகளிர் சங்கம்

கொதித்து எழுந்தது

பெண்கள் மட்டமா என்று

கூச்சல் போட்டனர்

தொழில் அதிபர்

கூறினார் மறுமொழி

சொன்னபடி கேட்டு

என்ன கத்தினாலும்

எதிர்த்துப் பேசாது

விரட்டினால் உடனே

வேலை செய்யப்

பழகியவர்கள்

மணமான ஆண்களே!

:ballchain: :pound:
 
பிறவி!

துடுக்குச் சிறுவன்

ஒரு புழுவை

கல்லால் குத்தித்

துன்புறுத்தக் கண்ட

ஒரு பெரியவர்

தம்பி

புழுவை நீ

இந்தப் பிறவியில்

துன்புறுத்தினால்

அடுத்த பிறவியில்

அது சிறுவனாகி

நீ புழு ஆகி

மீண்டும் நடக்கும்

இதே போல

எனச் சொல்ல

சிரித்தபடியே

அவன் பதிலளித்தான்

புரியாமல் பேசாதீர்

என் முற்பிறவியின்

பழி வாங்கலே இது!


இது எப்படி இருக்கு? :fish:
 
ஓர் உண்மை நிகழ்ச்சி...

'கால்' மறந்தது!


புகழ் மிக்க பாடகர்

தாய்மொழி

களி தெலுங்கு;

தமிழ் மொழியில்

பல்லவி பாட ஆசை;

சூடிக் கொடுத்த

சுடர்க் கொடியே

என ஆரம்பம்;

கொடுத்த என்பதில்

காலை மறந்துபோய்

எழுதி வைத்தார்

பல்லவி ஆரம்பித்ததும்

எல்லோரும் கப் சிப்

வயலின்காரர்

காதைக் கடித்துத்

திருத்தம் சொன்னபின்

சுடர்க்கொடி

கெடுக்காது கொடுத்தாள்!



குறிப்பு:

'பல்லவி' என்பது, ஒரே வரியைப் பல விதமாகப் பாடி, கச்சேரியில்,

பாடகர் திறமைகளை வெளிப்படுத்தும், இன்றியமையாத பகுதி.


:lalala: ... :twitch:
 
பாலபிஷேகம்...

வறுமைக் கோட்டுக்குக்

கீழே அவனின்

பொருளாதாரம்

ஆயினும்

சினிமா மோகம்

தன் தலைவனின்

புதுப்பட வெளியீடு

தன் பங்குக்கு

ஒரு லிட்டர் பாலை

எடுத்துக்கொண்டு ஓடினான்

போஸ்டருக்கு

அபிஷேகம் செய்ய

வீறிடுகிறது

அவன் குழந்தை

அவன் வீட்டில்

பால் இல்லாது!


:Cry: . :hungry: . :Cry:
 
பாலபிஷேகம்...

பாலபிஷேகம்...


"வறுமைக் கோட்டுக்குக்

கீழே அவனின்

பொருளாதாரம்

ஆயினும் ......
......................."

Hi Raji Ram

நன்றாக சொன்னீர்கள்..
உலகம் எங்கினும் வறுமை வாழ்
மக்கள் இருகிறார்கள் ..........:hungry:

உங்களின் பார்வைக்கு மலாய் தினசரி
ஒன்றில் வெளியான தகவல் ...

KUALA LUMPUR, 5 Ogos - Sebuah kajian terhadap upah di negara itu,
diprakarsai oleh Jabatan sumber manusia,
telah mendedahkan bahawa hampir 34 peratus daripada
1.3 juta pekerja yang disurvei yang diterima kurang dari
RM700 sebulan - di bawah garis kemiskinan RM720 pada bulan.

ஒரு கோடியே முப்பது லட்சம் ஜனங்கள்
இன்னும் மாதம் ஒன்றுக்கு RM720 கீழே
சமபாதிகிறார்கள்

Shivalaxmi.Serembon.Malaysia.
 
Hi Shivalaxmi!

பட வெளியீடு

உங்கள் ஊரில், சமீபத்தில் வெளிவந்த பிரம்மாண்டமான பட வெளியீடு;
தங்கள் தலைவன் படத்துக்குப் பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர் மக்கள்!

குடம் குடமாகப் பாலைக் கொட்டியபோது, மனம் வருந்தியது நிஜமே!
நிதம் வருந்தி உழலும் மக்களுக்கு, ஏதேனும் உதவியிருக்கலாமே!

:grouphug:

குறிப்பு:

படம் எதுவென்று அனைவருமே அறிவோம்!
 
Status
Not open for further replies.
Back
Top