My jokes in Tamil and English

Status
Not open for further replies.
Officer: "Madam, swimming is prohibited in this lake."
Lady: "Why didn't you tell me when I was removing my clothes?"
Officer: "Well, that's not prohibited."
 
அந்த டாக்டர் ஒண்ணும் சரியில்லை.
ஏன?
நேத்து அவரைப் பார்க்கப் போயிருந்தபோது என்னை டெஸ்ட் பண்ணிட்டு எனக்கு இருக்கிற இந்தக் கோளாறுக்குக் காரணமே ஜீன்ஸ் தான். உங்க அப்பாவோ, அம்மாவோ இல்லை தாத்தா, பாட்டி இல்லை அவங்க அப்பா, அம்மா இப்படி யாருடைய ஜீன்ஸுலேயாவது இந்தக் கோளாறு இருந்திருக்கலாம்னு சொன்னார். எங்க வீட்டிலே ஜீன்ஸ் போட்டுக்கற பழக்கம் என்னைத்தவிர இதுவரையிலும் வேறு யாருக்குமே இருந்ததில்லைன்னு சொன்னேன். ஜீன்ஸ் போட்டுக்கிறதுலே என்ன கோளாறுன்னு எனக்குப் புரியல்லே. கேட்டா டாக்டர் சிரிக்கிறாரு.
 
அந்த ஜோசியர் ரொம்ப பிரபலமான ஜோசியர்.
அப்படியா?
ஆமாம். அவர் ஒரு பையன் பொண்ணு கல்யாணத்துக்கு நல்ல நாள் நட்சத்திரம் பாத்து சொல்லும்போதே அவங்களோடே டைவர்ஸுக்கும் நாள் நட்சத்திரம் பாத்துச் சொல்லிடுவாராம்.
 
ஒருவர்: இவர்தான் அவரோட பரம விரோதி ஆச்சே. அப்படி இருக்கும்போது எப்படி இவர் அவரோட சாவுக்குப் போனார்?
மற்றவர்: எவ்வளவு விரோதியா இருந்தாலும் சாவுன்னு வந்துட்டா விரோதத்தையெல்லாம் மனசுலே வெச்சிக்காம செத்தவங்களைப் போய்ப்பார்க்கிறது நம்ம தமிழ்ப் பண்புதானே. அது தான் போல இருக்கு. அவர் சாவை விசாரிக்கப் போயிருக்கார்.
இன்னொருவர்: அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. அவர் செத்தது நிஜம் தானான்னு உறுதி பண்ணிக்கப் போயிருக்கார்
 
என்ன பக்கத்து வீட்டிலே ஒரே சத்தம்?
அதுவா? அவங்க வீட்டுப் பொண்ணு பாட்டுக் கத்துக்கிட்டு இருக்கா.
அவ பாட்டு கத்துக்கிட்டு இருக்கான்னு சொல்லாதே, அவபாட்டு கத்திக்கிட்டு இருக்கான்னு சொல்லு.
 
இந்த பேங்க் ஏடிஎம்லே எந்த பயமும் கிடையாது.
ஏன்? Ccctv காமிரா எல்லாம் பொருத்தி பாதுகாப்புக்குத் துப்பாக்கியோட இருக்கிற கூர்காவை போட்டிருக்காங்களா?
அதெல்லாம் இல்லை. அந்த ஏடிஎம் எப்பவாவது வேலை செஞ்சாத்தானே?அதனாலே எந்த பயமும் இல்லை
 
என்னங்க? இந்த வீட்டு மனை சென்னை விமான நிலையத்திலிருந்து 30 நிமிட தூரத்தில் இருக்கிறதுன்னு சொன்னாங்க. நாம முணு மணி நேரமா காரிலே போய்க்கிட்டிருக்கோம். இன்னும் நம்ம வீட்டு மனை வந்தபாடில்லை. நீங்களானா நாம் போய்ச் சேர இன்னும் ஒண்ணரை மணி நேரம் ஆகும்னு சொல்றீங்க?
அவங்க சொன்ன 30 நிமிஷங்கறது ஃப்ளைட்ல போனா ஆகிற நேரங்க.
 
