64 THIRU VILAIYAADALGAL
50b. சிவன் போர்புரிய வந்தார்!
50 (b). சிவன் போர் புரிய வந்தார்!
வெற்றியின் விளிம்பைத் தொட்டுவிட்ட சோழன்
வெற்றிச் சங்கை எடுத்து முழங்கலானான்;
“இதுவே தக்க தருணம்!” என்று, வேடர் மன்னன்
உருவெடுத்துப் படைத் தலைவன் ஆனார் பிரான்.
விடுத்த அம்பு ஒவ்வொன்றும் போர்க்களத்தில்
அடித்து வீழ்த்தியது நூறு நூறு வீரர்களை!
வியப்பில் ஆழ்ந்த சோழமன்னன் கண்டது
மயக்கிய அம்பில் பொறித்த ஈசன் பெயர்!
“சுந்தரேச” என்னும் பெயர் தாங்கிய பாணம்
சுந்தரேசப் பெருமானின் சொந்தம் ஆயிற்றே!
எந்த வீரனுடன் பொருது வென்றாலும்
சுந்தரேசனை ஒருவர் வெல்ல இயலுமோ?
ஓட முற்பட்டான் போர்க்களத்தில் இருந்து
பேடியாக மாறிவிட்ட விக்கிரம சோழன்.
வேடிக்கை பார்க்கவில்லை வட அரசர்கள்,
ஓடவும் விடவில்லை சோழனை அங்கிருந்து.
மீண்டும் தொடர்ந்தது ஒரு கடும் போர்!
மீண்டும் அம்பு மழை பொழிந்தார் ஈசன்.
பத்துக் கணைகள் வீழ்த்தின நூற்றுவரை!
நூறு கணைகள் வீழ்த்தின ஆயிரம் பேரை!
எங்கு நோக்கினும் பிணக் குவியல்கள்;
பொங்கி ஓடலாயிற்று ஒரு செந்நிற ஆறு.
வட நாட்டு நண்பர்களும் போரில் மடியவே
பிடித்தான் ஓட்டம் சோழன் புறமுதுகு இட்டு.
வெற்றி வாகை சூடினான் வங்கிய சேகரன்
வெற்றிச் சங்கை ஊதி முழங்கினான் அவன்,
அஷ்ட மங்கல ஆரத்திகளுடன் அரசன்
அரண்மனை சேர்ந்தான் அரன் அருளால்.
வெற்றியைத் தந்த சிவ பெருமானைச்
சற்றும் மறக்கவில்லை வங்கிய சேகரன்
மாணிக்கம் இழைத்த ஆணிப் பொன் வில்லுடன்,
பாணமும் அவன் பெயர் பொறித்துச் சமர்ப்பித்தான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
50b. சிவன் போர்புரிய வந்தார்!
50 (b). சிவன் போர் புரிய வந்தார்!
வெற்றியின் விளிம்பைத் தொட்டுவிட்ட சோழன்
வெற்றிச் சங்கை எடுத்து முழங்கலானான்;
“இதுவே தக்க தருணம்!” என்று, வேடர் மன்னன்
உருவெடுத்துப் படைத் தலைவன் ஆனார் பிரான்.
விடுத்த அம்பு ஒவ்வொன்றும் போர்க்களத்தில்
அடித்து வீழ்த்தியது நூறு நூறு வீரர்களை!
வியப்பில் ஆழ்ந்த சோழமன்னன் கண்டது
மயக்கிய அம்பில் பொறித்த ஈசன் பெயர்!
“சுந்தரேச” என்னும் பெயர் தாங்கிய பாணம்
சுந்தரேசப் பெருமானின் சொந்தம் ஆயிற்றே!
எந்த வீரனுடன் பொருது வென்றாலும்
சுந்தரேசனை ஒருவர் வெல்ல இயலுமோ?
ஓட முற்பட்டான் போர்க்களத்தில் இருந்து
பேடியாக மாறிவிட்ட விக்கிரம சோழன்.
வேடிக்கை பார்க்கவில்லை வட அரசர்கள்,
ஓடவும் விடவில்லை சோழனை அங்கிருந்து.
மீண்டும் தொடர்ந்தது ஒரு கடும் போர்!
மீண்டும் அம்பு மழை பொழிந்தார் ஈசன்.
பத்துக் கணைகள் வீழ்த்தின நூற்றுவரை!
நூறு கணைகள் வீழ்த்தின ஆயிரம் பேரை!
எங்கு நோக்கினும் பிணக் குவியல்கள்;
பொங்கி ஓடலாயிற்று ஒரு செந்நிற ஆறு.
வட நாட்டு நண்பர்களும் போரில் மடியவே
பிடித்தான் ஓட்டம் சோழன் புறமுதுகு இட்டு.
வெற்றி வாகை சூடினான் வங்கிய சேகரன்
வெற்றிச் சங்கை ஊதி முழங்கினான் அவன்,
அஷ்ட மங்கல ஆரத்திகளுடன் அரசன்
அரண்மனை சேர்ந்தான் அரன் அருளால்.
வெற்றியைத் தந்த சிவ பெருமானைச்
சற்றும் மறக்கவில்லை வங்கிய சேகரன்
மாணிக்கம் இழைத்த ஆணிப் பொன் வில்லுடன்,
பாணமும் அவன் பெயர் பொறித்துச் சமர்ப்பித்தான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.