• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
ஊக்கமது....

ஊக்கம் கைவிடாதிருக்க

வலியுறுத்த

ஊக்கமது கைவிடேல்

என ஆசான் சொல்ல

ஊக்கம் தரும் மது

அதைக் கைவிடக் கூடாது

என்ற பொருளா

என்று வினவினான்

மதுக்கடை உரிமையாளரின்

செல்ல மகன்!

:peace:
 
ஏன் கடன்?

கடன் வாங்கிப்

பொருள் வாங்கும்

காலம்தான் இது

ஏன் எல்லோரும்

மாறினார்கள் தெரியுமா

சின்ன வயதில்

கணக்கு ஆசிரியர்

கடன் வாங்கிக் கழித்தல்

சொல்லிக் கொடுத்தாரே

அதனால்

கடன் வாங்கிக்

காலம் கழிக்கின்றார்!

:decision: ... :thumb:
 
இயந்திர அறிவு!

அடிக்கடி விபத்து நடக்கும்

ஆபத்தான வளைவு

வண்டி எது

அருகில் தெரிந்தாலும்

சாலையைத் தாண்ட விடாத

இயந்திர வேலி

இயங்க அமைத்தார்

ஒரு நாள்

பல மணி நேரம்

சாலை தாண்ட

இயலாது போனது

காரணம்

வளைவுக்கு அருகில்

'ப்ரேக் டவுன்' ஆகிவிட்ட

பெரிய லாரி!

வாழ்க இயந்திரம்! :high5:
 
கடைசித் தேடல்!

ஒரு பொருளைத்

தொலைத்துவிட்டுத்

தேடுகிறோம்

அது கடைசித்

தேடலில்தான்

கிடைக்கும்

காரணம்

நாம் தேடுவதை

அத்துடன் நிறுத்துவதே!

:fish2:
 
நகுக!

பொல்லாத நண்பர்

விருந்தாய் வந்தார்

இவரும் வரவேற்றார்

மிகையான சிரிப்புடன்

மனைவிக்கோ கடுப்பு

என்ன சிரிப்பு

எனக் கடிந்தாள்

இவர் சொன்னார்

வள்ளுவர் வழியை

நினைத்தேன் பழக

இடுக்கண் வருங்கால் நகுக!

:ballchain: .. :bump2: .. :biggrin1:
 
நகுக!

பொல்லாத நண்பர்

விருந்தாய் வந்தார்

இவரும் வரவேற்றார்

மிகையான சிரிப்புடன்

மனைவிக்கோ கடுப்பு

என்ன சிரிப்பு

எனக் கடிந்தாள்

இவர் சொன்னார்

வள்ளுவர் வழியை

நினைத்தேன் பழக

இடுக்கண் வருங்கால் நகுக!

:ballchain: .. :bump2: .. :biggrin1:

நன்றாக உள்ளது .
பணி சிறக்க மிகையான சிரிப்புடன்
இவரும் வரவேற்றார்
 
அட, அழகே!

அவளின்

அழகான நீண்ட

கருநாகக் கூந்தல்

மனம் பறிகொடுத்தான்

அவனின்

அழகான வரிசை

முத்துப் பற்கள்

மனம் பறிகொடுத்தாள்

காதல் முற்றியது

திருமணம் முடிந்தது

இனிய இல்லத்தில்

தனிமைச் சந்திப்பு

அன்பே ஒரு பொய்

சொன்னேன் நான்

என்றாள் அவள்

'டோப்பா' கூந்தலைக்

அவிழ்த்தபடி

அன்பே ஒரு பொய்

சொன்னேன் நானும்

என்றான் அவன்

'செட்' பற்களைக்

கழற்றியபடி!

காதல் வாழ்க!! :clap2:
 
பூரணத்துவம்...

எதிலும் எங்கும்

பூரணத்துவம்

தேடுவார் ஒருவர்

மகன்

ஏழேமுக்கால் மணிக்கு

அலாரம் வைக்கச் சொல்ல

அவரோ

எட்டு மணிக்கே

வைப்பேன் என்று

அடம் பிடித்தார்

புத்திசாலி மகன்

தந்தை அறியாமல்

கடிகார முள்ளைப்

பதினைந்து நிமிடம்

தள்ளி வைத்தான்

தந்தை வைத்தார்

அலாரம் எட்டு மணிக்கு!

இருவருக்கும் ஆனந்தம்!

:bounce:

Note:
This poem is dedicated to Mr. Monk, who appears as a perfectionist in one of the TV serials, in the US! :thumb:
 
தமில் வால்க! வலர்க!

அஞ்சாதீர்கள் நண்பர்களே

என் எழுத்தைக் கண்டு

எளிமைப் படுத்தும்

காலம் இது

என் கனவில்

தமிழையும்

எளிமைப்படுத்த விரும்பிய

சங்கம் எடுத்த

முடிவே இது

இனிமேல்

லகர, ளகர, ழகர

வேறுபாடுகளை ஒழிப்போம்

னகர, ணகர

வேறுபாடுகளை ஒழிப்போம்

ரகர, றகர,

வேறுபாடுகளை ஒழிப்போம்

***********************

எளிய தமிழ் மொழியாக

மாற்றம் செய்தால்

இக்கவிதை இவ்வாறு வரும்:

"அஞ்சாதீர்கல் நன்பர்கலே

என் எலுத்தைக் கன்டு

எலிமைப் படுத்தும்

காலம் இது

தமிலையும்

எலிமைப்படுத்த விரும்பிய

சங்கம் எடுத்த

முடிவே இது
....................................":blabla:

நல்ல வேளை! மேலே சொன்னது கனவுதான்!!

குறிப்பு:

இவ்வாறு மொழிமாற்றம் ஆகாமல் இருந்தால்,
எவ்வாறேனும் தமிழ் அன்னை பிழைப்பாள்!

தூய தமிழ் வாழ்க! வளர்க!! :thumb:
 
தமில் சேனல்ல இப்டி தான் பேஸ்ராங்கோ. நீங்கோ சொன்னது கன்வல்ல நிஜம்.
 
தமிழ் சானலில் இப்படிப் பேசுவார்கள்! அது தமிழ் நாட்டின் தலைவிதி!
தமிழ் மொழியைத் தவறின்றி எழுத வேண்டுமே என்பதே என் கவலை!! :ranger:

எங்கள் தந்தை விளையாட்டாகச் சொல்லுவார்:

ஒரு தமிழ்ப் பேச்சாளர் பேசுவதாக! (இது சிறப்பு 'ழ'கரம் படும் பாடு!)

'எந்த மொலியிலும் இல்லாத

இந்த எலவு எலுத்து

இந்தத் தமில் மொலியில் மட்டும் ஏன்?

அந்த எலுத்து ஒலியட்டும்! :director:

 
காலத்தின் கோலம்!

கான மயிலாடக்

கண்டிருந்த வான்கோழி

எனத் தொடங்கும் பாடல்

ஏனோ எனக்குள்

அடிக்கடி ஒலிக்கிறது

சுய விளம்பரம்

ஓங்கிவிட்ட காலம்

பாடுபவருக்கு

எம் எஸ் என்றும்

ஓடுபவருக்கு

பி டி உஷா என்றும்

மட்டை பிடித்தவருக்கு

சச்சின் என்றும்

நெட்டை மனிதருக்கு

அமிதாப் என்றும்

எழுதுகலம் பிடித்தவருக்குக்

கம்பநாட்டாழ்வார் என்றும்

பழுதாகப் பேசுபவருக்கு

விவேகானந்தர் என்றும்

நினைப்பு வருவது

காலத்தின் கோலமே!

சாலக் கொடுமையே!

:madgrin:
 
தமிழ் சானலில் இப்படிப் பேசுவார்கள்! அது தமிழ் நாட்டின் தலைவிதி!
தமிழ் மொழியைத் தவறின்றி எழுத வேண்டுமே என்பதே என் கவலை!! :ranger:

எங்கள் தந்தை விளையாட்டாகச் சொல்லுவார்:

ஒரு தமிழ்ப் பேச்சாளர் பேசுவதாக! (இது சிறப்பு 'ழ'கரம் படும் பாடு!)

'எந்த மொலியிலும் இல்லாத

இந்த எலவு எலுத்து

இந்தத் தமில் மொலியில் மட்டும் ஏன்?

அந்த எலுத்து ஒலியட்டும்! :director:


நகைச்சுவையாக தெரிந்தாலும்
இதில் அடங்கி உள்ள பொருள்
ஆழ்ந்து சிந்திக்க வைப்பதே.

தந்தை பெரியார் ஒருமுறை கூறினார்

'' ஆமா ...246 எழுத்தாம் ..வச்சுக்கிட்டு
என்னடா செய்யபோறீங்க?
வெள்ளைக்காரனை பாருங்கடா 26
எழுத்தமட்டும் தான் வச்சுருக்கான் ..
அவன் விட்ட aero plane தாண்டா ஒலகம்
பூரா பறக்குது ''
என்று வேடிக்கையாக
சொல்லுவார் ...

இப்படி நான் மேற்கோள் காட்டியதால்
லகர ளகர ழகர வேறுபாடு தேவை இல்லை
என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை ..
எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு
நமது லகர ளகர ழகர வேறுபாடே ..

ஆனால் திரு. வா.சே. குழந்தைசாமி அவர்களின்
கருத்துப்போல் கணிணி தமிழுக்கு ஏற்றாப்போல்
நமது தமிழ் மொழியிலும் ..*தமிழின் அடிப்படை மாறாமல்...
மாற்றம் செய்வதில் தவறில்லையே?

சீனா நாட்டவர்கள் தங்களது சித்திர எழுத்துக்கள் 4000 என்று
இருந்தததை குறைத்து இன்று சற்றேறக்குறைய 2000 என்ற
அளவில் வைத்துக்கொண்டார்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும் ...
 
Last edited:
தமிழன்னை தன்னைக் காத்துக் கொள்ளட்டும்! :flame:
 
தமிழன்னை தன்னைக் காத்துக் கொள்ளட்டும்! :boink:

இல்லையென்றால், குலவி, குளவி, குழவி, எல்லாம் ஒன்றாகிப் போகும்!!!!:crazy:
 
லகர, ளகர, ழகர வேறுபாடு...

அவள் தன் குழவியைக் குலவி மகிழும்போது,

அவளைக் கடிக்க வந்த குளவியை,

அரைக்கும் குழவியால் நசுக்கினாள்!

யோசியுங்கள்!

லகர, ளகர, ழகர வேறுபாடு தேவையா இல்லையா?

குறிப்பு:
தமிழ் எழுத்துக்கள் கணினியில் எளிதில் தட்டெழுதுமாறு, என்றோ மாறிவிட்டன! :typing:
 
லகர, ளகர, ழகர வேறுபாடு...

அவள் தன் குழவியைக் குலவி மகிழும்போது,

அவளைக் கடிக்க வந்த குளவியை,

அரைக்கும் குழவியால் நசுக்கினாள்!

யோசியுங்கள்!

லகர, ளகர, ழகர வேறுபாடு தேவையா இல்லையா?

குறிப்பு:
தமிழ் எழுத்துக்கள் கணினியில் எளிதில் தட்டெழுதுமாறு, என்றோ மாறிவிட்டன! :typing:

I fully understand the point you are trying to make. But at the same time,

"குழவி" என்பதன் அர்த்தம் என்ன? எனக்குத் தெரிந்த ஒரே குழவி அம்மிக் குழவி. அதனுடன் ஏன் குலவி மகிழ வேண்டும் என்று குழம்புகிறேன்.
 
I fully understand the point you are trying to make. But at the same time,
"குழவி" என்பதன் அர்த்தம் என்ன? எனக்குத் தெரிந்த ஒரே குழவி அம்மிக் குழவி. ..............
குழவிக்கு முதல் பொருள் குழந்தை என்பது!