பாக்க சகிக்க முடியாத இந்தப் பயங்கர கண்ணறாவியையா நீங்க மாடர்ன் ஆர்ட்டுன்னு சொல்றீங்க?
மேடம் மன்னிக்கணும். நீங்க இப்ப பார்த்துக்கிட்டு இருக்கிறது மாடர்ன் ஆர்ட்டை இல்லை. கண்ணாடியிலே தெரியற உங்க முகத்தை.
 
அமிர்தவர்ஷனி ராகம் பாடினா மழை வரும். காஞ்சிபோன ஏரி குளமெல்லாம் தண்ணீர் நெறஞ்சி போகும்னு சொல்லி அந்தப் பாகவதர் வரண்டு போன நம்ம ஊர் குளத்துக்கு நடுவுலே நின்னு பாடினாராமே. கடைசியிலே என்ன ஆச்சு?
அதுவா? நம்ம பாகவதர் பாடினதைக்கேட்டு அந்த ராகத்தை இப்படிக் கொலை பண்ணறாரேன்னு சொல்லி ஜனங்க விட்ட கண்ணீரிலே அந்தக்குளம் ரொம்பிப் போச்சு
 
இன்ஸ்பெக்டர் சார் என்னோட தொலைஞ்சி போன சைக்கிள் கிடைச்சுட்டுதா?
கிடைக்கலை. அதுக்குப் பதிலா வேறே ஒரு சைக்கிளை எடுத்துக்குங்க.
சரி சார். ( அப்போது இன்னொருவர் வருகிறார்)
அவர்: இன்ஸ்பெக்டர் சார், காணாமப்போன என்னோடே மனைவி கிடைச்சிட்டாங்களா?
இல்லை.
பரவாயில்லை. இன்ஸ்பெக்டர். அவருக்கு வேறே ஒரு சைக்கிள் தந்த மாதிரி எனக்கு வேறே யாரையாவது கொடுத்தாக் கூடப் போதும்.
 
இந்தக் காலத்துலே நம்ம ஊரிலே எல்லாப் பெண்களுமே கண்ணகியா மாறிட்டாங்க.
எல்லாரும் பத்தினிகளா ஆயிட்டாங்கன்னு சொல்றீங்களா பாட்டி. அது நல்லது தானே.
நான் அதைச் சொல்லல்லே. தலைவாரி சடை பின்னிக்காம தலைவிரிகோலத்தோடே இருக்காங்களே. அதைச் சொல்றேன்.
 
அந்த இளம் பாடகருக்கு கல்யாணி, வசந்தா, பைரவி, சாருகேசின்னா உசுரு. ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அந்த ராகங்கள் எல்லாம் அவருக்கு அவ்வளவு பிடிக்குமா?
ஊஹூம். அதெல்லாம் இல்லை. அவங்க எல்லாம் அவருக்கு ரொம்பவும் பிடிச்ச உயிருக்கு உயிரான கேர்ள் ஃப்ரண்ட்ஸ்.
 
ஸலூன்லே இத்தனை நேரமா ஏகப்பட்ட சத்தம் கேட்டுக்கிட்டு இருந்தது. கொஞ்ச நேரமா ஒரு சத்தத்தையும் காணோமே.
மன்னிக்கணும் சார். உங்க ரெண்டு காதும் இப்ப என் கையிலே இருக்கு. அதான் சார்.
 
சங்கீதக் கச்சேரிக்குத் தலைமை தாங்க வந்த நம்ம தலைவர் " வயலின் கச்சேரி ரொம்ப நல்ல இருந்தது. இந்தமாதிரி இவ்வளவு சிறப்பான கச்சேரியை நான் வாழ்நாளிலே கேட்டதே இல்லை அப்படி இப்படி" ன்னு ஒரு அரைமணி நேரம் புகழ்ந்து தள்ளிட்டாரு.
பரவா இல்லியே. நம்ம தலைவர் சங்கீதத்திலே மகாமேதைன்னு சொல்லுங்க.
அதெல்லாம் இல்லீங்க. அன்னிக்கு நடந்தது வீணைக் கச்சேரி!
 
இந்தக் காதல் கத்திரிக்கா வேலையெல்லாம் வெச்சுக்காதே. பேசாம நாங்க சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்க.
நீங்க ரெண்டு பேர் மாத்திரம் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே.
அதனாலேதான் சொல்றேன் "நாங்க பண்ணின தப்பை நீயும் பண்ணாதே"ன்னு.
 
