• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

All in one medicine

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!
 
இந்த ஒரே ஒரு பாட்டை கேளுங்க!! எல்லா நோய்க்கும் பதில் தரும் ஆச்சரியத்தை பாருங்க!!

1575275036065.png

ஆங்கில மருத்துவம் வந்ததற்குப் பின் நமது இயற்கை மருத்துவத்தை மிக சாதரணமாக எடைப் போட்டு விட்டோம். . ஆனால் இப்போது வந்துள்ள நவீன மருத்துவத்திற்கு முன்னோடி நமது சித்தர்களும், பாரம்பரிய மருத்துவர்களும்தான். எந்த வித தொழில் நுட்பம் இல்லாமலேயே பல நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடித்து குணமாக்கியவர்கள். தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம் செல் புற்று நோய் முதல் பல மோசமான நோய்களைத் தீர்க்கும் என மிகச் சமீபமாகத்தான் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே தொப்புள் கொடியை பத்திரப்படுத்தி நோய்களுக்கு மருந்தாக்கினர். காலப்போக்கில் அது மருவி வெறும் தொப்புள் கொடியை தாயத்து கட்டி கயிற்றில் கட்டும் சடங்காக மட்டும் இது மாறிப்போனது.

சித்தர்கள் நோய்கள் தீர பல ஆயிரம் மருத்துவப் பாடல்களை எழுதி வைத்துள்ளனர். அதில் மிகச் சில ஆயிர ஓலைச் சுவடிகளே நமக்கு கிடைத்துள்ளது.

எல்லாமே அபூர்வ மருத்துவக் குறிப்புகள். இவை ஒவ்வொன்றும் நம் பிணியைத் தீர்ப்பவை.

மிகவும் சக்தி வாய்ந்த குறிப்புகளை நமக்கு சித்தர்கள் அளித்துவிட்டுதான் சென்றுள்ளனர். நாம்தான் அவற்றை உதாசீனப்படுத்திவிட்டுகிறோம். அருந் தமிழ் மருத்துவம் 500 என்ற மருத்துவ குறிப்பேட்டில் உள்ள பாடல் ஒன்றுதான் இங்கே கீழே உள்ளது.

இதில் எந்த உறுப்புக்கு எந்த மூலிகை நல்லது என உணர்த்தும் படி ரெண்டு ரெண்டு வார்த்தையில் மிக அருமையாக புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. படித்து நீங்களும் பயன்பெறுங்கள். இந்த பாடல் உங்களுக்கு வீட்டிலேயே சின்ன சின்ன பிரச்சனைகளை சீர் படுத்த உதவும்

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி..

……………………………………………..

உடலில் நோய் வந்தால் கட்டாயம் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் தான். ஆனால் இப்படி சிறு சிறு நோய்க்கெல்லாம் தொட்டதெற்கெல்லாம் அலோபதி மருந்துகளை சாப்பிட்டு உடலை நஞ்சாக்க வேண்டாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நல்ல மன நலத்தை தரும். நல்ல மன நலம் நல்ல குடும்பத்தை உருவாக்கும். நல்ல குடும்பம் ஒரு நல்ல சமுதாயத்தை ஏற்படுத்தும்.

ஆகவே நலமோடும் அன்போடும் வாழுங்கள்!

It would be great if someone can write the English names of the herbal products and ailments mentioned along with pictures of the herbs and any links. Personally, I have benefited from Fenugreek (Menthium) and Oomam / ஓமம் (for digestion, GERD) and lots of ginger (yes, I take 4 Oz a day - juice from 4 Oz of raw ginger mixed with other juices) that seemed to have helped me with an illness known as ME / CFS (Myalgic encephalomyelitis / chronic fatigue syndrome) (There are no bio-markers and treatment for this illness and hence this is my educated guess).
Make sure you know the correct name when you post since others might use it. When I checked ஓமம் with Google translate, it came up with Basil which looks like not the correct one. I have seen துளசி being translated as Holy Basil.
Thanks.
 
Where can we buy some of these medicinal herbs in Chennai or coimbatore?

There are 'Country Drug' shops in every locality. One famous shop is located at Mylapore where you can try.

Survivors Of Time: Dabba Chetty Kadai — Medicine Men

Anusha Parthasarathy on the 127-year-old Dabba Chetty Shop that has been supplying ‘country drugs' to Mylaporeans and people across the world

Tin boxes are stacked on top of each other with their mouths welded open. Dark, wooden cupboards that have long lost their sheen display multi-coloured bottles. Traditional charms hang from the darkened ceiling. A steady stream of customers armed with long hand-written lists patiently await their turn, mindless of the heat and traffic. The Dabba Chetty Shop on Kutcheri Road has survived over a century in the place it initially began, watching Mylapore grow from a quiet neighbourhood into the city's bustling cosmopolitan hub.

Read more at:
 
Last edited:

ஓமம் is Trachyspermum ammi

Ajwain, ajowan (/ˈædʒəwɒn/), or Trachyspermum ammi—also known as ajowan caraway, bishop's weed, or carom—is an annual herb in the family Apiaceae (or Umbelliferae). Both the leaves and the seed‑like fruit (often mistakenly called seeds) of the plant are consumed by humans.

துளசி is part of Basil family and is called Holy Basil.
 
Latest ads

Back
Top