• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
Dear Mr. Raju,

We are losing our culture, our ancient languages and what not!

I am doing my mite by presenting ten Sanskrit words with multiple meanings, every day. It may be just like the squirrel helping Sree Rama to build the Sethu Sri Lanka.

I could not find the meaning of the word being discussed, as told by your Sanskrit scholar in my dictionary!

But I am reminded of a story told by Sree Rama Krishna Paramahamsa.

A lady wears glass bangles when she is a sumangali and changes over to gold bangles, when she becomes a widow!

The concept behind this act?

When her husband was alive he was a perishable person and she wore the perishable glass bangles. When he returned to his source, the God Almighty he became indestructible. So the lady changed over to gold bangles which are also indestructible.

But it would have been more practical to do it the other way in my honest opinion.

Everyone must determine to revive the priceless language Sanskrit, we unanimously seem to be neglecting due to sheer indifference!

with warm regards,
Mrs.V.R. :pray2:
 
Dear Raju Sir!

Thanks for enjoying one of my 'pudhu kavithaigal'!

Regards,
Raji Ram :ranger:
 
Last edited:
மழலைப் பேச்சு - 13

கோவிலுக்கு மழலையை

அழைத்துச் சென்றுபோது

அபிஷேகம் நடக்க,

அப்பா விளையாட்டாக

சாமி குளிக்கறார்

என்று சொல்ல,

சிறிது நேரத்தில்

திரை போட்டுவிட,

ஏன் என்று மழலை கேட்க,

சாமிக்கு 'டிரஸ்' பண்ணறா

என்று அப்பா சமாளிக்க,

மழலை கேட்டது,

குளிக்கும்போதே பாத்தாச்சு,

'டிரஸ்' பண்ணும்போது

பாக்கக் கூடாதா?'

:bathbaby:மழலையிடம் சரியாகப் பேசுங்கள்! :decision:
 
மழலைப் பேச்சு - 14

அம்மாவின் வயிறு

பெரிதாக இருக்கக் கண்டு,

காரணத்தை

மழலை கேட்க,

உனக்குத் தம்பிப் பாப்பா

சீக்கிரம் வருவான்

என அம்மா விளக்க,

தம்பிப் பாப்பாவை

உனக்குப் பிடிக்காதா,

என மழலை வினவ,

ரொம்பப் பிடிக்குமே என

அம்மா பதிலளிக்க,

மழலை கேட்டது,

பின் ஏன் தம்பிப் பாப்பாவை

முழுங்கினாய், அம்மா?

:hungry: . . :preggers:

இது எப்படி இருக்கு!!! :twitch:
 
தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம், Kunjuppu Sir!!

Cheers... Raji Ram :typing:
 
மழலைப் பேச்சு - 15

புதிய அடுப்பு வாங்கி

அதிகச் சூடு பரவ,

அடிக்கடி பால் பொங்கி

வழிய விட்டுக்

'கொட்டி மொழுகுவதை'

என் மழலையும்

பார்ப்பது வழக்கம்!

வீட்டிற்கு வந்த நண்பி,

'அடுப்பு மின்னுகிறதே,

எதை வைத்துத் துடைக்கிறாய்',

என வினவ,

மழலை சொன்னது,

'அம்மா எப்பவும்

பால் விட்டுத்தான் துடைப்பா!'


மழலை வாழ்க!!
 
மழலைப் பேச்சு - 16

தம்பிப் பாப்பாவுக்கு

அம்மா HUGGIES போட,

அதன் தேவை

தெரிந்துகொண்டது

குறும்பு மழலை!

ஒரு நாள்

கம்பியில் போட்ட

துணியில் காக்கை

எச்சம் இட்டுவிட,

அம்மா திட்டியபடி

அதை அலச,

மழலை என்னவென்று

அறிந்தபின் கேட்டது,

'அம்மா! காக்கையின்

அம்மா கிட்டே

HUGGIES இல்லையா?'


:clap2:

HUGGIES வாழ்க!
 
வந்தது சந்தேகம்!