எங்க வீட்டிலே வாரத்துக்கு ஒருநாள் தான் சமையல்.
ஏன் அப்படி? உங்க ஒய்ஃபும் ஒரு வேளை வேலைக்குப் போறாங்களோ?
அதெல்லாம் இல்லை. கேட்டா, நீங்க மாசத்துலே ஒரு நாள் கொண்டுவர சம்பளத்துலே நான் மாசம் பூராவும் சமாளிக்கல்லே? அதே மாதிரி நான் ஒரு நாள் சமைக்கிறதை வச்சிக்கிட்டு நீங்க ஒரு வாரம் சமாளிக்க வேண்டியதுதானேன்னு கேக்கறா.
 
Smartest man
A doctor, a lawyer, a little boy and a priest were out for a Sunday afternoon flight on a small private plane. Suddenly, the plane developed engine trouble. In spite of the best efforts of the pilot, the plane started to go down. Finally, the pilot grabbed a parachute and yelled to the passengers that they better jump, and he himself bailed out.
Unfortunately, there were only three parachutes remaining.
The doctor grabbed one and said “I’m a doctor, I save lives, so I must live,” and jumped out.
The lawyer then said, “I’m a lawyer and lawyers are the smartest people in the world. I deserve to live.” He also grabbed a parachute and jumped.
The priest looked at the little boy and said, “My son, I’ve lived a long and full life. You are young and have your whole life ahead of you. Take the last parachute and live in peace.”

The little boy handed the parachute back to the priest and said, “Not to worry Father. The smartest man in the world just took off with my back pack.”
 
உங்க ஒய்ஃபுக்குக் கோபம் ஜாஸ்தியா?
எப்படி கண்டு பிடிச்சீங்க?
தினமும் உங்க உடம்புலே புதுசு புதுசா காயம் இருக்கே. அதான் கேக்கறேன்.
 
என்ன சமையற்காரே, உங்க சமையல் ரொம்ப நல்ல இருக்கணும்னு எதிர்பாத்தேன். நீங்க என்னடான்னா கல்யாண சமையலை ரொம்ப சுமாராப் பண்ணிட்டீங்களே.
நீங்க தானே சொன்னீங்க சுமாரா 500 பேருக்கு சமையல் பண்ணணும்னு.
 
You know, he made a killing in the stock market yesterday?
Oh! That is good. He made a huge profit. Is it?
No I say. He killed his broker in the stock market who gave him wrong tips for investment.
 
அந்த டாக்டர் என் உடம்பு சரியாகணும்னா நான் ஸ்விட்ஸர்லாண்டுக்கோ ஹவாய்க்கோ போகணும்னு சொல்லி இருக்காருங்க.
அப்படியா?சரி. வா. போவோம்.
என்னங்க? ஸ்விட்ஸர்லாண்டுக்கா?
இல்லை. வேறே டாக்டரைப் பாக்கறதுக்கு.
 
அந்த இஞ்சினீயர் ஏன் இப்படி இடிஞ்சிபோய் உட்கார்ந்திருக்கார்?
அதுவா? அவர் கட்டிக்கிட்டு இருக்கிற கட்டடம் நேத்து இடிஞ்சி விழுந்துடுத்து. அதான்.
 
பெண் என்ன நொண்டி நொண்டி நடக்கிறாளே . இந்தப் பெண் எங்க பையனுக்கு வேண்டாம்.
அப்படி சொல்லாதீங்க சார். இதனாலே உங்களுக்கு நிறைய லாபம் இருக்கு. எப்படின்னா நீங்க இப்ப கால் சரியா இருக்கிற வேறே ஒரு நல்ல பெண்ணாப் பாத்து கட்டி வக்கிறீங்கன்னு வச்சிக்குங்க. அந்தப் பொண்ணு ஏதாவது ஒரு நாள் கீழே விழுந்து கால் ஒடிச்சிக்கிட்டு நொண்டி ஆக மாட்டாங்கங்கது என்ன நிச்சயம்? அப்ப அந்தப் பொண்ணு படற கஷ்டம்,வலி, அவஸ்தை, வைத்தியத்துக்கான செலவு எல்லாம் இப்ப நான் சொல்ற பொண்ணை நீங்க ஏத்துக்கட்டீங்கன்னா மிச்சம்தானே. அதை நினைச்சிப் பாருங்க.
 
Status
Not open for further replies.
Back
Top