• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.

Raji Ram

Active member
இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

நல்ல எண்ணங்கள் மலரட்டும்.....

எட்டிக்காயே இலக்கணம், பலருக்கு!
எழுத வேணும் கவிதைகள், சிலருக்கு!

அலகாக நீளம், அகலம் வேண்டாம்;
அழகான எண்ணம் மட்டும் போதும்!

ஒரு
சொல்லும்கூட
ஒரு வரி ஆகிவிடலாம்
முற்றுப் புள்ளிகூட வேண்டாம்
புதுமை இதுவே
எளிமை இதுவே

வந்தன அதனால், புதுக்கவிதைகள்;
தந்தன புதுவடிவில், பல கருத்துக்கள்!

எண்ணம் இருந்துவிட்டால், எழுதுவது
திண்ணம், புதுக்கவிதைகளை, நன்கு!

நல்ல எண்ணங்கள் மலரட்டும்,
ராஜி ராம் :angel: . . . :amen:
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

புதுக்கவிதைகளை வரவேற்கலாம்.

ரசம் இருக்கலாம் அதில்;

விரசம் அறவே கூடாது!


தமிழ் வாழ்க! வளர்க!

ராஜி ராம் :thumb:
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
அன்பளிப்பு!

லஞ்ச ஒழிப்பு பற்றி

வந்து

உரை நிகழ்த்துவார் தலைவர்.

உரை நிகழ்த்துமாறு

அழைக்கச் சென்ற

அந்தத் தொண்டர்

தந்த பெட்டியில்

அன்பளிப்பு

சலவை நோட்டுக் கற்றைகள்!

:spy:
 
இந்த வகைக் 'கவிதை(?)களுக்கு'
தந்து விட்டார் திரு 'சோ' ராமசாமி
எந்தக் காலத்திலேயோ ஒரு
சுந்தரமான நல்ல பெயர்.

'கம்பாசி
ட்டர் கவிதைகள்.' :clap2:

வாக்கியத்தை மடித்தோ,
வளைத்தோ உடைத்தோ,
கிண்டிக் கிளறி எதையோ
கொண்டு வந்து தருவது!

"வா! வா!" என்று அழைக்கும் பொழுதே
வாழாவெட்டியாக உள்ளது இலக்கணம்.
"போ! போ!" என்றால் ஒரே அடியாகக்
"போயே போயிந்தி" ஆகிவிடும்! உஷார்! :bolt:
 

Brahmanyan

Active member
இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

இந்த வகைக் 'கவிதை(?)களுக்கு'
தந்து விட்டார் திரு 'சோ' ராமசாமி
எந்தக் காலத்திலேயோ ஒரு
சுந்தரமான நல்ல பெயர்.

'கம்பாசி
ட்டர் கவிதைகள்.' :clap2:

வாக்கியத்தை மடித்தோ,
வளைத்தோ உடைத்தோ,
கிண்டிக் கிளறி எதையோ
கொண்டு வந்து தருவது!

"வா! வா!" என்று அழைக்கும் பொழுதே
வாழாவெட்டியாக உள்ளது இலக்கணம்.
"போ! போ!" என்றால் ஒரே அடியாகக்
"போயே போயிந்தி" ஆகிவிடும்! உஷார்! :bolt:

நன்றாக சொன்னீர்கள் திருமதி விசாலாக்ஷி ரமணி அவர்களே, இலக்கணமில்லா இலக்கியம் (கவிதை) உப்பில்லா பண்டமல்லவா . ஒரு சிறு கட்டிலுக்குக் கூட நான்கு கால்கள் தேவையல்லவா ? முறையாக தமிழை கற்காத எனக்கு இலக்கணத்தின் அருமை தெரியும்.
அன்புடன்,
ப்ரஹ் மண்யன்,
பெங்களுர்
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
இந்த வகைக் 'கவிதை(?)களுக்கு'
தந்து விட்டார் திரு 'சோ' ராமசாமி
எந்தக் காலத்திலேயோ ஒரு
சுந்தரமான நல்ல பெயர்.

.................................
தயவு செய்து சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்!

அலகாக நீளம், அகலம் வேண்டாம்;
அழகான எண்ணம் மட்டும் போதும்!

ஒரு
சொல்லும்கூட
ஒரு வரி ஆகிவிடலாம்
முற்றுப் புள்ளிகூட வேண்டாம்
புதுமை இதுவே
எளிமை இதுவே

வந்தன அதனாலே, புதுக்கவிதைகள்;
தந்தன புதுவடிவில், பல கருத்துக்கள்!

எண்ணம் இருந்துவிட்டால், எழுதுவது
திண்ணம், புதுக்கவிதைகளை நன்கு!

நல்லெண்ணங்கள் மலரட்டும்,

தங்கள் பதிலில் உள்ள ஒரு சொல் மிகக் கூர்மை! நயம் இல்லை! ....To be :censored:

:mmph:
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
நன்றாக சொன்னீர்கள் திருமதி விசாலாக்ஷி ரமணி அவர்களே, இலக்கணமில்லா இலக்கியம் (கவிதை) உப்பில்லா பண்டமல்லவா . ஒரு சிறு கட்டிலுக்குக் கூட நான்கு கால்கள் தேவையல்லவா ? முறையாக தமிழை கற்காத எனக்கு இலக்கணத்தின் அருமை தெரியும்.
அன்புடன்,
ப்ரஹ் மண்யன்,
பெங்களுர்
வெண்பா, குறட்பா, எதுகை, மோனை என்பவை எல்லோரும் எழுதுவது கடினம்.

சொற்குற்றம் இல்லாத அழகுத் தமிழுக்கு, இந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை!

நல்ல எண்ணங்களை, நல்ல சொற்களால் சொல்ல, என்ன தடை?

அந்த விதத்தில் புதுக் கவிதைகளை வரவேற்போம்!

இலக்கியம் பல நம் முந்தைய தலைமுறை படைத்துவிட்டது...

சில அறிஞர்களால் இன்றும் தொடர்கின்றது!

நல்ல தமிழ் வளரட்டும்!
ராஜி ராம் :peace:
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
காக்கவேணும்!

மகனிடம் சொன்னார்

நல்லாப் படிச்சு

பெரிய வேலையில் சேர்ந்து

என்னையும் அம்மாவையும்

காக்கவேணும்!

பின்னர் சென்றார்

முதியோர் இல்லம்

தன் பெற்றோரைக் காண!

:dizzy:
 
எல்லோருக்கும் ஸ்ருதி சேருவது கடினம்;
எல்லோருக்கும் தாளம் நிற்பது
ம் கடினம்;

எல்லோரும் ஸ்ருதியும் தாளமும்
இல்லாமலேயே இனிப் பாடலாமா?

கட்டுக்கோப்பில் அடங்கும்போது தான்
கவிஞரின் தனித்திறமை வெளிப்படும்.

ஸ்ருதியும், தாளமும் இல்லாத சங்கீதம்,
தன் 'மாதா பிதா'வைத் தொலைத்துவிடும்!

இலக்கணம் இல்லாத இலக்கியமும் அவ்வாறே.
தானே எழுதித் தானே படித்துக்கொள்ள வேண்டும்!
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
இன்றைய புதுக்கவிதை நாளைய இலக்கணம் !!!
நன்றி Sir!

வந்த என் சில படைப்புகளுக்கு,
எந்த பதிலும் இல்லை, இதுவரை!

:ranger:
 
எண்ணங்களை இலக்கணப் பண்புகளுக்காக சிறையிலடைப்பதும் தவறு
புதுக்கவிதை என்ற பெயரில் இலக்கணங்களை முற்றும் மறந்து விடுவதும் தவறு

இலக்கணம் இல்லா கவிதை உப்பில்லா பண்டம் என்பது கொஞ்சம் ஓவர் மனதில் தோன்றிய கருத்தை சொல்ல இலக்கணம் மட்டுமே வழியல்ல. கருத்துச் சுதந்திரம் இலக்கண மரபிற்கும் கூட பொருந்தும்.

(வந்துட்டான்யா பிஸ்தா .....எல்லாம் தப்புன்னா இவன் எழுதுறது எதுல சேத்தி?:ban: )

ஆமாம், இது என்ன? அக்கா தங்கை கவிதைல கூட சண்ட போட்டுண்ட்ருக்கா :violin:? !
 

kunjuppu

Active member
எண்ணங்களை இலக்கணப் பண்புகளுக்காக சிறையிலடைப்பதும் தவறு
புதுக்கவிதை என்ற பெயரில் இலக்கணங்களை முற்றும் மறந்து விடுவதும் தவறு

இலக்கணம் இல்லா கவிதை உப்பில்லா பண்டம் என்பது கொஞ்சம் ஓவர் மனதில் தோன்றிய கருத்தை சொல்ல இலக்கணம் மட்டுமே வழியல்ல. கருத்துச் சுதந்திரம் இலக்கண மரபிற்கும் கூட பொருந்தும்.

(வந்துட்டான்யா பிஸ்தா .....எல்லாம் தப்புன்னா இவன் எழுதுறது எதுல சேத்தி?:ban: )

ஆமாம், இது என்ன? அக்கா தங்கை கவிதைல கூட சண்ட போட்டுண்ட்ருக்கா :violin:? !

சரியான நாரதர் பாரம்பரியம் இந்த ஆளு.... :) :)

இலக்கணப் பண்புகளுக்காக சிறையிலடைப்பதும் தவறு - Point to raji

புதுக்கவிதை என்ற பெயரில் இலக்கணங்களை முற்றும் மறந்து விடுவதும் தவறு - point to visa
 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ் குடி


மொழிக்கு இலக்கண வளம் எவ்வளவு
அவசியமோ அதைவிட இலக்கண வரம்பு.
உலக அளவில் நம் தமிழ் மொழிக்கு ஒரு
உயர்ந்த அங்கிகாரம் கிடைத்திருக்கிறது என்று
சொன்னால் , அது இலக்கனத்தை தன்
அகத்தே கொண்டுள்ள காரணத்தால் தான்

இன்று ஆறாயிரம் மொழிகள் உலக அளவில்
பேசப்படுகிறது என்று மொழியியல் வல்லுனர்கள்
சொல்கிறார்கள் . இதில் என்ன வேடிக்கை என்றால்
பேசப்படும் அணைத்து மொழிகளிலும் செம்மொழி
என்ற தகுதி பெறத்தக்க மொழிகள் ஆறு மட்டும்தான்.

தமிழுக்கு தொல்காப்பியம் முதல் தனி இலக்கண நூலக
அமைந்தது போன்று எந்த ஒரு மொழிக்கும் இலக்கனத்துக்கென்று
தனி நூல் இல்லை.. தொல்காப்பியம் தோன்றிய காலத்தை இன்னும்
எவராலும் அறுதியிட்டு உறுதியாக கூற முடியவில்லை.ஏறத்தாள
ஐயாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று உலக மொழி ஆய்வாளர்கள்
கணித்துள்ளார்கள்.


அதில் தமிழ் மொழிக்கு முதல் இடம் தந்துள்ளார்கள்
என்று சொன்னால் அது தொல்காப்பியத்தின் பழமை குறித்தே..


(தடை மீறிப் போராட சதிராடி வா
என் தமிழே நீ பகை வென்று
முடி சூடி வா வா)

அன்புடன் உங்கள் சிவஷன்முகம்

இன்னும் (தமிழ்) வளரும் .......
 
Last edited:
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
குயில் என்ன ஸ்ருதி?

'குயில் என்ன ஸ்ருதி?', எனக் கேட்டுத்தான் ரசிப்போமா?
குரல் அழகிலே நாம் எல்லோரும், மயங்கிக் கிடப்போமா?

காட்டில் ரீங்காரம் எழுப்பும் சில்வண்டுகள், எந்த ஒரு
நாட்டில் சென்றும், ஸ்ருதி சேர்த்துக் கொள்வதில்லை!

தாளம் இல்லாது பாடும், இனிய ஆலாபனைகள் எல்லாம்,
ராகம் தரும் அழகால், வந்து மனதை நிறைப்பதில்லையா?

தமிழ்க் கவிதை இலக்கணத்தை ஓரம் கட்டச் சொன்னால்,
தமிழ் இலக்கணத்தையே ஓரம் கட்டியதுபோல, கோபம்!

'கோனார் நோட்ஸை'த் தேடவைக்கும், கடினமான ஒரு
'கோளாறான' பழந்தமிழை, நாம் எழுதத்தான் முடியுமா?

சொல்ல வந்த கருத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள்;
சொன்னதை எல்லாம், வந்து எதிர்க்கவே விழையாதீர்கள்!

'அவன் வந்தாள்' என்றோ 'அவள் வந்தான்' என்றோ, அறிவிலி
எவரோ எழுதச் சொன்னதுபோல, ஏன் இந்தச் சீற்றம் இங்கு?

ஒன்று மட்டும் புரியவே இல்லை! மற்ற சில 'நூல்களை'த் தேடிச்
சென்று, 'ஓ போட்டு'விட்டு, இங்கு மட்டும் வந்து சீறுவது ஏன்?