அலுவலகத்தில் பணிபுரிபவர்

சேர்ந்து கொண்டாடும்

ஒரு விழா;

புதிதாக சந்தித்த

ஒரு பெண்மணியிடம்

பேசும்போது கண்டேன்

நானும் அவளும்

ஒரே வருடம்

பள்ளிப் படிப்பில்

S S L C தேர்வை

முடித்தோம் என்று!

மிக வயதான தோற்றம்

அவள் கொண்டதை

மகனிடம் வந்து

புலம்பியபடி இருக்க,

அவன் கேட்டான்

'நீ கேட்டாயா அம்மா

எத்தனையாவது

ATTEMPT - ன்னு?'


இதுதானோ பிரம்மச்சாரிக் குறும்பு? :bump2:
 
Last edited:
வந்தது ஒரு சந்தேகம்!

அலுவலக பார்ட்டி;

குடும்பத்துடன் சென்று

விருந்து உண்ண,

உயர் அதிகாரியின்

வயதான மனைவி,

'ஸ்டயிலான' உடையில்

வலம் வர,

சில பெரியவர்கள்

அவளைச் சூழ்ந்துகொண்டு,

இருபது ஆண்டுகள் முன்னர்

பார்த்தது போலவே

அவள் உள்ளதாக

'ஐஸ்' வைத்து இருக்க,

மகன் கேட்டான்,

'அம்மா! பாவம் அந்த மாமி!

இருபது வருஷம் முந்தியே

இதுபோல முகமா?'

*****************************************************


இதுவும் பிரம்மச்சாரிக் குறும்பா? :caked:
 
சிறப்பு 'ழ'கரமே!

தமிழின் சிறப்பே 'ழ'கரம் என்பார்;

தமிழ் என்ற சொல்லிலே வருமே!

இந்த எழுத்து வராது சிலருக்கு;

இந்த எழுத்து 'ய'கரமாய் ஆகும்!

கிழக்கு திசையில் பயணித்துப்

பிழைக்கப் போகின்ற ஒருவன்,

மழை வந்ததால், ஓர் ஓரத்தில்

மழை படாது நிற்கும் சமயம்,

வந்த ஒருவரின் கேள்விகளுக்கு

தந்த பதில்களைப் பாருங்கள்!

'எங்கே போறே?' - 'கெயக்க!'

'எதுக்குப் போறே?' - 'பொயக்க!'

'எதுக்கு நிக்கறே ?' - 'மயக்கி!'

'இப்படிப் பேசறே?'- 'பயக்கம்!'


தமிழ் வாழ்க! :peace:
 
இடம், பொருள், ஏவல் அறிக!

எங்கு, என்ன, ஏன் பேசுகிறோம் என்று அறிந்து,

தங்கு தடையின்றிப் பேசிட, அறிய வேண்டும்!


எது வேண்டுமானாலும், அறியாது பேசினால்,

அது தர்ம சங்கடத்திலேயும், ஆழ்த்திவிடலாம்!


இரு சகோதரர்களின் கதையைக் காண்போம்!

இருவரில் மூத்தவன் அறிவு மிக்கவன்; அவன்


தம்பி, அசட்டு வெகுளி; ஒன்றும் அறியாதவன்;

தம்பி உளறலால், அண்ணன் மிக வருந்தினான்!


தன்னுடன் சில இடங்களுக்கு வந்து பழகுமாறு,

தன்னுடைய தம்பியைக் கேட்டுக்கொண்டான்.


பெரியவர் ஒருவர் இறந்த செய்தி கேட்டு, அந்தப்

பெரியவரின் மகனிடம், துக்கம் கேட்கச் செல்ல,


தம்பி உடன் வர, அவனும் பழகுவானே என்று

நம்பி, அழைத்துச் சென்றான், அவ்விடத்திற்கு!


'இவர் உங்களுக்கு மட்டுமா தந்தை? இல்லை!

இவர் இவ்வூர் மனிதர்களுக்கெல்லாம் தந்தை',


என்று சமாதானம் சொன்னதை, அவன் தம்பி

நின்று நிதானமாகக் கவனித்துக் கொண்டான்.


நாட்கள் சென்றன; அண்ணன், வெளியூரில் சில

நாட்கள் வேலை, என்று சொல்லிச் சென்றான்!


ஒருநாள், அண்ணனின் நண்பனின் மனைவி,

மருத்துவம் செய்தும் பிழைக்காது, இறந்தாள்!


அண்ணனுக்குப் பதிலாக, தானே துக்கம் கேட்க,

திண்ணமான எண்ணத்துடன், தம்பி சென்றான்.


பெரியவர் மறைவுக்கு, அண்ணன் சொன்னவை

அரிய சொற்கள் என்று எண்ணிக் கொண்டவன்,


தந்தை என்ற சொல்லை மட்டும் மனைவி என,

விந்தையாக மாற்றி, ஒரு சமாதானம் சொல்ல,


கேட்டவர்கள், கெட்டவர்களாக மாறி, தடியால்

போட்டனர் தர்ம அடிகளை, அசட்டுத் தம்பிக்கு!

:humble: . . :whip:
 

சின்னதும், பெரியதும்!



தமிழ் எழுதக் கடினமானது

ஒரு மாணவ மணிக்கு!

சின்னது பெரியது என

ரகரமும், றகரமும்

பெரிய படுத்தல்

அவனுக்கு!

மரம் - என எழுத

ரகரத்தில் ஐயம் வர,

ஆசானிடம் கேட்க,

ஏதோ யோசித்த

அவர் கூறினார்,

இதுகூடத் தெரியாதா?

சின்ன மரத்துக்குச்

சின்ன 'ர',

பெரிய மரத்துக்குப்

பெரிய 'ற'!

:decision:

தமிழ் வாழ்க!! :peace:
 
தேவை பார்வை!

newspaper.jpg


செய்தித்தாள் படித்து, கெட்டவை அறிந்து,
செய்திகளைச் சொல்லிப் புலம்புகிற, ஒரு

வயதான மூதாட்டி, அவரது பார்வைக்கும்
வயதாகித் தெளிவற்றுப் போய்விட, தன்

பார்வைக் கோளாறைச் சொல்லி, வருந்தி,
பார்வை தேவை என்று, புலம்பி இருந்தாள்.

மகன் அவருடன் ஒரு மருத்துவரை நாட,
அகம் மகிழ நல்ல கண்ணாடி அணிந்தார்!

மறுநாள் செய்தித்தாள் வாங்கி வந்ததும்,
ஒரு வேகத்துடன் அதை எடுத்துப் படிக்க,

தெளிவான பெரிய எழுத்துக்களாக அவை
தெரிய, மீண்டும் புலம்பினாள் மூதாட்டி!

'இத்தனை செலவில் கண்ணாடி போட்டு,
அத்தனையும் வீணாகப் போய்விட்டதே!

இத்தனை பெரிய எழுத்திலே செய்திகள்
அத்தனையும் வருமென, தெரியலையே!'

:bump2:
 
Last edited:

ஏன் மூன்று?


பக்கத்து வீட்டுப் பையன்

நன்றாகப் படிக்கிறான்

என்பதைச் சொல்லியே

வாட்டுவார் ஒருவர்

தன் மகனை;

ஒரு முறை

கணக்குப் பரீட்சையில்

மகன் வாங்கினது

மூன்று!

ஏன் மூன்றுதான்

என்று கேட்க,

பதில் வந்தது,

மொத்தம் நூறில்

மீதி தொண்ணுத்தியேழை

ஆசான் போட்டாரே

பக்கத்து வீட்டுப்

பையனுக்கு!

:peace: . . . :thumb:
 

முதலீடு!


பட்டப் படிப்பு

முடித்த இளைஞன்

சொந்தக் கம்பெனி

ஆரம்பிப்பதாகச் சொல்ல,

எப்போது என

நண்பன்

ஆவலுடன் கேட்க,

திருமணம் ஆனதும்,

என்று பதில் வர,

ஏனென்று

காரணம் கேட்க,

அசட்டுச் சிரிப்புடன்

கூறினான் அவன்,

'அப்போதுதான்

மாமனாரிடம்

முதலீடு கேட்கலாம்!'


வாழ்க வரதட்சணை??! :ballchain: . . . :whip:
 
Last edited:
இது என்ன மார்க்?

மகன் தரும்

மார்க் லிஸ்ட்டைப்

பார்த்தவுடன்

கத்துவார் தந்தை!

இது என்ன மார்க்?

அந்தக் காலத்தில்

நான்

என்று தொடங்கி,

புராணமே பாடுவார்.

தந்தையின்

உண்மைக் கதை

அவரது நண்பர் மூலம்

அறிந்த மகன்,

மறுமுறை ஒரு

மார்க் லிஸ்ட்டை நீட்ட,

தந்தையும் கத்த,

அந்தக் காலத்தில்

என்று ஆரம்பிக்க,

மகன் காட்டினான்

மேலே எழுதியிருந்த

மாணவனின் பெயரை;

அது அவன்

தந்தையின் பெயரே!

:behindsofa:
 
re your post #164

raji,

this is true and it happened to me.

it was year 2 in engineering, and thermodynamics. the idiot professor gave 1 take home test. one question.

in the class of 50, barring one, no one else knew how to solve the problem.

india being socialist those days, the brainy guy shared his solution with all of us.

when the marks came, all of us got 2%.

pat came the prof's reply: one correct answer, 50 students; 100/50 = 2% to each.

everyone faiiled :(
 
இடம், பொருள், ஏவல் அறிக!



'இவர் உங்களுக்கு மட்டுமா மனைவி? இல்லை!

இவர் இவ்வூர் மனிதர்களுக்கெல்லாம் மனைவி'

!

:humble: . . :whip:

good one raji. had a good laugh over it :)
 
தட்டிலே வை!

புதிதாக ஒருவன்

பணியாளாகச் சேர,

வந்த விருந்தினருக்கு

எசமானர்

லட்டு தரச் சொல்ல,

உடனே அவன்

கையில் ஒன்று

எடுத்து வந்து தர,

கோபித்த எசமானர்

விருந்தினருக்கு

எது தந்தாலும்

தட்டிலே வை,

பின் கொடு

என்று அதட்டினார்!

இன்னொருநாள்

வயதான நண்பர்

பேசிவிட்டுச்

செல்லும்போது

தன் செருப்பை

எடுத்துத் தருமாறு

பணியாளிடம் கேட்க,

அவன் அதைக்

கொண்டுவந்து நீட்டினான்,

தட்டிலே வைத்து!


:hungry:
 

மழலைப் பேச்சு - 17


அப்பா ஏதோ

கிண்டல் செய்ய,

மழலை கோபத்தில்

அப்பாவைப்

'போடா' என்று

சொல்லிவிட,

அப்பாவை

மரியாதையாக

வாங்கோ போங்கோ

என்று சொல்லுமாறு

அம்மா கோபிக்க,

மழலை சொன்னது

'போடாங்கோ!'

:fish:
 
தேவை தூக்க மாத்திரை!

கணவனைப் பற்றிக்

கவலை மனைவிக்கு;

மருத்துவரிடம்

சென்றாள்.

அவர் சொன்னார்,

கணவருக்கு

ஓய்வு தேவை;

நிம்மதி தேவை.

கொடுத்தார்

தூக்க மாத்திரை.

மனைவி கேட்டார்,

எப்போது அவருக்குத்

தர வேண்டுமென.

பதில் வந்தது:

மாத்திரை

அவருக்கு அல்ல;

உங்களுக்கே!

:sleep:

 
ஓர் ஒப்பீடு!

தங்கள் கணவனை

எதனுடன் ஒப்பிடுவீர்

என்ற வினாவுக்கு

விடை தந்தாள்

ஒரு பெண்மணி;

அவர் ஓர்

Split A C தான்;

வெளியில் எத்தனை

சத்தம் போட்டாலும்,

வீட்டினுள்

கப் - சிப்!!

:tape2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top