அதனால்தான் குழந்தையின் 'தொட்டில் இடும்' விழாவில்,

குழவிக் கல்லுக்கும் அலங்காரம் செய்து, சொட்டுப் பால்

கொடுக்கின்றாரோ? என்னுடைய பலநாள் "?" இது!
 
ழகரம் சிறு குழந்தைகளுக்குப் பழக வேண்டி

ழகரம் சிறு குழந்தைகளுக்குப் பழக வேண்டி

'' வாழைப் பழம் கொழ கொழவென்று அழுகி விட்டது ''

என்று சொல்லித்தருவர்கள் ...

''தொல்காப்பியத்தை எடுத்துக் கொல்லவும்'' என்று
பிழையுடன் எழுதினால் நகைப்புக்கு இடமளித்து விடாதா?

இங்கு நான் சொல்வது எழுத்து சீரமைப்பு பற்றியது ..
அறுபது ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியாரால்
தனது விடுதலை பத்திரிகையில் தொடங்கி வைக்கப்பட்டது ..
பின்பு தமிழக அரசும் அதை ஏற்றுக்கொண்டு சட்டவடிவம் கொடுத்தது
என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

''ல'' வின் மேல் கொம்பு போட்டு எழுதுவது ..பழைய லை அச்சுத் தொழிலில் இடைஞ்சல் தருவது ஒன்று . எழுத்தும் ஒரே சீராக இருக்காது ..எனவே இதை மாற்றி '' விடுதலை'' என்று எழுதினார்கள் ..பின்பு இதையே பின்பற்றி கணனித்தமிழும் எளிமைப் படுத்தப்பட்டது
 
Last edited:
ழகரம் பழக:

ஏழைக் கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்!
 
எங்கள் இளவயதில், தந்தை சொல்லக் கேட்டது:

கிழக்கு திசையில், பிழைப்பைத் தேடித் போகும் ஒருவன்,

மழைக்காக ஒதுங்கும்போது, கேள்விகள் கேட்டவரிடம்,

பழக்க தோஷத்தால் கூறிய பதில்கள்:

'எங்கே போகிறாய்?'

'கெயக்க'.

'எதற்காகப் போகிறாய்?

'பொயக்க'.

'ஏன் இங்கு நிற்கிறாய்?'

'மயக்கி'.

'ஏன் இப்படிப் பேசுகிறாய்?'

'பயக்கம்'!

:peace:
 
அரசாங்க வேலை!

வழி நெடுக

மரங்கள் நடும் வேலை

ஒருவன்

குழி தோண்டிச் செல்ல

வேறொருவன்

அதை மூடி வர

அதிசயித்த

மற்றொருவர்

என்னவெனக் கேட்க

வந்தது மறுமொழி

இருவர்தான்

பணிக்கு வந்தோம்

செடி வைக்கும்

பணி உள்ளவன்

எடுத்தான்

இன்று விடுமுறை!

அரசாங்க வேலை வாழ்க!! :peace:
 
மற்றவர் செய்யட்டும்!

நூறு வீடுகள் உள்ள

பணக்கார கிராமம்

இறையருளை நாடிப்

பாலபிஷேகம்

வீட்டிற்கு ஒரு குடம்

என்ற கணக்கு

மற்றவர் செய்யட்டும்

என எண்ணி

குடங்களை அவரவர்

கொண்டு வந்து

பெரிய அண்டாவில்

ஊற்றினர்

அபிஷேகம் செய்ய வந்த

பூசாரி கண்டார்

அண்டா நிறைய நீர்!

பக்தி வாழ்க!! :hail:
 
குட்டி ஜோக்குகளும் குறும்(புக்) கவிதை ஆகும்!

என்ன மிருகம்?


கருத்து வேறுபாடு

மனைவிடம்

கணவன் சீறினான்

என்னுள் இருக்கும்

மிருகத்தைத்

தட்டி எழுப்பாதே

மனைவியா மருளுவாள்

சொன்னாள் பதில்

எனக்கு பயமில்லை

எலியைக் கண்டு!

:boink: .. :whip:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top