யாப்பிலக்கணத்தை ஒட்டி, இங்கு நாம் இயற்றுவது எல்லாம்,
காப்பியங்கள் என்று, ஒரு கணமும் நான் நினைத்தது இல்லை!

என்னைப் பொறுத்தவரை, திரு. குஞ்சுப்பு அவர்கள் எழுதிய
'இன்றைய புதுக்கவிதை நாளைய இலக்கணம்', ஒரு ஹைக்கூ !!

( point to be noted by Sri. Kunjuppu..... அடுத்த கவிஞர்??? ) :typing: :peace:

 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
உடுத்தத் துணி

தலைவர் வரவு

தொண்டர் மகிழ்வு

பாதை நெடுகிலும்

பத்தடிச் சதுரத்தில் அச்சிட்ட

பாங்கான 'பானர்கள்' பல.

நூற்றுக் கணக்கில்

'மீட்டர்' துணிகள் வாங்கித்

தைத்தனர் பலர்

இரவு பகலாய்!

கட்டிய இடம்

கிழிந்த 'டவுசர்' அணிந்த

சிறுவர் ஆடும்

சேரிப் பகுதி!

:flame:
 
கருத்துக்களை வெளிபடுத்தக்
கவிதை ஒன்றுதான் வழியா?

கதை, கட்டுரை, துக்கடாக்கள்,
நகைச் சுவைத் துணுக்குகள் என,

ஏராளமான வழிகள் உள்ளன,
தாராளமான தேனாம் தமிழில்!

[எந்த நாரதரும் எங்களுக்குள்
எந்தக் கலகமும் செய்ய முடியாது!]

குயில் இசையில் சுருதி உண்டே!
மயில் குரலில் இல்லை ஸ்ருதி.

சில்வண்டின் ரீங்காரமே அழகிய
சிந்தை மயக்கும் தம்புரா ஆகும்.

தேவை இல்லை தாளம் ஆலாபனைக்கு;
தேவை மிகவும் பாடும் பாடல்களுக்கு!

இயன்ற அளவு தரத்தை உயர்த்திவிட
முயலுவோ அன்றித் தாழ்த்துவோமா?

காப்பியங்கள் ஆகாவிடினும் அவை
பார்ப்பதற்கு இனியவையே உண்மை!

சுருதியும் தாளமும் இல்லாத பாடகர்
அருமை நண்பர் உயர்திரு Gardab Das!

விமரிசனம் தேவையே இல்லையா?
விமரிசனம் வெளிவராது இனிமேல்!


புதிய முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்!
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
.......................
புதிய முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்!
ஹூம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

வேறு ஒன்றுமில்லை! பெருமூச்சு! :lol:
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member

..............
சுருதியும் தாளமும் இல்லாத பாடகர்
அருமை நண்பர் உயர்திரு Gardab Das!

For the benefit of those who wonder who Gardhan Das is!!

(from Wikipedia)

Gardhab Das created by cartoonists brothers Neelabh and Jayanto Banerjee was a comic

section run in the Indian youth magazine Target. The main character Gardhab Das had a

donkey face and was always depicted wearing a kurta and pajamas. His main trait was his

singing or lack of it. He was a perpetually unemployed music teacher. Famously known for

disturbing the peace with his vocals and his harmonium, he was always at loggerheads with

his landlord, being a penniless 'singer'. In various strips, he gets jobs as a siren for the fire

department, as a weapon during a war, and he also manages to fight and get the better of

people like Tike Myson, a play on Mike Tyson and Bruce Lee. He also trains the double of

Mykill Packson (Michael Jackson) on his tour to India. His only weapon: his vocals and his

harmonium. The name Gardhab itself means 'donkey' in Sanskrit and Das is a common Indian

surname.


The strips were simplistic, and their appeal lay in the funky illustrations. This along with

Detective Moochwala made Target a highly anticipated magazine for children all over India

during the mid 80's through till the early 90's.

:ranger:
 
ஆ சொய்ங்ங் ஆசிங் ... ஆ சைங்க...
ஆ சொய்ங்ங் ஆசிங் ... ஆ சைங்க...

தில்லா லங்கடி போட்டு நானும்
போட்டேந்தா கூத்து ..
அந்த கோவையிலே நேத்து..
கோவகார அக்கா அங்கே வச்சா
பாரு வேட்டு....

ஆ சொய்ங்ங் ஆசிங் ... ஆ சைங்க..
ஆ சொய்ங்ங் ஆசிங் ... ஆ சைங்க..

இதில் எங்கிருக்கிறது இலக்கணம் ?

இதை பார்த்தால் தொல்காப்பியன்
சித்தம் கலங்கி சத்தமில்லாமல்
சென்றிடுவான்.

இதை தெருவில் பாடினால் ஆயிரம்
மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்
தமிழ் இலக்கணம் ஒருபொழுதும் ஏற்காது ..

அதற்காக இதுபோன்ற பாடல்களை நாம்
ஓதிக்கித்தான் வைக்கமுடியுமா ?

(அடித்தால் அழுவேன் ஒருநாள் யாரும் அணைத்தால்
சிரிப்பேன் மறுநாள் ...எடுப்பார் கைகளில் பிள்ளை
ஒரு பகையோ உறவோ இல்லை)

உங்கள் அன்பு வேண்டி
சிவஷன்முகம் .

மீண்டும் வருவேன் .....நாளை
 
OP
OP
Raji Ram

Raji Ram

Active member
S S ஐயா!

இது நான் எதிர்பார்க்காத ஒன்று!

பக்க வாத்தியம் இல்லாமல்

பாட்டு எழுதுங்கள்!

தெருவோரக்

குத்துப் பாட்டை

அடியேன் ஆதரிக்கவில்லை!


என் குறும் கவிதைகளை

நோக்கவும்!

ஏதேனும் ஒரு கருத்தை

நயமாக முன்வைக்க வேண்டுகிறேன்!

ரசம் வேண்டுமென

முன்பே விண்ணப்பித்துள்ளேன்!

நீங்கள் குத்துப் பாட்டுக்கு வேறு 'நூலை' தொடங்கவும்!

நான் எதிர்பார்ப்பது, நயமான குறும் கவிதைகளை!

நன்றி
ராஜி ராம்

ஒரு ஐயம்: நீங்கள் இக்கால சினிமாப் பாடல்களுக்கு மிக ஏற்றவரோ? :noidea:
 
புதுக்கவிதையை வா என்று அழைக்கலாம்
அதற்காக இலக்கணத்தைப் போ என்று சொல்லலாகுமோ?
இலக்கணம் இன்றி எழுதுவது எல்லா நேரமும் கவிதை ஆகுமோ?

இலக்கண சட்டை மட்டுமே அணிய வேண்டும் என்ற காரணத்தால் சட்டை இன்றி திரிவதுதான் தகுமோ?
கருத்துப் பரிமாற்றம் தான் முக்கியம். மற்றவை எல்லாம் அப்புறம்!

நம்புங்கள் என்னை. நான் எந்த கலகமும் செய்ய வரவில்லை.
போகிற போக்கில் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.
 
முதற்கண் உங்கள் குறும் பாடல்களுக்கு நன்றி இன்னும் நான் என் பதிவினை முடிக்கவே இல்லை ...
முழுதும் படித்து விட்டு இறுதியாக '' உங்கள் கேள்வியான தற்கால புதுக் கவிதைக்கு இலக்கான வரம்பு தேவையா ...? என்ற கேள்விக்கு என் கருத்தினை பதிந்து விடுகிறேன்..
உங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..இது கூத்துப் பாடல் வகையை சேர்ந்தது.. மெட்டு கட்டி கிராம பகுதியில் கூத்தாக ஆடிக்காட்டும் பாடல்..
எந்த ஒரு மொழிக்கும் வாய்க்கப் பெறாத ஒன்று..
நம் தமிழ் இயல் , இசை , கூத்து (நாடகம்) என்ற மூன்று
பெரும் பகுதிகளாக பிரிக்கப்படிருப்பது .
வார்த்தைகளை அழகுற அடிக்கு வைத்து, இசையோடு இசைத்து
பாமர மக்களை கவர வேண்டி ஆடிக்கட்டும் கூத்து பாடல்கள்
நீங்கள் சொல்வது போன்று ..
..(?) பாடல்கள் இல்லை..

இலக்கியத்திலும் பாணன் ..பாணிக்கு பண்ணோடு
இசைத்து கேள்வி கேட்பதும் அதற்கு பாணி பதில்
கூறுவதும் போன்று..

அன்புடன் சிவஷன்முகம்
 
Last edited:
Status
Not open for further replies.
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks