சிறந்த அறிவுரை!
சிறு வயது என்றாலே குறும்பு செய்யும் பருவம்;
சிறு வயதுக் குழந்தைகள் விளையாடும் நேரம்.
ஒருவர் மீது ஒருவர் மண் வாரி வீசி, மகிழ்ந்து,
வேறு ஓர் உலகிலே சஞ்சரித்த, இனிய வேளை!
குறும்புச் சிறுவன் ஒருவன், அழகான முகத்தில்
அரும்பும் சிரிப்பை மறைத்து, குரலை மாற்றிக்
குரங்கு, கரடி, சிங்கம், புலி என்று வரிசையாகச்
சிறந்த வர்ணனையுடன், அஷ்ட கோணலாக,
மற்ற பசங்களுக்கு வேடிக்கை காட்டி இருக்க,
உற்ற நேரத்தில், ஆசிரியை வந்து சேர்ந்தாள்!
தன் அடக்கு முறையைக் காட்டிட விழைந்தாள்;
தன் உபதேசத்தை, அப்பொழுதே ஆரம்பித்தாள்!
'குழந்தைகள் எல்லாம் இப்படிச் செய்யும்; நானும்
குழந்தையாக இருந்தபோது செய்தேன்! ஆனால்,
அஷ்ட கோணலாக நம் முகத்தைக் காட்டினால்,
அஷ்ட கோணல் அப்படியே தங்கிவிடுமாம்! என்
சின்ன வயதில், தாத்தா என்னிடம் சொன்னார்;
சொன்ன விஷயம் புரிந்ததா?' என்று கேட்டாள்!
குறும்பு கூறியது, 'நீங்கள் சொன்னது எனக்கும்
விரும்பும் விதமாகவே உள்ளது டீச்சர்! ஆனால்
ஒரு சின்ன சந்தேகம்! நீங்கள் நல்ல குழந்தையாக
இருந்தும், ஏன் தாத்தா சொற்படிக் கேட்கவில்லை?
:whip: . . . :baby:
குறிப்பு:
இது யாப்பிலக்கணத்தை ஓரம் கட்டாத புதுக்கவிதை! :thumb: