• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
சாதிக்கை விரும்பித் தான்

விரும்பியதைச் சாதித்த பெண்ணை

சாதிக் சதிக்காமல் இருந்தால் சரி தான். :bolt:

சாதிக் சதித்தால் அங்கே

அப்பனுக்கும் பெப்பே அந்த


அப்பாவிக்கும் பெப்பே!
:baby:
 
Last edited:
When I went to live in Visakhapatnam in 1975, I had a neighbor who would scold

his wife, daughter and son using the same word 'vethavaa" :shocked:

I used to feel hurt and sorry to see the husband calling his wife 'vethavaa'.

Later I learnt that the word just meant 'a useless fellow'.

Even that meaning was befitting, since a 'vethavaa' IS useless in many

ways! :(
 
........

சாதிக் சதித்தால் அங்கே

அப்பனுக்கும் பெப்பே அந்த


அப்பாவிக்கும் பெப்பே!

உங்கள் சொற்களா இவை? :dizzy:
 
ஒதுக்குதல் . . .

மகனுக்குத் திருமணம்

மங்கல நாண் பூட்டும் நேரம்

தாய் தூரத்தில்

கண்களில் நீர் ஆறு

ஆனந்தமா அல்லது

சோகமா

இரண்டுமேதான்

ஆனந்தம்

மகனுக்குத் துணை

வந்துவிடுவதால்

சோகம்

தன் துணை

விட்டுப் போனதால்!

சமுதாயம் மாறுமோ?

:faint:
 
சாதித்துப் பின்னர்
சதிக்கும் இந்த
சாதிக்குக்களை
நினைக்கும் போதே
நீசமான சொற்களே
நினைவுக்கு வருகின்றன!
நான் என்ன செய்யட்டும்? :sorry:
 
அஞ்சுவாரோ?

இந்த நூலைப் படித்த எவரும், 'சாதிக்' எனப் பெயர் வைக்க அஞ்சுவாரோ?

'அந்த'ப் பெண் விரும்பிய 'சாதிக்', நல்வாழ்வு கொடுத்து சாதிக்கட்டும்!

:angel: . . . :cheer2:
 
குடும்பமும், நட்பும்...

குடும்பத்தை நட்பாய்

நினைத்தால்

நட்பால்

அன்பு மலருமோ?

நட்பைக் குடும்பமாய்

நினைத்தால்

பந்தத்தால்

வெறுப்பு

வளருமோ?

:noidea:
 
நீட்டிய விரல்கள்...

நக்கீரர் பரம்பரை

அவர்

புத்திசாலி

குற்றம்

சொல்லும்போது

ஐந்து விரல்களை

நீட்டுவார்

சுட்டு விரலை

மட்டும் நீட்டினால்

மூன்று விரல்கள்

தன்னை நோக்குமே!

:peace:.:peace:
 
அனுதாப அலை...

ஊழல் புகார்

ஊழியென வந்துவிட

தானைத் தலைவர்

சிறையின் உள்ளே

சேனைத் தொண்டர்

கொதிப்பு வெளியே

உடனே தேவை

அனுதாப அலை

பிடித்தனர்

ஏமாளி ஒருவனை

எரித்தனர் வீதியிலே

எதிர்க்கத் தெரியாத அவனை

தலைவனுக்காக

உயிர்த் தியாகமாம்

பெயர் தெரியாத

அவனால்

பெயர் பெற்றார்

தலைவர்!

இதுவா குடியாட்சி?

:mad2:
 
This is one paragraph from one of my poems written in 1984.


புதுமைக் கவிதை வளர்ச்சியைப் பற்றி ...

புதுமை செய்ய எண்ணிய பலரும்
புனைந்த ததனிற் கவிதை என்பது
தினைநிறை கூட இல்லை யாமே.
கருத்து மட்டும் கவிதை ஆகாது;
உருவமும் வேண்டும் உயிரினை உணர்த்த.
இன்னும் ஒன்றை இங்கே சொல்வேன்.
மன்னரைப் பாடிய கால மொழிந்து,
மக்களைப் பாடும் தருணம் இதனில்,
மக்களைக் கவிதை எட்டுவ தில்லை.
மரபுக் கவிதைகள் மருட்டிய தாலும்,
மெருகுச் சொற்கள் அலுத்தத னாலும்,
புதிய முறையில் எழுத நினைத்தவர்
விதியின் நீங்கிக் குழம்பி நிற்பதே,
இன்றைய நமது கவிதையின் நிலையாம்.
சென்றதை மறந்து எழுதிய கவிதை,
வென்றதா? இல்லையே! மக்களின் மனதில்
நின்றதா? இல்லையே? பின்னெது புதுமை?


My point is those who hate grammar and those who could not grasp fine grammar only blame the well structured verses of yester-years. If at all a writer who is good at free verses learns grammar and becomes proficient too, he will be more successful than he was once. You ask any popular poet, he/she will readily agree with me.

One must know thoroughly what is already in existence, before embarking upon something new.
 
Last edited:
This is one paragraph from one of my poems written in 1984.


புதுமைக் கவிதை வளர்ச்சியைப் பற்றி ...
.............
My point is those who hate grammar and those who could not grasp fine grammar only blame the well structured verses of yester-years. If at all a writer who is good at free verses learns grammar and becomes proficient too, he will be more successful than he was once. You ask any popular poet, he/she will readily agree with me.

One must thoroughly know what is already in existence, before embarking upon something new.


Dear Sir,

Thank you very much for the nice poem and views. Yes, I agree with all your points.

This forum is not for proficient poets only! I hope you will agree with me.

The good poems are published and read world wide by people who appreciate.

Songs composed by the musical trinity and other equally efficient composers are popular.

But, even now there are musicians to sing the new songs which are not up to that standard.

I wanted to share quick flowing thoughts in the new format, which has already crept in.

The title must have provoked you, I guess!

Hope you read my post # 7 which reads:

"வெண்பா, குறட்பா, எதுகை, மோனை என்பவை எல்லோரும் எழுதுவது கடினம்.

சொற்குற்றம் இல்லாத அழகுத் தமிழுக்கு, இந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை!

நல்ல எண்ணங்களை, நல்ல சொற்களால் சொல்ல, என்ன தடை?

அந்த விதத்தில் புதுக் கவிதைகளை வரவேற்போம்!

இலக்கியம் பல நம் முந்தைய தலைமுறை படைத்துவிட்டது...

சில அறிஞர்களால் இன்றும் தொடர்கின்றது!

நல்ல தமிழ் வளரட்டும்! :peace:
ராஜி ராம்"
 
ஆனால், அப்பளத்தைக் கொடுத்து விட்டு, அதைப் பூரி என்று யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றால் சரியா?
 
Dedicated to Lord Buddha

சொற் குற்றம் , இலக்கண குற்றம், பொருள் குற்றம் எல்லாவற்றையும் மன்னிக்கவும்
இது பூரியும் இல்லை - அப்பளமும் இல்லை


poem (written by me) dedicated to Lord Buddha

தெருவில் இருந்தால் தான் குடிசையின் அருமை தெரியும்
குடிசையில் இருந்தால் தான் கூட்டு வீட்டின் அருமை தெரியும்
கூட்டு வீட்டில் இருந்தால் தான் கோபுர வீட்டின் அருமை தெரியும்
கோபுர வீட்டில் இருந்தால் தான் மாளிகை வீட்டின் அருமை தெரியும்
மாளிகை வீட்டில் இருந்தால் தான் அரண்மணை வீட்டின் அருமை தெரியும்
அரண்மணை வீட்டில் இருந்தாலும் ஞான ஒளி தெரியும்போது
தெருவின் அருமை எப்போதும் தெரியும்!


 
Last edited:
ஆனால், அப்பளத்தைக் கொடுத்து விட்டு, அதைப் பூரி என்று யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றால் சரியா?
Dear Sir!

தங்களை அழைக்கவே, கொஞ்சம் ஆங்கிலம் தேடும் நிலை!
தமிழில் அழைத்தால், மேடைப் பேச்சு போல் ஆகிவிடுமே!

அப்பளத்தைப் பூரி என்று சொல்லவில்லை; முயன்றாலும்
அப்படி ஆகவும் ஆகாது! எல்லோருமே அறிவோம், இதை!

காப்பியங்கள் இயற்ற அறைகூவல் விடுக்கவில்லை - தேவை
COPY அடிக்காமல், புதுக் கவிதை வடிவில், புதுக் கருத்துக்கள்!

இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பே சலித்துக்கொண்டும்,
இருக்கிறதே இன்றுவரை, இந்தப் புதுக் கவிதை வடிவங்கள்!

ரசத்துடன் (மீண்டும் சாப்பாடு இல்லை!) எழுதலாம்; வி-
ரசத்துடன் எழுவதையே, நான் என்றும் எதிர்க்கின்றேன்!

கவிதை இலக்கணம் தாண்டிய இந்த வடிவத்தில், புதுக்-
கவிதை இயற்ற எங்களை அனுமதியுங்கள், சரியா?

குறிப்பு:

பூரி மட்டும்தான் தேவையா? அப்பளமும் வேண்டாமா? :thumb:
 
அப்பளம்...

'அப்பளம்'

என்று எழுத

ஆசிரியர் சொல்ல

'அபலம்'

என்று

ஒரு மாணவன் எழுத

கோபித்த ஆசான்

பிரம்பை எடுக்க

காரணம் கூறினான்

புத்திசாலி மாணவன்:

அழுத்தி எழுதினால்

அப்பளம் உடையுமே ஐயா!

{'கடி'க்கெல்லாம் கவிதையா, என்ற சினம் வேண்டாம்!}

:biggrin1:
 
புதுக் கவிதைகள் மீது கரிசனம் காட்டும் Prof Sir,

மீண்டும் நன்றி!
 
.......
poem (written by me) dedicated to Lord Buddha
.................
அரண்மணை வீட்டில் இருந்தாலும் ஞான ஒளி தெரியும்போது
தெருவின் அருமை எப்போதும் தெரியும்!


ஞான ஒளிக்கு அருமையான விளக்கம்! கவிதைக்கு நன்றி.....:thumb:
 
அப்பளம்...

'அப்பளம்'

என்று எழுத

ஆசிரியர் சொல்ல

'அபலம்'

என்று

ஒரு மாணவன் எழுத

கோபித்த ஆசான்

பிரம்பை எடுக்க

காரணம் கூறினான்

புத்திசாலி மாணவன்:

அழுத்தி எழுதினால்

அப்பளம் உடையுமே ஐயா!

{'கடி'க்கெல்லாம் கவிதையா, என்ற சினம் வேண்டாம்!}

:biggrin1:

Cute...
 
புதுக் கவிதைகள் மீது கரிசனம் காட்டும் Prof Sir,

மீண்டும் நன்றி!
Now that two 'Prof's have appeared in this thread,

I wish to specify that the 'Prof' I mentioned here is Sri. Nara :thumb:
 
துதி செய் மனமே!

இறைவன் துதியே

மன நலம் தருமே

இலக்கு முக்தி எனின்

இலக்கணம் உதவாது

ஆதி சங்கரர்

பஜகோவிந்தம்

முதல் ஸ்லோகத்தில்

சொன்னதே இது

புதிதல்ல

இறுதிக் காலத்தில்

உறுதியாய்க் காக்கும்

நாம ஜெபமே செய்வோம்!

:pray:

குறிப்பு: என் நண்பரின் அறிவுரையால், ஆதி சங்கரரை அழைத்தேன்! :hail:
 
கண்டான், விழுந்தான், ஓடினான்!

அவளின்

ஒயிலான நடையில்

காவிரி நதியைக்

கண்டான்

பெரிய கண்கள்

பெருகும் கங்கை நதியே

அவை என்று

காதலில் விழுந்தான்

அன்பே என அழைக்க

அருகினில் சென்றான்

வாய் திறந்தாள்

அந்தோ

வந்த சொற்கள்

கூவம் நதியே

பயந்து ஓடினான்!

:llama:
 
எதிரியை நேசி!

எதிரியை நேசி என

காந்திஜி சொன்னார்

சோம்பலே நம்

முதல் எதிரி என

நேருஜி சொன்னார்

பெரியவர் சொன்னால்

பெருமாள் சொன்னதுபோல்

அதுதான்

நிறையப் பசங்க

இப்படி இருக்கின்றாரா?

:sleep: :sleep: :noidea:
 
அளவு...

விடுமுறையில் சென்ற

நீண்ட பயணம் பற்றி

நீண்ட நான்கு பக்கக்

கட்டுரை எழுத

ஆசான் பணிக்க

பயணம் செல்ல

வசதியில்லா மாணவன்

என் செய்வான்

பாவம்

உதித்தது புது எண்ணம்

எழுதினான் இவ்வாறு

ஒரு ரயிலில் ஏறினேன்

அது கூவிச் சென்ற ஒலி

கூ கூ கூ கூ .......

கூ என்று எழுதியே

நிறைத்தான் நான்கு பக்கங்கள்

நிறைவான பயணம் இனிமை

என முடித்தான்!

:becky:
 
ஏழ்மை ...

அளவு என்ற

குறும் கவிதை

எழுதும்போது

எழுந்தது நகைச்சுவை

மீண்டும் படித்து

மாணவனின் ஏழ்மை

மனதில் நிழலாடியபோது

என்னையும் மீறிக்

கண்களில் நீர்த்துளி

கற்பனையில் தோன்றியவனே

மறு ஜன்மத்திலேனும்

செல்வச் செழிப்பில்

அவன் பிறக்க வேண்டினேன்!

:pray:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top